திங்கள், 19 ஜனவரி, 2015

படிப்புகளும் பெயர்களும்


படிப்புக்களும் அதன் தமிழ்ப்பெயர்களும்..(Ology) -தெரிந்துகொள்வோம்
1. Anthropology - மானுடவியல்/ மானிடவியல்
2. Archaeology - தொல்பொருளியல்
3. Astrology - சோதிடவியல் (சோதிடம்)
4. Astrology - வான்குறியியல்
5. Bacteriology பற்றுயிரியல்
6. Biology - உயிரியல்
7. Biotechnology - உயிரித்தொழில்நுட்பவியல்
6. Climatology - காலநிலையியல்
7. Cosmology - பிரபஞ்சவியல்
8. Criminology - குற்றவியல்
9. Cytology - உயிரணுவியல்/ குழியவியல்
10. Dendrology - மரவியல்
11. Desmology - என்பிழையவியல்
12. Dermatology - தோலியல்
13. Ecology - உயிர்ச்சூழலியல்
14. Embryology - முளையவியல்
15. Entomology - பூச்சியியல்
16. Epistemology - அறிவுநெறியியல்/ அறிவாய்வியல்
17. Eschatology - இறுதியியல்
18. Ethnology - இனவியல்
19. Ethology - விலங்கு நடத்தையியல்
20. Etiology/ aetiology - நோயேதியல்
21. Etymology - சொற்பிறப்பியல்
22. Futurology - எதிர்காலவியல்
23. Geochronology - புவிக்காலவியல்
24. Glaciology - பனியாற்றியியல்/ பனியியல்
25. Geology - புவியமைப்பியல்/ நிலவியல்
26. Geomorphology - புவிப்புறவுருவியல்
27. Graphology - கையெழுத்தியல்
28. Genealogy - குடிமரபியல்
29. Gynaecology - பெண்ணோயியல்
30. Haematology - குருதியியல்
31. Herpetology - ஊர்வனவியல்
32. Hippology - பரியியல்
33. Histrology - இழையவியல்
34. Hydrology - நீரியல்
35. Ichthyology - மீனியியல்
36. Ideology - கருத்தியல்
37. Information Technology - தகவல் தொழில்நுட்பவியல்
38. Lexicology - சொல்லியல்
39. Linguistic typology - மொழியியற் குறியீட்டியல்
40. Lithology - பாறையுருவியல்
41. Mammology - பாலூட்டியல்
42. Meteorology - வளிமண்டலவியல்
43. Metrology - அளவியல்
44. Microbiology - நுண்ணுயிரியல்
45. Minerology - கனிமவியல்
46. Morphology - உருவியல்
47. Mycology - காளாம்பியியல்
48. Mineralogy - தாதியியல்
49. Myrmecology - எறும்பியல்
50. Mythology - தொன்மவியல்
51. Nephrology - முகிலியல்
52. Neurology - நரம்பியல்
53. Odontology - பல்லியல்
54. Ontology - உளமையியல்
55. Ophthalmology - விழியியல்
56. Ornithology - பறவையியல்
57. Osteology - என்பியல்
58. Otology - செவியியல்
59. Pathology - நொயியல்
60. Pedology - மண்ணியல்
61. Petrology - பாறையியல்
62. Pharmacology - மருந்தியக்கவியல்
63. Penology - தண்டனைவியல்
64. Personality Psychology - ஆளுமை உளவியல்
65. Philology - மொழிவரலாற்றியல்
66. Phonology - ஒலியியல்
67. Psychology - உளவியல்
68. Physiology - உடற்றொழியியல்
69. Radiology - கதிரியல்
70. Seismology - பூகம்பவியல்
71. Semiology - குறியீட்டியல்
72. Sociology - சமூகவியல்
73. Speleology - குகையியல்
74. Sciencology - விஞ்ஞானவியல் (அறிவியல்)
75. Technology - தொழில்நுட்பவியல்
76. Thanatology - இறப்பியல்
77. Theology - இறையியல்
78. Toxicology - நஞ்சியல்
79. Virology - நச்சுநுண்மவியல்
80. Volcanology - எரிமலையியல்
81. Zoology - விலங்கியல்

செவ்வாய், 13 ஜனவரி, 2015

ஆன்ட்ராய்டு இருக்கும் வசதிகள்


உங்கள் ஆன்ட்ராய்டு போனில் உங்களுக்கே தெரியாமல் இருக்கும் வசதிகள்
News

இன்றைக்குப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான மொபைல் போன்களில் ஆன்ட்ராய்டு இயங்குதளமே இயக்கப்படுகிறது. இணைய இணைப்பினை எளிதாக்கும் ஸ்மார்ட் போனை நாடுபவர்கள் தேர்ந்தெடுப்பது, ஆன்ட்ராய்டு சிஸ்டத்துடன் வரும் மொபைல் போன்களையே என்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதன் வசதிகளை எப்படி முழுமையாகப் பயன்படுத்தலாம் என்பதற்கு இங்கு சில குறிப்புகளைக் காண்போம்.
அப்படியானால், வசதிகள் இருந்தும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனவா? என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். அவை மறைத்து வைக்கப்படவில்லை. சில வசதிகள் கிடைக்காது என்ற எண்ணத்திலேயே நாம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம்.
சில வசதிகள் அடிக்கடி பயன்படுத்த வேண்டாத நிலையில் இருப்பதால், அவற்றை நாம் பொருட்படுத்துவது இல்லை. ஆனால், தேவைப்படும்போது கொஞ்சம் தடுமாறுகிறோம். இவற்றில் சில முக்கிய வசதிகளை எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.
போனுடன் வந்த மென்பொருள் :
மொபைல் போனைத் தயாரித்து, வடிவமைத்து வழங்கும் நிறுவனங்கள், தங்களுடைய மென்பொருள் தொகுப்புகள் சிலவற்றையும், வர்த்தக ரீதியில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு மற்ற நிறுவனங்களின் மென்பொருள் தொகுப்புகளையும் பதிந்தே தருகின்றன.
இவற்றை bloatware packing அல்லது preinstalled apps என அழைக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை நம் போன் பயன்பாட்டிற்குத் தேவைப்படாதவையே.
கணனியிலும் இதே போன்ற சூழ்நிலையை நாம் சந்திக்கிறோம். மொபைல் போன் இயக்கம் வேகமாகவும், எளிதாகவும் இருக்க வேண்டும் என்றால், இவற்றை முதலில் போனிலிருந்து நீக்க வேண்டும்.
இதற்கு முதலில் போனில் settings பிரிவு செல்லவும். இங்கு உள்ள Apps என்ற பிரிவிற்கு அடுத்து செல்லவும். தொடர்ந்து வலது புறமாக ஸ்வைப் செய்து சென்று, அந்த வரிசையில் “All” என்பதனைக் காணவும்.
இங்கு நமக்குத் தேவையில்லாத அப்ளிகேஷன்களைத் தேர்ந்தெடுக்கவும். தேர்ந்தெடுத்து Uninstall அல்லது Disable என்ற பட்டனை அழுத்த, இவை காணாமல் போகும்.
குரோம் பிரவுசரின் திறன் கூட்டுக:
மொபைல் போன் பிரவுசர் வழி இணையத்தில் உலா வருகையில், குறைவான அலைக்கற்றையினைப் பயன்படுத்துவது வேகத்தினைத் தரும். மேலும், உங்களுக்கென கொடுக்கப்பட்டுள்ள மாத அளவிலான டேட்டாவினைக் குறைக்கும். இதனை செட் செய்திட, உங்கள் குரோம் அப்ளிகேஷனைத் திறக்கவும். Menu ஐகான் மீது தட்டி, திரையின் வலது மேலாகச் செல்லவும்.
சற்றுப் பழைய மாடல் போனாக இருந்தால், போனில் இருக்கும் மெனு (Menu) மற்றும் செட்டிங்ஸ் (Settings) பட்டனை அழுத்தி இதனைப் பெறவும்.
இங்கு “Bandwidth management” என்ற ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு “Reduce data usage” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
இங்கு இந்த செயல்பாட்டினை இயக்கத் தரப்பட்டிருக்கும் ஸ்விட்சை ஓரமாகத் தள்ளி இயக்க நிலையில் அமைக்கவும். இதனைத் தொடர்ந்து குரோம் பிரவுசர், நம் போனுக்கு வரும் டேட்டாவின் அளவைக் கட்டுப்பாடான நிலையிலேயே வைத்திருக்கும்.
ஹோம் ஸ்கிரீன் கட்டுப்பாடு:
நம் மொபைல் போனின் வாசல் நமக்குத் தரப்படும் ஹோம் ஸ்கிரீன். இங்கிருந்துதான் எதனையும் தொடங்குகிறோம். எனவே, இதனை எப்போதும் நம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
இதற்கென சரியான முறையில் அன்ரோயிட் சிஸ்டத்தை இயக்கும் நிலைக்குக் கொண்டு வரும் Custom Android launcher ஐ இதற்குப் பயன்படுத்தலாம். இதனை இயக்கிப் பயன்படுத்துகையில், முற்றிலும் மாறுபட்டதாகவும், அதே நேரத்தில் நமக்கு எளிதான ஓர் இயக்க சூழ்நிலையைத் தருவதாகவும் இருக்கும்.
இதற்கென பல ஆண்ட்ராய்ட் லாஞ்சர்கள் இணையத்தில் கிடைக்கின்றன. இவற்றில் நான் விரும்புவது Nova Launcher என்ற ஒன்றாகும். இதற்கு அடுத்தபடியாக, EverythingMe மற்றும் Terrain Home என்ற அப்ளிகேஷன்களும் கிடைக்கின்றன.
இவை புதிய ஹோம் ஸ்கிரீனை நமக்குத் தந்தாலும், நாம் எளிதில் அதனை ட்யூன் செய்து அமைத்திடும் வகையில் இவை அமைகின்றன. இதனால், நாம் மொபைல் போன் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துவது எளிதாகிறது.
டாஸ்க் ஸ்விட்ச் இயக்க மேம்பாடு:
ஏகப்பட்ட அப்ளிகேஷன்களை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால், ஒவ்வொரு முறையும், ஹோம் ஸ்கிரீன் பக்கங்களைத் தள்ளி, தேவையானதைக் கண்டறிந்து இயக்குவது சிரம்மான ஒன்றாக இருக்கும்.
ஆண்ட்ராய்ட் தரும் Recent Apps என்ற வசதி நமக்கு இதில் உதவி செய்வதாக இருந்தாலும், தர்ட் பார்ட்டி டாஸ்க் மானேஜர் அப்ளிகேஷன்கள், இன்னும் கூடுதலான வசதிகளைத் தரும். Switchr என்ற அப்ளிகேஷன் இந்த வகையில் சிறந்ததாகும். இதனைப் பயன்படுத்துகையில், போனின் டிஸ்பிளே திரையின் மூலையில் இருந்து ஸ்வைப் செய்து, அண்மையில் பயன்படுத்தப்பட்ட அல்லது பொதுவாகப் பயன்படுத்தப்பட்ட அப்ளிகேஷன்கள் பட்டியலைப் பெற்றுப் பயன்படுத்தலாம்.
மேலும், டிஸ்பிளேயின் எந்த மூலையில் இருந்து ஸ்வைப் செய்திட வேண்டும் என்பதைக் கூட நாம் வரையறை செய்து செட் செய்திடலாம். ஒவ்வொரு அப்ளிகேஷனும் எப்படி நமக்குக் காட்சி அளிக்க வேண்டும் என்பதனைக் கூட அமைத்திடலாம்.
காட்சியை அழகுபடுத்த உங்கள் அன்ரோயிட் போன் நீங்கள் பயன்படுத்துகையில், டிஸ்பிளேயுடனும், இல்லாதபோது அதனை இருட்டாக்கியும் வைத்திடும். இந்த வசதி அமைக்கப்படாத போனில், இதனை ஒரு சிறிய அப்ளிகேஷன் கொண்டு அமைக்கலாம். இதன் பெயர் Screebl.
இந்த அப்ளிகேஷன், உங்கள் போனில் தரப்பட்டுள்ள அக்ஸிலரோமீட்டர் டூலைப் பயன்படுத்தில் நீங்கள் போனை எப்படி பயன்படுத்துகிறீர்கள் என்று உணர்கிறது. போனைப் பிடித்திருக்கும் நிலை, நீங்கள் அதனை இயக்கிக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தால், டிஸ்பிளேயினை ஒளியுடன் காட்டும்.
இல்லையேல், இருட்டாக்கும். இது எவ்வளவு எளிதானது என்பதுடன், மின் சக்தியை வீணாக்காமல் காக்கிறது. மேலும், சில வேளைகளில், நாம் ஸ்கிரீனில் உள்ளதைப் படிக்கும் முயற்சியில் இருக்கையில், ஸ்கிரீனை இருட்டாக்காமல் வைக்கிறது.
தானாக ஒளி கட்டுப்படுத்தும் நிலை:
ஸ்மார்ட் போனைப் பொறுத்த வரை, பெரும்பாலான மேம்படுத்துதல் அதன் ஸ்கிரீன் ஒளியைக் கட்டுப்படுத்துவதிலேயே உள்ளது. இது சிஸ்டத்திலேயே தரப்பட்டுள்ள வசதி என்றாலும், மேலும் இதில் சில நகாசு வேலைகளை மேற்கொள்ளலாம். Lux என்னும் அப்ளிகேஷன் இதற்கான வழிகளை நன்கு தருகிறது.
திரையின் ஒளி விடும் தன்மையைச் சரியான அளவிலும், தேவைப்படும் நிலையிலும் மட்டும் தருகிறது. இதனால், நம் கண்களுக்குச் சிரமம் ஏற்படுவதில்லை. பேட்டரியின் மின் சக்தியும் பாதுகாக்கப்படுகிறது. பொதுவாக திரைக் காட்சியின் ஒளி வெளிப்பாடுதான், பேட்டரியின் அதிக சக்தியினை எடுத்துக் கொள்வதால், இந்த கட்டுப்பாடு நமக்குத் தேவையான ஒன்றாகும்.
கீ போர்ட் மேம்படுத்தல்:
பெரும்பாலான ஆன்ட்ராய்டு போன்களில், நல்ல விர்ச்சுவல் கீ போர்ட் தரப்படுகிறது. இருந்தாலும், பல வேளைகளில், இந்த கீ போர்ட் இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம்.
இதற்கெனவே, பல தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் இயங்குகின்றன. Google Play Storeல், மாறுபட்ட விர்ச்சுவல் கீ போர்ட் தரும் தர்ட் பார்ட்டி அப்ளிகேஷன்கள் நிறைய கிடைக்கின்றன. இவற்றில் SwiftKey என்பது சிறப்பான, எளிதான, வசதியான இயக்கத்தினைத் தருவதாக அமைந்துள்ளது.
இதில் முன் கூட்டியே முழுச் சொற்களைத் தரும் next-word prediction வசதியைக் கூட நாம் விரும்பும் வகையில் அமைத்துக் கொள்ளலாம். இதே போன்ற மற்ற சிறந்த அப்ளிகேஷன்களைக் குறிப்பிட வேண்டும் என்றால், Swype மற்றும் TouchPal ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
லாக் ஸ்கிரீனில் கூடுதல் பயன்பாடு:
ஆன்ட்ராய்டு சிஸ்டம், விட்ஜெட்டுகளை (widgets) நம்முடைய ஹோம் ஸ்கீரினில் மட்டுமின்றி, லாக் ஸ்கிரீனிலும் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறது. இந்த லாக் ஸ்கிரீன் என்பது, நாம் போனின் பவர் பட்டனை அழுத்துகையில் முதலில் நமக்குக் காட்டப்படுவதாகும்.
லாக் ஸ்கிரீனில், சீதோஷ்ண நிலை குறித்த தகவல், அடுத்து நாம் எடுத்துச் செயல்படுத்த வேண்டிய உறுதி செய்த நிகழ்வுகள் (,upcoming appointments), பேட்டரியின் மின் திறன் அளவு, அண்மைக் காலத்திய செய்தி போன்றவை காட்டப்படும்.
இவற்றுடன் மேலும் சில லாக் ஸ்கிரீன் விட்ஜெட்டுகளை இணைக்கலாம். இதனால், ஒரு ஸ்வைப்பிலேயே கூடுதல் தகவல்களைக் காண இயலும். இந்த வகையில் அதிக கூடுதல் வசதிகளை அமைக்கலாம்.
போன் செட்டிங்ஸ் அமைப்பில், Security பிரிவில் சென்று, லாக் ஸ்கிரீனில் விட்ஜெட்டுகள் இயக்கப்பட வேண்டும் என்பதனை இயக்கி வைக்கவும். அதன் பின்னர், உங்களுக்குத் தேவையான தகவல்களைத் தரும் அப்ளிகேஷன்களைத் தேடி அமைக்கவும்.
அறிவிப்புகளைக் கட்டுப்படுத்த:
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் இயங்கும் போன்களில், நோட்டிபிகேஷன் எனப்படும் தகவல் அறிவிக்கைகள் நமக்கு சில நன்மை தரும் தகவல்களை அளிப்பவை ஆகும். ஆனால், அவையே எண்ணிக்கை அதிகமாகும்போது, தேவையற்ற குப்பைகள் சேரும் இடமாகத்தான் போன் திரை காட்சி அளிக்கும்.
இப்படிப்பட்டவற்றைக் கட்டுப்படுத்த ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கிறது. நோட்டிபிகேஷன்களைத் தரும் அப்ளிகேஷனில் இவற்றைக் கட்டுப்படுத்தும் வசதி அளிக்கப்படவில்லை என்றால், சிஸ்டம் செட்டிங்ஸ் ஐகான் அழுத்தி, Apps என்ற பிரிவிற்குச் செல்லவும்.
குறிப்பிட்ட அப்ளிகேஷன் பெயரைக் கண்டறியவும். அதில் “Show notifications” என்பதன் அருகேயுள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். இனி, அந்த அப்ளிகேஷன் சார்ந்த அறிவிப்புகள் போனுக்கு வராது.
முக்கிய மின் அஞ்சல் தகவல் கவனத்திற்கு வர:
உங்கள் மொபைல் போனில் உள்ள ஜிமெயில் அப்ளிகேஷனில் செட்டிங்ஸ் பிரிவு செல்லவும். அதில் உங்கள் அக்கவுண்ட் தேர்ந்தெடுக்கவும். அங்கு “Manage labels” என்பதனைத் தேர்ந்தெடுக்கவும்.
அதில் நீங்கள் உருவாக்கிய லேபிள் மீது டேப் செய்திடவும். தொடர்ந்து “Sync messages” என்பதனைத் தேர்ந்தெடுத்து, “Sync: Last 30 days” என்பதற்கு மாற்றவும். இறுதியாக, “Label notifications” என்ற பிரிவிற்குச் சென்று, Sound என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
முக்கியமான அஞ்சல் கிடைக்கும்போது, எழுப்பப்பட வேண்டிய ஒலியினைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இப்படியே, நீங்கள் அமைக்கும் ஒவ்வொரு லேபிளுக்கும் அமைக்கலாம்.
திரைக் காட்சி ஸூம் செய்திட:
பெரும்பாலான இணைய தளங்கள், மொபைல் போனில் சிறப்பாகப் பார்க்கும் வகையிலும் வடிவமைக்கப்படுகின்றன. அதனாலேயே, அனைவரும் அதில் உள்ள வரிகளை எளிதாகப் படிக்க முடியும் என எண்ண வேண்டாம்.
பல விஷயங்கள், மிகச் சிறிய எழுத்தில் தான் மொபைல் போன் திரையில் காட்டப்படும். எனவே, திரையை ஸூம் செய்தால் தான், டெக்ஸ்ட் பெரிய அளவில் காட்டப்படும்.
ஆனால், சில இணைய தளங்கள், இந்த ஸூம் செய்திடும் வசதிக்கு உட்படாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இது ஆர்வமுடன் டெக்ஸ்ட்டைப் படிக்க நினைப்பவர்களுக்கு எரிச்சலைத் தரும். இதனைத் தாண்டிட எளிய வழி ஒன்று உள்ளது. குரோம் ஆண்ட்ராய்ட் பிரவுசரில், செட்டிங்ஸ் செல்லவும் அதில் Accessibility என்ற பிரிவிற்குச் செல்லவும்.
அங்கு “Force enable zoom” என்பதில் உள்ள செக் பாக்ஸில் டிக் அடையாளம் ஒன்றை அமைக்கவும். அவ்வளவு தான். உங்கள் போனின் திரை அமைப்பைப் பொறுத்து, அதனைச் செல்லமாக இரண்டு விரல்களால் கிள்ளினால் திரை சற்று விரிந்து, டெக்ஸ்ட் பெரிதாகக் காட்சி அளிக்கும். கண்களை இடுக்கிக் கொண்டு உற்றுப் பார்க்கும் வேலை எல்லாம் இனி தேவை இருக்காது.

திங்கள், 12 ஜனவரி, 2015

Free Building Plan



 


நீங்கள் கட்ட‍விருக்கும் உங்கள் வீட்டை நீங்களே டிசைன் செயய உதவும் தளம்..
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள், தங்களுக்கென்று பலவிதமான ஆசைகள் இருக்கும். இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா..?? அல்லது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமா..??? என்று பலவித எண்ணங்கள் தோன்றும்.
நமக்கு தோன்றும் எண்ணங்களுக்கு வடிவம் கொடுத்து வீடு கட்ட பிளான் உருவாக்கி கொடுக்கிறது ஒரு தளம் இதைப்பற்றித் தான் இந்தப்பதிவு.
வீட்டை கட்டிப்பார்.... திருமணம் நடத்திப் பார்... என்பது பழமொழி.
ஆனால் இன்று இந்த இரண்டுமே பணம் மட்டும் இருந்தால் எளிதாக செய்து விடலாம்.
அந்த வகையில் இன்று புதிதாக வீடு கட்ட விரும்புபவர்களுக்கு வீட்டுக்கான பிளான் (வடிவமைப்பு) உருவாக்கி கொடுக்க ஒரு தளம் உதவுகிறது.
இத்தளத்திற்கு சென்று நாம் படம் 1-ல் காட்டிய படி Design, Isometric View , 3D Walk through மற்றும் Print என்ற மெனுக்களில் முதலில் Design மெனு திறக்கும் இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும் அடுத்து வலது பக்கம் இருக்கும் Wall டூலை பயன் படுத்தி எங்கு சுவர் வேண்டுமோ அங்கு கொண்டு வரலாம்,
அதே போல் எங்கு கதவு வேண்டும், எங்கு சன்னல் வைக்க வேண்டும் என அனைத்தையுமே நாம் இதைச் சொடுக்கி எளிதாக வைத்துக் கொள்ளலாம். Transform என்ற டூலை பயன்படுத்தி எங்கு வேண்டுமானாலும் நகர்த்தலாம் வடிவத்தை மாற்றி அமைக்கலாம்.
இதே போல் Isometric View மற்றும் 3D Walk through போன்றவற்றில் நமக்கு பிடித்த வண்ணத்தை தேர்ந்தெடுக்கலாம் எல்லாம் தேர்ந்தெடுத்த பின் Print என்ற பொத்தானை சொடுக்கி Print செய்யலாம்.
ஆரம்ப நிலையில் நாமே நம் விருப்பபடி எளிதாக பிளான் உருவாக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்தப்பதிவு பயனுள்ளதாக இருக்கும்.
இணையதள முகவரி : http://www.smallblueprinter.com/sbp.htm

ஞாயிறு, 11 ஜனவரி, 2015

மின்சாதன பொருள்களை பாதுகாப்பது எப்படி ?


மின்சாதன பொருள்களை பாதுகாப்பது எப்படி ?
மின்சாதன பொருட்களும் அதன் பாதுகாப்பது முறைகளும்...!
ஐ.எஸ்.ஐ. முத்திரை இருக்கிறதா என்று பார்த்தே மின்சாதன பொருட்களை வாங்குங்கள்.
மூன்று பின்கள் உள்ள பிளக்&ஐயே பயன்படுத்துங்கள். ஸ்விட்ச் பாக்ஸ் தரைமட்டத்திலிருந்து 4 அடி உயரத்துக்கு மேல் இருக்கும்படி பொருத்துங்கள். விபரம் தெரியாத குழந்தைகளின் பாதுகாப்புக்கு இதுவே சிறந்த வழி.-erath பாதுகாப்பு கிடைக்கும்.!
ஸ்விட்ச் பாக்ஸை பொறுத்தவரை பாதுகாப்பான நிறைய வகைகள் இப்போது கிடைக்கின்றன. உதாரணமாக, பிளக்&ல் ‘பின்’ செருகும்போது துவாரப் பகுதி திறந்தும், பின்&ஐ வெளியே எடுக்கும்போது துவாரம் தானாகவே மூடும்படியான க்ளோசிங் வகை ஸ்விட்ச் பாக்ஸ்கள் உள்ளன. அவை மிகவும் பாதுகாப்பானவை.
டி.வி, ஃப்ரிட்ஜ், ஏ.சி. போன்ற மின்சாதனப் பொருட்களுக்கு ஸ்டெபிலைசர் வைப்பது மிகவும் பாதுகாப்பானது.
மின்சாதனங்களை பயன்படுத்தும்போது கவனிக்க-வேண்டிய முக்கிய விஷயங்களைப் பற்றிய தன் கருத்துக்களை பகிர்ந்துகொண்டார் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சேர்ந்த பொறியாளர் ஒருவர்.
முக்கியமான மின்சாதனங்களுக்கு (ஃப்ரிட்ஜ், ஏ.சி., கம்ப்யூட்டர், டி.வி. போன்றவை..) தனித் தனியாக ‘எர்த் கனெக்ஷன்’ கொடுப்பது பாதுகாப்பானது. எர்த் கொடுக்கும் போது அது சரியான முறையில் (ஆறடிக்குக் குறையாத ஆழம் தோண்டி, உள்ளே கரித்துகள்கள், உப்பு, ஆற்று மணலைப் போட்டு ‘எர்த்’ கொடுக்கவேண்டும்). கொடுக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவேண்டும். எர்த் கொடுத்த இடத்தில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது எர்த் சரியாக இருக்கிறதா என்று பரிசோதிக்கவேண்டும்.
பிளாட்ஃபார கடைகளில் மின்சார பொருட்களை வாங்கவே கூடாது. தரமான ப்ராண்டட் பொருட்களை உபயோகிப்பதே சிறந்தது. மின்சாதனங்கள் பழுதுபட்டால், அவற்றுக்குரிய நிறுவனங்களில் கொடுத்துத்தான் சரிசெய்ய வேண்டும்.
வெவ்வேறு மின்சாதன பொருட்களுக்கு தனித் தனி ‘பின்’களையே பயன்படுத்தவேண்டும். ஒரே பின்&ல் பல ‘பிளக்’குகளை செருகிவைக்கக் கூடாது. தீய்ந்துபோன ஸ்விட்ச்சுகளை பயன்படுத்துவது, ஒயரை சீவிவிட்டு பின்னுக்குள் செருகி வைப்பது போன்றவற்றை செய்யவே கூடாது.
சில சமயங்களில் ஸ்விட்ச் பாக்ஸில் கரையான் கூடு கட்டியிருக்கும். மழைக்காலத்தில் அது ஈரப்பதமாகி, விபத்து நிகழ அதிக வாய்ப்புண்டு. எலெக்ட்ரீஷியனை அழைத்து, கரையான் கூட்டை எடுத்துவிட வேண்டும்.
லேசாக ஷாக் வருகிற மாதிரி தெரிந்தால்கூட, சரி செய்யாமல் அப்பொருளை பயன்படுத்தவே கூடாது.
கிரைண்டர், மிக்ஸி, கெய்ஸர், ஹீட்டர் (தண்ணீருக்குள் போட்டு சூடு செய்யும் கருவி), டேபிள் ஃபேன் உள்ளிட்ட பொருட்களை துருப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். துருவின் மூலமாக வெளியே மின்சாரம் கசியக் கூடும்.
மின்பழுதுகளை சரிசெய்ய லைசன்ஸ் வாங்கிய எலெக்ட்ரீஷியன்களையே அழைக்க வேண்டும். நமது சொந்தத் திறமைகளை பரிசோதிக்கும் இடம் அது இல்லை என்பதையும் உணர வேண்டும். தொடர்ந்து ஒரே எலெக்ட்ரீஷியனையே கொண்டு பழுது பார்ப்பது நல்லது. அவருக்கு வீட்டின் மின் கட்டமைப்பு நன்கு தெரிந்திருக்கும் என்பதால், குறைபாட்டை முழுவதுமாக சரிசெய்ய முடியும்.
பாத்ரூமில் ஈரப்பதம் இருந்து கொண்டேயிருப்பதால், அங்கு பயன்படுத்தப்படும் மின்சாதனங்களுக்கான ஸ்விட்ச் பாக்ஸ் வெளியில் இருக்கவேண்டியது அவசியம். ஹீட்டர், கெய்ஸரை நிறுத்திய பின்னரே குளிக்கச் செல்ல வேண்டும்.
கூடுதல் பாதுகாப்புக்கு E L C B ( Earth Leaker Circle Breaker) என்ற கருவியை மெயின் &ல் பொருத்திக் கொள்ளலாம். எங்காவது சின்ன மின்கசிவு இருந்தால்கூட மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரண்டே நிமிடத்தில் மீண்டும் அதுவாகவே ‘ஆன்’ ஆகிவிடும் வசதி இந்தக் கருவியில் உண்டு. இந்த சிக்னலால் மின்கசிவைக் கண்டுபிடித்து உடனடியாக சரி செய்துவிடலாம்.’’
மின் தாக்குதலுக்குள்ளானவரின் அருகிலிருப்பவர் செய்யவேண்டிய முதலுதவிகள் பற்றிச் சொல்கிறார் பொது மருத்துவ நிபுணர் டாக்டர் கணேசன்.
மின்சாரம் தாக்கியவரை தொடவே கூடாது. மின்சாரம் பாயாத ரப்பர், மரக்கட்டை முதலான பொருட்களைக் கொண்டு அவரை விடுவிக்க வேண்டும். அதற்கு வாய்ப்பில்லையெனில், மெயினை ஆஃப் செய்து மின்சாரத்தை நிறுத்தவேண்டும்.
மின்சாரம் தாக்கியவர் நினைவின்றி இருக்கும்போது அவருக்கு உடனடியாக தண்ணீர் கொடுக்கக் கூடாது.அப்படிச் செய்தால், தண்ணீர் சுவாசக் குழாய் வழியாகச் சென்று மேலும் பிரச்னைகள் ஏற்படும். மின்சாரத்தால் தீக்காயம் ஏற்பட்டிருந்தால், காயத்தின் மேல் குளிர்ந்த தண்ணீரை ஊற்றவேண்டும்.
மின்கசிவு உள்ள இடத்தில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதில் காலை வைக்கவே கூடாது.
ஈரம் உள்ள இடத்தில் மின்கசிவு இருப்பின், எத்தனை அவசரமாக இருந்தாலும் ரப்பர் செருப்பு போட்டுக்கொண்டு தான் அருகில் செல்ல வேண்டும்.

சனி, 10 ஜனவரி, 2015

Check your Aadhaar , BANK- Gas Status



கேஸ் நிலை
உங்கள் கேஸ் புக் செய்வது.
ஆதார் எண் சேர்க்கப்பட்டு உள்ளதா...
பேங்க் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளதா...
மானிய விலையில் எத்தனை சிலிண்டர்கள் நீங்கள் பெற்றுள்ளீர்கள் என்பதை அறியலாம்....
Check your Aadhaar- Gas linkage Status
To check your Aadhaar linkage status please visit the transparency portal of your LPG Company.
Following are the steps to check your Aadhaar linking status at Transparency Portal.
Step 1: Please click the below given links or paste in your browser
For IOCL: இண்டேன் கேஸ்
http://indane.co.in/
Step 2: Enter all the details under “Normal Search” and press Proceed Button.
Step 3: Search your details by entering your Consumer No. or Consumer Name under Search By option and press Enter to know your Aadhaar linking status in LPG and Banks.

செவ்வாய், 6 ஜனவரி, 2015

Internet Speed Increasing ideas



வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை..!! 

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதை தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp , Windows 7 ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்…!! 

வியாழன், 1 ஜனவரி, 2015

world Bar code details

நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டுடையது என்பதை பார் கோட் மூலம் அறிந்து கொள்வது எப்படி....??
சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் என்றால் இப்பொழுது இந்தியா மட்டும் இல்ல, உலகமே சந்தேகம் கண் கொண்டு பாக்க ஆரம்பிச்சுருச்சு. பால் பவுடர் பிரச்சனை,சீன பொம்மைகள் என்று எல்லாத்துலயும் நச்சு பொருட்கள் இருபதாக சொல்ல படுகிறது, சிலர் சீன பொருட்கள் விலை குறைவாக கிடைகிறது என்று தேடி போய் சீன பொருட்களை வாங்குவார்கள் அவர்களுக்கும் இந்த தகவல் பயனுள்ளதாக இருக்கும்.
(தவிர்பதற்கும் சரி வாங்குவதற்கும் சரி),சரி நம்ம எப்படி சீன,தைவான் பொருட்களை தான் நாம வாங்குகிறோமா என்று சரி பார்ப்பது
இப்பொழுது எல்லா பொருட்களுக்கும் பார்கோடு பயன்பாட்டில் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்,பார் கோடு என்பது machine readble format யில் இருக்கும்.
அதில் முதல் மூன்று எண்கள் 690.691,692 என்றால் அது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று அர்த்தம் ,471 என்றால் தைவானில் தயாரிக்கப்பட்ட பொருள் ஆகும்.
நீங்கள் வாங்கும் பொருள் எந்த நாட்டிலிருந்து வருகிறது என்று இதனை வைத்து தெரிந்து கொள்ளலாம். போலி மருந்துகள் மாதிரி expiry date யை, இதனை அச்சடிக்க முடியாது என்பதும் நமக்கு கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது. இனி மேல் பார்கோடை பார்த்து வாங்குங்க .
மற்ற நாடுகளின் முதல் எண்கள்
00-13: USA & Canada
20-29: In-Store Functions
30-37: France
40-44: Germany
45: Japan (also 49)
46: Russian Federation
471: Taiwan
474: Estonia
475: Latvia
477: Lithuania
479: Sri Lanka
480: Philippines
482: Ukraine
484: Moldova
485: Armenia
486: Georgia
487: Kazakhstan
489: Hong Kong
49: Japan (JAN-13)
50: United Kingdom
520: Greece
528: Lebanon
529: Cyprus
531: Macedonia
535: Malta
539: Ireland
54: Belgium & Luxembourg
560: Portugal
569: Iceland
57: Denmark
590: Poland
594: Romania
599: Hungary
600 & 601: South Africa
609: Mauritius
611: Morocco
613: Algeria
619: Tunisia
622: Egypt
625: Jordan
626: Iran
64: Finland
690-692: China
70: Norway
729: Israel
73: Sweden
740: Guatemala
741: El Salvador
742: Honduras
743: Nicaragua
744: Costa Rica
746: Dominican Republic
750: Mexico
759: Venezuela
76: Switzerland
770: Colombia
773: Uruguay
775: Peru
777: Bolivia
779: Argentina
780: Chile
784: Paraguay
785: Peru
786: Ecuador
789: Brazil
80 – 83: Italy
84: Spain
850: Cuba
858: Slovakia
859: Czech Republic
860: Yugoslavia
869: Turkey
87: Netherlands
880: South Korea
885: Thailand
888: Singapore
890: India
893: Vietnam
899: Indonesia
90 & 91: Austria
93: Australia
94: New Zealand
955: Malaysia
977: International Standard Serial Number for Periodicals (ISSN)
978: International Standard Book Numbering (ISBN)
979: International Standard Music Number (ISMN)
980: Refund receipts
981 & 982: Common Currency Coupons
99: Coupons