வெள்ளி, 25 ஏப்ரல், 2014

பாஸ்போர்ட்

பாஸ்போர்ட்டு அப்ளை செய்யப்போறீங்களா ?
+++++++++++++++++++++++++++++++++++++++
அப்ப இத மறக்காம படிங்க !!
அடிக்கடி பாஸ்போர்ட் ஆபீஸ் போயி போயி பாஸ்போர்டிற்கு அப்ளை செய்துள்ளதால் ஓரளவிற்கு என்ன என்ன தேவைபடும், தேவைபடாது என்று தெரிந்து விட்டது, நம்மளுக்கு தெரிந்ததை நாலு பேருக்கு பகிரலாமே என்ற நல்லெண்ணத்தில்
ஒகே ரெடி ஸ்டார்ட்.
முதலில் ஆன்லைனில் அப்ளை செய்து விடுங்கள்
COPY & PASTE THIS LINK
Continue என்பதை கிளிக் செய்தவுடன் Passport Office என்ற பகுதியில் உங்கள் பகுதி உட்பட்ட இடத்தை தேர்ந்து எடுக்கவும்.
அதில் உள்ள அனைத்து விசயங்களையும் கண்டிப்பாக நிரப்பி விடவும்.
District: உங்களது மாவட்டதை தேர்ந்து எடுக்கவும்Service
Desired:என்னவிதமான பாஸ்போர்ட் (புதுசா, ரி இஷ்சுவா)
Surname: உங்களது இன்சியல் (பொதுவா அப்பாவோட பேரு
கல்யாணாம் ஆன பெண் கணவனின் பெயர்)
First Name: உங்களது பெயர்
உங்களது பெயரை இதற்கு முன்பு மாற்றி இருந்தால் "if you have ever changed your name click the box and indicate Previous Name(s) in full" என்பதை கிளிக் செய்து
Previous Name : உங்களது முன்பு இருந்த பெயரை எழுதவும்
Sex: ஆணா, பெண்ணா என்று குறிப்பிடவும்
Date of Birth: பிறந்த தேதி நாள் மாதம் வருடம் (DD MM YYYY)
Place of Birth: பிறந்த ஊர்
District or Country: நீங்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் பிறந்த மாவட்டதையும் வேறு நாட்டில் பிறந்திருந்தால் அந்நாட்டையிம் குறிப்பிடவும்
Qualification: உங்களது படிப்பு
Profession: தொழில்
Visible Mark: உங்களிடம் தெரியும் ஏதாவது மார்க் (மச்சம் போன்றவை)
Height (cms): உயரம்
Present Address: தற்போதைய முகவரி
Permanent Address: நிரந்தர முகவரி
Please give the Date since residing at the Present Address: எவ்வளவு நாட்களாக தற்போதைய முகவரியில் தங்கி உள்ளீர்கள் என்பதை
Phone No: தொலைபேசி எண்
Mobile No : மொபையில் எண்
Email Address: இமெயில் முகவரி
Marital Status: திருமணமான தகவல்
Spouse's Name: கணவர்/மனைவியின் பெயர்
Father's Name: தந்தை பெயர்
Mother's Name: தாயார் பெயர்
தற்போதைய முகவரியில் கடந்த ஒரு வருடமா வசிக்கவில்லை என்றால் "If you are not residing at the Present Address for the last one year, click on this box and furnish addresses of the other place(s) of residence in the last one year along with the duration(s) of living there." என்பதை கிளிக் செய்து கீழ் இருக்கும் From: To: Address 1 : எனும் தகவலை குறிப்பிடவும்
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கு டிடி மூலம் பணம் செலுத்த விருப்ப பட்டால் "If you have a Demand Draft, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து DD No, DD Date, Bank Name தகவலை கொடுக்கவும்
உங்களிடம் ஏற்கனவே பாஸ்போர்ட் இருந்து வருடம் முடிந்து, புதிதாக வேறு அப்ளை செய்ய போகிறீர்கள் என்றால் "If you have held a passport or hold a passport at present, click on this box and fill the details below" என்பதை கிளிக் செய்து
Old/Existing Passport No: பழைய பாஸ்போர்ட் எண்
Issue Date: பழைய பாஸ்போர்ட் கொடுத்த நாள்
Place of Issue: பழைய பாஸ்போர்ட் கொடுக்க பட்ட இடம்
File Number: பழைய பாஸ்போர்ட் பைல் எண் (கடைசி பக்கதில் இருக்கும்)
Date Of Expiry: பழைய பாஸ்போர்ட் முடிவு நாள்
[] கண்டிப்பாக எழுதவும் [] தேவைப்பட்டால் மட்டும் எழுதவும்
அனைத்தையும் நிரப்பியவுடன், "Save" என்பதை கிளிக் செய்தவுடன் அந்த பாஸ்போர்ட் ஆபிஸின் அடுத்து இருக்கும் (availability date and time) நேரம் தேதியை சொல்லும, உங்களுக்கு தேவையான நாளை தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.
பிறகு அதை ஒரு இடத்தில் சேவ் செய்து, பிரின்ட் அவுட் எடுத்து கொள்ளவும், போட்டோ ஒட்ட வேண்டிய இடங்களில் போட்டோவைஒட்டவும்.
அதில் எதையும் மாற்றம் செய்ய வேண்டாம்.
முகவரி சான்றிதல் (ஏதாவது இரண்டு)
· ரேசன் கார்டு
· குடிநீர் ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· தொலைபேசி ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· மின்சார ரசீது (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· கேஸ் கணக்சன் பில் (உங்கள் பெயரில் இருக்க வேண்டும்)
· வாக்காளர் அடையாள அட்டை
· வங்கி கணக்கு புத்தகம் (கடந்த ஒரு வருடமாக பணம் எடுக்கவும் போடவும் செய்து அதை பதிவு செய்திருக்கவேண்டும்)
· துணைவின் பாஸ்போர்ட்
பிறந்த தேதி சான்றிதல் (ஏதாவது ஒன்று)_
· 1989 பிறகு பிறந்தவர்கள் என்றால் அரசாங்கத்தால் தரும் பர்த் சான்றிதழ்
· பள்ளியில் வழங்கப்படும் சான்றிதழ்
· கெஜட்டடு (நோட்ரி பப்ளிக்) ஆபிசர் மூலம் வாங்கவேண்டும்
வேறு சான்றிதழ்கள்
· 10வது மேல் படித்திருந்தால் ECR முத்திரை இருக்காது, அதற்காக கடைசியாக எதை படித்து முடித்தீர்களோ அதனை கொண்டுபோகவும்.
· உங்களது பெயரை (மதம் மாறும்போது/ எண்கணித முறையில்) மாற்றி இருந்தால் அதற்கு உண்டான சான்றிதழ்.
· பழைய பாஸ்போர்ட் எடுக்கும் போது திருமணம் ஆகாமல் இருந்து,பழையது முடிந்து ரினிவல் பாஸ்போர்ட் அப்ளை செய்ய போனாலும் மேற்கன்ட அனைத்தையும் கொண்டு போகவேண்டும்,
மேலும் திருமண சான்றிதழ் இணைக்க வேண்டும்
அல்லது மாவட்ட நீதிமன்றத்தில்/ நோட்ரி பப்ளிக் மூலமாக கணவனும் மனைவியும் சென்று வாங்கவேண்டும்.
மறக்காமல் பழைய பாஸ்போர்ட்டை கொண்டு செல்ல வேண்டும்.
அனைத்து சான்றிதழ் ஒரிஜினலையும் மேலும் இரண்டு செட் ஜெராக்ஸையும் கொண்டு செல்லவும்.
குறைந்தது நான்கு பாஸ்போர்ட் சைஸ் (3.5 x 3.5 CM) தேவைப்படும்.
நீங்கள் அப்ளை செய்யும் போது வரும் நாளையும்
நேரத்தை நன்கு குறித்து கொண்டு,
அன்றைய நாளில் காலையிலே பாஸ்போர் ஆபிஸ் சென்று விடுங்கள்,
அவர்கள் கொடுக்கும் நேரம் என்பது சும்மா...
நாள் மட்டும்தான் உண்மை,
முன்பாக சென்றாலே சீக்கிரம் வேலை முடியும்...
கால் கடுக்க நிற்க வேண்டும்,
ஆதலால் நன்றாய் சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை எடுத்து செல்லவும்.
சீக்கிரமாக பாஸ்போர்ட் கிடைக்க வாழ்த்துக்கள்.
நீங்கள் செய்யவேண்டியவை இந்த பதிவை உங்கள்
நண்பர்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளுங்கள் !!
விழிப்புணர்வு செய்யுங்கள் !!! நன்றி :-
பொது நலம் கருதி வெளியிடுவோர்:-

திருமணத்திற்கு 10 பொருத்தம்

திருமணத்திற்கு 10 பொருத்தம்

திருமணம் செய்ய இருக்கும் பெண்ணுக்கும் மாப்பிள்ளைக்கும் கீழ்கண்ட பொருத்தங்கள் பார்த்து திருமணம் நடத்தி வைப்பது வழக்கம்.
1. தினப் பொருத்தம்: மணப் பெண்ணின் நட்சத்திரத்திலிருந்து துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரை எண்ணி, அந்தக் கூட்டுத் தொகையை ஒன்பதால் வகுத்தால், ஈவு 2,4,6,8,9 என்று வருமானால் இருவருக்கும் தினப்பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தை இன்னொரு வகையிலும் கணக்கிடலாம். அதாவது பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணிக்கொண்டு வரும்போது அந்த எண் தொகை 2,4,6,8,9,11,13,15,17,18,20,22,26,27 என்று வருமானால் இதுவும் தினப் பொருத்தம்தான் என்று சொல்வார்கள். மணமகன், மணமகள் இருவருக்கும் ஒரே நட்சத்திரமானால், அதுவும் தினப் பொருத்தம்தான். ஆனால், பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் இருவருக்கும் ஒன்றாக இருக்குமானால், இது பொருந்தாது என்பதும் ஒரு கணிப்பு. மணமகள், மணமகன் இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருக்கும் பட்சத்தில், மணமகனுக்கு அந்த நட்சத்திரத்தில் முதல் பாதமாகவும், மணமகளுக்கு அடுத்த பாதங்களில் ஏதாவதொன்றாகவும் அமையுமானால், அது சுபப் பொருத்தம் என்று கொள்ளப்படுகிறது. உதாரணமாக, இருவருக்கும் கிருத்திகை நட்சத்திரம் என்று இருக்குமானால், மணமகனுக்கு கிருத்திகை முதல் பாதம்; மணமகளுக்கு கிருத்திகை 2,3 அல்லது 4-வது பாதம் என்று இருந்தால், மணமகனுக்கு மேஷ ராசியாகவும், மணமகளுக்கு ரிஷப ராசியாகவும் இருக்கும். இதில் மேஷ ராசி முதலில் வருகிறது என்பதால், இந்தப் பொருத்தமும் ஏற்புடையதுதான்.
அதேபோல மணமகனுக்கும், மணமகளுக்கும் ஒரே ராசியாக இருந்து, அதில் மணமகனுடைய நட்சத்திரம் முதலில் இருக்குமானால், இதுவும் சரியான பொருத்தமாகத்தான் கொள்ளப்படுகிறது. உதாரணமாக மணமகன், மணமகள் இருவருக்கும் மிதுன ராசி என்று வைத்துக்கொள்வோம். இந்த ராசியில் உள்ள நட்சத்திரங்களில் (மிருக சீரிஷம் 2,3-ம் பாதங்கள், திருவாதிரை மற்றும் புனர்பூசம் 1,2,3-ம் பாதங்கள்) மணமகனுக்கு மிருக சீரிஷமாக இருந்து மணமகளுக்கு திருவாதிரை அல்லது புனர்பூசமாக இருக்குமானால் இந்தப் பொருத்தமும் ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

2. கணப் பொருத்தம்: 

மூன்றுவகை கணங்கள் ஜோதிட சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. 1. தேவ கணம், 2. மனித கணம், 3. ராட்சஸ கணம்.

தேவகணத்தில் அசுவினி, மிருக சீரிஷம், புனர்பூசம், பூசம், ஹஸ்தம், ஸ்வாதி, அனுஷம், திருவோணம், ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அடங்கும். மனித கணத்தில் பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், உத்திரம், பூராடம், உத்திராடம், பூரட்டாதி, உத்திரட்டாதி ஆகியவை அடங்கும். ராட்சஸ கணத்தில் கார்த்திகை, ஆயில்யம், மகம், சித்திரை, விசாகம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம் இவை அடங்கும். இவற்றில் மணமகன் மற்றும் மணப்பெண் இருவரும் ஒரே கணத்தைச் சேர்ந்தவர்களானால், இருவருக்கும் மணம் செய்விக்கலாம். இருவருக்கும் முறையே தேவகணம், மனித கணமாக இருந்தால் இதுவும் கணப்பொருத்தம்தான். மணமகன் ராட்சஸ கணத்தைச் சார்ந்தவராக இருந்து மணமகளும், அதே கணத்தவளாக இருந்தால், மணமகளின் நட்சத்திரத்திலிருந்து மணமகனுடைய நட்சத்திரம் பதினான்காவதாக இருக்குமானால், இதுவும் கணப்பொருத்தம் என்றே கொள்ளலாம். மணமகள் ராட்சஸ கணமாகவும், மணமகன் தேவ கணமாவோ, மனித கணமாகவோ இருத்தல் கூடாது. ஆனால், மணமகள் மனித கணமாகவும், மணமகன் ராட்சஸ கணமாகவும் இருந்தால் இந்தப் பொருத்தம் சரியானதே.

3. மகேந்திரப் பொருத்தம்: 

பெண் நட்சத்திரம் துவங்கி, ஆண் நட்சத்திரம் முடிய வரும் எண்ணிக்கை 4,7,10,13,16,19,22,25 என்று அமையுமானால் இது மகேந்திரப் பொருத்தம் எனப்படும். இந்தப் பொருத்தத்தின் மூலம் மணமக்களின் தாம்பத்திய வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. அதாவது புத்திர பாக்கியம் நிறைவானதாக இருக்கும்.

4. பெண் தீர்க்கப் பொருத்தம்: 

மணப்பெண் நட்சத்திரம் துவங்கி, மணமகன் நட்சத்திரம் வரையிலான எண்ணிக்கை ஏழுக்கு மேல் இருக்குமானால் பெண் தீர்க்கப் பொருத்தம் உண்டு என்று கொள்ளலாம். இந்த எண்ணிக்கை 13க்கு மேல் இருப்பின், மிக மிகப் பொருத்தம் என்று கூறுவதுண்டு, ஏழு என்ற எண்ணிக்கை பொருத்தமானது என்றும், அதற்கு மேல் அதிகரிக்கக்கூடும் எண்ணிக்கை அதிகப் பொருத்தமானது என்றும் கொள்ளலாம். இந்தப் பொருத்தத்தால் வளமான குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான சகல சம்பத்தும் கிட்டும்.

5. யோனிப் பொருத்தம்: 

இல்லற சுகத்துக்கு இந்தப் பொருத்தத்தைப் பார்ப்பது மிகவும் அவசியம் என்பார்கள். இன்னின்ன நட்சத்திரத்துக்கு இன்னின்ன மிருக அம்சம் என்று ஜோதிடத்தில் கணித்திருக்கிறார்கள். எந்த மிருக அம்சத்தோடு எது சேருவது பொருத்தமாயிருக்கும் என்று பார்ப்பதுதான் இந்தப் பொருத்தம். அதாவது, அசுவினி, சதயம் - குதிரை; பரணி, ரேவதி - யானை; கார்த்திகை, பூசம் - ஆடு; ரோகிணி, மிருக சீரிஷம் - பாம்பு; திருவாதிரை, மூலம் - நாய்; புனர்பூசம், ஆயில்யம் - பூனை; மகம், பூரம் - எலி; உத்திரம், உத்திரட்டாதி-பசு; ஹஸ்தம், சுவாதி - எருமை; சித்திரை, விசாகம் - புலி; அனுஷம், கேட்டை - மான்; பூராடம், திருவோணம் - குரங்கு; உத்திராடம் -கீரி; அவிட்டம், பூரட்டாதி - சிங்கம்.
இந்த மிருக அம்சங்களில், குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு- குரங்கு, பாம்பு - எலி, பசு - குதிரை, எலி- பூனை, கீரி - பாம்பு, மான்-நாய் ஆகிய இவை ஒன்றுக்கொன்று பகையாகும். இந்த எதிர் அம்சங்கள் இல்லாத வகையில் பிற மிருக அம்சங்கள் ஒன்றுக்கொன்று இணையுமானால், அது யோனிப் பொருத்தம் என்று சொல்லப்படுகிறது. இல்லற இன்பம் எந்நாளும் நிலைத்திருக்க இந்தப் பொருத்தம் அவசியம்.

6. ராசிப் பொருத்தம்: 

மணப்பெண் ராசியிலிருந்து மணமகனின் ராசி வரையிலான எண்ணிக்கை ஆறுக்கு மேற்பட்டால் அது ராசிப் பொருத்தம் எனப்படுகிறது. ஒன்பதுக்கு மேற்பட்டாலும் அதி பொருத்தம் என்பார்கள். எண்ணிக்கை எட்டாக இருத்தல் கூடாது. மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் இவை பெண் ராசியாக அமையுமானால் ஆறாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். அதேபோல ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் இவை பெண்ணுக்குரிய ராசியானால் இதற்குப் பன்னிரண்டாவது ராசியாக ஆண் ராசி அமைந்தால், பன்னிரண்டாமிட தோஷம் இல்லை என்று கொள்ளலாம். இந்தப் பொருத்தம் ஆண் வாரிசுக்கு வழி வகுக்கும் என்கிறது சாஸ்திரம்.

7. ராசி அதிபதிப் பொருத்தம்: 

ஒவ்வொரு ஜாதகருக்கும் அவரவருடைய ராசிக்குரிய அதிபதி யார் என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். மணமகன், மணப்பெண் இருவருக்கும் ஒரே அதிபதியாக அமைந்துவிட்டால் அது சரியான பொருத்தம். அல்லது இரு அதிபதிகளும் நட்பானவர்களாக இருந்தால் இதுவும் விசேஷம்தான். பகை அதிபதிகளாக இருத்தல்கூடாது. இந்தப் பொருத்தம் மூலமாக இரு தரப்பிலும் சம்பந்திகள் மிகவும் அன்னியோன்யமாக இருப்பார்கள்.

8. வசியப் பொருத்தம்: 

ராசிகளில் ஒன்றுக்கொன்று எதெல்லாம் உடன்பாடானவை; எதெல்லாம் அல்லாதவை என்பதை அறிவதன் மூலம் இந்தப் பொருத்தத்தைத் தீர்மானம் செய்யலாம். மேஷத்துக்கு - சிம்மம், விருச்சிகம்; ரிஷபத்துக்கு - கடகம், துலாம்; மிதுனத்துக்கு - கன்னி; கடகத்துக்கு - விருச்சிகம், தனுசு; சிம்மத்திற்கு - துலாம்; கன்னிக்கு - மிதுனம், மீனம்; துலாத்துக்கு - கன்னி, மகரம்; விருச்சிகத்திற்கு - கடகம், கன்னி; தனுசுக்கு - மீனம்; மகரத்துக்கு - மேஷம், கும்பம்; கும்பத்துக்கு - மேஷம், மீனம்; மீனத்துக்கு -மகரம் என்று வசியப் பொருத்தம் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் ராசிக்கு ஆண் ராசி மேற்கண்ட அமைப்புப்படி பொருந்துமானால், அதுவே சரியான வசியப் பொருத்தமாகும். மற்றவை பொருத்தமற்றவை. இப்பொருத்தம் அமைவதன் மூலம் தம்பதியர் ஒருவருக்கொருவர் வசியமாகி, எந்த சந்தர்ப்பத்திலும் ஒருவரை மற்றவர் விட்டுக் கொடுக்காமல் பூரண அன்புடன் இனிய வாழ்க்கை நடத்துவார்கள்.

9. ரஜ்ஜுப் பொருத்தம்: 

அசுவினி, மகம், மூலம் - ஆரோகபாத ரஜ்ஜு, ஆயில்யம், கேட்டை, ரேவதி - அவரோகபாத ரஜ்ஜு; பரணி, பூரம், பூராடம் - ஆரோக தொடை ரஜ்ஜு; பூசம், அனுஷம், உத்திரட்டாதி - அவரோக தொடை ரஜ்ஜு; கார்த்திகை, உத்திரம், உத்திராடம் - ஆரோக உதர ரஜ்ஜு, புனர் பூசம், விசாகம், பூரட்டாதி - அவரோக உதர ரஜ்ஜு; ரோகிணி, அஸ்தம், திருவோணம் - ஆரோக கண்ட ரஜ்ஜு; திருவாதிரை, சுவாதி, சதயம் - அவரோக கண்ட ரஜ்ஜு; மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் - சிரோ ரஜ்ஜு.
இந்த ரஜ்ஜு அமைப்பில் மணமகன், மணப்பெண் இருவரது நட்சத்திரமும் ஆரோகத்திலாவது அவரோகத்திலாவது ஒரே வரிசையில் இருக்குமானால், ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்று கொள்ளலாம். ஒன்று ஆரோகத்திலும், ஒன்று அவரோகத்திலும் வெவ்வெறு வரிசையில் இருந்தாலும் சரி; இரண்டு நட்சத்திரங்களுக்கும் ஒரே ரஜ்ஜுவாக இருந்தாலும் சரி, இருவருக்கும் ரஜ்ஜுப் பொருத்தம் உண்டு என்று சொல்லலாம். மாங்கல்ய பலம் பெருக இந்தப் பொருத்தம் அவசியம்.

10. நாடிப் பொருத்தம்

அசுவினி, திருவாதிரை, புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி ஆகிய இந்த நட்சத்திரங்கள் தட்சிண பார்சுவ நாடியைச் சேர்ந்தவை. பரணி, மிருக சீரிஷம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி இவை மத்திய நாடி. கார்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், ஸ்வாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி இவை வர்ம பார்சுவ நாடி. மணப்பெண், மணமகன் இருவரும் ஒரே நாடியைச் சேர்ந்தவர்களானால் நாடிப்பொருத்தம் இருக்கிறது என்று அர்த்தம். இந்தப் பொருத்தமும் மாங்கல்ய பலத்தை அதிகரிக்கச் செய்யும்.
other my blogs
http://dollorformula.blogspot.com/2011/02/money-making-formulas.html
http://englishmedicines.blogspot.com/
http://indiatamilnad.blogspot.com/
http://easymeditaions.blogspot.com/
http://servicesindiaa.blogspot.com/ 

http://tvshowstamil.blogspot.com/
http://swamyviradham.blogspot.in/
http://indiatreatments.blogspot.in/

இட்லி

                             இட்லி

இட்லி சாப்பிடுங்கள்!
நாம் அடிக்கடி சாப்பிடும் டிபன் இட்லிதான் அந்த இட்லி சாப்பிடுவதினால் நன்மை என்ன?
என்று நம்மில் சில பேருக்கு தெரியாது இதோ தெரிந்து கொள்ளுங்கள்.
அரிசியையும் உளுத்தம் பருப்பையும் ஊறவைத்து பிறகு அரைத்து மறுநாள் காலையில் இட்லி, தோசையாகச் சாப்பிடுகிறோம்.
இது மிகச் சிறந்த இரண்டு மடங்கான சத்துணவு
என்று சமீபத்தில் உறுதிப் படுத்தியுள்ளன.
அரிசியிலும், உளுத்தம் பருப்பிலும் உள்ள வைட்டமின்கள்,


உப்புக்கள் நோய் நச்சு முறிவு மருந்தாக உயர்கின்றன.
நார்ச்சத்துக்கள்,இரும்பு,கால்சியம்,பரஸ்பரஸ் போன்ற
அமினோ அமிலங்களும் பன் மடங்கு அதிகரிக்கின்றன.
திசுக்களை பழுது பார்த்து புதுப்பிக்கும் லைசின் என்ற
அமினோ அமிலம் மூன்று மடங்கும் சிறுநீரகங்களின்
செயல்பாட்டுக்கு உதவும் காமா அமினோபட்ரிக் என்ற
அமினோ அமிலம் பத்து மடங்கும் அதிகரிக்கின்றன.
இதனால் இட்லி,தோசை முதலியவற்றில் இரவில் ஊற வைத்து சாப்பிடும் கொண்டை கடலையில் கிடைப்பது போல தாது உப்புக்களும், அமினோ
அமிலங்களும் கிடைக்கின்றன.
லைசின் அமிலம் பசி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது இட்லி மூலம் இந்த அமிலம் உடனே கிடைப்பதால் பசியும் உடனே அகன்று மனத் திருப்தியும் கிடைக்கிறது.
இட்லி, தோசை வகைகள் முதலியவற்றை சாப்பிடும்
போது வைட்டமின் சி உள்ள முருங்கைக்கீரை பச்சடி,
முருங்கைக்காய் சாம்பார் நல்லது. அல்லது ஏதேனும் ஒரு கீரைப் பச்சடியும் தேவை. இல்லையெனில் புதினா,
கொத்தமல்லி போன்ற துவையல்.காரணம் லைசின் அமிலம் உடலில் பாதுகாப்பாக இருக்க உதவுவது வைட்டமின் சி தான் அது கீரைகளில் தாராளமாக
இருக்கிறது.
அதற்க்காக அதிகமாக சாப்பிடக்கூடாது அளவாகத்தான் சாப்பிட வேண்டும் 3 இட்லிக்கு மேல் சாப்பிட்டால் அது நல்லதள்ள எனவே அளவாக சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத் திற்க்கு நல்லது.
எனவே இட்லி,தோசை,அரிசி,கோதுமை சாதத்தை விடத் தரமான உணவுகள் என்பதை உணர்வோம்.

ரூபாய் நோட்டுகள்

                  



ஒரு புது தகவல்:

ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க ஆகும் செலவுகள் உங்களுக்காக!!

அந்த பணத்தை அச்சடிப்பதற்கு ஆகும் செலவு பற்றி நம்மில் பலருக்குத் தெரியாது.

அதுபற்றிய விபரங்களை இன்று இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

ஐந்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 47 பைசா

பத்து ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 96 பைசா

இருபது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 46 பைசா
ஐம்பது ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகு்ம் செலவு = 1 ரூபாய் 81 பைசா

நூறு ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 1 ரூபாய் 79 பைசா

500 ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 3 ரூபாய் 58 பைசா

ஆயிரம் ரூபாய் நோட்டு அச்சடிக்க ஆகும் செலவு = 4 ரூபாய் 6 பைசா

இதில் ஆச்சர்யமான தகவல் என்னவென்றால்...

100 ரூபாய் தாளை அச்சிடுவதற்கு ஆகும் செலவை விட 50 ரூபாய் தாள் அச்சிட ஆகும் செலவு அதிகம்.

எந்த ஒரு பணத்தாளும் சேதமடைந்தாலும் அதன் மதிப்பை இழக்காது.

இடைத்தரகர்கள் வேண்டுமானால் பழைய கிழிந்த பணத்தாள்களை வாங்கிக் கொண்டு பாதி மதிப்பிலான பணத்தை கொடுப்பார்கள்.

ஆனால் உண்மையாகவே அதன் மதிப்பு மாறாமல் இருக்கும். அவர்கள் மொத்தமாக வங்கிக்கு கொண்டு சென்று அதை நல்ல நோட்டுக்களாக மாற்றி விடுவார்கள்.

ரூபாய் நோட்டுக்கள் கிழி வதையும், சேதமடைவதையும் தடுக்க இனிவரும் காலங்களில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்களை அச்சடித்து புழக்கத்திற்கு விடும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது 
Reserve Bank of India.


கூடுதல் தகவல் என்னவெனில்...

ஒரு நாட்டில் எந்தளவிற்கு பணம் அச்சடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடும் உள்ளது. அந்தக் கட்டுப்பாட்டு மட்டும் இல்லை யென்றால் ஒவ்வொரு நாடும் தன் விருப்பத்திற்கு அதிகமான பணத்தை அச்சடித்துவிடும்.

நாட்டின் பொருளாதாரத்திற்கும் பணம்,நாணயம் அச்சடிப்பதற்கும் முக்கியமான தொடர்பு உள்ளது.அதன்படியே பணத்தாள்கள் மற்றும் நாணயங்கள் அச்சடிக்கப் படுகின்றன

after 12th std career path finder

பன்னிரண்டாம் வகுப்பிற்கு பின் என்ன செய்யலாம் இதோ உங்களுக்காக  career path finder 


வியாழன், 26 ஜனவரி, 2012

school to street - AVIVA

 பெண் சிசுக்  கொலையை தடுக்கவும் ,பெண்கள் படிக்கவும் அடிமைத் தனத்தை நீக்கவும்.முன்னேறவும். பெண்ணுரிமை அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன. அரசும் அதற்கான நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டு இருக்கிறது .ஆனால் aviva போன்ற ஆயுள் காப்பிடு நிறுவனங்கள் இறந்த பின் சேவை செய்வதற்கு பதில் இருக்கும் போதே  பெண் குழந்தைகளின் தாயை   தற்கொலைக்கு தூண்டுகின்றன.
கடந்த 11 /09 /2008  அன்று ஒரு பெண்மணி தன் 9 வயது பெண் குழந்தையின் படிப்புக்காக பெண் குழந்தைகள் பாலிசி policy no.ALS 2157409 ஒன்று எடுத்துள்ளார் . 
முதல் கோணல் முற்றிலும் கோணல் 
என்பது போல் அப்போதைய சென்னை.1 விற்பனை அதிகாரி புவியரசு அவருக்கு கமிஷன் கூடுதலாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கோடு பெண்கள் திட்டத்திற்கு பதில் அவருக்கு ஏற்ற திட்டத்தை கொடுத்துள்ளார் . அவர் அளித்த வாக்குறுதிகள் 3 வருடங்கள் கட்டினால் கட்டிய தொகை பல மடங்காகும் .
நடந்தது என்ன?
வருட பிரிமியம் rs15000 .3 வருடங்கள் கட்டியுள்ளார் .எந்தவொரு சேவையையும் பாலிசி தாரருக்கு தராமல்   premium allocation charges , policy administration charges , morality charges ,plus service taxes என்று எடுத்தது போக மிச்சத்தை பங்கு மார்க்கெட்டில் முதலீடு செய்து
  மொத்தக் காசும் போய் விட்டது என்று கூறி நான்காவது வருட ஆரம்பத்தில் சட்ட விரோதமாக autoforeclosure என்று கூறி பாலிசி யை குளோஸ்  செய்துவிட்டார்கள் .(that day policy status 1043.085 units @  NAV  rs28.71. it's value rs 29958/-)
chennai branch க்கு நேரிலும் , customer care ஐ phone email மூலம் தொடர்பு கொண்டார் AVIVA செய்தது சரி என்றார்கள் .IRDA வில் புகார் செய்தார்.15 நாள் நேரம் கேட்டார்கள் . இதற்கு மேல் இந்தப் பெண்ணால் என்ன செய்ய முடியும் . நீதி மன்றம் செல்லக் காசும் இல்லை . கொடியவர்களை எதிர்த்துப் போராடும் துணிவும் இல்லை . அவர் பெண் குழந்தையின் எதிர்காலதிற்கு   அவர் இது நாள் வரை உழைத்து AVIVA வில் சேர்த்த பணத்திற்கு ஏமாற்றம் தான் மிச்சம்   . இந்த அபலையின் கண்ணீருக்கு பதில் என்ன?. கண்ணகி காலத்தில் இருந்து தமிழ்ப் பெண்களின் நிலை இது தானோ . ஆண்டவனுக்கே வெளிச்சம்.
AVIVA Awards and Recognition
FOR Aviva Great Wall of Education
Silver at Effies 2011 ( Effective Advertising Awards)
Bronze at the Effies 2010
gold at the SPIKES Asia Awards, 2010
"Corporate Social Responsibility Award"
 Aviva was ranked 4th in the Best Workplaces in India.

திங்கள், 25 ஜூலை, 2011

வார இதழின் 5 கோடி ரூபாய் கல்வி உதவிகள்

        தமிழ் பத்திரிக்கை வரலாற்றில் முதன்முறையாக  84 பேருக்கு 5 கோடி மதிப்புள்ள  இலவச உயர் கல்வியினை  புதிய தலைமுறை வார இதழ் கொடுத்துள்ளது ...
                        ஆயிரம் அன்ன சத்திரம் அமைப்பதைக் காட்டிலும் ஒருவனுக்கு கல்வி அளிப்பது மேலானது . மீனை தானமாக கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுப்பது அதை விட மேலானது . 
மாலன் ஆசிரியர் 
   
திரு மாலன்  தியாகத்திற்கு காவி நிறத்தையும் அமைதிக்கு வெண்மையையும் விவசாயத்திற்கு  பசுமையையும் 24 மணி நேர உழைப்பிற்கு  அசோக சக்கரமும்   என இந்தியாவின்  உயரிய நோக்கத்தை வெளிப் படுத்துவது நம் தேசியக் கொடி என்று  50 வது சுதந்திர தினத்தன்று  குமுதத்தில் தலையங்கம் எழுதி சுதந்திரத்தின் பெருமையை உலகமறிய பரை சாற்றியவர்  . சன் டிவி , தினமணி , குமுதம் போன்ற தமிழின் அடையாளத்தை சொல்லும் மிகப் பெரிய  நிறுவனங்களில் தலைமை பொறுப்பில் சிறப்பாக பணியாற்றியவர் . தற்போது புதிய தலைமுறையின் ஆசிரியராக உள்ளார் .
Dr Pari vendhar SRM UNIVERSITY . Chennai 
 தோன்றிற் புகழோடு தோன்ற  வேண்டும் . பெயருக்கு ஏற்ப வாழ வேண்டும் . இல்லாதவனுக்கு  உதவும்  எண்ணம் இருத்தல் வேண்டும்  . இவை அனைத்தும் ஒருங்கே திகழ்பவர் SRM Founder பாரிவேந்தர் .
SRM University: Ranked India's No. 1 Private Engineering University
இந்தியாவில் உள்ள பத்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் ஒவ்வொருவரும்  அக் கல்லூரியில் இடம் கிடைக்கிறதோ இல்லையோ அதன் மண்ணையாவது மிதிக்க வேண்டும் என்பது ஒவ்வொருவரின்  கனவு  . முழுமையான் கல்விக் கூடம் . பல்கலை கழகத்தின் பெயருக்காகவே வேலை தருவதற்கு போட்டி போடும் உலகளாவிய நிறுவனங்கள் . சேர்க்கை நேரத்தில்  இங்கு  இடம் இல்லைஎன்றால் தான் மற்ற கல்லூரிகளை தேடிப் போகும் மாணவர்கள் . உலகில் உள்ள அனைத்து சிறப்புகளும் வாய்ந்த இந் நிறுவனம்  சேவை நோக்கோடு 84  ஏழை மாணவ மாணவியருக்கு இலவச இடம் , கல்லூரிக் கட்டணம் ,  விடுதி , போக்குவரத்து , புத்தகங்கள் , மடி கணினி அனைத்தையும் எந்த ஒரு உள் அரசியலும் இல்லாமல் உயர் கல்வியை இலவசமாக கொடுத்து அவர்கள் வாழ்க்கையில் விளக்கேற்றி வைத்துள்ளார்கள்
ஒளி ஏற்றிய   SRM பல்கலை கழகம் மற்றும் ஏற்பாடு செய்த புதிய தலைமுறை வார இதழின் சேவைகள்   மேலும் மேலும் தொடரட்டும் . பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழட்டும் பெயருக்கு ஏற்ப ( பாரி வேந்தர் , மாலன் , புதிய தலைமுறை ) .  வாழ்த்துக்கள் .   
P S ; உறுதிப் படுத்தாத தகவல் இதன் சந்தை மதிப்பு பத்து  கோடிக்கு மேல்  market value : 10 Crore  
other my blogs http://dollorformula.blogspot.com/2011/02/money-making-formulas.html
http://englishmedicines.blogspot.com/
http://indiatamilnad.blogspot.com/
http://easymeditaions.blogspot.com/
http://servicesindiaa.blogspot.com/