திருவள்ளுவரைக் காப்போம் .
1965 ல் தமிழக அரசால் LUXURY to Common Man என்ற கொள்கையின் படி தொலை தூர பயணிகளுக்காக ஆரம்பிக்கப் பட்டது திருவள்ளுவர் போக்கு வரத்துக் கழகம் . பல்வேறு காரணங்களுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகமாக SETC என பெயர் மாறி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களை விட சிறப்பாக மக்களுக்கு சேவை செய்வதிலும் ,அதிக விருதுகளை பெறுவதிலும் , அதீத தூரங்களைக் கடப்பதிலும் , முன்னணியில் உள்ள ஒரே அரசு நிறுவனம் இது தான் என்றால் மிகையாகாது .
இன்று வரை டீசல் விலை பல முறை உயர்வது , தொழிலாளர்களின் சம்பள உயர்வு , பராமரிப்பு சிலவுகள் அதிகரிப்பது , டோல்கேட் வரிகள் 50 கி மீ க்கு ஒரு முறை வசூலிக்கப் படுவது , அதுவல்லாமல் ஆண்டுக்கு ஆண்டு அந்த டோல்கேட் கட்டணம் 10 சதவிகிதம் உயர்வது மேலும் இப்பெருந்துகள் அனைத்துமே சராசரி தினமும் 10 டோல்கேட்டை கடப்பதால் சிலவுகளும் கட்டுக்கடங்காமல் போய் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்றளவும் இயங்கி வருகின்றது .
விபத்தில்லா ,சுகமான,சரியான நேரத்திற்கு , அளவான வேகத்தொடு தொலை தூரங்களுக்கு பெண்கள் பாதுகாப்புடன் செல்ல ,தனிதனி இருக்கைகளில் அடுத்தவர்களை இடிக்காமல் பாதுகாப்பான பயணத்திற்கு மக்கள் அனைவரும், அரசு விரைவுப் பேருந்துகளையே நாடுகிறார்கள் . பல ஆண்டுகளாக பல்வேறு சிலவுகளை சமாளிக்க பல்வேறு யோசனைகளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது .
மத்திய அரசு நட்டத்தில் இயங்கும் பொது துறை நிறுவனங்களை தற்போது தனியாருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறது .அது போல் தமிழகத்தில் நடக்க அவ்வாறு வாய்ப்பில்லை . லாபத்தோடு வெற்றி நடை போட வேண்டும் என்பதே நமது விருப்பமும் மக்கள் விருப்பமும் .
1965 ல் தமிழக அரசால் LUXURY to Common Man என்ற கொள்கையின் படி தொலை தூர பயணிகளுக்காக ஆரம்பிக்கப் பட்டது திருவள்ளுவர் போக்கு வரத்துக் கழகம் . பல்வேறு காரணங்களுக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகமாக SETC என பெயர் மாறி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசு போக்குவரத்துக் கழகங்களை விட சிறப்பாக மக்களுக்கு சேவை செய்வதிலும் ,அதிக விருதுகளை பெறுவதிலும் , அதீத தூரங்களைக் கடப்பதிலும் , முன்னணியில் உள்ள ஒரே அரசு நிறுவனம் இது தான் என்றால் மிகையாகாது .
இன்று வரை டீசல் விலை பல முறை உயர்வது , தொழிலாளர்களின் சம்பள உயர்வு , பராமரிப்பு சிலவுகள் அதிகரிப்பது , டோல்கேட் வரிகள் 50 கி மீ க்கு ஒரு முறை வசூலிக்கப் படுவது , அதுவல்லாமல் ஆண்டுக்கு ஆண்டு அந்த டோல்கேட் கட்டணம் 10 சதவிகிதம் உயர்வது மேலும் இப்பெருந்துகள் அனைத்துமே சராசரி தினமும் 10 டோல்கேட்டை கடப்பதால் சிலவுகளும் கட்டுக்கடங்காமல் போய் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இன்றளவும் இயங்கி வருகின்றது .
விபத்தில்லா ,சுகமான,சரியான நேரத்திற்கு , அளவான வேகத்தொடு தொலை தூரங்களுக்கு பெண்கள் பாதுகாப்புடன் செல்ல ,தனிதனி இருக்கைகளில் அடுத்தவர்களை இடிக்காமல் பாதுகாப்பான பயணத்திற்கு மக்கள் அனைவரும், அரசு விரைவுப் பேருந்துகளையே நாடுகிறார்கள் . பல ஆண்டுகளாக பல்வேறு சிலவுகளை சமாளிக்க பல்வேறு யோசனைகளில் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது .
மத்திய அரசு நட்டத்தில் இயங்கும் பொது துறை நிறுவனங்களை தற்போது தனியாருக்கு மாற்றிக் கொண்டிருக்கிறது .அது போல் தமிழகத்தில் நடக்க அவ்வாறு வாய்ப்பில்லை . லாபத்தோடு வெற்றி நடை போட வேண்டும் என்பதே நமது விருப்பமும் மக்கள் விருப்பமும் .
அது சந்திக்கும் பிரச்சினைகள்
- பொது மக்களுக்கு கட்டணம் அதிகம் என்ற பயம்.
- சீட் இருக்கிறதா இல்லையா எனும் தெரியா நிலை .
- டோல்கேட் கட்டணம் தினமும் ஒரு பேருந்துக்கு உத்தேசமாக ரூபாய் 3000 வரை சிலவாவது .
- பேருந்துகள் பராமரிப்பின்மை .
- வேகம் இல்லாமை .
- கூட்டத்திற்கு ஏற்ற வகையில் பேருந்தை இயக்காதது .
- பயணிகள் இல்லாமல் செல்வது .
- ஊழல்கள் தலை முதல் கால் வரை
- சகோதர அரசு போக்குவரத்துக் கழங்களின் போட்டியை சமாளிக்க முடியாமை .
- ஆம்னி பேருந்துகளின் சௌரியங்களை கொடுக்க முடியாமை .
- SETC க்கு போட்டியாளர் ரயில்வே அதற்கு என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் ,என்பது தெரியாமல் விரைவு பேருந்துகள் போல் இயக்காமல் புற நகர் பேருந்துகள் போல் செயல் படுவது . இதனை ஆம்னி சரியாக உபயோகித்துக் கொள்கிறது .
- பயணிகள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பது நிர்வாகத்திற்கு தெரியாமை .
- இப்போது அது செயல்படுத்திக் கொண்டிருக்கும் விளம்பர மற்றும் தபால் சேவையில் லாப நோக்கம் முக்கியமில்லாத ஒரு அரசு அலுவலகம் போல் செயல் படுவது . அதன் கொள்கை முடிவில் பலவித கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் இக்கட்டுரையில் அதைப் பற்றி விவாதிக்க விருப்பமில்லை .
- ஒரு பொது துறை நிறுவனமான இது இன்றுவரை பயனாளிகளின் கருத்துக் கேட்புக் கூட்டமே நடத்தாமல் இருப்பது . ரயில்வே பயணிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப மாற்றங்களை செய்கிறது .
- ரயில்வேயும் இவர்களும் ஒன்று . மக்களுக்கு ரயில்வேயின் மீது உள்ள வெறி போல் இவர்கள் மீதும் உண்டு செய்திருக்க வேண்டும் . இவர்கள் பலம் இவர்களுக்கு தெரியவில்லை .
- மக்கள் இவர்களிடம் இருந்து நிறைய எதிர்பார்க்கிறார்கள் . அதை நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பு .
இது இயக்கும் பேருந்துகளின் எண்ணிக்கைகளை விட சகோதர போக்குவரத்துக் கழகங்கள் இதன் வழித்தடங்களில் அதிக எண்ணிக்கையில் இயக்குகின்றன . அதே வழித்தடங்களில் ஆம்னி பேருந்துகளும் இவர்களை விட அதிக எண்ணிக்கையில் அதிக கட்டணம் வசூலித்து இயக்குகிறார்கள் . ஆம்னி பேருந்துகளில் இடம் இல்லையென்றால் தான் இவர்களை நாடுகிறார்கள் . அதாவது போட்டியில் 3 வது இடத்தைப் பிடித்துள்ளார்கள். இவை அனைத்தும் இவர்களுக்கு வர வேண்டியவை அதாவது 10000க்கு மேல் பேருந்துகளை சொந்தமாக்கியிருக்க வேண்டும் .லாபம் உயர்ந்து வருமான வரியின் படி சூப்பர் டாக்ஸ் எனப்படும் வரிகளைக் கட்டுமளவிற்கு உயர்ந்திருக்க வேண்டும் .தவற விட்டு விட்டார்கள் .
நிர்வாகம் ஆலோசிக்க வேண்டியவைகள்
- மற்ற போக்குவரத்துக் கழகங்கள் போல் இல்லாமல் இவர்களது எல்லை தமிழகம் முழுவதும் . இவர்கள் மட்டுமே 200 கிமீ தொலைவுக்கு அப்பால் உள்ள இடங்களுக்கு பேருந்துகளை இயக்கும் monopoly சக்தி கொண்டவர்கள் . போட்டியாளர்களே இல்லை .எனும் சிறப்பு வாய்ந்தது விரைவு கழகம் .
- இப்பேருந்துகளில் மக்கள் நின்று கொண்டு பயணிக்கப் போவதில்லை . உட்கார்வதற்கு இருக்கைகள் தேவை . அதிகப்படியான இருக்கைகளைக் கொண்ட மாடி மற்றும் தொடர் பேருந்துகளை இயக்கி ஒரே எரிபொருளில் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருமானத்தைக் கூட்டலாம் .வெளிநாடுகளில் தொலை தூரங்களுக்கு இவ்வாறு தான் இயக்குகிறார்கள் .
- தற்போது வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு இங்கு இயங்கும் ஆம்னி பேருந்துகள் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு 36 இருக்கைகள் கீழ் பகுதியிலும் மேல் பகுதியில் 20 அதிகக் கட்டணமுள்ள படுக்கை வசதிகளையும் கொண்டுள்ளன . அதை இவர்களும் பின்பற்றலாம் .
- டவுன் பஸ்களை மட்டுமே இயக்கும் சென்னை மாநகரப் பேருந்துகள் பகல் இயக்கத்தில் மட்டுமே வருமானத்தைப் பெறுவதால் இரவு இயக்கம் இல்லாமையால் வருமானம் குறைகிறது . விரைவுப் பேருந்துகள் இரவு இயக்கத்தில் மட்டுமே பயணிகள் கூட்டம் இருப்பதால் பகல் இயக்கம் இல்லாமையால் வருமானம் குறைகிறது . மைனசும் மைனசும் சேர்ந்தால் பிளஸ் வருவது போல் இரண்டையும் இணைத்து இயக்கினால் புதியதை விரைவு போக்குவரத்துக் கழகங்களுக்கும் பழைய பேருந்துகளையும் , வயதான diriver conductors களையும் நகரப் பேருந்துகளுக்கும் மாற்றி மனித உழைப்பையும் , இயந்திரங்களின் சக்திகளையும் வீணாக்காமல் லாபத்தையும் அள்ளித் தட்டலாம் . இரண்டையும் இணைப்பது கடினமாக இருந்தால் இவர்களது பழைய பேருந்துகளைக் கொண்டு நகரப் பேருந்து பிரிவு ஒன்று தனியாக உருவாக்கிக் கொள்ளலாம் . கூட்ட நேரத்தில் மற்ற சகோதர போக்குவரத்துக் கழகங்கள் போல் பகல் இரவு தேவைகேற்ப பேருந்துகளின் எண்ணிக்கையும் மாற்றி பயணிகளின் தேவைக் கேற்ப சேவைகளையும் செய்யலாம் .
- இதன் கிளைகள் அனைத்துமே மாவட்ட தலைநகரங்களில் தான உள்ளது அது அனைத்தும் நகரப் பேருந்துகள் அதிகமாக இயங்கக் கூடிய இடங்கள் .அங்கு பகல் நேர நகரப் பேருந்துகளை இயக்க முடியும் . டோல்கேட் சிலவும் இல்லை .
- இவர்களின் செயல்பாடுகள் சென்னையை நம்பியே உள்ளது . மற்ற ஊர்களில் இவர்கள் கவனத்தை திருப்ப வேண்டும் . அப்போது தான் பகல் இயக்கத்தில் வெற்றி காண முடியும் . தென் மாவட்டங்களில் தான் வெற்றி பெற்ற போக்குவரத்துக்கள் உள்ளது . ஜெயிக்கும் இடம் நோக்கி செல்ல வேண்டும் .
- வெளிநாடுகளின் விமான நிலையங்கள் அனைத்திலும் பொது பேருந்து போக்குவரத்து வசதிகள் வைத்துள்ளார்கள் . ஆனால் நம் சென்னை விமான நிலையத்தின் வளாகத்திற்குள் அந்த வசதிகள் கிடையாது . டாக்ஸி கௌண்டர்கள் போல் SETC விமான நிலையத்தில் ஒரு கவுண்டரையும் கண்காணிப்பாளர் ஒருவரையும் நியமித்து பேருந்து நிலையத்தில் இருந்து கிளம்பி விட்ட பேருந்துகளையும் பதிவுகளுக்கு ஏற்ப விமான நிலையத்திற்கு வரச் செய்து பயணிகளை காக்க வைக்காமல் உடனடியாக பயண வசதிகளை செய்தும் அதிக கட்டணம் வசூலித்து முன் வரிசையில் சீட் கொடுத்தும் அவர்கள் வீட்டுக் கருகிலே இறக்கி விட்டும் லக்கேஜுக்கு எடை அளவு நிர்ணயிக்காமலும் , அதை எடுத்து செல்ல ஒருவரை நியமித்தும் ஒரு பயண சீட்டு வாங்கினால் மற்றும் ஒருவர் இலவசம் என்று வியாபார தந்திரங்களைப் பயன்படுத்தி அந்த வருமானத்தையும் அள்ளலாம் . வெளி நாட்டில் இருந்து வரும் விமானங்கள் அனைத்துமே நள்ளிரவில் வரக் கூடியவை. மேலும் அவர்களுக்கென தனி ஆன்லைன் பதிவு முறை ஒன்றையும் துவக்கலாம் . விமானங்கள் காலதாமதமாக வந்தாலும் அந்த பயண சீட்டில் அடுத்து வரும் வண்டிகளில் பயணிக்கலாம் எனும் வசதிகளையும் அவர்களுக்கு அளிக்கலாம் . சேவைகளையும் சிறப்பாக செய்ய முடியும் .
- ஒவ்வொரு நாளும் வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்கள் மூலம் தென் மாநிலங்களுக்கு போகும் பயணிகள் எண்ணிக்கையை விட விரைவுப் பேருந்துகள் அனைத்திலும் பயணிக்கும் மொத்தப் பயணிகளின் எண்ணிக்கை பாதி தான் . விமானப் பயணிகள் அனைவரும் ஊருக்கு செல்ல வேண்டுமானால் 5000 பேருந்துகள் வேண்டும் . ஆங்கிலத்தில் source எனப்படும் பயனாளர்களை உபயோகிக்காமல் விட்டு விட்டார்கள் . அதனால் அவர்கள் 2 முதல் 6 மடங்கு அதிகக் கட்டணம் செலுத்தி வேறு வாகனங்களில் செல்கின்றனர் என்பது ஒரு அதிர்ச்சியான உண்மை . அவர்களைக் கவர இனியாவது கவனம் செலுத்த வேண்டும் .அப்போது தான் லாபம் உயர்ந்து விரைவுப் பேருந்துகளின் எண்ணிக்கை கூடும் .
- ஏனென்றால் ஒரு விமானப் பயணிக்கு வரவேற்க 4 பேர் வருவார்கள் . ஒன்னைக் கவர்ந்தால் 5 லாபம் .கூட்டிக் கழித்துப் பார்த்தால் கணக்கு எங்கோ செல்லும் .
- ஒரு அதிர்ச்சியான உண்மை என்னவென்றால் SETC க்கு விமான நிலைய நிறுத்தமே அதிகாரபூர்வமாக கிடையாது . அவர்கள் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் Stage , Stop ,Time Keeper,and Request Stop எதுவும் கிடையாது . மேலும் அவ்வழியாக செல்லாமல் மேல் பாலத்தின் வழியாக சென்று விடுவார்கள் .அங்கு இறங்க வேண்டுமென்றால நடத்துனரின் தயவு வேண்டும் . இது தமிழகத்தில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் பொருந்தும் . ஆனால் ரயில் நிலையங்கள் எல்லா விமான நிலையங்கள் அருகிலும் உள்ளன .
- பீக் கௌர்ஸ் எனப்படும் நேரங்களில் இயங்காமல் இருக்கும் பேருந்துகளை இயக்க முயற்சி எடுக்க வேண்டும் . உதாரணத்திற்கு சென்னையில் இருந்து திருச்சி தாண்டி 175 கிமீக்குள் செல்லும் பேருந்துகளை சென்னை டிப்போவில் இருந்து இயக்காமல் திருச்சியில் இருந்து இயக்கினால் பகலில் ஒரு நடை திருச்சிக்கு வந்து சென்று விடலாம் . அது மதுரை, சேலம் , தஞ்சை கிளைகளுக்கும் பொருந்தும் . ( Productivity & Probability formulas )
- சகோதர போக்குவரத்து கழகங்களுக்கு நகரப் பேருந்து இயக்கம் ஒரு தொல்லையாக உள்ளது அதை இவர்களின் வெற்றியாகக் கொள்ள முயற்சி எடுக்க வேண்டும் .
- மேலும் மக்கள் அனைவரும் படித்தவர்களாகி விட்டார்கள் . வருமானங்களும் உயர்ந்து விட்டது . வசதிகளை நாடி செல்கிறார்கள் . குளுகுளு வசதிகள் , வீடியோ , ஆடியோ , என பல வகைகளில் எதிர்பார்க்கிறார்கள் . அனைத்தையும் செய்ய முடியாவிட்டாலும் ஒரு FM ரேடியோவையாவது அனைத்து பேருந்துகளில் கட்டாயமாக்கப் பட வேண்டும் . பாட்டும் இசையும் இருக்கும் எனும் நம்பிக்கை பயணிக்கு ஏற்படுத்துதல் வேண்டும் .
- வளர்ந்து வரும் நகரான திருப்பூரை வைத்து கடந்த சில ஆண்டுகளில் 1000 க்கும் மேற்பட்ட புதிய தடங்களில் மற்ற கழகங்கள் பேருந்துகளை இயக்குகின்றனர் . இவர்கள் அதில் கவனம் செலுத்தலாம் .
- அடுத்து சென்னை கோயம்பேட்டில் இருந்து மட்டுமே இயக்குகிறார்கள் . அது சென்னையின் ஒரு மூலை . அடையார் , பாரீஸ் , போன்று மாநகர் பேருந்து நிலையம் இருக்கும் அனைத்து இடங்களிலும் இருந்து இயக்கினால் புதியதாக 40 பேருந்து நிலையங்கள் டிப்போக்களுடன் கிடைக்கும் .
- புதிய தொழில் நுட்பங்களான GPRS , ONLINE , SHOP RESERVATION முறைகளைக் கொண்டு வரலாம் .
- shunting மற்றும் cut services இயக்கலாம்.
- மூட்டைப் பூச்சி spray , Air freshener , வைக்கப் படல் வேண்டும் .
SETC நமக்கு இந்த சேவைகளை செய்யாவிட்டால் என்ன நடக்கும்
- ஆட்டு மந்தை போல் 3+2 சீட் களில் அடைந்து கொண்டு 16 மணி நேரம் படிகளில் தொற்றிக் கொண்டு பயணிக்க வேண்டும் .
- SETC தவிர மற்ற போக்குவரத்துக் கழக தொலை தூரப் பேருந்துகளோ ஆம்னி பஸ்களோ சரியான நேரத்திற்கு கிளம்பியதாக சரித்திரம் இல்லை .
- SETC தவிர வேறு எந்தப் போக்குவரத்துக் கழகங்களிலும் , ஆம்னி பேருந்துகளிலும் உண்மையான முன் பதிவுகள் இல்லை .
- வண்டிகள் வருமா வராதா என்று தெரியாது . மதுரைக்கு என்று ஏற்றுவார்கள் திருச்சியில் இறக்கி விட்டு விடுவார்கள் .
- வெளி மாநிலங்களைப் போல் பயணங்களுக்கு லாரிகளை நாட வேண்டி வரும் .
- பெண்கள் தனியாக செல்ல முடியாது .
- பாதுகாப்பற்ற பயணம் அமையும் .
- ஆகவே நண்பர்களே அரசு விரைவு பேருந்தை பயன் படுத்துவோம் உபயோகிப்போம் காப்போம் .
இது வரை தெரிவித்தது . நாங்கள் கண்டறிந்தது . மக்களுக்கும் , அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் , நிர்வாகத்திற்கும் பல ஆதங்கங்கள் உள்ளன . அவைகளையும் விரிவாக அடுத்த இதழில் தெரிவிக்கிறோம் . உங்களுக்கும் ஏதேனும் தெரிவிக்க வேண்டியவைகள் இருந்தால் எங்களுக்கு கடிதம் எழுதுங்கள் . நன்றி . காக்கும் முயற்சிகள் தொடரும் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக