செவ்வாய், 29 ஏப்ரல், 2014

POST BOX உங்களுக்கும் உதவக்கூடும்



உபயோகமான செய்தி, பகிர்ந்து கொள்ளுங்கள்....ஒருநாள் உங்களுக்கே உதவ நேரிடலாம்.....
========================================
நீங்கள் செல்லும்போது வழியில் ஏதாவது முக்கிய ஆவணங்களான,
~~~PASSPORT
~~~DRIVING LICENSE,
~~~PAN CARD,
~~~VOTER ID,
~~~RATION CARD,
~~~BANK PASSBOOK,
~~~ATM CARD முதலியவற்றில் ஏதாவதை கண்டால், உடனடியாக அவற்றை அருகில் உள்ள POST BOX - ல் போட்டு விடவும். அஞ்சலகம் அதனை உரிமையாளர்களிடம் சேர்த்து விடும்.
உதவும் மனப்பான்மை கொண்ட, நல்ல உள்ளங்கள் இதனை அதிகமாக SHARE செய்து மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படிதங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இதனை SHARE செய்வதினால் எனக்கென்ன பயன் என்று நினைத்து, இதனை SHARE செய்யாமல் செல்லும் சகோதர சகோதரிகளே......ஒரு நாள் இது உங்களுக்கும் உதவக்கூடும் என்பதனை மறந்திடவேண்டாம்

சமையலறை டிப்ஸ்...0001




சகோதரிகளே உங்களுக்கான சமையலறை டிப்ஸ்...
டிப்ஸ்...ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி சொல்வதை கேளுங்கள் .
* பெண்கள் சமையல் செய்யும்போது சூடான எண்ணெய் பட்டுவிட்டால் அந்த இடத்தில் உருளைக்கிழங்கைச் சிறிது அரைத்துப் பூசுங்கள். கொப்பளம் ஏற்படாது.
* தேவைக்கு அதிகமாக இஞ்சி இருந்தால் அதை மண்ணில் புதைத்து வைத்து தண்ணீர் விட்டு வையுங்கள்.
தேவைப்படும் போது எடுத்து உபயோகிக்கலாம்.
இஞ்சி காய்ந்து போகாது.
* பாகற்காய் சீக்கிரம் பழுத்துவிடும்.
இதைத் தவிர்க்க அதை இரண்டிரண்டாக நறுக்கி வைத்து விடுங்கள்.
* உருளைக் கிழங்கை உப்புக் கரைத்த நீரில் பதினைந்து நிமிடங்கள் ஊற வைத்துவிட்டுப் பிறகு அடுப்பில் வைத்தால் சீக்கிரம் அது வெந்துவிடும்.
* முதல்நாள் மாலையில் வாங்கிய பூ மறுநாள் காலை வரையில் வதங்காமல் இருக்க வேண்டுமா?
பூவை ஈரத் துணியில் சுற்றி வைக்காதீர்கள்.
ஒரு பாத்திரத்தை நன்றாகக் கழுவிவிட்டு அந்தப் பாத்திரத்திற்குள் பூவை வைத்து மூடிவையுங்கள்.
பூ வாடாமல் வதங்காமல் வைத்த மாதிரியே இருக்கும்.
* ஜாம் பாட்டிலில் ஜாம் தீர்ந்து போனால் அதில் பாலை ஊற்றுங்கள்.
பாட்டிலில் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாம் பாலுடன் கலந்து கரைந்துவிடும்.
பிறகு அந்தப் பாலை அருந்தினால் சுவையாக இருக்கும்.
ஜாம் வீணாகாது.
கை வைத்தியம்
இதையும் தெரிந்து கொள்ளுங்களேன்
நோய்களை விரட்ட டிப்ஸ்
* வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்த ஜவ்வரிசியைச் சாதம்போல் வேகவைத்து மோரில் கரைத்து உப்புப்போட்டுச் சாப்பிட வயிற்றுப்போக்கு நிற்கும்.
வயிற்று வலியும் இருக்காது.
* குழந்தைகளுக்கு நோய் வராமல் இருக்க தினமும் ஒரு செப்புப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொஞ்சம் துளசி இலைகளை அதில் போட்டு 5 மணி நேரம் ஊற விடுங்கள்.
பிறகு அந்தத் தண்ணீரைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் எந்த வியாதியும் அவர்களை அண்டாது.
* பாகற்காயை நறுக்கிக் காயவைத்துத் தூளாக்கிக் கொள்ளுங்கள்.
இதில் ஒரு டீஸ்பூன் தூளை ஒரு டம்ளர் வெந்நீரில் கலந்து
குடித்துவர அல்சர் சீக்கிரமே குணமாகும்.
* தேனில் நெல்லிக்காய்ப்பொடி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் இருக்கவே இருக்காது.
* மூட்டு வலி, முழங்கால் வலியைக் குறைக்க முடக்கத்தான் கீரை, பச்சை மிளகாய், சீரகத்தை அரைத்துத் தோசை மாவில் கலந்து தோசை வார்த்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.
* மாதுளம் பழச்சாறுடன் இஞ்சிச்சாறு, தேன் கலந்து மூன்று வேளையும் அருந்தி வர வறட்டு இருமல் நீங்கும். தொண்டைக்கும் இதம் கிடைக்கும்.
* தக்காளியைச் சமைக்காமல் பச்சையாக மென்று சாப்பிடுவதால் வாய்ப்புண் ஆறும்.
* சொறி, வேர்க்குரு வராமல் தடுக்க பாசிப்பயறு, மஞ்சள் தூள், வேப்பிலையை மைபோல் அரைத்து உடலில் பூசி 10 நிமிடம் கழித்துக் குளித்து வாருங்கள். சருமம் ஆரோக்கியமாக இருக்கும்.
பழ மருத்துவம் பற்றி கீதா ஹரிஹரன், கொச்சின் சொல்வதை கேளுங்கள் . .
* மாதுளம் பழச்சாற்றுடன் இஞ்சிச் சாறு கலந்து சாப்பிட்டு வர இருமல் குணமாகும்.
* செவ்வாழைப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் உருவாகும்.
* திராட்சைப் பழச்சாற்றை மூன்று வேளைகள் அருந்த குடல் புண் குணமாகும்.
* விளாம்பழத்தின் சதையுடன் திப்பிலியையும் மிளகையும் தூள் செய்து சேர்த்துப் பயன்படுத்த பித்த மயக்கம்; தொண்டை நோய்கள் குணமாகும்.

வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)





வாழ்க்கைப் படிகள் பதினாறு (16)
1) மிகமிக நல்ல‍ தொரு நாள் எது ?
பதில் - இன்று
2) மிகப் பெரிய வெகுமதி எது?
பதில் – மன்னிப்பு
3) நம்மிடம் இருக்க‍ வேண்டி யது எது?
பதில் – பணிவு
4) நம்மிடம் இருக்க‍க் கூடாதது எது ?
அதுக்கு இதுதான் பதில் – வெறுப்பு
5) நமக்கு அத்தியாவசியமாய் தேவைப்படுவது எது?
பதில் – ச‌மயோஜித புத்தி
6) ந‌மக்கு வரக்கூடாத அதி பயங்கர நோய் எது?
பதில் – பேராசை
7)ந‌மக்கு எளிதாக வரக்கூடியது எது
அதுக்கு இதுதான் பதில் – குற்ற‍ம் காணல்
8) நம்மிடம் இருக்க‍ கூடாத கீழ்த்த‍ரமான செயல் எது?
பதில் - போறாமை
9) நாம் எதை நம்பக்கூடாது?
பதில் – வ‌தந்தி
10) எதுன்னு கேட்ட‍து - ந‌மக்கு அதீத ஆபத்தை உண்டாக்குவது எது?
பதில் – அதீத பேச்சு
11) நாம் செய்யவேண்டியது எது?
பதில் – உதவி
12) நம்மிடம் இருந்து விட்டொழிக் க‍ வேண்டியது எது?
பதில் – விவாதம்
13) ந‌மது உயர்வுக்கு வழி எது?
பதில் – உழைப்பு
14) நாம் எதை நழுவ விடக்கூடாது?
பதில் – வாய்ப்பு
15) பிரி(ய)க்கக் கூடாதது எது?
பதில் – நட்பு
16) நாம் எதை ம‌றக்க கூடாதது ?
பதில் – நன்றி

திங்கள், 28 ஏப்ரல், 2014

தங்க நகை மோசடி..




தங்க நகை வியாபாரத்தில் நடக்கும் மோசடி..!

நாற்பது கிராம் தங்கத்துடன் பத்து கிராம் 


கண்ணாடிக் கற்கள் பதித்த நகை என்றால் 

அதன் 

விலையை எப்படி நிர்ணயிக்க வேண்டும்? 

நாற்பது கிராம் தங்கத்துக்கு தங்கத்தின் 

விலையையும் பத்து கிராம் கண்ணாடிக் 

கல்லுக்கு கண்ணாடிக் கல்லின் விலையையும் 

தான் நிர்ணயிக்க வேண்டும்.


ஆனால் ஐம்பது கிராம் தங்கத்துக்கான 


விலையை நம்மிடம் வாங்கி விடுகின்றனர். 

தங்கத்தின் விலையும் கல்லின் விலையும் 

சமமானவை அல்ல. இரண்டுக்கும் இடையே 

ஏணி வைத்தாலும் எட்ட முடியாத வித்தியாசம் 

உள்ளது.


நாற்பது கிராம் தங்கத்துக்கு ஐம்பது கிராம் 


பணத்தை வாங்குவது மோசடியாகும். ஐம்பது 

கிராம் தங்கத்துக்குப் பணத்தை வாங்கிக் 

கொண்டு கல் முத்து பவளம் இலவசம் என்று 

கூறி மக்களை மேலும் மதிமயக்குகிறார்கள். 

சில பேர் நாற்பது கிராமுக்கு ஐம்பது 

கிராமுக்கான பணத்தை வாங்கிக் கொண்டு 

கல்லுக்கு தனியாகவும் பணத்தை வாங்கி 

இரட்டை மோசடி செய்கிறார்கள்.


அதே சமயம் நாம் பழைய நகையை விற்கச் 


சென்றால் கல்லை அப்புறப்படுத்தி விட்டு 

தங்கத்தை மட்டும் எடை போட்டு பணம் 

தருகிறார்கள். இதற்கு நிகரான ஒரு மோசடி 

வேறு எந்த வியாபாரத்திலும் இருக்குமா என்று 

தெரியவில்லை.


இரண்டாவது மோசடி:


சொக்கத் தங்கம் எனப்படும் தனித்தங்கத்தில் 


நகை செய்ய முடியாது. அதில் செம்பு கலந்தால் 

தான் நகை செய்ய முடியும்.ஆயிரம் கிராம் நகை 

செய்ய 916 கிராம் தங்கமும் 84 கிராம் செம்பும் 

சேர்த்து செய்யப்படும் நகை 22 காரட் என்றும் 916 

KDM என்றும் சொல்லப்படுகிறது.


916 கிராம் தங்கத்துடன் 84 கிராம் செம்பு சேர்த்து 


விட்டு 1000 கிராமுக்கும் தங்கத்தின் விலை 

போடப்படுகிறது. செம்புக்கு தங்கத்தின் விலை 

போடுவது மற்றொரு மோசடியாக உள்ளது.


மூன்றாவது மோசடி:


தங்கத்துக்கு இன்றைய காலத்தில் இரண்டு 


விலை உள்ளது. ஒன்று மூலப் பொருளுக்கான 

விலை. மற்றொன்று நாம் விரும்பும் வகையில் 

தயார் செய்வதற்கான கூலியாகும். ஐந்து பவுன் 

தங்கத்தில் ஒரு நகை வாங்கினால் ஐந்து பவுன் 

தங்கத்திற்கான விலையையும் நாம் கொடுக்க 

வேண்டும். அதைக் குறிப்பிட்ட நகையாக 

செய்ததற்கான கூலியையும் கொடுத்தாக 

வேண்டும். இது மட்டும் இருந்தால் இதில் 

மோசடி ஏதும் இல்லை.


ஆனால் ஐந்து பவுன் தங்கத்துக்கும் நம்மிடம் 


பணம் வாங்கிக் கொண்டு அதற்கான 

கூலியையும் நம்மிடம் வாங்கிக் கொண்டு 

*சேதாரம்* என்ற பெயரில் ஒரு தொகையையும் 

வாங்கிக் கொள்கின்றனர்.


அதாவது மேற்கண்ட நகையைச் செய்யும் போது 


பத்து சதவிகிதம் சேதாரம் ஆகி விட்டது எனக் 

கூறி அதற்கான பணத்தையும் நம்மிடம் 

வாங்கிக் 

கொள்கின்றனர். அதாவது ஐந்து பவுனுக்கு 

மட்டும் பணம் வாங்காமல் இன்னொரு அரை 

பவுனுக்கும் சேர்த்து நம்மிடம் பணம் கறந்து 

விடுகிறார்கள்.


நகை செய்யும் போது அரை பவுன் சேதரமாக 


ஆகி வீணாகி விட்டால் அதை நம்மிடம் இருந்து 

வாங்குவது முறையானது தான். ஆனால் 

தங்கத்தில் எதுவுமே சேதாரம் ஆவது 

கிடையாது.

நகை செய்யும் போதும் பட்டை தீட்டும் போதும் 

தூள்களாக கீழே சிந்துபவை சேதாரமாகி 

குப்பைக்குப் போகாது. துகள்களாக உள்ளதை 

மீண்டும் வேறு நகைக்கு அவர்கள் 

பயன்படுத்திக் 

கொள்வார்கள். இதற்கெல்லாம் சேர்த்துத் தான் 

செய்கூலி வாங்கிக் கொள்கின்றனர். 

மக்களுக்குப் புரியாத டெக்னிகல் 

வார்த்தைகளைப் பயன்படுத்தி மோசடி 

செய்கின்றனர். இதைச் செய்யாத நகை 

வியாபாரிகளைக் காண முடியவில்லை.


அது போல் பழைய நகை வாங்கும் போது 


செய்கூலி சேதாரம் எல்லாம் தர மாட்டார்கள். 

அது நியாயமானது தான். ஆனால் நாம் 

கொடுக்கும் நகையில் கல்லையும் நீக்கி விட்டு 

எடை போட்டு அந்த எடைக்கு உள்ள பணத்தைத் 

தர வேண்டும். அவர்கள் விற்பனை செய்யும் 

விலையைத் தர வேண்டும் என்று நாம் 

கூறவில்லை. அவர்கள் வாங்கும் விலையைக் 

கொடுக்க வேண்டுமல்லவா? அப்படி கொடுக்க 

மாட்டார்கள். மாறாக நாம் நாற்பது கிராம் 

நகையை விற்கச்சென்றால் அதில் கால் 

வாசிக்கு மேல் குறைத்துத் தான் தருவார்கள்.


இதற்கெல்லாம் ஒரே தீர்வு தங்கத்தின் மீது 


வைத்துள்ள மோகத்தை குறைப்பதுதான். படித்த 

நம்மிலிருந்து ஆரம்பிக்கட்டும்.


ஞாயிறு, 27 ஏப்ரல், 2014

Good Doctor



10 Tips To Be A Successful Doctor:

1- Read more : Every day there are new medical studies , new diseases , new drugs ... etc , if you want to be a successful doctor you should read more everyday.

2- Humility : Respect others , even if you are excellent people hate conceited physicians , also even if you are excellent young doctors may know what you don't know.


3- Money is not everything : You are a physician , It is not an ordinary job you are treating with humans.


4- Ambitious : Ambition has no limit and you should renew your ambition to renew your success.as no limit and you should renew your success.

5- Details : Pay attention to details , you may diagnose a case with only one hidden word or sign.

6- Responsibility : Be responsible in every action you make as we said before it is not an ordinary job.

7- Communication skills : If you have time you can take a communication skills course , you should deliver good and bad news or advises for patients in a right manner.

8- Time management : You should manage your time between your work and your family and yourself , you are not a machine , Enjoy your life.

9- Be Patient : Don't hurry up , If you are good doctor you will be famous and you will success.

10- Marketing : You should search about new ways of medical marketing so people can find you

அதிசயத் தகவல்கள்.001



அதிசயத் தகவல்கள்.!
* இன்று அனைவரின் கைகளிலும் கையடக்கத் தொலைபேசி இருக்கிறது. அவற்றில் உள்ள சிம் அட்டைகள் பிளாஸ்டிக் என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் தாவரங்களிலிருந்து கிடைக்கும் செலுலோஸ் என்பதிலிருந்து தான் சிம் அட்டை தயாரிக்கப்படுகிறது.

* வேகமாகப் போக விரும்பினால், தனியாகப் பயணம் செய். தொலை தூரம் போக விரும்பினால் துணையுடன் பயணம் செய் என்பது ஆப்பிரிக்காவில் பிரபலமாகச், சொல்லப்படும் வாக்கியம்.
* எந்த விளையாட்டுக்கும் இல்லாத தனிச்சிறப்பு படகுப் போட்டிக்கு உண்டு. பின்பக்கமாகத் திரும்பி வெற்றிக் கோட்டைத் தொடும் ஒரே விளையாட்டு இது மட்டும்தான்.
* இரவில் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஆங்கிலத்தில் NOCTURNAL ENURESIS என்று குறிப்பிடுவோம். இந்தப் பழக்கத்துக்குப் பெண் குழந்தைகளைவிட அதிகம் ஆளாவது ஆண் குழந்தைகள்தான்.
* எல்லா வகை ரத்தத்துடனும் சேரும் ரத்த வகை ‘ஓ’ பாஸிட்டிவ் தான்.
* மகாத்மா காந்தி பற்றி ஜன்ஸ்டீன் சொன்ன புகழ்பெற்ற கருத்து இன்னும் 50 ஆண்டுகள் கழித்து ரத்தமும் சதையும் கொண்ட இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தார் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்!
* பொதுவாகவே நல்ல பெட்ரோலானது எங்கு சிந்தினாலும் சிறிதுநேரத்தில் சிந்திய சுவடு தெரியாமல் மாயமாகி விடும்.
கலப்பட பெட்ரோல் மட்டுமே சிந்திய இடத்தில் சிறிய வரைபடம் போன்று அதன் எல்லைக் கோட்டை விட்டுச்செல்லும்.
* நமது உள்ளங்கையில் ஒரு சதுர அங்குலத்திற்கு 3000 வியர்வைச் சுரப்பிகள் உள்ளனவாம்.
* அறிஞர் ‘வால்’ என்பவர் பல ஆய்வுகளை மேற்கொண்டு, பாம்புக்கு கேட்கும் திறன் இல்லை, செவி இல்லை என்பதைக் கண்டறிந்துள்ளார்.
* ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் 113 டன் எடையுள்ள மழை நீர் பொழிவதையே ஓர் அங்குலம் என்பர்.
* குழந்தை பிறக்கும் போது அதன் இதயம் ஒரு நிமிடத்திற்கு 140 முறை துடிக்கும் முயலின் இதயம் ஒரு நிமிடத்திற்கு 150 முறையும், குதிரையின் இதயம் 38 முறையும், சுண்டெலியின் இதயம் 200 முறையும், நாயின் இதயம் 118 முறையும், ஆட்டின் இதயம் 60லிருந்து 78 முறையும் யானையின் இதயம் 48 முறையும் துடிக்குமாம்.

Muslim marriage

இஸ்லாம் சொல்லும் திருமணம் என்றால் என்ன..?
திருமணம் என்பது நம் வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாதது. ஒரு மனிதனின் வாழ்க்கையில் பெரும்பாலும் மாற்றமும் வளர்ச்சியும் ஏற்படுவது திருமணத்திற்கு பிறகு தான். எவ்வளவு மோசமானவனாக இருந்தாலும் அவர் திருந்தி சீரான வாழ்க்கைப்பாதையில் பயணிக்கத் தொடங்குவது மனைவி என்ற உறவு கிடைத்த பிறகு தான்.
அத்தனை சிறப்புடைய திருமணம் பற்றியும், திருமணம் என்றால் என்ன, கணவன் மனைவி எப்படி இருக்க வேண்டும்? இஸ்லாம் திருமணம் குறித்து சொல்லும் நடைமுறைகளை சுருக்கமாக பார்க்கலாம்.
இஸ்லாம் சொல்லும் திருமணம் என்றால் என்ன?
பொதுவாக திருமணம் என்பது ஒரு ஆணும், பெண்ணும் உள்ளம், உடலால் இணைந்து வாழ ஏற்படுத்தப்பட்ட ஒரு சடங்கு என்று தான் நாம் அறிந்து வைத்திருக்கும். ஆனால், இஸ்லாத்தின் பார்வையில் திருமணம் என்பது இரு தரப்பினரின் சம்பந்தத்துடன் செய்யப்படும் ஒரு கண்ணியத்திற்குரிய வாழ்வியல் ஒப்பந்தம்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் முஸ்லீம்களுக்கு தனி திருமணச்சட்டங்கள் இருக்கின்றன. அது முஸ்லீம்களின் நடைமுறைகளில் என்றும் தலையிட்டதில்லை. மதச்சார்பின்மையை இதன் மூலமும் இந்தியா நிரூபிக்கிறது.
இஸ்லாமிய திருமணத்திற்கு மணமக்கள் சம்மதம், இரு வீட்டார் ஒப்புதல், சாட்சிகள், ஜமாத்தார்கள் எனப்படும் ஊர் பொதுமக்கள் மிக மிக அவசியம். குறிப்பாக பெண் தரப்பில் பெண்ணின் தந்தை, சகோதரர்கள் அல்லது அதற்கு சமமான பாதுகாவலர்களின் ஒப்புதல் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இவர்கள் இல்லாத திருமணம் செல்லாது. இந்த முறை மூலம் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்து கைவிடும் சில காவாலிகளிலிடமிருந்து பெண்ணிணம் காப்பாற்றப்படுகிறது.
திருமணத்தின் போது மணமக்கள் இருவரின் சம்மதம் வாய்மொழியாக கேட்கப்பட்டு, அது பதிவுசெய்யப்பட்டு கையெழுத்தும் வாங்கப்படுகிறது. பொதுவாக இஸ்லாத்தில் காதல் (!!) மணமென்பது மிகவும் குறைவு. காரணம், காதல் என்ற பெயரில் காம களியாட்டங்கள் நிகழ்த்தி, அதன் விளைவாக கர்ப்பமாக்கி அந்த பெண்ணை கைவிடுவது என்பது சகஜமான ஒன்று. ஆனால், இஸ்லாம் காதலுக்கு எதிரியில்லை. உடல் உணர்ச்சியை அடிப்படையாக கொண்டு கொள்ளப்படும் அன்பை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது.
உதாரணத்திற்கு பருவமடைந்த ஒரு பெண் வேற்று ஆணை தனிமையை சந்திக்கக்கூடாது. அப்படி சந்திக்கும் போது அங்கு 3 பேர் இருப்பார்கள். 1. ஆண் 2. பெண். 3. அவர்களை தவறு செய்ய வைத்து வழி கெடுக்க தூண்டும் ஷைத்தான். ஒரு பெண்ணை மணக்க தேர்ந்தெடுக்கும் போது இஸ்லாம் சொல்லித்தரும் வழி. 1. இறைவனின் மார்க்கத்தில் சிறந்தவள் 2. ஒழுக்கத்தில் சிறந்தவள் 3. குடும்ப பாரம்பரியத்தில் சிறந்தவள் 4. கல்வியில் சிறந்தவள் 5. அழகில் சிறந்தவள், 6. செல்வத்தில் சிறந்தவள். இஸ்லாம் பணத்திற்கு கடைசி இடத்தை கொடுக்கிறது. தனக்கான இணையை தேர்ந்தெடுக்கவும், நிராகரிக்கவும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் உரிமை வழங்கப்படுகிறது.
இஸ்லாத்தில் எத்தனை திருமணம் செய்யலாம்..?
இஸ்லாத்தின் சட்டப்படி ஒரு ஆண் 4 திருமணம் வரை செய்யலாம். உடனே புருவமுயர்த்தி இதென்ன அநியாயம் என்காதீர்கள். பொறுமை..!! இந்த கட்டளை இறைவனிடமிருந்து வந்த காலகட்டம் என்ன தெரியுமா? அறியாமையும், விஞ்ஞானமும் இல்லாத காலகட்டம். போர், கொள்ளை நோய் என்று மனித உயிர்கள் மாய்ந்த நேரம். அதில் குறிப்பாக போர்களில் ஆண்கள் கொல்லப்பட்டு பல்லாயிரக்கணக்கான பெண்கள் விதவைகள் ஆக்கப்பட்டார்கள். அவர்கள் வாழ வழியில்லாமல் வறுமையால் பீடிக்கப்பட்டு விபசாரத்தொழிலுக்கு தள்ளப்படும் நிலை நிலவியது. அப்போது ஏற்பட்டது தான் இந்த சட்டம்.
அது மட்டுமல்ல, ஒரு ஆண் மணமடைந்து அவன் மனைவியோடு திருப்தியில்லாத பட்சத்தில் அவளை பிரிந்தால் காலம் முழுக்க அவன் தனிமையிலும், உடல் ஆசை இல்லாமலும் வாழ முடியுமா..? நிச்சயம் முடியாது. அவனும் விபசாரியைத் தேடி தான் போவான். உலக மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி உலகில் ஆண்களின் எண்ணிக்கையை விட பெண்களின் எண்ணிக்கை கூடுதல். இது இயற்கை. இந்த நிலை காலம், செல்ல செல்ல பெண்ணுக்கு கணவன் கிடைக்காத நிலையை உண்டாக்கும். இல்லறத்திற்கு வழி இல்லாத பெண்கள் பிழைக்க அவர்களும் விபசாரம் செய்ய வாய்ப்பு உண்டு. இப்படி எல்லாவற்றுக்கும் தீர்வாக இருப்பது தான் பலதார மணம்.
சரி.. அப்படியானால் ஆண் இஷ்டப்பட்டபடி 4 பெண்களை மணக்கலாமா..? அதான் நடக்காது. அதற்கென்று மிக கடுமையான நிபந்தனைகள் இருக்கின்றன. அதில் முதல் நிபந்தனை என்னவென்றால் முதல் மனைவியின் மனப்பூர்வ சம்மதம் வேண்டும். இப்போது சொல்லுங்கள். கிடைக்குமா..? ஆனால், அந்த காலத்தில் கிடைத்தது. அரேபியர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மணம் புரிந்தார்கள். எப்படி சாத்தியம் தெரியுமா..? திருமணம் பற்றி இஸ்லாம் சொன்னதை கடை பிடித்தார்கள்.
இஸ்லாம் சொல்கிறது, யார் ஒருவர் ஒன்று மேற்பட்ட திருமணம் செய்யப்போகிறாரோ, அவர் தங்கள் மனைவிகளுக்குள் எல்லா வகையிலும் நியாயமாக சமமாக அவர்களை நடத்த வேண்டும். அதை செயல்படுத்த இயலாதவர்களுக்கு அது அனுமதி இல்லை. அதே போல் நடந்தார்கள், திருமணமும் செய்தார்கள். இல்லையென்றால் ஒரு மனைவியை வைத்துக்கொண்டே இத்தனை அல்லல்படும் நாம், இன்னொரு திருமணத்தை நினைப்பது எளிதா..?
பெண்கள் தன் கணவனை இன்னொரு திருமணம் செய்ய சம்மதிக்க பல காரணம் இருந்தன. கணவனின் சமமாக நடத்தும் குணம், அவன் மீது கொண்டு அதீத அன்பு, குழந்தையின்மை, நோய், முதுமை அல்லது இயலாமை காரணமாக இருந்தது. இந்த கடைசி 3 பிரச்சினைகள் இருந்தால் நாம் எடுக்கும் நடவடிக்கை விவாகரத்தாக இருக்கும். அதன் மூலம் அந்த பெண்ணின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு அவனும் தன் நிம்மதி இழக்கும் நிலை ஏற்படுகிறது. இதற்கு இஸ்லாம் சொன்னதை விட சரியான தீர்வு வேறு எதுவும் உண்டா..?
ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம், பெண்கள் செய்யக்கூடாதா?
இதென்ன அநியாயம்..? ஆண்கள் மட்டும் பலதார மணம் செய்யலாம், பெண்கள் செய்யக்கூடாதா? என்ற கேள்வி வரும். அதற்கும் இஸ்லாத்தில் பதில் உண்டு. இஸ்லாத்தில் ஆண் பெண் உடற்கூறுகளை வைத்து சில விஷயங்களை நன்மைக்காக கற்பிக்கிறதே தவிர உறவில், உரிமையில், நடத்தப்படுவதில் இரு பாலாரும் சமமே. இன்னும் சொல்லப்போனால், இஸ்லாம் பெண்களை மிகவும் மேன்மைப்படுத்துகிறது.
ஆண்களைப் போலவே பெண்களும் இன்னொரு ஆணை மணம் செய்ய உரிமை உண்டு. ஆனால், நிபந்தனை இன்னொருவனுக்கு மனைவியாக இருக்கக்கூடாது. உதாரணத்திற்கு கணவன் கொடுமையால் விவாகரத்து பெற்றவர்கள், விதவைகள், வஞ்சிக்கப்பட்டவர்கள் தாராளமாக மறுமணம் செய்யலாம். அப்படி திருமணம் செய்பவர்களை இஸ்லாம் ஊக்கப்படுத்துகிறது. இதற்கு சிறந்த உதாரணம் நபிகள். அவர் ஒரு விதவையைத்தான் மணம் புரிந்தார். அது ஏன் பெண்ணுக்கு இந்த நிபந்தனை என்று கேட்கலாம். இஸ்லாம் காரணகாரியமில்லாமல் எதையும் சொல்வதில்லை.
உதாரணத்திற்கு மனிதனுக்கு தாய், தந்தை உறவும், அவர்கள் மூலம் கிடைக்கும் கௌரவம், மரியாதை, சொத்துக்கள் மிகவும் இன்றியமையாதது. ஒரு அனாதைக்கு, தவறான வழியில் பிறந்த குழந்தைக்கு இந்த உலகத்தில் கிடைக்கும் மரியாதை நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஒரு ஆணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்கள் மூலம் குழந்தைகள் இருந்தால் அந்த குழந்தைகள் எல்லோருக்கும் அவன் ஒருவன் தந்தை என்பது மிகவும் தெளிவாக தெரியும். அதன் மூலம் உரிமையும், சொத்துக்களும் எல்லோருக்கும் சமமாக பங்கிட முடியும். இதுவே, ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவன்கள் இருந்து அவளுக்கு பல குழந்தைகள் இருந்தால் எந்த கணவனுக்கு பிறந்த குழந்தை என்று அவர்களை இனம் காண முடியுமா..?
கணவன்கள் ஒருவொருக்கொருவர் விலகிசெல்ல வாய்ப்புண்டு. அதுமட்டுமல்ல, இதனால் பல வழிகளில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நியாயமான முடிவும் எடுக்க முடியாது. இது சம்பந்தமாக இஸ்லாம் சமூகத்தின் சொல்லும் வழியான விளக்கம். விஞ்ஞானத்தின் வழியாக இஸ்லாம் சொல்லும் விளக்கம் என்ன..?
ஒரு பெண்ணுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்கள் இருப்பதை இஸ்லாம் தடை செய்வதின் விஞ்ஞான நோக்கத்தை காண்போம். அறிவியல் கண்டுபிடிப்பின் படி எயிட்ஸ் உள்ளிட்ட பாலியல் நோய்களுக்கான ஊற்றுக்கண்ணாக இருப்பது முறைகேடான உறவு என்பது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது. அதாவது மனைவி அல்லாது இன்னொரு பெண்ணுடன் உறவு கொள்ளுதல். அந்த பெண்ணும் இன்னும் பல ஆணுடன் உறவு வைத்திருப்பாள் என்பது சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
இந்த நிலை பாலியல் நோயை ஏற்படுத்தும் பட்சத்தில் பலரிடம் உறவு கொள்ளும் விபசாரிக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட கணவர்களிடம் உறவு கொள்ளும் மனைவிக்கும் பெரும் வித்தியாசம் இருக்காது. அவர்கள் செய்வது சமூகத்தினால் அங்கீகரிக்கப்பட்டது என்றாலும் கூட நடைமுறையில் ஒத்துவராத விஷயமிது. காரணம், அவர்கள் உடல் ரீதியாகவே அப்படிப்பட்ட நிலையை பெற்றுள்ளார்கள்.
அது மட்டுமல்ல, அவனே அவனுக்கென்று கிளி மாதிரி மனைவி இருந்தாலும் குரங்கு மாதிரி சின்னவீடு வைத்துக்கொள்ளும் இந்த உலகத்தில் ஒன்று மேற்பட்டவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஒரே ஒரு மனைவியின் மீது மற்ற கணவர்களுக்கு அன்பும், காதலும், ஈடுபாடும் இருக்காது. அவன் மனைவியை விடுத்து பிற பெண்களிடம் உறவு கொண்டு அவன் பாலியல் நோயை பெற்று அதை அவன் மனைவிக்கு கொடுத்து, அவள் மற்ற கணவர்களுக்கு கொடுத்து, மற்ற கணவர்கள் உறவு கொள்ளும் மற்ற பெண்களுக்கு கொடுத்து இந்த நோய் பரவி உலகமே பாலியல் நோயால் பீடிக்கப்படும்.
ஆனால், ஒரே கணவரிடம் உறவு கொள்ளும் பெண்களுக்கு இந்த அபாயம் இல்லை.
அதுமட்டுமல்லாமல், ஒரே ஒரு மனைவி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கே உரிய அதிகாரம், ஆளுமை குணம் கணவர்களுக்குள் போட்டி பொறாமையை ஏற்படுத்தி, பிரச்சினையை பெரிதாக்கி அதனால் ஏற்படும் விளைவு மிக மோசமானதாக இருக்கும்.
இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..? சரி.. அப்படியானால் இதன் மூலம் இஸ்லாம் பலதார மணம் செய்ய எல்லோரையும் ஊக்கப்படுத்துகிறதா..?
நிச்சயம் இல்லை. ஒரு பிரச்சினையின் தீர்வாக விவாகரத்து, அதனால் பெண்ணின் வாழ்க்கை இழப்பு, விபசாரம், நோய் என்று போகாமல் சுமுகமாக, சுகமாக வாழ இஸ்லாம் சொல்லித்தரும் வழி இது. இஸ்லாத்தில் இந்ததபல தார மணம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து இவ்வளவு விமர்சிக்கப்படுகிறதே..
நீங்களே சொல்லுங்கள். இந்தியாவின் மக்கள் தொகை தொகையில் எல்லா மதத்தினரின் சதவீதத்தில் பல தார மணம் செய்த முஸ்லீம்களின் சதவீதம் எவ்வளவு..? மற்ற மதத்தினரைவிட குறைவாக இருப்பார்கள். காரணம், கடுமையான நிபந்தனைகளும், வழி முறைகளும். அது மட்டுமல்ல, ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி என்பது அத்தனை சாதாரண விஷயமல்ல. அதற்கான மன பலம், உடல்பலம், பொருள் பலம் அவசியம் வேண்டும்.
நமக்கு ஒரு மனைவியுடன் வாழ்க்கை தள்ளுவதற்கே நாக்கு தள்ளுகிறது..!! நம் முதல்வருக்கு 2 மனைவிகள். ஆனால், அவர் முஸ்லீம் இல்லை. அவரை சமுதாயம் ஒதுக்கவில்லை. அவர்களுக்குள் பிரச்சினையும் இல்லை.
எனக்கு ஒரே ஒரு மனைவி தான். என்னால் பலதார மணத்தை என் விஷயத்தில் ஏற்கமுடியாது. ஏனென்றால் அதற்கான காரணகாரியங்கள் எங்கள் இருவருக்கும் இல்லாததால் அதன் அவசியம் இல்லை. அவசியம் உள்ளவர்கள் தீர்விற்காக அதை செய்வதில் தவறில்லை. அது வழிகெட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்தது.
கடைசியாக, பலதார மணத்தின் அவசியத்தை நிர்ணயிப்பவை நம் மதமல்ல. அவற்றை சம்பந்தப்பட்டவர்களின் தேவை, புரிதல், அனுசரித்தல், பகிர்தல் ஆகியவை தான் நிர்ணயிக்கின்றன.

சனி, 26 ஏப்ரல், 2014

Hotel Frauds




வெளியே சொன்னால் வெட்க கேடு!!


ஹோட்டல்ல சாப்பிடுறீங்களா!


****************************
நம்ம ஊர் ஹோட்டல்களில் எப்படி எல்லாம் 

டுபாக்கூர் வேலை நடக்குது என்று அந்தக் 

கடைக்காரர்களிடமே போட்டு வாங்கிய 

தகவல்கள்...


இட்லி:

*****

பொதுவா இட்லி மெத்துனு இருக்கணும்னா, 

ஒரு 

டம்ளர் இட்லி அரிசிக்கு கால் டம்ளர் உளுந்து 

தேவை. இரண்டையும் தனித்தனியா ஊறவெச்சு, 

தனித்தனியாதான் அரைக்கணும். அஞ்சு மணி 

நேரம் புளிக்கவெச்சு, சுட்டீங்கன்னா பஞ்சு 

மாதிரி 

இட்லி தயார். ஆனா, என்ன நடக்குது இங்க? 

கடை இட்லி அரிசி கால் பங்கு, ரேசன் அரிசி 

முக்கால் பங்கு, உளுந்து கால் பங்கு, ஜவ்வரிசி 

முக்கால் பங்கு, நைட்டு ஊறவெச்ச பழைய 

சாதம் கொஞ்சம், சோடா உப்பு எக்கச்சக்கமா... 

எல்லாத்தையும் அரைச்சு, மூணு மணி நேரம் 

வெயில்ல வெச்சுட்டு எடுத்து சுட்டால், 

கும்முன்னு குஷ்பு இட்லி தயார். அந்த இட்லியும் 

மீந்துருச்சின்னா, அப்பவும் பிரச்னை இல்லை. 

அடுத்த நாள் அரைக்கிற மாவுல மீந்துபோன 

இட்லியைப் போட்டு அரைச்சிடுவாங்க!


சோறு:

******


தரமான சோறுன்னா, சோத்துப் பருக்கையை 

விரலில் வெச்சு மசிச்சா மை மாதிரி மசியணும். 

அப்பதான் அது வயித்துக்கு ஒண்ணும் 

செய்யாது. 


அப்படி இருந்தா கஸ்டமர்ஸ் நிறைய 

சாப்பிடுவாங்களே... அதுக்காகத்தான் 

பெரும்பாலான ஹோட்டல்ல முக்காப் பதத்துல 

சாதத்தை எடுத்துடுவாங்க. சாதம் பளிச்சுனு 

வெண்மையா இருக்கவும், லேட் ஆனாலும் 

காய்ஞ்சு போகாமல் இருக்கவும் சாதம் 

வேகும்போதே சுண்ணாம்புக் கல்லைத் 

துணியில் கட்டி சாதத்தில் போட்டுடுவாங்க. 

அன்லிமிட்டட்னு அகலமா போர்டுல எழுதி 

இருந்தாலும், இந்தச் சோற்றைக் குறிப்பிட்ட 

அளவுக்கு மேல நீங்க சாப்பிடவே முடியாது!


புரோட்டா:


*********


பல ரோட்டுக் கடை ஹோட்டல்கள்ல மைதா 

மாவோட சோடா உப்பு கலந்து, அதுல கழிவு 

டால்டாவை ஒரு பங்கு மாவுக்குக் கால் பங்கு 

டால்டா கணக்குல (ஹோட்டலுக்குன்னே 

விக்கிற மலிவு விலை டால்டா!) கலந்து அடிச்சு 

அரை மணி நேரத்துல புரோட்டா சுடுவாங்க. 

புரோட்டா சும்மா பூ கணக்கா பொலபொலன்னு 

உதிரும். ஆனா, அத்தனையும் போங்கு 

புரோட்டா!
சால்னா :

*******


சிக்கன் கடையில் பொதுவா நாம கொழுப்பு, 

ஈரல், குடல், தலை, தோல், இதெல்லாம் வாங்க 

மாட்டோம். அதேபோல மட்டன் கடையில 

குடலோட சேர்ந்து இருக்கிற ஒட்டுக்கொழுப்பு, 

ஒட்டுக்குடல் வாங்க மாட்டோம். இதை 

எல்லாம் 

தூக்கிப்போடாம ஓரமாக் 

குவிச்சுவெச்சிருப்பாங்க. பழக்கமான 

கடைக்காரரா இருந்தா விசாரிச்சுப் 

பாருங்க. 'ஹோட்டல்காரங்க மொத்தமா 

வாங்கிட்டுப் போயிடுவாங்க’னு அவரும் 

யதார்த்தமா சொல்லிடுவார். அரைக் கிலோ 

கறியோட இதை எல்லாத்தையும் ஒட்டு 

மொத்தமாப் போட்டு தூக்கலா கறி மசாலா, 

மிளகாய்த் தூள், கொத்தமல்லித்தூள், கொஞ்சம் 

மரத்தூள் அல்லது குதிரை சாணத்தூள் கலந்து, 

அஞ்சு ஸ்பூன் அஜினாமோட்டா கலந்து 

கொதிக்கவெச்சா அரை அண்டா நிறைய 

திக்கான சால்னா ரெடி!


ஒரு முக்கியமான எச்சரிக்கைங்க...


****************************



தலையே போனாலும் சரி, (ரோட்டுக்)கடைகள்ல 

தலைக்கறி மட்டும் சாப்பிடாதீங்க. 

பொதுவாகவே செம்மறி ஆட்டோட தலையில 

புழுக்கள் இருக்கும். இது இயற்கையான 

விஷயம்தான். வீடுகளுக்கு வாங்குறப்ப 

பெரும்பாலும் வெள்ளாட்டுத் தலை தான் 

வாங்குவோம். செம்மறி ஆட்டுத் தலை 

வாங்கினாலும் கடைக்காரரு நம்ம கண்ணுல 

படாம தலையைக் கொதிக்கிற தண்ணில 

போட்டுட்டு, அப்புறம் அதை எடுத்து தரையில 

தட்டோ தட்டுன்னு தட்டி புழுவை 

எல்லாத்தையும் கொட்டிட்டுதான் மேலேயே 

எடுத்து வைப்பாங்க. அதை வீட்டுக்கு 

வாங்கிட்டுப்போய் நல்லா சுத்தம் பண்ணி 

சாப்பிடுவோம். ஆனா, மொத்தமா 

ஹோட்டலுக்கு விக்கிறப்ப எல்லாம் செம்மறி 

ஆட்டுத் தலையை இப்படி சுத்தம் பண்ண 

மாட்டாங்க. அப்படியே கைமாதான்.


எல்லாத்தையும்விட முக்கியம், 


ஹோட்டல்களுக்கு சப்ளை செய்யறதுக்குனே 

பஜாரில் மளிகைப் பொருட்கள் குறைஞ்ச 

விலைக்கு கிடைக்குது. எல்லாமே கலப் படம். 

பாலீஷ் செய்யப்பட்ட இலவச ரேசன் அரிசியோட 

பொன்னி அரிசி கலந்து விக்கிறாங்க. உடைஞ்ச 

கழிவுப் பருப்பு, கேசரிப் பருப்பைத் துவரம் 

பருப்புடன் கலக்கிறாங்க. மிளகாய்த் தூள், 

கொத்தமல்லித் தூள், டீத்தூளோட மரத் தூள், 

குதிரை சாணத்தையும் கலக் கிறது எல்லாம் 

சகஜமப்பா. நெய், எண்ணெய் வகைகளோட 

பன்றி, மாட்டுக் கொழுப்பு, வனஸ்பதி மற்றும் 

நாள்பட்ட கழிவு எண்ணெயையும் கலப்பாங்க.


சாதாரண ஹோட்டல் களிலும் கையேந்தி பவன் 

களிலேயுமே இப்படின்னா டாஸ்மாக் பார் பத்திச் 


சொல்லவே வேணாம். அதிலும் குறிப்பா, 

சென்னை பேச்சுலர் பாய்ஸ் ரொம்பக் கவனமா 

இருக் கணும்!