செவ்வாய், 23 செப்டம்பர், 2014

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology)

படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology)
1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல்
80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்

கூகுள் Map-ஒரு இடத்தை சேர்ப்பது எப்படி?

கூகுள் Map (Google Earth) ஒரு இடத்தை/ஊரை சேர்ப்பது எப்படி?
இன்றைக்கு நிறைய பேருக்கு வழிகாட்டி என்றால் அது கூகுள் Map என்று சொல்லலாம். கணினி, அலைபேசி என்று இரண்டிலும் உள்ள இதன் மூலம் தெரியாத ஊர்களில் அங்கே, இங்கே அலைந்து அவஸ்தைபடாமல் எளிதாக நாம் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து விடலாம். நகரங்களில் கிட்டத்தட்ட அனைத்து இடங்களையும் கொண்டுள்ள இதில், பெரும்பாலான கிராமங்களை குறித்த தகவல்கள் இல்லை. அப்படி இல்லாத இடங்களை, ஊர்களை எப்படி கூகுள் மேப்பில் சேர்ப்பது என்று பார்க்கலாம்.

1. முதலில் http://www.google.com/mapmaker - Google Map Maker என்ற தளத்துக்கு செல்லவும். உங்கள் ஜிமெயில் ஐடி மூலம் Log-in ஆகி கொள்ளவும்.
2. இப்போது எந்த ஊரை அல்லது இடத்தை சேர்க்க வேண்டுமோ அந்த ஊருக்கு அருகில் உள்ள ஊரை கூகுள் மேப்பில் தேடவும். [அது கூகுள் மேப்பில் இருக்க வேண்டும்.]
3. இப்போது உங்கள் ஊரில் உள்ள ஒரு இடம் அல்லது ஊர் எங்கே இருக்கும் என்பது மேப்பை பார்க்கும் போது உங்களுக்கு தெரியவரும். தெரியவில்லை என்றால் Zoom செய்து பார்க்கவும். [Satellite View - இல் தான் பார்க்க வேண்டும்]
4. குறிப்பிட்ட இடம் என்று நீங்கள் உறுதி செய்த பின் Map க்கு மேலே உள்ள Add New>> Add a Place என்பதை கிளிக் செய்யுங்கள்.
5. அடுத்து குண்டூசி பின் போல இருக்கும் சிவப்பு நிற குறியீட்டை குறிப்பிட்ட இடத்தில் வைத்து Left Click செய்யவும்.
6. இப்போது அது என்ன இடம் என்று நீங்கள் தகவல்களை கொடுக்க வேண்டும்.
7. இப்போது மேப்க்கு இடது பக்கம் அது குறித்த மற்ற தகவல்களை கொடுக்கலாம். தளம், தொலைபேசி எண், வேலை நேரம், மற்றவை.
8. இப்போது Save Button கொடுத்து Save செய்து விடுங்கள்.
9. இடது பக்கத்தில் நீங்கள் Add செய்த Place Bending - இல் இருக்கும். சில நாட்களில் அது உறுதி செய்யப்பட்ட பின் அங்கே சேர்க்கப்பட்டு விடும்.
10. இதே போல ஆறு, ஏரி, குளம், பார்க், கட்டிடங்கள் போன்றவற்றை குறிப்பிடும் போது ஒரு லைன் அல்லது கட்டம் போன்று குறிக்க வேண்டும். அவற்றை மேப்பில் சேர்க்க Step 4 இல் Draw a Line, Draw a Shape என்பதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
11. இப்போது ஒரு Plus Symbol மேப்பில் இருக்கும். அதை குறிப்பிட்ட இடத்தில் வைத்து ஒரு கிளிக் செய்தால் ஒரு Pointer உருவாகும், அடுத்து இன்னொரு இடத்துக்கு நகர்ந்து கிளிக் செய்தால் இன்னொரு pointer உருவாகும். அங்கேயே முடிக்க Double Click செய்ய வேண்டும். இரண்டுக்கும் இடையில் இப்போது ஒரு லைன் உருவாகி இருக்கும். அவற்றை பற்றிய தகவல்களை கொடுத்து Save செய்து விடுங்கள்.
இதே போலவே தான் Draw a Shape -க்கும் செய்ய வேண்டும்.

மெல்லக் கொல்லும் குடிநீர் பாட்டில்




குடிநீர் பாட்டில்களில் ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்''
குடிநீர் தயாரிக்கும் கம்பெனி பெயர் பார்த்து விலை கொடுத்து வாங்குபவர்கள், பாட்டிலுக்கு அடியில் முக்கோணக் குறிக்குள் இருக்கும் எண்ணை கவனிப்பதில்லை.
குடிநீர் பாட்டில்களில் 1 முதல் 7க்குள் ஏதேனும் ஒரு எண் இருக்கும். இந்த எண் மூலம் அந்த பாட்டில் எவ்வகை வேதிப்பொருளால் ஆனது, இது எந்த பொருள் வைக்க தகுதி கொண்டது என்பதை அறியலாம்.
அடிப்புற முக்கோணத்திற்குள் எண்
''1'' இருந்தால் அந்த பாட்டில் பிஇடி (பாலி எத்திலின் டெர்ப்தலேட்) வேதிப்பொருளில் ஆனது. இதில் பானம், குளிரூட்டிய உடனடி உணவு இருக்கும்.
எண் ''2'' இருப்பின், ஹெச்டிபிஇ (ஹை டென்சிட்டி பாலிஎத்தனால்) வேதிப்பொருளால் ஆனது. இதில் பால் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படும்.
எண் ''3'' என இருந்தால், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) என்ற வேதி பொருளால் தயாரிக்கப்பட்டவை. இதில் உணவுப்பொருட்கள், பழரசம் இருக்கும்.
எண் ''4'' எனில், எல்டிபிஇ (லோ டென்சிட்டி பாலி எத்திலின்) என்ற வேதி பொருளால் உருவாகி, பொருட்களை அடைப்பதற்கான பாக்கெட்டுகளாக இருக்கும்.
எண் ''5'' பிபி (பாலி புரோபைலின்) வேதிப்பொருளால் ஆகி, மைக்ரோவேவ் போன்ற உணவு பாத்திர பயன்பாட்டிலும்,
எண் ''6'' இருப்பின், பிஎஸ் (பாலிஸ்டிரின்) வேதிப்பொருளில் உருவாகி முட்டைகளுக்கான கூடு, பொம்மை, எலக்ட்ரானிக் பொருட்களுக்கான பிளாஸ்டிக்காக இருக்கும். இதுதவிர
எண் ''7'' இடப்பட்டிருந்தால் மற்ற வகை பிளாஸ்டிக்காக குவளைகள், தட்டுகள் உள்ளிட்ட பாத்திரங்களாக மட்டுமே பயன்படுத்தலாம்.viaதமிழன் என்ற இந்தியன்இந்த 7 பிளாஸ்டிக் வகைகளில் அடிப்புறம் 1, 3, 6 எண்களிட்ட பாட்டில்கள் தரும் பாதிப்பு அதிகமிருக்கும். பள்ளி செல்லும் குழந்தைகள், பயணம் செய்வோர் என பலரும் ஏற்கனவே உபயோகப்படுத்திய பழைய பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி எடுத்துச் செல்வது அதிகரித்துள்ளது. புதிய மினரல் வாட்டர் பாட்டிலை வெயிலில் வைத்தாலே வேதிவினைகள் நடந்து நீரில் எளிதில் வேதிப்பொருட்கள் கலந்து விஷமாகுமென சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதைவிட மோசமாக, பழைய பாட்டிலில் குடிநீரை சுட வைத்து நிரப்புவது, ஆண்டுக்கணக்காக இந்த ஓற்றை பாட்டிலில் நீர் நிரப்பி பயன்படுத்துவதென மக்கள் அறியாமையில் உள்ளனர். இனிமேல் குடிநீரோ, உணவுப் பொருட்களோ வாங்கும் பாட்டில்கள், பேக்கிங்குகளில் அடிப்புறத்து எண்ணை பார்ப்பது அவசியம்தமிழக அரசு டாக்டர்கள் சங்க தலைவர் செந்தில் கூறுகையில், ''மறு சுழற்சிக்கு தகுதியற்ற சாதாரண குடிநீர் பாட்டில்களை பல நாட்களுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது.
உணவுத் தரம் மிக்க பிளாஸ்டிக்கில் செய்த பாட்டில்கள் விலை அதிகமிருப்பினும், அதில் தண்ணீர் வைத்து குடிப்பதே உகந்தது.
'ஒன்ஸ் யூஸ்'' பாட்டில்களை ஒருமுறை பயன்படுத்தியதும் உடைத்தெறிய வேண்டும்.
இதில் அந்த பாட்டிலின் வேதிப்பொருள் அந்த நீர், உணவுடன் வினையாகி ''மெல்லக் கொல்லும் விஷமாகி'' நரம்பு மண்டலம் துவங்கி உடலின் அனைத்து பாகங்களையும் பாதிக்கும்'' என்றார்.
கண்டிப்பாக பகிர்ந்து கொள்ளவும்.

In Facebook தமிழில் டைப் செய்ய


பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் டைப் செய்வது எப்படி?

சமூக இணையத்தளங்களில் அனைவராலும் அதிகம் விரும்பி பயன்படுத்துவது பேஸ்புக் தளத்தைத்தான்.
இதில் உங்கள் எண்ணங்கள் கருத்துக்களை 

தமிழில் பகிர்வதற்கு நினைப்பீர்கள் ஆனால்

 பேஸ்புக் தளத்தில் நேரடியாக தமிழில் டைப் 

செய்யும் வசதி இல்லை என்பது நீங்கள் 

அனைவரும் அறிந்த விடயமே.



சரி நாம் இன்று பேஸ்புக்கில் நேரடியாக தமிழில் 

டைப் செய்வது எப்படி என்று பார்ப்போம்.



இதற்க்கு Google Transliteration IME என்ற 

மென்பொருள் பயன்படுகிறது.

இதனை டவுன்லோட் செய்து எவ்வாறு 

பயன்படுத்துவது என்று பார்ப்போம்


01. முதலில் இங்கு சென்று Google Transliteration IME

http://www.google.com/inputtools/windows/

என்ற மென்பொருளை Download செய்யவும்.

கீழே படத்தில் உள்ளது போல் Tamil என்பதை 

தெரிவு செய்து I agree to the Google.. என்பதில் மார்க் 

வைத்து Download செய்து உங்கள் கணினியில் 

Install செய்து கொள்ளவும்.


02. இதனை உங்கள் கணினியில் Install செய்த 


பின்பு கீழே படத்தில் உள்ளதுபோல் Taskbar -இல் 

EN என்று வந்திருக்கும் நீங்கள் EN என்பதில் 

கிளிக் செய்து TA Tamil (India) என்பதை தெரிவு 

செய்யவும்.


03. TA Tamil என்பதை தெரிவு செய்த பின்பு கீழே 


படத்தில் உள்ளதுபோல் உங்கள் கணினி Desktop-

இல் வரும்.


04. இப்பொழுது நீங்கள் பேஸ்புக் Skype எங்கு 


வேண்டுமானாலும் உங்கள் கணினியில் தம்ழில் 

டைப் செய்யலாம்!

நீங்கள் டைப் செய்யும்போது தமிழ் சொல்லை 

ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்.

உதரணத்திற்க்கு கீழே உள்ள படத்தை 

பார்க்கவும்.


05. நீங்கள் தமிழில் டைப் செய்யும்போது 


ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டுமானால் 

CTRL+G கொடுக்கவும்.

திரும்ப தமிழில் டைப் செய்ய இதே போன்று 

CTRL+G கொடுத்தால் சரி…

ரயிலில் பெண்களுக்கு உதவி செய்ய 1322

ரயிலில் பெண்களுக்கு உதவி செய்ய 1322
ரெயிலில் பெண்களின் பாதுகாப்புக்கு இலவச அழைப்பு எண் ‘1322’ பயணிகள் வரவேற்பு ; -------------------------------------------------------------------------------------------பெண் பயணிகளின் பாதுகாப்பு கருதி ரெயில்வே பாதுகாப்பு படையின் இலவச அழைப்பு எண் ‘1322’ அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பயணிகள் வரவேற்றுள்ளனர்.
ரெயில் பயணங்கள்
விழாக்களுக்காக சொந்த ஊருக்கு செல்லும்போதும், குடும்பத்தினருடன் வெளியூர்களுக்கு செல்லும்போதும் பாதுகாப்பு கருதி பெரும்பாலானோரால் தேர்ந்தெடுக்கப்படுவது ரெயில் பயணங்களே. ஆனால் தற்போது ரெயில் பயணங்களில் கூட பாதுகாப்பு குறித்த விமர்சனங்கள் எழுந்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது.
முக்கியமாக மின்சார ரெயில்களில் தான் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இந்த வருடத்தில் மட்டும் மின்சார ரெயில்களில் 200–க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
கொள்ளைச்சம்பவம்
கடந்த ஆகஸ்ட்டு மாதம் 19–ந்தேதி, திருத்தணி – அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரெயிலில் பயணம் செய்த பெண் ஒருவரிடம் கத்தி முனையில் கொள்ளைச்சம்பவம் நடந்தது. இதில் அந்த பெண்ணிடம் இருந்து நகைகள், பணம் ஆகியவற்றை கொள்ளையன் மிரட்டி வாங்கியுள்ளான்.
இதையடுத்து மின்சார ரெயில்களில் இனி எவ்வித திருட்டும், கொள்ளைச்சம்பவங்களும் நடைபெறாத வகையில் 10 அம்ச திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
சமூக விரோத செயல்கள் நடைபெறாத வகையிலும், பயணிகளின் பாதுகாப்பு கருதியும் ரெயில்வே பாதுகாப்புப்படை சார்பில் சென்னையில் உள்ள எல்லா மின்சார ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
1322
ஆபத்து கால நேரங்களில் போன் செய்தோ அல்லது எஸ்.எம்.எஸ்.(குறுந்தகவல்) சேவையை பயன்படுத்தி ரெயில்வே பாதுகாப்புப்படையினர் மற்றும் ரெயில்வே போலீசார் ஆகியோரை தொடர்பு கொள்ள முறையே 9003161710, 9962500500 ஆகிய எண்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்றன.
தற்போது பெண் பயணிகளுக்கென்றே ‘1322’ என்ற புதிய 4 இலக்கு எண்ணை ரெயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இது முற்றிலும் பெண் பயணிகளுக்காக மட்டுமே உருவாக்கப்பட்ட இந்தியா முழுமைக்குமான ஒரே இணைப்பாகும். இதுகுறித்து தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
இந்தியா முழுமைக்கும் ஒரே இணைப்பு
மின்சார ரெயில்களில் ஏற்படும் கொள்ளை உள்பட அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, பெண்களை கருத்தில் கொண்டு அவர்களின் பாதுகாப்புக்காக ‘1322’ என்ற புதிய எண் அறிவிக்கப்பட்டது. இந்தியா முழுவதும் இந்த எண்ணை பயன்படுத்தலாம்.
ஒரு பெண் பயணி இந்த எண்ணை தொடர்பு கொள்ளும்போது, அடுத்த 4 விநாடிகளில் இந்த அழைப்பு எங்கிருந்து வந்ததோ? அந்த மாநிலத்தின் தலைநகருக்கும், மாவட்ட தலைநகருக்கும் அழைப்பு சேரும் வகையில் இந்த வழித்தட எண் உருவாக்கப்பட்டிருக்கிறது. எல்லா வகையான மொழிகளிலும் உதவி கிடைக்கக்கூடிய வகையில் இந்தத்திட்டம் உள்ளது. உதாரணத்திற்கு தமிழ் பயணி ஒருவர் டெல்லியில் சென்று, இந்த எண்ணை தொடர்பு கொள்ளுகையில், மொழி புரிதல் பிரச்சினை ஏற்பட்டால், அடுத்த 5 நொடிகளில் தமிழ் இணைப்பு கிடைக்கும். இதன்மூலம் தகவல் பரிமாற்றம் விரைவாக நடக்கும். பிரச்சினையிலிருந்து பெண்கள் மீள நல்ல வழிவகையாகவும் அமையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வரவேற்கத்தக்கது
இதுகுறித்து பெண் பயணிகள் சிலர் கூறுகையில், ‘‘இந்தியா முழுவதுக்கும் ஒரே எண்ணான 1322 என்ற எண்ணை அறிமுகப்படுத்தியது வரவேற்கத்தக்கது. இதன்மூலம் இந்த எண்ணை நியாபகம் வைத்துக்கொள்ளலாம். ஏனெனில், வெளி மாநில மொழிகளை எல்லா பெண்களும் அறிவதில்லை. ஆனால் அந்த பிரச்சினையையும் தீர்த்து வைப்பதாக இந்த திட்டம் அமைந்துள்ளது. இந்த திட்டம் மற்றும் ‘1322’ எண் குறித்தும் பொதுமக்கள் அறிந்திடும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும். அப்போது தான் பொதுமக்கள் அறிவார்கள்’’, என்றனர். நன்றி - தின தந்தி

திங்கள், 22 செப்டம்பர், 2014

Tamilnadu MLA Email ID's




முடிந்தவரை பிறருடன் பகிரவும்...

ஒவ்வொரு தொகுதி எம் எல் ஏக்கும் ஒரு ஈ மெயில் ஐடி கொடுக்கப்பட்டுள்ளது.

இனிமேல் உங்கள் " நியாமான " கோரிக்கைகளை நீங்கள் அனுப்பலாம்.

பதில் வருமா வராதான்னு தெரியாது,

எல்லா எம் எல் ஏக்கும் லேப் டாப் கொடுக்கப்பட்டுள்ளது

அதனால் கண்டிப்பாக பதில் கிடைக்கும் என நம்புவோம்.

234 தொகுதி எம் எல் ஏக்கு தனி தனியே ஈ மெயில் ஐடி கொடுக்கபட்டுள்ளது...

1 Acharapakkam - mlaacharapakkam@tn.gov.in
2 Alandur - mlaalandur@tn.gov.in
3 Alangudi - mlaalangudi@tn.gov.in
4 Alangulam - mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram -- mlaambasamudram@tn.gov.in
6 Anaicut -- mlaanaicut@tn.gov.in
7 Andhiyur --mlaandhiyur@tn.gov.in
8 Andimadam --- mlaandimadam@tn.gov.in
9 Andipatti----mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar--- mlaannanagar@tn.gov.in
11 Arakkonam ----mlaarakkonam@tn.gov.in
12 Arantangi-- mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi --- mlaaravakurichi@tn.gov.in
14 Arcot --- mlaarcot@tn.gov.in
15 Ariyalur --mlaariyalur@tn.gov.in
16 Arni -- mlaarni@tn.gov.in
17 Aruppukottai ---mlaaruppukottai@tn.gov.in
18 Athoor--- mlaathoor@tn.gov.in
19 Attur ---mlaattur@tn.gov.in
20 Avanashi ---mlaavanashi@tn.gov.in
21 Bargur ---mlabargur@tn.gov.in
22 Bhavani---mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar---mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri-----mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur----mlabodinayakkanur@tn.gov.in
26 Chengalpattu-----mlachengalpattu@tn.gov.in
27 Chengam---mlachengam@tn.gov.in
28 Chepauk---mlachepauk@tn.gov.in
29 Cheranmahadevi---mlacheranmahadevi@tn.gov.in
30 Cheyyar---mlacheyyar@tn.gov.in
31 Chidambaram---mlachidambaram@tn.gov.in
32 Chinnasalem---mlachinnasalem@tn.gov.in
33 CoimbatoreEast----mlacoimbatoreeast@tn.gov.in
34 CoimbatoreWest----mlacoimbatorewest@tn.gov.in
35 Colachel---mlacolachel@tn.gov.in
36 Coonoor----mlacoonoor@tn.gov.in
37 Cuddalore---mlacuddalore@tn.gov.in
38 Cumbum---mlacumbum@tn.gov.in
39 Dharapuram---mladharapuram@tn.gov.in
40 Dharmapuri---mladharmapuri@tn.gov.in
41 Dindigul---mladindigul@tn.gov.in
42 Edapadi---mlaedapadi@tn.gov.in
43 Egmore---mlaegmore@tn.gov.in
44 Erode----mlaerode@tn.gov.in
45 Gingee---mlagingee@tn.gov.in
46 Gobichettipalayam---mlagobichettipalayam@tn.gov.in
47 Gudalur----mlagudalur@tn.gov.in
48 Gudiyatham----mlagudiyatham@tn.gov.in
49 Gummidipundi----mlagummidipundi@tn.gov.in
50 Harbour-----mlaharbour@tn.gov.in
51 Harur----mlaharur@tn.gov.in
52 Hosur---mlahosur@tn.gov.in
53 Ilayangudi---mlailayangudi@tn.gov.in
54 Jayankondam---mlajayankondam@tn.gov.in
55 Kadaladi---mlakadaladi@tn.gov.in
56 Kadayanallur---mlakadayanallur@tn.gov.in
57 Kalasapakkam----mlakalasapakkam@tn.gov.in
58 Kancheepuram---mlakancheepuram@tn.gov.in
59 Kandamangalam----mlakandamangalam@tn.gov.in
60 Kangayam---mlakangayam@tn.gov.in
61 Kanniyakumari----mlakanniyakumari@tn.gov.in
62 Kapilamalai----mlakapilamalai@tn.gov.in
63 Karaikudi----mlakaraikudi@tn.gov.in
64 Karur----mlakarur@tn.gov.in
65 Katpadi----mlakatpadi@tn.gov.in
66 Kattumannarkoil---mlakattumannarkoil@tn.gov.in
67 Kaveripattinam---mlakaveripattinam@tn.gov.in
68 Killiyoor----mlakilliyoor@tn.gov.in
69 Kinathukadavu---mlakinathukadavu@tn.gov.in
70 Kolathur---mlakolathur@tn.gov.in
71 Kovilpatti---mlakovilpatti@tn.gov.in
72 Krishnagiri----mlakrishnagiri@tn.gov.in
73 Krishnarayapuram---mlakrishnarayapuram@tn.gov.in
74 Kulithalai----mlakulithalai@tn.gov.in
75 Kumbakonam---mlakumbakonam@tn.gov.in
76 Kurinjipadi---mlakurinjipadi@tn.gov.in
77 Kuttalam---mlakuttalam@tn.gov.in
78 Lalgudi---mlalalgudi@tn.gov.in
79 MaduraiCentral---mlamaduraicentral@tn.gov.in
80 MaduraiEast---mlamaduraieast@tn.gov.in
81 MaduraiWest----mlamaduraiwest@tn.gov.in
82 Maduranthakam----mlamaduranthakam@tn.gov.in
83 Manamadurai----mlamanamadurai@tn.gov.in
84 Mangalore----mlamangalore@tn.gov.in
85 Mannargudi----mlamannargudi@tn.gov.in
86 Marungapuri-----mlamarungapuri@tn.gov.in
87 Mayiladuturai----mlamayiladuturai@tn.gov.in
88 Melmalaiyanur---mlamelmalaiyanur@tn.gov.in
89 Melur---mlamelur@tn.gov.in
90 Mettupalayam---mlamettupalayam@tn.gov.in
91 Mettur---mlamettur@tn.gov.in
92 Modakkurichi---mlamodakkurichi@tn.gov.in
93 Morappur---mlamorappur@tn.gov.in
94 Mudukulathur---mlamudukulathur@tn.gov.in
95 Mugaiyur----mlamugaiyur@tn.gov.in
96 Musiri---mlamusiri@tn.gov.in
97 Mylapore---mlamylapore@tn.gov.in
98 Nagapattinam----mlanagapattinam@tn.gov.in
99 Nagercoil---mlanagercoil@tn.gov.in
100 Namakkal---mlanamakkal@tn.gov.in
101 Nanguneri---mlananguneri@tn.gov.in
102 Nannilam----mlanannilam@tn.gov.in
103 Natham-----mlanatham@tn.gov.in
104 Natrampalli----mlanatrampalli@tn.gov.in
105 Nellikkuppam----mlanellikkuppam@tn.gov.in
106 Nilakottai---mlanilakottai@tn.gov.in
107 Oddanchatram---mlaoddanchatram@tn.gov.in
108 Omalur---mlaomalur@tn.gov.in
109 Orathanad---mlaorathanad@tn.gov.in
110 Ottapidaram---mlaottapidaram@tn.gov.in
111 Padmanabhapuram----mlapadmanabhapuram@tn.gov.in
112 Palacode---mlapalacode@tn.gov.in
113 Palani----mlapalani@tn.gov.in
114 Palayamkottai---mlapalayamkottai@tn.gov.in
115 Palladam---mlapalladam@tn.gov.in
116 Pallipattu---mlapallipattu@tn.gov.in
117 Panamarathupatti---mlapanamarathupatti@tn.gov.in
118 Panruti---mlapanruti@tn.gov.in
119 Papanasam---mlapapanasam@tn.gov.in
120 Paramakudi---mlaparamakudi@tn.gov.in
121 ParkTown----mlaparktown@tn.gov.in
122 Pattukkottai----mlapattukkottai@tn.gov.in
123 Pennagaram-----mlapennagaram@tn.gov.in
124 Perambalur----mlaperambalur@tn.gov.in
125 Perambur---mlaperambur@tn.gov.in
126 Peranamallur---mlaperanamallur@tn.gov.in
127 Peravurani---mlaperavurani@tn.gov.in
128 Periyakulam---mlaperiyakulam@tn.gov.in
129 Pernambut---mlapernambut@tn.gov.in
130 Perundurai---mlaperundurai@tn.gov.in
131 Perur---mlaperur@tn.gov.in
132 Pollachi---mlapollachi@tn.gov.in
133 Polur---mlapolur@tn.gov.in
134 Pongalur---mlapongalur@tn.gov.in
135 Ponneri---mlaponneri@tn.gov.in
136 Poompuhar---mlapoompuhar@tn.gov.in
137 Poonamallee----mlapoonamallee@tn.gov.in
138 Pudukkottai----mlapudukkottai@tn.gov.in
139 Purasawalkam----mlapurasawalkam@tn.gov.in
140 Radhapuram---mlaradhapuram@tn.gov.in
141 Rajapalayam---mlarajapalayam@tn.gov.in
142 Ramanathapuram---mlaramanathapuram@tn.gov.in
143 Ranipet---mlaranipet@tn.gov.in
144 Rasipuram----mlarasipuram@tn.gov.in
145 Rishivandiyam----mlarishivandiyam@tn.gov.in
146 Dr.RadhakrishnanNagar----mlarknagar@tn.gov.in
147 Royapuram---mlaroyapuram@tn.gov.in
148 Saidapet---mlasaidapet@tn.gov.in
149 Salem -I---mlasalem1@tn.gov.in
150 Salem-II---mlasalem2@tn.gov.in
151 Samayanallur---mlasamayanallur@tn.gov.in
152 Sankaranayanarkoi---mlasankaranayanarkoil@tn.gov.in
153 Sankarapuram---mlasankarapuram@tn.gov.in
154 Sankari---mlasankari@tn.gov.in
155 Sathyamangalam---mlasathyamangalam@tn.gov.in
156 Sattangulam----mlasattangulam@tn.gov.in
157 Sattur---mlasattur@tn.gov.in
158 Sedapatti----mlasedapatti@tn.gov.in
159 Sendamangalam----mlasendamangalam@tn.gov.in
160 Sholavandan---mlasholavandan@tn.gov.in
161 Sholinghur----mlasholinghur@tn.gov.in
162 Singanallur---mlasinganallur@tn.gov.in
163 Sirkazhi----mlasirkazhi@tn.gov.in
164 Sivaganga----mlasivaganga@tn.gov.in
165 Sivakasi---mlasivakasi@tn.gov.in
166 Sriperumbudur---mlasriperumbudur@tn.gov.in
167 Srirangam---mlasrirangam@tn.gov.in
168 Srivaikuntam---mlasrivaikuntam@tn.gov.in
169 Srivilliputhur---mlasrivilliputhur@tn.gov.in
170 Talavasal---mlatalavasal@tn.gov.in
171 Tambaram---mlatambaram@tn.gov.in
172 Taramangalam---mlataramangalam@tn.gov.in
173 Tenkasi----mlatenkasi@tn.gov.in
174 Thalli---mlathalli@tn.gov.in
175 Thandarambattu---mlathandarambattu@tn.gov.in
176 Thanjavur---mlathanjavur@tn.gov.in
177 Theni---mlatheni@tn.gov.in
178 Thirumangalam---mlathirumangalam@tn.gov.in
179 Thirumayam---mlathirumayam@tn.gov.in
180 Thirupparankundram---mlathirupparankundram@tn.gov.in
181 Thiruvattar---mlathiruvattar@tn.gov.in
182 Thiruverambur---mlathiruverambur@tn.gov.in
183 Thiruvidamarudur---mlathiruvidamarudur@tn.gov.in
184 Thiruvonam---mlathiruvonam@tn.gov.in
185 Thiruvottiyur---mlathiruvottiyur@tn.gov.in
186 Thondamuthur---mlathondamuthur@tn.gov.in
187 Thottiam---mlathottiam@tn.gov.in
188 Tindivanam---mlatindivanam@tn.gov.in
189 Tiruchendur---mlatiruchendur@tn.gov.in
190 Tiruchengode----mlatiruchengode@tn.gov.in
191 Tirunavalur----mlatirunavalur@tn.gov.in
192 Tirunelveli---mlatirunelveli@tn.gov.in
193 Tiruppattur-194----mlatiruppattur194@tn.gov.in
194 Tiruppattur-41---mlatiruppattur41@tn.gov.in
195 Tirupporur----mlatirupporur@tn.gov.in
196 Tiruppur----mlatiruppur@tn.gov.in
197 Tiruthuraipundi----mlatiruthuraipundi@tn.gov.in
198 Tiruttani----mlatiruttani@tn.gov.in
199 Tiruvadanai---mlatiruvadanai@tn.gov.in
200 Tiruvaiyaru----mlatiruvaiyaru@tn.gov.in
201 Tiruvallur---mlatiruvallur@tn.gov.in
202 Tiruvannamalai----mlatiruvannamalai@tn.gov.in
203 Tiruvarur----mlatiruvarur@tn.gov.in
204 TheagarayaNagar----mlatnagar@tn.gov.in
205 Tiruchirapalli-I---mlatrichy1@tn.gov.in
206 Tiruchirapalli-II---mlatrichy2@tn.gov.in
207 Triplicane----mlatriplicane@tn.gov.in
208 Tuticorin---mlatuticorin@tn.gov.in
209 Udagamandalam---mlaudagamandalam@tn.gov.in
210 Udumalpet---mlaudumalpet@tn.gov.in
211 Ulundurpet---mlaulundurpet@tn.gov.in
212 Uppiliyapuram---mlauppiliyapuram@tn.gov.in
213 Usilampatti---mlausilampatti@tn.gov.in
214 Uthiramerur---mlauthiramerur@tn.gov.in
215 Valangiman----mlavalangiman@tn.gov.in
216 Valparai----mlavalparai@tn.gov.in
217 Vandavasi----mlavandavasi@tn.gov.in
218 Vaniyambadi----mlavaniyambadi@tn.gov.in
219 Vanur----mlavanur@tn.gov.in
220 Varahur-----mlavarahur@tn.gov.in
221 Vasudevanallur---mlavasudevanallur@tn.gov.in
222 Vedaranyam---mlavedaranyam@tn.gov.in
223 Vedasandur---mlavedasandur@tn.gov.in
224 Veerapandi---mlaveerapandi@tn.gov.in
225 Vellakoil---mlavellakoil@tn.gov.in
226 Vellore---mlavellore@tn.gov.in
227 Vilathikulam---mlavilathikulam@tn.gov.in
228 Vilavancode---mlavilavancode@tn.gov.in
229 Villivakkam---mlavillivakkam@tn.gov.in
230 Villupuram---mlavillupuram@tn.gov.in
231 Virudhunagar----mlavirudhunagar@tn.gov.in
232 Vridhachalam---mlavridhachalam@tn.gov.in
233 Yercaud---mlayercaud@tn.gov.in
234 ThousandLights---mlathousandlights@tn.gov.in

முடிந்தவரை பிறருடன் பகிரவும்...!

சனி, 20 செப்டம்பர், 2014

AMWAY உண்மை

"AMWAY " இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு. இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பன்றிங்களா?" இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.





ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று . இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.
FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:

ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான், அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டோர்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.

இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.

ஏமாற்றும் வழிகள்:

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை, நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும். உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.

நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30 % தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர்,விநியோகஸ்த்தர்,விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான், மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.

►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).

►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர்,விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)

மேலும் ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.

TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்

மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள் , விநியோகச்த்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்ட்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.

நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)

►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)

► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30 % தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.

இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:

►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம் .
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்ச்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான் நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிரிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் ( ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.
இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள் அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிருவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும் இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV , அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.
லட்ச்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.
இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான் . இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.
இந்த பதிவை படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:
தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன் நீ என்னிடம் ஏமாறு என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்..