டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!
வாகனங்களின் பாதுகாப்பில் மிக முக்கிய பங்கு வகிப்பது டயர்கள் என்று கூறினால் மிகையாது.
பாதுகாப்பு மட்டுமின்றி மைலேஜிலும் இவற்றின் பங்கு மகத்தானது.
எனவே,
வாகனங்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட அளவுடைய டயரை பொருத்துவதே
சாலச் சிறந்தது.
ஒவ்வொரு டயரிலும் இதற்கான விபரங்கள்
குறியீடு மூலம் கொடுக்கப்
பட்டிருக்கும்.
எனவே,டயர் வாங்கும்போது அந்த குறியீடுகளை பார்த்து தெரிந்து கொண்டு வாங்கினால், உங்கள் வாகனத்துக்கு சிறந்த டயரை எளிதாக தேர்வு செய்யலாம்.
டயர்களின் பக்கவாட்டில் கொடுக்கப்
பட்டிருக்கும்
குறியீடுகளும்
அதன் விபரங்களையும்
காணலாம்.
உதாரணமாக, ( 35PSI ) MAX PRESS
என்று ஆங்கிலத்தில் கொடுக்கப்
பட்டிருக்கும் .
குறியீட்டு எழுத்துக்கள் அந்த டயரின் அதிகபட்ச காற்றின் அழுத்த அளவை குறிக்கும்.
அதற்குமேல் காற்றின் அழுத்தம் இருக்கக் கூடாது.
அடுத்ததாக,
215/65R14 89H M+S
என்று கொடுக்கப்
பட்டிருந்தால், அதில்,
215 என்பது அந்த டயரின் அகல அளவு மில்லிமீட்டரில் குறிக்கப்படுகிறது.
அடுத்து 65 என்று குறிக்கப்பட்டிருக்கும் எண்கள் அந்த டயரின் பக்கவாட்டு உயரத்தை குறிக்கும்.
R என்ற ஆங்கில எழுத்து ரேடியல் டயர் என்பதை குறிக்கும்.
இதுதவிர, சாதாரண டயர்கள் A மற்றும் B ஆகிய ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்பட்டிருக்கும்.
14 என்ற எண்கள் டயரின் உள்விட்டம் அல்லது ரிம் அளவை குறிக்கிறது.
அடுத்து 89 என்று குறிக்கப்பட்டிருந்தால், அந்த டயர்அதிகபட்சம் 580 கிலோ எடையை சுமக்கும் திறன் கொண்டது.
அடுத்து இந்த வரிசையில் கடைசியில் குறிக்கப்பட்டிருக்கும் ஆங்கில எழுத்து அந்த டயர் அதிகபட்சமாக செல்லும் வேகத்தை குறிக்கும்.
உதாரணமாக, H என்ற ஆங்கில எழுத்து குறிக்கப்பட்டிருந்தால் அந்த டயர் அதிகபட்சம் மணிக்கு 210 கிமீ வேகத்தில் செல்வதற்கு லாயக்கானது என்று அர்த்தம்.
(டயர் வேக அளவின் குறியீட்டு எழுத்துக்கள்
விபரம் கீழே கொடுக்கப்
பட்டிருக்கிறது.
மேலும், M+S என்று குறிக்கப்பட்டிருந்தால்,சேறு மற்றும் பனி படர்ந்த சாலைகளில் செல்ல ஏதுவானது என்றும்,
அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றது என்று பொருள் கொள்ளலாம்.
இதே போன்று, ஓல்டு ஸ்டாக் டயரை கண்டுபிடிப்பதற்கும் வழி இருக்கிறது.
டயரில் ஆங்கிலத்தில்
DOT GHYT 1212 என்று குறிக்கப்பட்டிருந்தால் அதில், கடைசியில் வரும்முதல் 12 என்ற எண்கள் 12வது வாரத்தையும், இரண்டாவது 12 எண்கள் 2012ம் ஆண்டையும் குறிக்கும்.
அதாவது, மார்ச் மாதம் 2012ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட டயர் என்று அர்த்தம். மேலும்,
இதில் G H Y T என்ற எழுத்தில் முதல் இரண்டு ஆங்கில எழுத்துக்கள் தயாரிப்பு நிறுவனத்தின்
குறியீடு,
அடுத்த இரு எழுத்துக்கள் அந்த டயரின் தயாரிப்பு குறியீடு.
எதிர்காலத்தில் டயரில் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால், குறிப்பிட்ட இந்த எழுத்துக்களை அடிப்படையாக கொண்டு திரும்ப பெறப்படும்.
டயரின் ஆங்கில எழுத்து குறியீடும் அதன் அதிகபட்ச வேக திறன் விபரம்:
P-150 Kmph
Q-160 Kmph
R-170 Kmph
S-180 Kmph
T - 190 Kmph
H - 210 Kmph
V - 240 Kmph
W - 270 Kmph
Y - 300 Kmph
ZR - over 240 Kmph
( பின் குறிப்பு)
டயரில் காற்று இருகின்றதா என்று பார்க்கவும்,,,,
Subject:
டயர்கள் பற்றிய தவறான எண்ணங்களும், அதன் உண்மைகளும்...!!
வாகனங்களின் மைலேஜ், நிலைத்தன்மை போன்றவற்றை அளிப்பதில் டயர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இதனால், டயர்களை பராமரிப்பதில் வாகன உரிமையாளர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியம்.
இந்த நிலையில், டயர்களை பராமரிப்பதிலும், பாதுகாப்பு சோதனைகள் பற்றியும் பலர் தவறான சில எண்ணங்களை வைத்துள்ளனர்.
காலங்காலமாக இதனை நம்பியும் சில தவறுகளை செய்கின்றனர்.
அந்த தவறான எண்ணங்களையும், அதன் உண்மையான பயன்பாடு மற்றும் காரணத்தையும் இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.
முதலில் தவறான எண்ணத்தையும், அதன் உண்மை அல்லது தீர்வை தொடர்ந்து கொடுத்துள்ளோம். இது நிச்சயம் பயனுள்ளதாக அமையும்.
காற்றின் அழுத்தம்
டயர்களின் பக்கவாட்டில் எழுதப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ எனப்படும் டயர்களுக்கான காற்றின் அளவையே சிலர் சரியானதாக கருதுகின்றனர். ஆனால், அது சரியானதா?
சரி எது?
டயர்களின் பக்கவாட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும் பிஎஸ்ஐ அளவு டயரின் அதிகப்பட்ச காற்றின் அழுத்த்தை தாங்கும் திறனையே குறிக்கிறது.
எனவே, உங்களது வாகனத்துககான பரிந்துரைக்கப்பட்ட அளவை தெரிந்து கொள்ள காரின் கதவின் உட்புறத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் பரிந்துரைக்கப்பட்ட அளவை பின்பற்றி காற்று நிரப்புங்கள்.
வால்வு மூடி
ட்யூபிலிருந்து காற்று வெளியேறுவதை வால்வு மூடி தடுக்கும் என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது.
சரி எது?
ஆனால், வால்வு மூடி காற்று வெளியேறுவதை தடுக்காது. தூசி, தண்ணீர், சேறு உள்ளிட்டவை வால்வுக்குள் புகாதவாறு தடுப்பதற்காகவே மூடி கொடுக்கப்படுகிறது.
அதிக கிரிப்புக்கு...
சிலர் டயரில் காற்றழுத்தம் குறைவாக இருந்தால் அதிக கிரிப் கிடைக்கும் என்று கருதுகின்றனர்.
சரி எது?
காற்றழுத்தம்
தான் காரணம்