சனி, 29 நவம்பர், 2014

20 தளங்களில் இலவச SMS

இலவசமாக SMS அனுப்புவதற்கான சிறந்த 20 தளங்களில் 
நாம் அன்றாடம் நம் நண்பர்களுக்கு SMS அனுப்புவோம். ஆனால் ஒரு SMSக்கு 50பைசா 60 பைசா என்று மொபைல் சேவை வழங்கும் நிறுவனம் எடுத்து கொள்கிறது.அல்லது மாதந்தோறும் அதற்கு RATECUTTER போட்டு SMS அனுப்புவோம்.இணையம் இருக்கும் போது நாம் ஏன் 50 பைசா செலவழித்து SMS அனுப்பவேண்டும்.இலவசமாக குறுஞ்செய்தி அனுப்புவதற்கு இணையத்தில் பல தளங்கள் உள்ளன.இதில் இலவசமாக SMS அனுப்பலாமே இதில் சில பயனுள்ள சில தளங்களை பார்போம்.

1.ஐந்து நிமிடத்தில் குறுஞ்செய்திகளை பெறலாம் .
2.136 எழுத்துக்களை கொண்டு SMS அனுப்பலாம்.
3.PHONE BOOK-ல் உங்கள் தொடர்புகளை சேமித்து கொள்ளலாம்
குறிப்பு: இதில் நான் எல்லா தளத்தையும் சோதனை இடவில்லை....! உங்களுக்கு என்ன என்ன தளம் நன்றாக வேலை செய்கிறதோ அதை கீழே உள்ள cmnts இல் போடுங்க.....!

உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க

உங்கள் பிள்ளைகளை பாதுகாக்க / கண்காணிக்க ஒரு இலவச ஆப்ஸ்.
பிள்ளைகளை வெளியே அனுப்பிவிட்டு வீட்டில்
மடியில் நெருப்பு கட்டி கொண்டுதான் பெரும்பாலான பெற்றோர்கள் இருக்கிறார்கள்.
அவர்களின் கவலையை போக்க பி ஸேஃப் என்னும்
புது வகை ஆப்பை ஆன்ட்ராயிட் / ஆப்பிள்பிளாட்பாரத்தில் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம். உங்கள் பிள்ளைகளின் மொபைல் ஃபோனில் இதை இன்ஸ்டால்
செய்து விட்டால் – கொஞ்சம் கவலை இல்லாமல்
இருக்கலாம்.
இதன் மூலம் உங்களின் பிள்ளைகளை நீங்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும். அவர்கள் எங்கு இருக்கின்றனர் எங்கு செல்கின்றனர் – ஏதாவது ஒரு இடத்தில் அதிக நேரம் நடமாட்டம் இல்லாமல்
இருக்கிறார்களா என்று வீட்டின் கணனியில் நீங்கள்
அவர்கள் இருக்கும் ஊர் – தெரு – கதவிலக்கம் முதற் கொண்டு பார்க்க முடியும்.
அது போக இந்த ஆப்ஸை இன்ஸ்டால் செய்திருக்கும்
பிள்ளைகள் தங்களுக்கு ஏதாவாது விபரீதம்ஏற்படுகிறது என உணர்ந்தால் இதில் உள்ள கார்டியன் அலர்ட் – “Guardian Alert” என்ற பொத்தானை அழுத்தினால் உங்களுக்கு அவர்கள் ஆபத்தில் உள்ளார்கள் என இலவசமாக தகவல் வரும்.
இந்த அலெர்ட் வசதி பெற்றோர் அல்லது பலநண்பர்களுக்கு கூட ஒரே நேரத்தில் தெரிவிக்க இயலும். சில சமயம் நீங்கள் ஒரு இடத்தில் மாட்டிகொண்டீர்கள் அல்லது அங்கிருந்து யாரும் சந்தேகபடாமல் தப்பிக்கவும் இதில்
இன்னொரு வசதி உண்டு அது தான் ஃபேக் கால் – “Fake Call” – மொபைலை நோண்டுவது போல் இந்த பட்டனை அழுத்தினால் உங்க ஃபோனுக்கு சிக்னல் இல்லைனா கூட கால் வரும் – உடனே நீங்களும் உங்களுக்கு கால் வந்திருக்கிறது – எக்ஸ்கியூஸ் மீன்னு எஸ் ஆகிடலாம் – இது பிள்ளைகள் மற்றும் தனியே வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில் பணிபுரியும் பெண்களுக்கு மிகப்பெரிய
வரப்பிசாதாமக அமையும்.
உடனே தயக்கம் என்ன – மொபைல் இல்லாத வளர்ந்த
பிள்ளைகளே இல்லை என்னும் இந்த காலத்தில் இந்த
வசதியை இலவசமாய் செய்து கொடுங்கள்
உங்களின் பிள்ளைகளின் கவலையை அடியோடு மற்ந்து விடுங்கள்.
இதன் மூலம் உங்கள் பிள்ளைகளின் ந்டவடிக்கையை கூட
நீங்கள் கண்கானிக்க முடியும். இது பல மாணவ /
மாணைகளின் தவறான பாதைக்கு செல்வதை தடுக்க
முடியும். என்ன மகிழ்ச்சி தானே பெற்றோர்களே!?
Apple Patrons FREE Download Link - https://itunes.apple.com/in/
app/bsafe-personal-safety-app/id459709106?mt=8
Android Achubichus FREE Download Link - https://
play.google.com/store/apps/details?
id=com.bipper.app.bsafe&hl=en, நன்றி - தோழி சியாமளா

வெள்ளி, 28 நவம்பர், 2014

ஒட்டகம் camel

ஒட்டகம்.பற்றி 10 செய்திகள்.........
1.இது அரபுநாடுகளில் அதிகம் வாழும் உயிரினம்.camel என ஆங்கிலத்தில் அழைக்கப்படுவது (jamil ) கமில் எனப்படும் அரபு வார்த்தையை அடிப்படையாக கொண்டே .அரபு மொழியில் அழகு என அதற்கு பொருள் ..
2.அரபு மக்கள் இதை மிக நேசிப்பார்கள்...அதிக வெட்பத்தை தாங்கும் அளவிற்கு இதன் உடலில் கொழுப்பு சுரப்பிகள் அதிகம்....
3.இதன் ரத்த செல்கள் மற்றவர்களுக்கு உள்ளது போல வட்டவடிவில் இல்லாமல் oval வடிவத்தில் இருப்பதால் பாலைவனங்களில் நீண்ட தூரம் இதனால் பயணிக்க முடிகிறது.....
4.ஒரு நேரத்தில் சுமார் 200 லிட்டர் தண்ணீர் அருந்தும்....
5.இதன் கால்கள் ஒவ்வொன்றும் நாலா புறமும் உதைக்க கூடியவை...
6.முற்களையும் தின்னக்கூடியவை...நாக்கு சேதமாகாது..
7.மணற்புயல் ஏற்படும்போது மூக்கை மூடிக்கொள்ளும் ...
8.பூனை .., மீன், இருக்குமிடத்தை கண்டுபிடிப்பது போல இது நீர் இருக்கும் இடத்தை முகர்ந்தே கண்டுபிடித்துவிடும்...
9.இதன் சிறுநீர் syrap போல கெட்டியாக இருக்கும்.
10. போர் காலங்களில் மன்னர்களால் பயன்படுத்தப்பட்டது உண்டு

வியாழன், 27 நவம்பர், 2014

முக்கியமான தொடர்பு எண்கள்

நம் மொபைல் போனில் சேமித்து வைத்திருக்க வேண்டிய முக்கியமான மற்றும் அவசியமான தொடர்பு எண்கள்:
பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது, நடத்துநர் மீதி சில்லரையைக் கொடுக்காதது அல்லது குடித்து விட்டோ, செல்போன் பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு :— 93833 37639
பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு:- Toll Free No :- 180011400,, 94454 64748,, 72999 98002,, 72000 18001,, 044- 28592828
மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- 044 – 26530504 / 26530599
வாடகைத் தாய்களாகப் போய், புரோக்கர்களிடம் ஏமாறும் பெண்கள்– 044- 26184392 / 9171313424
ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: 044- 25353999 / 90031 61710 / 99625 00500
ஆட்டோவில் அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் —044-24749002 / 26744445
சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்ற 95000 99100 ( SMS )
மனிதஉரிமைகள் ஆணையம் ————-––044-22410377
மாநகரபேருந்தில அத்துமீறல்————–—-09383337639
போலீஸ் SMS :- —————————————-9500099100
போலீஸ் மீது ஊழல் புகாருக்கு SMS :—-—-9840983832
போக்குவரத்து விதிமீறல் SMS : ———-—–98400 00103
வங்கித் திருட்டு உதவிக்கு ———————-9840814100
வன்கொடுமை, பாலியல் ரீதியாக ———-044-28551155
பெண்களுக்கான உதவி : ——-—-–———- 044-23452365
தமிழ்நாடு மகளிர் ஆணையம் ————— 044-25264568
விலங்குகள் பாதுகாப்பு ———————— 044 – 22354959 / 22300666
போலீஸ் : —————————————–——100
தீயணைப்புத்துறை :————————-—-- 101
ஆம்புலன்ஸ் : —————————————-102, 108
போக்குவரத்து விதிமீறல———————–103
விபத்து :———————————————-– 100, 103
பெண்களுக்கான அவசர உதவி : ——-—-–1091
குழந்தைகளுக்கான அவசர உதவி :——-–1098
அவசர காலம் மற்றும் விபத்து : ———-—1099
முதியோர்களுக்கான அவசர உதவி:—-—1253
தேசியநெடுஞ்சாலையில் அவசர உதவி:1033
கடலோர பகுதி அவசர உதவி : ———-—–1093
ரத்த வங்கி அவசர உதவி : —————-—–1910
கண் வங்கி அவசர உதவி : —————-—–1919
நமது அலைபேசியில் 911 என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.
நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும், இந்த எண்கள் மட்டும் இயங்கும்.
இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.
பல சுவையான தகவல்களுக்கு இன்றே இணையுங்கள் எம்முடன்,இந்த பக்கத்தை follow போட்டு உங்களையும் இணைந்து கொள்ளுங்கள்.......

செவ்வாய், 25 நவம்பர், 2014

நீரோட்டம் கண்டுபிடிக்க


நீரோட்டம் கண்டுபிடிக்க 
நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை அவர்கள் எதை செய்தலும் கண்டிப்பாக அதில் ஆயிரம் நன்மைகள் இருக்கும் நமக்கு
நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.
அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.
ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.
மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .
சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?
நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .
சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?
கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .
அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

வியாழன், 13 நவம்பர், 2014

சாதனை படைத்த பெண்கள்




இந்தியாவில் சாதனை படைத்த முதல் பெண்கள்- பொது அறிவு தகவல்கள்.......

* முதல் பெண் குடியரசுத் தலைவர் - பிரதீபா பாட்டில் 2007

* முதல் மத்திய அமைச்சர் - ராஜ்குமாரி அம்ருதா கௌர் (1947 - 57)

* முதல் பெண் கவர்னர் - சரோஜினி நாயுடு (1947 - 49)

* ராஜ்சபை முதல் பெண் துணை சபாநாயகர் - வயலட் அல்வா

* முதல் பெண் முதல்வர் (உத்திர பிரதேசம்) - சுசேதா கிருபலானு (1963 - 67)

* குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட்ட முதல் பெண்மணி - மனோகர நிர்மலா ஹோல்கர் (1967)

* முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி - அன்னா ராஜன் ஜார்ஜ்

* மக்களவை முதல் பெண் சபாநாயகர் - மீரா குமார் (2009)

* மக்சாசே விருது பெற்ற முதல் பெண்மணி - அன்னை தெரசா (1962)

* இந்திய தேசிய காங்கிரசின் தலைவரான முதல் பெண்மணி - அன்னிபெசன்ட் (1917)

* காங்கிரஸ் தலைவரான முதல் பெண்மணி - சரோஜினி நாயுடு (1925)

* ஏர்மார்ஷல் பதவி வகித்த முதல் பெண்மணி - பத்மாவதி பந்தோ பாத்யாயா (2004)

* பால்கே விருது பெற்ற முதல் நடிகை - தேவிகா ராணி ரோரிச் (1969)

* புக்கர் பரிசு பெற்ற முதல் எழுத்தாளர் - அருந்ததி ராய் (1997)

* மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற முதல் பெண்மணி - ரீத்தா ஃபரியா பவல் (1966)

* மிஸ்யூனிவேர்ஸ் பட்ட பெற்ற முதல் பெண்மணி - சுஸ்மிதா சென் (1994)

* பாரதரத்னா விருது பெற்ற முதல் பெண்மணி - இந்திராகாந்தி (1971)

* ஆஸ்கார் விருது பெற்ற ஒரே பெண்மணி - பானு அதய்யா

* முதல் பெண் பிரதமர் - இந்திரா காந்தி (1966)

* உச்ச நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - எம்.பாத்திமா பீவி (1989)

* உயர்நீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதி - கேரளா (அன்னா சாண்டி-1959)

* உயர் நீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதி - (இமாச்சல்) - லீலா சேத் (1991)

* ஐ.நா. பொதுச்சபையின் முதல் பெண் தலைவர் - விஜய லட்சுமி பண்டிட்

* முதல் பெண் ஐபிஎஸ் - கிரண்பேடி (1972)

* விண்வெளி சென்ற முதல் பெண்மணி - கல்பனா சௌலா

* எவரஸ்டில் ஏறிய முதல் பெண்மணி - பச்சேந்திரி பால்

* ஆங்கிலக் கால்வாயை நீந்தி கடந்த முதல் பெண்மணி - சுரதி ஸாஹா

* ஏழு வளைகுடாக்களை நீந்திக் கடந்த முதல் பெண்மணி - பிலா சௌத்ரி

* ஞானபீட விருது பெற்ற முதல் பெண்மணி - ஆஷா பூர்ணா தேவி (1976)

* ஒலிம்பிக் போட்டியில் போட்டியிட்ட முதல் பெண்மணி - நீலிமா கோஷ் (1952)

* லெப்டினன்ட் ஜெனரல் பதவி வகித்த முதல் பெண்மணி - புனிதா அரோரா (2004)

மருத்துவ கொள்ளையர்கள்

மருத்துவ கொள்ளையர்கள் 

மருத்துவ கொள்ளையர்களை அடையாளம் காணுமா இந்த தமிழக அரசு ???
காசு இல்லாத மக்களின் கவனதிற்கு ...........
இந்த உடல் உறுப்பு தானம் தமிழகத்தில் மிக அதிகமாக பரவி இருப்பதன் உண்மை நிலை ????????
மூளை சாவு அடைந்து விட்டார் உங்கள் உறவினர் என மருத்துவர் எவ்வாறு உறுதி படுத்துகிறார் ?
அந்த மனிதனை படைத்தது அந்த மருத்துவரா இல்லை கடவுளா ?
சாதாரண மனிதனை 7 நாட்கள் கோமாவில் படுக்க வைக்க ஒரு மருத்துவரால் முடியும் படிப்பறிவில்லாத வசதியற்ற ஒருவன் விபத்தில் படுகாயம் அடைந்து மருத்துவமனை வந்தால் அவர்களை சுலபமாக சில மருத்துவர்கள் பணத்துக்காக அவரை கோமாவில் படுக்கவைத்து மூளை சாவு அடைந்து விட்டார் என கூற வாய்ப்பு அதிகம்.
அப்படி அடிபட்டு மருத்துவமனைக்கும் வரும் ஏழைக்கு மருத்துவம் பார்பதுபோல் 3 நாட்கள் அவசர பிரிவில் அந்த அப்பாவியை அனுமதித்து உறவினர்களிடம் உங்கள் உறவினர் முளைசாவு அடைந்துவிட்டார் இதுநாள்வரை பார்த்த மருத்துவ செலவு 4 & 5 லட்சத்தை காட்டுங்கள் என மருத்துவர்கள் கூறும்பொழுது சாதாரண குடும்பம் அவளவு பெரிய தொகையை திரட்டமுடியாமல் தள்ளாடும் பொழுது மருத்துவர்களே உங்கள் ஊரவினரின் உடல் உறுப்பை தனம் கொடுத்தால் உங்களுக்கும் நல்ல பெயர் மற்றும் கூடுதலாக பணமும் பெற்று தருகிறோம் என சொல்லமுடியும் எழை குடும்பம் ஏமாறுகிறது .........
ஆகையால் உடல் உறுப்பு தனம் குறித்து தமிழக அரசு தனி வாரியம் அமைத்து அந்த வாரியம் பரிந்துரைத்த பின்னர்தான் தானம் பெறவேண்டும் மற்றும் முன்னுரிமை அடிபடையில் தான் உறுப்பு தானம் வழங்க வேண்டும் .மற்றும் இறக்காத ஒருவரின் உறுப்பை மூளை சாவு அடைந்ததாக கூறி உடல் உறுப்பு கொள்ளை அடிபவர்களை தடுக்க வேண்டும் ............
கிட்னி திருடிய மருத்துவர்களும் நமது தமிழகத்தில் பார்த்த நாம் நமது உடலை விற்க இந்த மருத்துவர்கள் தயங்க மாட்டார்கள் அரசு மிக விரைவில் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் .....
தயவுகூர்ந்து அனைவருக்கும் பகிரவும்
கடந்த சிலவருடங்களாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் ஏழை மக்களின் உடல் உறுப்புக்கள் அயல்நாட்டவருகும் காசு படைத்தவர்களுக்கும் கிடைப்பது பலத்த அச்சத்தை உருவாகுகிறது A + ரத்தம் உள்ள ஒருவரின் இதய குழாய் இன்று உலக மார்கெட் இல் 30 லட்சம் வரை விலைபோகிறது இதயம் & கணையம் 1 கோடி கொடுத்ததும் வாங்க ஆள் இருக்குறார்கள் ஆகவே இது குறித்து உங்கள் நண்பர்களுக்கு தயவுகூர்ந்து பகிருங்கள் (தினமும் மருத்துவர்களால் கொலை செய்யப்படும் ஏழை உயிர் காக்கப்படவேண்டும் )

வியாழன், 6 நவம்பர், 2014

கருப்பு பணம் என்றால் என்ன?

கருப்பு பணம் என்றால் என்ன?
வருவாயில் இருந்து அரசுக்குக் கணக்குக்
காட்டாமல் மறைக்கப்படும் பணம்
எல்லாமே கருப்பு பணம்தான். பொதுவாக
வரி கட்டுவதைத் தவிர்க்கவே, வருவாய்
மறைக்கப்படுகிறது. சில வேளைகளில் குற்ற
வழிகளில் வந்த பணத்தையும் கணக்குக் காட்ட
முடியாமல் போவதால் அதுவும்
கருப்பு பணமாகி விடுகிறது.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில்
இரண்டு பங்கு, பணப்
பரிவர்த்தனை மூலமே நடைபெறுகிறது.
ஆண்டுக்கு சுமார் 62 லட்சம்
கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது.
உதாரணத்துக்கு மளிகைப் பொருட்கள் வாங்கு கிறோம்.
அதற்குப் பதிலாகப் பணம் கொடுக் கிறோம்.
அதற்குப் பெரும்பாலும் ரசீது இல்லை. அந்தப்
பணம் கருப்பு பணமாக மாறுகிறது. இதுதவிர
ரியல் எஸ்டேட், உற்பத்தி பொருட்கள், தங்கம்
மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கு வதில்
ஏராளமான கருப்பு பணம் புழங்குவதாகக்
கூறப்படுகிறது. கருப்பு பணம்
எப்படி கை மாறுகிறது என்பதைப் பார்ப்போம்.
ரசீது இல்லாமல் புழங்கும் கருப்பு பணம...
ஒரு நிறுவனம் ஒரு லட்சம் ரூபாய்க்கான
பொருட்களை இன்னொரு நிறுவனத்துக்குச்
சப்ளை செய்கிறது. ஆனால், அதற்குரிய
ரசீதை வழங்க வில்லை. அதன்பிறகு சப்ளை செய்த
பொருட்களின் மதிப்பில் ரூ.60
ஆயிரத்துக்கு மட்டும் ரசீது வழங்குகிறது.
பொருட்களை வாங்கிய நிறுவனம், ரூ.40
ஆயிரத்துக்கான காசோலையை வழங்குகிறது. ரூ.20
ஆயிரத்தை வரியாகக் கழித்து விடுகிறது.
ஒரு மாதம் கழித்து, மீதித் தொகை ரூ.40 ஆயிரம்,
பொருட்கள் சப்ளை செய்த
நிறுவனத்துக்கு பணமாகக் கொடுக்கப்படுகிறது.
இந்தப் பணம் கணக்கிலேயே வராது. இதுதான்
கருப்பு பணம்.
தனியார் நிறுவனங்களில் முதலீடு...
ஒரு நிறுவனத்துக்கு ஒருவர் ரூ.10
கோடி கடனை பணமாகக் கொடுக்கிறார். அதைப் பெற்றுக்
கொண்ட நிறுவனம்,
தனது விற்பனையாளர்களுக்கு பணமாக
முதலீடு செய்கிறது. கடைசியில் அந்த நிறுவனம்
நுகர்வோர்களிடம் இருந்து காசோலையாகப் பணத்தைத்
திரும்பப் பெறுகிறது. அதன்பின், 10 கோடி ரூபாய்
கடனாக வழங்கியவர், பணத்துக்குப் பதில்
நிறுவனத்திடமிருந்து பங்குகளாக வாங்கிக்
கொள்கிறார்...
இந்த விஷயத்தில் முதலில் பணமாகப் பெற்ற
ரூ.10 கோடி அரசுக்கு கணக்குக் காட்டப்படாமல்
போகும். அது கருப்பு பணமாக மாறி விடும்.
இப்படி பல வழிகளில் அரசுக்குக் கணக்குக்
காட்டாமல், வரியைத் தவிர்க்க சேர்க்கப்படும்
பணம்தான் கருப்பு பணம்...
கருப்பு பணம் எவ்வளவு?...
வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள
கருப்பு பணம் குறித்த அதிகாரபூர்வ
கணக்கீடு எதுவும் இல்லை.
இருப்பினும், அமெரிக்காவைச் சேர்ந்த தனியார்
நிறுவனம் ஒன்றின் கணக்கீட்டின்படி, இந்த
தொகை 466 பில்லியன் அமெரிக்க டாலர் (28
லட்சத்து 57 ஆயிரத்து 512 கோடி ரூபாய்) முதல்
1.4 டிரில்லியன் அமெரிக்க டாலர் (85
லட்சத்து 88 ஆயிரத்து 300 கோடி ரூபாய்)
வரை இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது..
கருப்பு பணம்: சிறப்பு புலனாய்வுக் குழு...
கருப்புப் பணத்தை மீட்க அமைக்கப்பட்ட
சிறப்பு புலனாய்வுக் குழுவில் 13 பேர்
இடம்பெற்றுள்ளனர். அவர்கள் விவரம்:
1. எம்.பி.ஷா, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி,
தலைவர

2. அரிஜித் பசாயத், உச்சநீதிமன்ற முன்னாள்
நீதிபதி, துணைத் தலைவர

3. மத்திய வருவாய் துறை செயலர

4. ரிசர்வ் வங்கி துணை கவர்னர

5. புலனாய்வுத் துறை (ஐ.பி.) இயக்குநர

6. மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குநர

7. சிபிஐ இயக்குநர

8. மத்திய நேரடி வரிகள் வாரிய தலைவர

9. மத்திய நேரடி வரிகள் வாரிய இணைச் செயலர்
10. ‘ரா’ அமைப்பின் இயக்குநர

11. போதைப்பொருள் தடுப்பு பிரிவு இயக்குநர

12. வருவாய் புலனாய்வுத் துறை இயக்குநர

13. நிதிப் புலனாய்வுத் துறை இயக்குநர
Thanks – therindhu kolvom dhinam oru sattam

பொது அறிவு தகவல்கள்....




பொதுஅறிவு தகவல்கள்....

* ரத்தம் உறைவதற்கு உதவும் வைட்டமின் எது? - வைட்டமின் கே
* பூமியே ஒரு பெரிய காந்தம் என்று கண்டறிந்தவர்? - வில்லியம் கில்பர்ட்
* புலிகுகை என அழைக்கப்படும் கலையரங்கம் எங்குள்ளது? - மகாபலிபுரம்
* அஜந்தாவில் எத்தனை குகைகள் உள்ளன? - இருபத்தொன்பது
* மோனலிசா ஓவியம் வரைய மொத்தம் எத்தனை ஆண்டுகள் பிடித்தன? - 3 ஆண்டுகள்
* ஐரோப்பிய நாடுகளுக்கான ஒரே புதிய கரன்ஸி? - யூரோ
* எந்த நாட்டில் பெயின்ட் கண்டு பிடிக்கப்பட்டது? - இங்கிலாந்து
* மன்னை வளப்படுத்தும் ஒரே தாவரம் எது? - உளுந்து
* உலோகங்களில் லேசானது எது? - லிதியம்
* எந்த காலத்தில் குயில் கூவுவது இல்லை? - குளிர் காலத்தில்
* உயர்ந்த ஒலி கவரும் பொருள் எது? - இழைக்கண்ணாடி
* சோப்பு தயாரிக்கத் தேவைப்படும் பொருள்கள் யாவை? - கொழுப்புப் பொருள், சோடா காரம் அல்லது பொட்டாசியம் காரம்
*. பூஜ்யத் தொகுதித் தனிமங்களை என்னவென்று கூறுவர்? - மந்த வாயுக்கள்
* நைட்ரஜன் உரங்கள் அளிக்கும் சத்து என்ன? - செடியின் தண்டுகள், அலைகளின் வளர்ச்சிக்குத் தேவையான நைட்ரஜன் சத்து
*. ஹாலஜன்கள் என்பவை யாவை? - அலோகங்கள்
*. சூடாக்கும் போது உலோகங்களை விட கண்ணாடி எளிதில் விரிசல் அடைவது ஏன்? - கண்ணாடி ஓர் எளிதில் கடத்தி
* அசாதாரண தொகைசார் பண்புகள் எப்பொழுது கண்டறிப்படுகிறது? - கரைபொருள் மூலக்கூறுகள் அவற்றுக்குள் ஒன்று சேரும் போது
*. லாக்டோஸ் என்பது என்ன? - ஒரு என்சைம்
*. வானிலை இயல் (Meteorology) என்பது என்ன? - வளிமண்டலமும் அதன் மழை தட்பவெப்பம் காற்றோட்டம் தொடர்பான பண்புகள் பற்றிய அறிவியல்
* ஒளி மையத்தின் வழியே செல்லும் எந்த ஒரு ஒளிக்கதிரும்? - விலகல் கிடையாது