புதன், 31 டிசம்பர், 2014

நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் செடி



வீட்டிலேயே வளர்க்கக் கூடிய சில குறுஞ்செடிகளில் காற்றில் உள்ள நச்சுக்களைச் சுத்தப்படுத்தும் குணம் நிரம்பி இருக்கிறது என்று நாசா விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி கூறுகிறது.
தமிழ்நாட்டுச் சீதோஷ்ண நிலையில் வாழும் தன்மையையும், அதிக நன்மைகளையும் கொடுக்கும் இந்தச் செடிகளைப் பற்றிய அறிமுகம் இதோ...!!
கற்றாழை (AloeVera): 
-----------------------------
மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள கற்றாழை, காற்றில் உள்ள ஃபார்மால்டிஹைட் என்னும் வேதிப் பொருளை நீக்கும். சருமத் தீப்புண்களுக்கும் மருந்தாகப் பயன்படும்!
சீமை ஆல் (Rubber plant):
----------------------------------
வெயில் படாத இடங்களில்கூட வாழும் தன்மை கொண்டவை. அதிகமாக அசுத்தக் காற்றை உள்ளிழுத்து அதிகப்படியான ஆக்சிஜனை வெளியிடும்.
வெள்ளால் (Weeping Fig):
-------------------------------------
காற்றின் நச்சுக்களை நீக்கி சுற்றுப்புறத்தின் ஆக்சிஜன் அளவை அதிகப்படுத்தும். www.purdsifm.com
மலைப் பனை (Bamboo Palm) :
---------------------------------------------
காற்றில் கலந்துள்ள ஃபார்மால்டிஹைட் நச்சுக்களை நீக்குவதோடு இயற்கையான ஈரப்பதனியாகச் செயல்படும்.
ஸ்னேக் பிளான்ட் (snake-plant):
----------------------------------------------
நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் ஃபார்மால்டிஹைடைக் கிரகித்து ஆக்சிஜனை வெளிப்படுத்தும். வறண்ட
சூழ்நிலைகளில்கூட வாழும் தன்மை கொண்டவை.
கோல்டன் போட்டோஸ் (golden pothos):
-------------------------------------------------------
நாசா விஞ்ஞானிகளின் அறிக்கைப்படி காற்றைச் சுத்தப்படுத்தும் தாவரங்களின் பட்டியலில் மூன்றாம் இடம் பிடித்திருக்கும் இந்தச் செடி, கார்பன் மோனாக்சைடு வாயுவை உறிஞ்சிக்கொண்டு காற்றின் அளவை அதிகரிக்கச் செய்யும்.
வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம். முடியாத பட்சத்தில், இப்படிப்பட்ட செடிகளையேனும் வளர்ப்போமே..! 

சனி, 27 டிசம்பர், 2014

ஆண்ட்ராய்டில் போனில் தமிழ் - எழுத & படிக்க


ஆண்ட்ராய்டில் போனில் தமிழ் - எழுத & படிக்க
ஆண்ட்ராய்ட் (Android) - கூகுள் நிறுவனத்தின் வெற்றி தயாரிப்புகளில் ஒன்றான மொபைல் மற்றும் டேப்லட்களுக்கான இயங்குதளம். ஐபோன் தொழில்நுட்பத்தை காப்பி அடிப்பதாக விமர்சிக்கபட்டாலும் தொடர்ந்து முன்னேறிக் கொண்டு தான் இருக்கிறது. அதற்க்கு முக்கிய காரணம் பல மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றுவதும், குறைந்த விலையிலேயே கிடைப்பதும் தான்.
இந்தியாவிலும் ஆண்ட்ராய்ட் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் தமிழ் தெரிந்தவர்களுக்கான முக்கிய தேவை "ஆண்ட்ராய்டில் தமிழில் எழுதுவதும், தமிழ் எழுத்துக்களை படிப்பதும்" தான்.

ஆண்ட்ராய்டில் தமிழ் படிக்க:
ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் (Android 4.0 IceCream Sandwich) பதிப்பிலிருந்து தமிழ் எழுத்துக்களைமொபைலில் எந்த மாற்றமும் செய்யாமலேயே படிக்கலாம்.
அதற்கு முந்தைய பதிப்பான Gingerbread 2.3.6-ஆக இருந்தால், ப்ரவ்சர் Setting பகுதியில் Language என்ற இடத்தில் "Auto-Detect" என்று மாற்றினால் ப்ரவ்சரில் மட்டும் தமிழ் தளங்களை படிக்கலாம்.
ஆண்ட்ராய்ட் எந்த பதிப்பாக இருந்தாலும் Opera Mini உலவியில் தமிழ் எழுத்துக்களை படிக்கலாம். அதற்கு நீங்கள் பின்வரும் மாற்றத்தை செய்ய வேண்டும்.
Opera Mini உலவிக்கு சென்று about:config என்று டைப் செய்து Go என்பதை க்ளிக் செய்யுங்கள்.
அங்கு Use bitmap fonts for complex scripts என்ற இடத்தில் Yes என்பதை தேர்வு செய்து Save என்ற பட்டனை க்ளிக் செய்யுங்கள். பிறகு தமிழ் தளங்களை பார்க்கலாம்.
கவனிக்க: ஆண்ட்ராய்ட் ஐஸ்க்ரீம் சான்ட்விச் பதிப்பாக இருந்தாலும் பேஸ்புக் உள்ளிட்ட சில அப்ளிகேசன்களில் தமிழ் சரியாக தெரியாமல் இருக்கலாம். அதற்கு அந்த அப்ளிகேசன் தான் காரணம். அதை நம்மால் சரி செய்ய இயலாது.
ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத:
ஆண்ட்ராய்டில் தமிழில் எழுத பல அப்ளிகேசன்கள் இருக்கின்றன. அவற்றில் சில,
Tamil Unicode Keyboard (KM Tamil என்பது இன்னொரு பெயர்) (இது தான் நான் பயன்படுத்துகிறேன்)
Tamilvisai
இன்னும் நிறைய அப்ளிகேசன்கள் இருக்கின்றன. ஆனால் அவைகள் பாதுகாப்பானவைகள் அல்ல. காரணம் மேலே சொன்ன இரண்டு அப்ளிகேசன்களையும் பயன்படுத்த எந்த அனுமதியும் (Permission) கேட்காது. ஆனால் மற்ற அப்ளிகேசன்கள் தேவையில்லாமல் பல அனுமதிகள் நம்மிடம் கேட்கும்.
இந்த அப்ளிகேஷனை நிறுவிய பிறகு, ஆண்ட்ராய்டில் Settings => Language & input பகுதிக்கு சென்று, அங்கே Keyboard & input methods என்ற இடத்தில் இந்த அப்ளிகேஷனை டிக் செய்ய வேண்டும்.
பிறகு மொபைலில் நீங்கள் எழுதும் போது திரையின் மேலே Select Input என்று இருப்பதை கீழே Swipe செய்து அதில் நீங்கள் நிறுவியுள்ள அப்ளிகேஷனை தேர்வு செய்ய வேண்டும்.
மீண்டும் இது போன்றே மொபைல் கீபோர்டுக்கு மாறிக்கொள்ளலாம்.
கவனிக்க: இன்டர்நெட் இணைப்பின் அனுமதி கேட்கும் தட்டச்சு அப்ளிகேசன்களால் நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்களை சேகரிக்க முடியும்.

வெள்ளி, 26 டிசம்பர், 2014

tamilnadu வட்டாட்சியர் (தாசில்தார் ) cell nos




உங்கள் தாலுக்காவின் வட்டாட்சியர் (தாசில்தார் )செல் எண்

1 சென்னை மாவட்டம்
1 Fort-Tondiarpet 94450 00484
2 Purasawakkam-Perambur 94450 00485
3 Egmore-Nungambakkam94450 00486
4 Mylapore-Triplicane 94450 00487
5 Mambalam-Guindy 94450 00488

2 திருவள்ளூர் மாவட்டம்

6 Ambattur 94450 00489
7 Ponneri 94450 00490
8 Gummudipoondi 94450 00491
9 Thiruthani 94450 00492
10 Pallipattu 94450 00493
11 Thiruvallur 94450 00494
12 Uthukottai 94450 00495
13 Poonamallee 94450 00496

3 காஞ்சிபுரம் மாவட்டம் Kancheepuram

14 Kancheepuram 94450 00497
15 Uthiramerur 94450 00498
16 Sriperumbudur 94450 00499
17 Chengalpattu 94450 00500
18 Thirkkalukunram 94450 00501
19 Tambaram 94450 00502
20 Madurantakam 94450 00503
21 Cheyyur 94450 00504

4 வேலூர் மாவட்டம் Vellore

22 Arcot 94450 00505
23 Valaja 94450 00506
24 Arakkonam 94450 00507
25 Vellore 94450 00508
26 Gudiyatham 94450 00509
27 Katpadi 94450 00510
28 Tirupathur 94450 00511
29 Vaniyampadi 94450 00512

5 திருவண்ணாமலை மாவட்டம் Thiruvannamalai

30 Cheyyar 94450 00513
31 Vandavasi 94450 00514
32 Arni 94450 00515
33 Thiruvannamalai 94450 00516
34 Polur 94450 00517
35 Chengam 94450 00518

6 விழுப்புரம் மாவட்டம் Villupuram

36 Kallakurichi 94450 00519
37 Sankarapuram 94450 00520
38 Thirukkoilur 94450 00521
39 Ulundurpettai 94450 00522
40 Thindivanam 94450 00523
41 Chengee 94450 00524
42 Villupuram 94450 00525
43 Vanur 94450 00526

7 கடலூர் மாவட்டம் Cuddalore

44 Chidambaram 94450 00527
45 Kattumannarkoil 94450 00528
46 Cuddalore 94450 00529
47 Panruti 94450 00530
48 Virudhachalam 94450 00531
49 Tittakudi 94450 00532

8 தருமபுரி மாவட்டம் Dharmapuri

50 Dharmapuri 94450 00533
51 Harur 94450 00534
52 Pappireddipatti 94450 00535
53 Pennagaram 94450 00536
54 Palacode 94450 00537

9 கிருஷ்னகிரி மாவட்டம் Krishnagiri

202 Krishnagiri 94450 00538
203 Uthangarai 94450 00539
204 Pochampalli 94450 00540
205 Hosur 94450 00541
206 Denkanikottai 94450 00542

10 நாமக்கல் மாவட்டம் Namakkal

64 Namakkal 94450 00543
65 Rasipuram 94450 00544
66 Thiruchengode 94450 00545
67 Paramathi-Velur 94450 00546

11 சேலம் மாவட்டம் Salem

55 Salem 94450 00547
56 Yercaud 94450 00548
57 Valaappadi 94450 00549
58 Attur 94450 00550
59 Gangavalli 94450 00551
60 Mettur 94450 00552
61 Omalur 94450 00553
62 Sankari 94450 00554
63 Edappadi 94450 00556

12 நீலகிரி மாவட்டம் The Nilgiris

84 Gudalur 94450 00557
85 Pandalur 94450 00558
86 Uthagamandalam 94450 00559
87 Kuntha 94450 00560
88 Kothagiri 94450 00561
89 Coonoor 94450 00562

13 ஈரோடு மாவட்டம் Erode

77 Erode 94450 00563
78 Perundurai 94450 00564
79 Dharapuram 94450 00565
80 Kangeyam 94450 00566
81 Bhavani 94450 00567
82 Gobichettiapalayam 94450 00568
83 Sathyamangalam 94450 00569

14 கோவை மாவட்டம் Coimbatore

68 Coimbatore(South) 94450 00570
69 Coimbatore(North) 94450 00571
70 Mettupalayam 94450 00572
71 Palladam 94450 00573
72 Thirupur 94450 00574
73 Avinashi 94450 00575
74 Pollachi 94450 00576
75 Valparai 94450 00577
76 Udumalaipettai 94450 00578

15 திண்டுக்கல் மாவட்டம் Dindigul

90 Dindigul 94450 00579
91 Natham 94450 00580
92 Nilakottai 94450 00581
93 Palani 94450 00582
94 Oddanchatram 94450 00583
95 Vedasedur 94450 00584
96 Kodaikanal 94450 00585
16 Madurai 102 Madurai(North) 94450 00586
103 Madurai(South) 94450 00587
104 Melur 94450 00588
105 Vadipatti 94450 00589
106 Usilampatti 94450 00590
107 Thirumangalam 94450 00591
108 Peraiyur 94450 00592

17 தேனி மாவட்டம் Theni

97 Periakulam 94450 00593
98 Theni 94450 00594
99 Andipatti 94450 00595
100 Uthamapalayam 94450 00596
101 Bodinayakanur 94450 00597
18 Karur 109 Karur 94450 00598
110 Aravakurichi 94450 00599
111 Kulithalai 94450 00600
112 Krishnarayapuram 94450 00601

19 திருச்சி மாவட்டம் Tiruchirapalli

119 Tiruchirappalli 94450 00602
120 Srirangam 94450 00603
121 Manapparai 94450 00604
122 Lalgudi 94450 00605
123 Manachanallur 94450 00606
124 Musiri 94450 00607
125 Thottiam 94450 00608
126 Thuraiyur 94450 00609

20 பெரம்பலூர் மாவட்டம் Perambalur

113 Perambalur 94450 00610
114 Veppanthattai 94450 00611
115 Kunnam 94450 00612
116 Ariyalur 94450 00613
117 Udayarpalayam 94450 00614
118 Senthurai 94450 00615

21 நாகப்பட்டம் மாவட்டம் Nagapattinam

127 Nagapattinam 94450 00616
128 Vedaranyam 94450 00617
129 Keelvelur 94450 00618
130 Thirukkuvalai 94450 00619
131 Mayiladuthurai 94450 00620
132 Tharangampadi 94450 00621
133 Seerkazhi 94450 00622

22 திருவாரூர் மாவட்டம் Tiruvarur

134 Mannargudi 94450 00623
135 Needamangalam 94450 00624
136 Thiruthuraipoondi 94450 00625
137 Thiruvarur 94450 00626
138 Nannilam 94450 00627
139 Kodavasal 94450 00628
140 Valangaiman 94450 00629

23 தஞ்சை மாவட்டம் Thanjavur

141 Thanjavur 94450 00630
142 Thiruvaiyaru 94450 00631
143 Orathanadu 94450 00632
144 Kumbakonam 94450 00633
145 Thiruvidaimaruthur 94450 00634
146 Papanasam 94450 00635
147 Pattukottai 94450 00636
148 Peravoorni 94450 00637

24 புதுக்கோட்டை மாவட்டம் Pudukkottai

149 Kolathur 94450 00638
150 Elluppur 94450 00639
151 Alangudi 94450 00640
152 Pudukkottai 94450 00641
153 Gandarvakottai 94450 00642
154 Thirumayam 94450 00643
155 Aranthangi 94450 00644
156 Avudaiyarkoil 94450 00645
157 Manamelkudi 94450 00646

25 சிவகங்கை மாவட்டம் Sivagangai

158 Thirupathur 94450 00647
159 Karaikudi 94450 00648
160 Devakottai 94450 00649
161 Sivagangai 94450 00650
162 Manamadurai 94450 00651
163 Ilayankudi 94450 00652

26 ராமநாதபுரன் மாவட்டம் Ramanathapuram

164 Ramanathapuram 94450 00653
165 Rameswaram 94450 00654
166 Thiruvadanai 94450 00655
167 Madukalathur 94450 00656
168 Kamudhi 94450 00657
169 Paramakudi 94450 00658
170 Kadaladi 94450 00659

27 விருதுநகர் மாவட்டம் Virudhunagar

171 Srivilliputhur 94450 00660
172 Rajapalayam 94450 00661
173 Sathur 94450 00662
174 Sivakasi 94450 00663
175 Aruppukkottai 94450 00664
176 Kaariapatti 94450 00665
177 Virudhunagar 94450 00667
178 Thiruchuli 94450 00668

28 திருநெல்வேலி மாவட்டம் Tirunelveli

187 Palayamkottai 94450 00669
188 Sakarankoil 94450 00670
189 Tirunelveli 94450 00671
190 Ambasamudram 94450 00672
191 Nanguneri 94450 00673
192 Radhapuram 94450 00674
193 Thenkasi 94450 00675
194 Shenkottai 94450 00676
195 Veerakeralampudur 94450 00677
196 Aaangulam 94450 00678
197 Sivagiri 94450 00679

29 தூத்துக்குடி மாவட்டம் Thoothukudi

179 Thoothukudi 94450 00680
180 Srivaikuntam 94450 00681
181 Thiruchendue 94450 00682
182 Sathankulam 94450 00683
183 Koilpatti 94450 00684
184 Ottapidaram 94450 00685
185 Vilathikulam 94450 00686
186 Ettaiyapuram 94450 00687

30 கன்னியாகுமரி மாவட்டம் Kanniyakumari

198 Thovalai 94450 00688
199 Agastheeswaram 94450 00689
200 Kalkulam 94450 00690
201 Vilavancode 94450 00691

வியாழன், 25 டிசம்பர், 2014

நம்பக்கூடிய 7 அதிசய உண்மைகள்





நம்பக்கூடிய 7 அதிசய உண்மைகள்....!

1. வைரம் ...!

வைரம் என்பது மிக உயர்ந்த விலையுள்ள ஆபரணம் ஆகும் . இது எங்கிருந்து கிடைக்கிறது என்று தெரியுமா. ஆம் பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்து தான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது. ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தைனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் 2 மையில் தொலைவில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள். ஆனால் பூமிக்கு அடியில் 90 மையில் தொலைவில் தான் இந்த வைரம் இருக்கும். 2 மையில் தெலைவில் வெறும் நிலக்கரி மட்டுதான் கிடைக்கும்.

2. வௌவால்

வௌவால் ஒரு வித்தியாசமான உயிரினம் இவைகளுக்கு கண்கள் இல்லை என்பது உண்மைதான் . ஆனால் இந்த உரினத்தால் பார்க்கவும் முடியும் . இவைகள் தங்கள் மீஒலி எனப்படும் சத்தத்தை எழுப்பி அதன் மூலம் தனக்கு எதிரில் என்ன பொருள்கள் இருக்கின்றது என்பதை உணர்ந்து கொள்ளும் தன்மை கொண்டது.

3.எம்பயர் ஸ்டேட்

எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தைப் பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கும். பலர் கூறுவது என்னவென்றால் இந்த கட்டிடத்தின் உயரத்திலிருந்து ஒரு நாணயத்தை ஒருவர் மீது எரிந்தால் அந்த நாணயம் அவரை கொன்றுவிடும் என்பதாகும். ஆனால் இது தவறான கூற்று ஏனெனில் கட்டிடத்தின் உயரத்திலிருந்து விழும் நாணயத்தின் வேகத்தின் அளவானது 1 மணி நேரத்திற்க்கு 50 மைல் தொலைவு என்ற வேகத்தில் தான் விழும் . அதானல் இந்த வேகத்தினால் ஒருவரை கொல்ல முடியாது.

4.சுத்தமான தண்ணீர்

சுத்தமான தண்ணீரில் அவ்வளவாக மின்சாரம்பாயாது . ஆனால் தண்ணீரில் நின்று மின்சாரக் கம்பியய் பிடித்தால் மின்சாரம் பய்கிறதே அது ஏன் என்று கேட்க்கலாம். பொதுவாக தண்ணீரில் பல வகையான மினரல்கள் மற்றும் அழுக்குகள் படிந்திருப்பதால் அதில் மின்சாரம் பாய்கிறது. ஆனால் சுத்தமான நீரில் இப்படிப்பட்ட தாதுக்கள் இல்லாதிருப்பதால் மின்சாரம் பாய்வதில்லை.

5 மருக்கள்

மனிதனின் மருக்கள் உருவாகக் காரணம் தவளைகள் மற்றும் தேரைகள் என்று பலரும் கருதுகின்றனர் இது தவறான கூற்றாகும். இதற்க்கு காரணம் தேரைகள் அல்ல மனிதர்கள் தான் மருக்கள் இருக்கின்ற ஒருவரிடம் கைகளைக் குலுக்கினால் இவ்வாறான மருக்கள் தோன்றும் என்று அறிவியல் அறிஞர்கள் பலர் கூறியுள்ளார்கள்.

6. தீக்கோழி

தீக்கோழியை யாராவது அச்சுறுத்தினால் அவற்றின் தலையை மணலில் புதைத்துக்கொள்ளும் என்று சிலர் கூறுவார்கள். ஆனால் அவற்றினை அச்சுறுத்தினால் அவைகள் இறந்தவைகளைப் போல செயல்பட்டு தப்பிக்க முயலுமாம்.

7.மனித இரத்தம்.

மனிதன் இறந்த பின்பு மனித இரத்தம் பார்ப்பதற்க்கு நீலமாகவோ அல்ல அடர்ந்த சிவப்பு நிறமாகவோ இருக்காது. ஆனால் தோலின் வழியாக பார்த்தால் இரத்தமானது எப்பொழுதும் நீல நிறமாகவே காட்சியளிக்கும்

இலவச போன்



நண்பர்கள் உங்கள் போனிலிருந்தே எந்த நம்பருக்கும்
இலவசமாக போன் செய்யலாம்...!!
இன்டர்நெட் தேவையில்லை......!!
சில நேரங்களில் முக்கியமான நபர்களுக்கு நாம் போன்
செய்ய வேண்டியிருக்கும். ஆனால் நமது போனில் பேலன்ஸ் இருக்காது. ஆள்பேர் இல்லாத இடத்தில் மாட்டிக்கொண்டிருப்போம்.
இன்டர்நெட் வசதியும் இருக்காது. போன் செய்ய முடியாமல் போய், நமக்கு அதனால் இழப்பு ஏற்படும் இல்லை எனில் யாரிடமாவது திட்டு வாங்குவோம்.
இனி அந்த நிலை ஏற்படாது. பெங்களுரை சேர்ந்த 3 மாணவர்கள் சேர்ந்து FREEKALL என்ற சேவை அறிமுகம் செய்துள்ளனர்.
இதன் மூலம் நமது போனிலிருந்தே இலவசமாக கால் செய்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட் தேவையில்லை. சாதாரண black & white Nokia போன்போதும். ஐபோன் (iphone) முதல் சாதாரண சைனாபோன் வரை அனைத்திலும் இது வேலை செய்யும்.
ஆச்சரியமாக உள்ளதா ஆம் இது உண்மைதான்!. இந்த சேவையை பயன்படுத்தி எப்படி இலவசமாக போன் செய்வது என்பதை பார்ப்போம்.
முதலில் நாம் நமது போனில் இருந்து ”1800 108 4444” என்ற
Toll Free நம்பருக்கு போன் செய்யவேண்டும் (இந்திய எண்ணிலிருந்து). இதற்கு நமது போனில் பேலன்ஸ் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படியே பேலன்ஸ் இருந்தாலும் பணம் எடுக்கப்பட மாட்டாது. நாம் இந்த நம்பருக்கு கால் செய்ததும் கால் தானாக கட் ஆகிவிடும்.
கட் ஆன அடுத்த நொடியில் ”8067915000” என்ற எண்ணில் இருந்து நமது போனிற்கு (mobile) கால் வரும்.
அதை நாம் attend செய்து நாம் யாருக்கு போன் செய்ய வேண்டுமோ அவர்களது நம்பரை ( phone number) dial செய்து அவர்களுடன் இலவசமாக பேசிக்கொல்லாம்.
வித்தியாசமான சேவைாக இருக்கின்றதல்லவா? ஆம் இந்த சேவையை கடந்த மார்ச் மாதம்தான் பெங்களுர் மாணவர்கள் ஆரம்பித்துள்ளார்கள்..
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த தகவலை share செய்யுங்கள்.
பின்வரும் FREEKALL சேவை இணைய தளத்திற்கு சென்று உங்கள் மொபைல் நம்பரை பதிவு செய்து கொண்டு நீங்கள் இந்தியாவில் உள்ள யாருக்கு வேண்டுமானாலும் இலவசமாக போன் செய்யலாம்.
DND நம்பர்களுக்கும் இது வேலை செய்யும்.
ஆங்கிலத்தில் சுருக்கமாக:
One can make the use of this service by following way:
1. Call at 1800 108 4444 after which the call will drop.
2. You will receive a call on your number from
08067915000.
fcall போன்ற இணையதளங்கள் இந்திய எண்களுக்கு இவலசமாக போன் செய்யும் வதியை தந்தாலும் அவைகளை பயன்படுத்த நமக்கு இன்டர்நெட் தேவைப்படும்.
மேலும் அவை DND நம்பர்களுக்கு வேலை செய்யாது.
ஆனால் freeKall இதிலிருந்து முற்றிலும் மாறுப்பட்டது
மிக எளிதானது என்பது குறிப்பிடதக்கது.
இதை உருவாக்கிய பெங்களுர் மாணவர்களை பாராட்டியே ஆகவேண்டும்
இப்பொழுதே பயன்படுத்தி பயன் அடையுங்கள்.

புதன், 24 டிசம்பர், 2014

எல்லோருக்கும் பென்ஷன்




details con : mypension@tnweb.in
*அரசு ஊழியர்களுக்கு மட்டுமா பென்ஷன் திட்டம்?
இல்லை ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வந்தாச்சு..
இந்திய அரசின் நேஷனல் பென்ஷன் திட்டம்!...
*கீழ்நிலை / ஏழை வர்க்கத்தினர், பணம் சேமிக்க NPS-LITE திட்டம் மிகவும்
பயனுள்ள திட்டம்...
*18 முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடி மக்கள் NPS-LITE கணக்கை தொடங்கலாம்.
*மாதம் ரூ. 100/- முதல் ரூ. 1000/- வரை தங்கள் விருப்பம் போல் செலுத்தலாம்.
ஆண்டுக்கு நீங்கள் ரூ.1000/- முதலீடு செய்தால் இந்திய அரசும் ரூ.1000/-
செலுத்தும்.
*ஆண்டுக்கு நீங்கள் ரூ.1000/- முதல் ரூ.12,000/- வரை முதலீடு செய்தால் அரசின்
ஸ்வாலம்பன் ( SWAVALAMBAN ) கிடைக்கும்.
*ஓய்வு பெறும் 60 வயதிற்கு பிறகு முதிர்வு தொகையில் இருந்து 60% வரை பணத்தை
திரும்ப பெறலாம். மீதமுள்ள தொகையிலிருந்து மாத ஓய்வூதியம் ( பென்சன் )
கிடைக்கும்.
*முதிர்வு தொகைக்கு 80CCD-ன் கீழ் வருமான வரி சலுகை உண்டு. NPS-இல் NRI-க்கள்
மற்றும் PPF சந்தாதாரர்களும் முதலீடு செய்யலாம்.
*PRANகார்டை பெற 2 புகைப்படம், கையொப்பமிட்ட அடையாள ஆதாரம் இரண்டு ஜெராக்ஸ்
பிரதிகள் மற்றும் முகவரி சான்று ஆகியவை தேவைப்படும்.
*விண்ணப்பம் கருப்பு மையால் மட்டுமே நிரப்பப்பட வேண்டும்.
*சந்தாதாரருக்கு தனிப்பட்ட PRAN கார்டு 45 நாள் முதல் 60 நாட்களுக்குள் தங்கள்
இருப்பிடத்திற்கே அரசு தபாலில் வரும்.
*NPS - LITE உறுப்பினர் இந்தியாவின் எந்த இடத்திலிருந்தும் தாங்களே நேரடியாக
வங்கியில் பணம் செலுத்து வசதி.
*இந்த நிதியை மேலாண்மை செய்வோர் PFM பென்சன் பண்ட் மேனஜர் -பண்ட் ஒதுக்கீடு
85% அரசாங்க பாண்டுகள் 15% ஈக்விட்டி
*இந்த திட்டம் இந்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் PFRDA ( PENSION
FUND REGULATORY DEVELOPMENT AUTHORITY ) கட்டுப்பாட்டில் உள்ளது.

திங்கள், 22 டிசம்பர், 2014

FIR - How To Write



காவல் நிலையத்தில் புகார் – குற்ற விசாரணையின் முதல் படி!
==========================
ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணையின் துவக்கப்புள்ளியாகும்.


சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ்வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாகவே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை அதிகாரிகள் ஆர்வம் காட்டுவது இல்லை.
எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர் அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலாம்.
புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிடம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதாவது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம்.
புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனுவை எந்த காவல்நிலையத்தில் பதிவு செய்கிறோமோ அந்த காவல்நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வேண்டும். காவல் நிலையத்தில் பல படிநிலைகளில் அதிகாரிகள் இருந்தாலும், குற்ற நிகழ்வுகளில் காவல்நிலையத்தில் பணியாற்றும் காவல்துறை ஆய்வாளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டுமே அந்த புகாரை பரிசீலித்து முதல் தகவல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந்தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுகலாம். அதை பிறகு பார்ப்போம்)
குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வு குறித்த முழுமையான விவரங்கள் புகாரில் இடம் பெற வேண்டும். எதிரி மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டியிருந்தால் அதை குறிப்பிடுவது நல்லது. அதேபோல கொலை மிரட்டலோ வேறுவகை மிரட்டலோ விடுத்திருந்தாலும் அதையும் புகாரில் தெரிவிப்பது நல்லது. தாக்குதல் நடந்திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்பதையும் புகாரில் கூற வேண்டும். திருட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந்தால் இழப்புகள் குறித்த முழு விவரங்களும் அளிக்கப்படவேண்டும்.
இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். நமக்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்களுடைய பெயர், முகவரியோடு குறிப்பிட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடிய நபர்களை “பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்” என்று தெளிவாக குறிப்பிட வேண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடையாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.
தாக்குதல் போன்ற சம்பவங்களில் காவல் நிலையத்தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம் பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதும் முக்கியம். எனவே அவர்களை தாமதிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல்நிலையம் சென்று புகார் அளிக்கலாம்.
காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகாரில் கூறப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையான தகவல்களை தருவது நல்லது.
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற்கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.
இவ்வாறு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்படும் புகார்களை விசாரித்து தகுதியுடைய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கிறது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. கவனியுங்கள், சமூக சேவை பதிவேடு. ஆனால் எத்தனை காவல் அதிகாரிகள் இதை சமூக சேவை ஆக செய்கிறார்கள்? பாமரன் ஒருவன் புகார் கொடுக்க வரும்போது அவனுக்கு காவல் நிலையத்தில் கிடைக்கும் மரியாதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவில்லை என்றாலும் பல நேர்வுகளில் நீதிமன்றம் இரசீது தரும் நடைமுறையை ஏற்றுக் கொள்கிறது.
புகார் என்பது குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவரோ, அவருடைய பிரதிநிதியோ அளிக்கும் தகவல் மட்டுமே. அந்த தகவல்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை விசாரித்து வெளிக்கொணரவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் காவல்துறையில், காவல்துறை அதிகாரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நன்மை செய்யும் புகார்களைத் தவிர வேறு புகார்களை ஏற்க மறுக்கும் நிலையே நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தங்கள் காவல் நிலைய எல்லைக்குள் குறிப்பிட்ட குற்ற நிகழ்வு நடக்கவில்லை என்பது போன்ற புறக்கணிக்கத்தக்க காரணங்களைக் கூறி புகார்களை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது.

ஞாயிறு, 21 டிசம்பர், 2014

உறுப்பினர்களை கோடீஸ்வரர்களாக்கும் மகளிர் குழுக்கள்




பெண் வளர்ச்சியடைந்தால் தான் குடும்பங்களும் , கிராமங்களும் , நாடும் முன்னேறும் .
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் , தன்னம்பிக்கையுடன் வாழவும் , படிக்காவிட்டாலும் பொருளாதரத்தில் முன்னேறவும் , மேலும் கந்து வட்டி வாங்கி குடும்பம் நடத்த சிரமப்படும் பெண்களுக்காக எவ்வித தகுதியும் கேட்காமல் , கியாரண்டி இல்லாமல் , தொழில் பயிற்சியும் அளித்து தொழில் துவங்கி தொழிலதிபர்களாக்கி அவர்களை கோடீஸ்வரர்களாக ஆக்குவதற்காக தமிழக அரசால் தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் துவக்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் .

முதன் முதலாக இக்குழுக்கள் 1989 ஆம் ஆண்டு ,10 முதல் 200 பெண்கள் வரை ஒரு குழுவாக இணைந்து   சட்டப்படி பதிவு செய்யாமல்  ,  அனைத்து தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளும் எவ்வித கியாரண்டியும் கேட்காமல் அவர்களுக்கு கடன் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப்பட்டது .




இவர்களுக்கான தகுதிகள் ஒரே பகுதியை , கிராமத்தை சேர்ந்த  18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் . இதில் விவசாயிகளாக இருந்தால அவர்கள் குழுக்களுக்கு இஞ்சி , மஞ்சள் குழு என்று பெயர் .


இவர்களின் குறிக்கோள்


 பெண்களின் சமூக பொருளாதார அந்தஸ்தை உயர்த்தவும் , சிறு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் , வங்கி மற்றும் நிதி நிறுவனங்களோடு இணைந்து கடன்களைப் பெற்றுத் தரவும் , பெண்களுக்கு கல்வி அறிவு , புதிய தொழில் நுட்பம் ,விழிப்புணர்வு ,புதிய தொழிலை தொடங்கவும் தருவதே இக்குழுக்களின் குறிக்கோளாகும் .  


சுய உதவிக் குழுக்கள்  ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது . ஆனால் பெண்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கும் . இவர்கள் இவர்களுக்குள் தலைவர் , பொருளாளர் , செயலாளர் எனத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் .இவர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 1.வருகைப் பதிவேடு , 2. பதிவு பதிவேடுகள் ( தீர்மானங்கள் ) , 3. சேமிப்பு பதிவேடுகள் , 4. வரவு கணக்கு பதிவேடு , 5. தனி நபர்களின் வங்கி புத்தகங்கள் . இவைகளை நடைமுறைப் படுத்திய பின் இரண்டு மாதங்களுக்குள் வங்கியில் கடன் பெறலாம் . வங்கிக் கணக்கில் குழுக்களின் வலிமையை அதிக முதலீடு அவர்களிடம் இருந்து எதிர்பார்க்காமல் அவர்களின் தினசரி சேமிப்புகளை வைத்து வங்கிகள்  முடிவு செய்கின்றது . மேலும் 6 மாதங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு சுழல் நிதியும் , ஒரு வருடத்திற்கு பின் தொழில் கடனும் வழங்கப் படும் ..அரசு சாரா நிறுவனங்களும் இதற்கு உதவிகளும் செய்கின்றன . மகளிர் திட்டங்களுக்கு அம் மாவட்ட ஊரக மேம்பாட்டு துறை இலவசமாக சேவைகளையும் செய்கிறது .


இவர்கள் செய்யும் பொருட்களுக்கு விற்பனை செய்ய அரசு விற்பனை வளாகங்களையும் அமைத்துள்ளது ( பூமாலை வணிக வளாகம் )


வங்கியில் கடன் வாங்க குழுவின் விதிமுறை பதிவேடுகள்  , நிர்வாகிகள் மூவரின் போட்டோ , ரப்பர் ஸ்டாம்ப் இவைகளைக் கொடுத்து கணக்கு ஆரம்பிக்க வேண்டும் . 


இவர்களுக்கு மத்திய அரசு 1986 ஆம் ஆண்டு முதல் மானியங்களையும் வழங்கி வருகிறது .தமிழக அரசு மானியங்களைப் பெற  சில பயிற்சிகளையும் செய்து முடிக்க வேண்டும் .அப்போது தான் கிடைக்கும்  அவைகள் மகளிர் முன்னேற்றக் குழுவும் தன்னார்வ தொண்டு மையத்தால் ஒவ்வொன்றிர்கும் 6 நாட்கள் எனக் கணக்கு வைத்து ஊக்குனர்கள் , பிரதிநிதிகள் , உறுப்பினர்கள் , கூட்டமைப்பு , தொழில் முனைவோர் , நிலைத்த  தன்மை  எனப் பயிற்சி கள் அளிக்கின்றன .அவைகளை தேர்ந்து இருந்தால் அரசு அதற்கு ஊக்கத் தொகையாக லட்சத்திற்கு மேலாகவும் , வட்டி மான்யங்களும் அளித்து வருகின்றன . அதற்கு மட்டும் அரசின் சங்க சட்டத்தின் கீழ் உங்களது குழு பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும் . தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருந்தால் ஊக்கத்தொகை ஒரு லட்சம் கிடைக்கும் .


இதுவல்லாமல் இவர்களுக்கு 1999 முதல் பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம் கீழ் சுழல் நிதி 15,000 மும் ,மான்யம் 10,000 முதல் 1 லட்சத்தி இருபத்தி ஐயாயிரம் வரை வழங்கப் படுகிறது .


இவர்களுக்கு கொடுக்கப்படும் கடன்கள் 

 1. நேரடி வங்கிக் கடன் - இதற்கு மானியம் கிடையாது .
2.சுழல் நிதி - முதல் கட்டத் தேர்வில் தகுயடைந்த பின் ரூபாய் 60 ஆயிரமும் மானியம் 15 ஆயிரமும் வழங்கப் படுகிறது .
3. பொருளாதாரக் கடன் - இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்வடைந்த பின் S.G.S.Y திட்டத்தின் கீழ் 5 லட்சம் தொழில் கடனாகவும் , மானியம் 1.25 லட்சமும் வழங்கப் படுகிறது .

இவர்களுக்காக கணினி , கட்டுமான பணிகள் , உணவு தயாரிப்பு , செவிலியர் , இலகு மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுனர் ,தீ பாதுகாப்பு மேலாண்மை , தொழில் பிரிவு , மற்றும் அலுவலக மேலாண்மை பயிற்சிகள் அரசால் இலவசமாக வழங்கப் படுகிறது .


 மேலும் நிர்வாகிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியும் , மூன்று முறைக்கு குறையாமல் வங்கிக் கடனை வாங்கி திருப்பிக் கட்டி இருந்தால் அவைகள் சிறந்தது என்று மாவட்ட ஆட்சியரால் விருதுகள் வழங்கப் படுகின்றது .


வங்கிகளுக்கு இவர்களின் கடன் தொகைக்கு கியரண்டியாகவும் , மேலும் அது வசூல் ஆகாவிட்டால் அதற்கு காப்பிடாகவும் பல ஆயிரம் கொடிகளை அரசு இதெற்கென ஒதுக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது .  


இவ்வளவு வசதிகள் அளித்தும் இத்திட்டங்களைப் பற்றி சரியான படி மக்களுக்கு போய் சேராமையாலும் , படித்தவர்கள் இதில் ஈடுபடாததாலும் பல குழுக்களுக்கு சரியான மானியம் கிடைக்க வில்லை என்றும் பலர் வாங்கிய கடனைக் கட்டாத தாலும் இவர்களை பலர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கூக்குரலும் கேட்டுக் கொண்டிருக்கின்றன . 


இதனை சரியான முறையில் உபயோகித்தால் கொடீஸ்வரீயாகி விடலாம் என்பது சாதித்தவர்களின் கருத்து .












     






சனி, 20 டிசம்பர், 2014

பசுமை வீடு திட்டம்



பசுமை வீடு திட்டம்

ஏழைகளின் வீடுகளுக்கான தேவையை நிறைவு
செய்யும் முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய
பசுமை வீடு திட்டம் தமிழக அரசின் முன்னோடி திட்டம்
ஆகும். நமது நாட்டிலேயே 300 சதுர அடி பரப்பளவில் சூரிய
மின்சக்தி விளக்குகளுடன் கூடிய வீடுகள் வழங்குவது
இதுவே முதன் முறையாகும்.

3.2.1. இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்
• ஊரகப் பகுதிகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும்
மக்கள் அனைவரும் சூரிய மின்சக்தியுடன் கூடிய
பசுமை வீடுகள் பெற தகுதியானவர்கள்.
• ஒவ்வொரு வீடும் 300 சதுர அடி பரப்பளவில், ரூ.2.10
இலட்சம் அலகுத் தொகையுடன் மாநில அரசின்
முழு நிதி உதவியுடன் கட்டப்படுகிறது.
• ஒவ்வொரு வீடும், வசிக்கும் அறை, படுக்கை அறை,
சமையல் அறை, கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய
வசதிகள் மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புடன்
கட்டப்படுகிறது.
• ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி சக்தியில் எரியும்
அடர்குறு விளக்குகள் (5) அமைக்கப்படும். இவை
படுக்கை அறை, வசிக்கும் அறை, சமையல்அறை,
கழிப்பறை மற்றும் தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் ஒரு
விளக்கு வீதம் அமைக்கப்படும். பயனாளிகளின்
விருப்பத்தின்படி தமிழ்நாடு மின்சார
வாரியத்திலிருந்து மின் இணைப்பு பெறும்
விருப்பத்திற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
• வீடுகள் கட்டும் பணி ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
110
சூரிய சக்தி விளக்குகள் அமைக்கும் பணியை
தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை
செயல்படுத்தும்.
• பசுமை வீடுகள், பயனாளிகளின் குடியிருப்பு
அமைந்துள்ள இடம் (அவன்/அவளின் வசிப்பிடத்தை
மாற்றியமைத்து) அல்லது கிராம ஊராட்சியின் பிற
பகுதியில் அமைந்துள்ள பயனாளிக்குச் சொந்தமான
இடங்களில் கட்டித்தரப்படும். மேலும், இத்திட்டத்தின்
கீழ் வீடுகள் கட்டப்படுவதற்கென நில எடுப்புகள்
ஏதும் செய்யப்படமாட்டாது. வீட்டுமனைப் பட்டா
அல்லது சரியான நில உரிமை உள்ளவர்கள் மட்டுமே
இத்திட்டத்தின் கீழ் வீடு பெறத் தகுதியானவர்கள்
ஆவர்.
3.2.2. பயனாளிகளின் தகுதிகள்
பயனாளிகள் கீழ்க்கண்ட தகுதிகளை பெற்றிருக்க
வேண்டும்:
• சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் வசிப்பவராக
இருக்க வேண்டும்.
• சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சியில் உள்ள வறுமைக்
கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களின் நிரந்தர
காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றிருக்க
வேண்டும். 111
• 300 சதுர அடிக்கு குறையாத வீட்டு மனை
இடத்திற்கு சொந்தக்காரராக இருக்க வேண்டும்.
• குடும்பத் தலைவரின் பெயரிலோ அல்லது குடும்ப
உறுப்பினரில் எவரேனும் ஒருவர் பெயரிலோ
வில்லங்கமற்ற வீட்டுமனைப் பட்டா இருக்க
வேண்டும்.
• தொடர்புடைய கிராம ஊராட்சியில் அல்லது வேறு
எங்கும் கான்கிரீட் கூரை போடப்பட்ட சொந்த வீடு
எதுவும் இருக்கக் கூடாது.
• அரசின் இதர வீடு கட்டும் திட்டங்களில்
பயன்பெற்றவராக இருக்கக் கூடாது.
3.2.3. பயனாளிகள் தேர்வு செய்யும் முறை
• ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் வறுமைக்
கோட்டிற்குக் கீழ் உள்ளோரின் நிரந்தர காத்திருப்புப்
பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் மிகவும் வறிய
நிலையில் உள்ளோர் தேர்வு செய்யப்பட வேண்டும்.
• மொத்தம் 60,000 வீடுகளில் 17,400 வீடுகள்
அதாவது 29 விழுக்காடு ஆதி திராவிடர்களுக்கும்,
600 வீடுகள் அதாவது 1 விழுக்காடு
பழங்குடியினர்களுக்கும் மீதமுள்ள 42,000 வீடுகள்
அதாவது 70 விழுக்காடு இதர இனங்களுக்கும்
(ஆதிதிராவிடர், பழங்குடியினர் அல்லாதோர்) வறுமை
112
கோட்டிற்கு கீழ் உள்ள கிராமப்புற மக்களுக்கு
வழங்கப்படவேண்டும்.
• மாவட்ட வாரியான ஒதுக்கீட்டில் 3 விழுக்காடு மாற்று
திறனாளிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட
வேண்டும்.
• பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படும் போது,
மாற்றுத் திறனாளிகள், விதவைகள், ஆதரவற்ற
மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள்,
பெண்களைத் தலைவராகக் கொண்ட குடும்பங்கள்,
முன்னாள் இராணுவத்தினர் மற்றும் முன்னாள்
துணை இராணுவப் படையினர் ஐஊனுளு
துறையினரால் அடையாளம் காணப்பட்ட கிராமப்
பகுதிகளில் வாழும் ஊட்டச்சத்து குறைவினால்
பாதிக்கப்பட்ட குழந்தைகளை கொண்ட
குடும்பங்கள், திருநங்கைகள், ழஐஏ/ஹஐனுளு/கூக்ஷ
ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டு, துணை
இயக்குநர் (மருத்துவப் பணிகள்) சான்றிதழ்
பெற்றவர்கள், வெள்ளம், தீ விபத்து போன்ற இயற்கை
இடர்பாடுகளால் பாதிக்கப்பட்டோர் ஆகியோருக்கு
முன்னுரிமை அளிக்கப்படவேண்டும். மேலும்,
மனநலம் குன்றியோர் உள்ள குடும்பங்களுக்கும்
முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்.
• தகுதியுள்ள ஏழை ஒருவரின் பெயர் வறுமைக்
கோட்டிற்குக் கீழ் உள்ளோர் பட்டியலில் 113
விடுபட்டிருப்பின், விடுபட்ட நபர் வட்டார வளர்ச்சி
அலுவலருக்கு விண்ணப்பிக்கலாம். ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சித் துறையில் உதவி இயக்குநர்
நிலையில் உள்ள அலுவலர், விவரங்களை சரிபார்த்து
மாவட்ட ஆட்சியரின் இசைவுடன் அவரது பெயரை
பட்டியலில் இடம்பெற செய்து அதனை கிராம
சபையில் வைத்து ஒப்புதல் பெறவேண்டும். அவ்வாறு
பெயர் சேர்க்கப்படும் நிகழ்வில், அவரது பெயரானது
நிரந்தர காத்திருப்போர் பட்டியலில் ஒரு
பகுதியாக்கப்பட்டு பயனாளி தேர்வுக்கு கருத்தில்
கொள்ளப்படும்.
• கிராம ஊராட்சிகள் வறுமைக் கோட்டிற்குக் கீழ்
இருக்கும் தகுதியுள்ள பயனாளிகளின் பட்டியலை
தயார் செய்து கிராம சபையின் ஒப்புதலுக்காக
வைக்கவேண்டும்.
பயனாளிகள் தேர்வு, வீடுகள் ஒதுக்கீடு, கட்டுமானப்
பொருட்கள் விநியோகம் மற்றும் இத்திட்டம் தொடர்பான
நடைமுறைபடுத்தப்படும் வழிகாட்டு நெறிமுறைகள்
அரசாணை (நிலை) எண். 74 ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சித் (மாஅதி-1) துறை நாள் 25.06.2014-ல் உள்ளது.
இதனை hவவயீ://வசேன.படிஎ.in/ளஉhநஅந/ளவ
உஅளயீபாள.யீhயீ என்ற இணையதள முகவரியில்
காணலாம்.
114
3.2.4 அலைபேசி அடிப்படையிலான கண்காணித்தல்
மற்றும் தொகை விடுவித்தல்
தற்பொழுது ஒன்றிய பொறியாளர்களால் மதிப்பீட்டு
சான்றிதழ் தயார் செய்வதற்கும் பயனாளி காசோலை
பெறுதற்கும் இடையே குறிப்பிட்ட காலதாமதம் ஏற்படுகிறது.
அது மட்டுமில்லாமல் நிதி விடுவிப்பு, பணி
முன்னேற்றத்துடன் தொடர்பு படுத்தப்படாமல் இருப்பதால்
ஒரு சில ஊராட்சிகளில் நிதி தேக்கமடைந்த நிலையிலும்
மற்றும் வேறு சில ஊராட்சிகளில் நிதி பற்றாக்குறையாகவும்
உள்ளது. இந்நிலைகளிலிருந்து விடுபட, ஆன்லைன் நேரடி
கண்காணித்தல் மற்றும் நிதி மேலாண்மை முறை என்ற ஒரு
புதிய முறை 2014-15 முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
திறனான கணிப்பாய்வு மற்றும் மேலாண்மை முறை
மற்றும் பயனாளிகளுக்கு விரைவாக பட்டியல் தொகையை
அளிக்கும் பொருட்டும் பின்வரும் முறையில் பட்டியல்
தயாரிப்பு மற்றும் நிதி மேலாண்மை 2014-15ம் ஆண்டு முதல்
அமல்படுத்தப்பட உள்ளது:
• ஒவ்வொரு நிதியாண்டும் ஊரக வளர்ச்சி மற்றும்
ஊராட்சி இயக்குனர் ஒவ்வொரு மாவட்டத்திற்கான
வீடுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வார்.
• மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, கிராம
ஊராட்சிகளின் தேவையின் அடிப்படையில்
அவற்றிற்கு வீடுகளை ஒதுக்கீடு செய்யும். 115
• வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ), துணை வட்டார
வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்
ஆகியோர் அடங்கிய குழு வழிகாட்டு
நெறிமுறைகளின்படி உண்மையாக
வறுமைகோட்டிற்கு கீழ் உள்ள பயனாளிகளை
தேர்ந்தெடுத்து அப்பயனாளிகளின் பட்டியலை கிராம
சபையின் முன் வைத்து ஒப்புதலைப் பெற வேண்டும்.
• வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) பயனாளியின்
தகுதி, வீடு கட்ட தேவையான இடத்தின் நில
உரிமை மற்றும் அளவு ஆகியவற்றை ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களைக் கொண்டு
ஆய்வு செய்து தகுதியிருப்பின் அப்பயனாளிக்கு
பணி ஆணையினை வழங்கவேண்டும்.
• பணி ஆணை வழங்கும் நேரத்தில், பயனாளியின்
வங்கி கணக்கு சம்பந்தப்பட்ட விவரங்கள் அதாவது
வங்கியின் பெயர், வங்கி கிளையின் பெயர், வங்கி
கணக்கு எண், வங்கியின் ஐகுளுஊ குறியீட்டு எண்
ஆகிய அனைத்தும் சேகரிக்கப்பட்டு பணி
ஆணையில் குறிப்பிடப்படும். பயனாளியின் வங்கி
கணக்கு குறித்த விவரங்கள் மகாத்மா காந்தி தேசிய
ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ்
கணக்குகளில் செய்யப்பட்டுள்ளதுபோல் துணை
வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையிலான
அலுவலரால் சரிபார்க்கப்பட வேண்டும்.
பயனாளியின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
116
உறுதித் திட்டம், முதியோர் உதவித் திட்டம்
அல்லது இதர வங்கிக் கணக்குகளை இந்த
நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ளப்பட
வேண்டும். பயனாளிக்கு, வங்கியில் கணக்கு
இல்லை எனில் ஒரு வங்கியில் புதிய கணக்கு
துவங்கப்பட வேண்டும். ஆன்லைனில்
உருவாக்கப்பட்ட பணி ஆணையினை பயனாளிக்கு
வழங்கப்பட வேண்டும். மேலும் மேல்
நடவடிக்கைக்காக இந்த பணி ஆணையின் நகல்
பணி மேற்பார்வையாளர் மற்றும் உதவிப்
பொறியாளருக்கு அனுப்பப்படவேண்டும்.
3.2.5. அலைபேசி அடிப்படையிலான ஆன்லைன்
கண்காணிப்பு
• பயனாளிகளின் வங்கி கணக்கு குறித்த விவரங்கள்,
பணி உருவாக்கத்தின் போதே ஒன்றிய அளவில்
ஆன்லைன் திட்ட கண்காணித்தலில் நிரப்பப்படும்.
• ஒன்றிய மேற்பார்வையாளர் / ஒன்றிய பொறியாளர்
மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பணி
இடத்தை குறியீடு செய்யும்போதே, வீட்டின்
கட்டுமானத்தின் வெவ்வேறு கூறுகள் பற்றியும், வீடு
கட்டுதலில் கட்டுமானப் பொருட்கள் மற்றும் பட்டியல்
வழங்குதல் உள்ளிட்ட துறையின் பங்கு மற்றும்
பயனாளியின் பங்களிப்பு குறித்தும் அவர்களுக்கு
விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 117
• இந்த ஆன்லைன் கண்காணித்தல் முறையானது,
ஒன்றிய மேற்பார்வையாளர் மற்றும் உதவி
பொறியாளரிடம் உள்ள ஸ்மார்ட் தொலைபேசியில்
பதிவு செய்யப்பட்ட அலைபேசி மென்பொருள் (நேரடி
கண்காணிப்பு முறை) இணைக்கப்பட்டிருக்கும்.
இம்முறையை பயன்படுத்தி, வீட்டின்
முன்னேற்றத்தினை தளத்திலிருந்து நேரடியாகவே,
புகைப்படம் மற்றும் புவியமைப்பு கூறுகளுடன்
(அட்ச-தீர்க்க ரேகை) பதிவு செய்ய முடியும். இது
தொகை வழங்குதலுக்கு அடிப்படையாக அமையும்.
(சென்னை தேசிய தகவல் மையம் சாலைப்
பணிகளின் முன்னேற்றத்தை பதிவு செய்ய
ஏற்கனவே ஸ்மார்ட் தொலைபேசி பயன்பாடு
முறையை வடிவமைத்துள்ளது)
• பணி இடத்தினை குறியீடு செய்த பிறகு, ஒன்றிய
மேற்பார்வையாளர் / ஒன்றிய பொறியாளர்
தன்னிடமுள்ள ழுஞளு பொருத்தப்பட்ட ஸ்மார்ட்
அலைபேசியைக் கொண்டு வீடு கட்டப்படவுள்ள
இடத்தை புகைப்படம் எடுப்பார். இப்புகைப்படமானது
10 மீட்டர் தொலைவிற்குள் அதாவது வீட்டினை
முழுமையாக பார்க்கும் அளவிற்கு எடுக்கப்பட
வேண்டும். இந்த புகைப்படம் """"ஆன்லைன் திட்ட
கண்காணித்தல் முறையில்"" புவியமைப்பு
கூறுகளுடன் பதிவு செய்யப்பட்டு, குறிப்பிட்ட
அப்பயனாளிகளுக்கு நிலை வாரியான தொகை
118
விடுவித்தலுக்கு அடிப்படை ஆதாரமாகப்
பயன்படுத்தப்படும்.
• வீடு கட்டுமானத்தில் தரைமட்ட நிலை முடிந்த பிறகு,
மேற்பார்வையாளர்/ஒன்றிய பொறியாளர் தள
குறியீட்டின் போது எவ்விடத்தில் நின்று
புகைப்படத்தினை எடுத்தாரோ முடிந்தவரை
அவ்விடத்திலேயே நின்று மற்றொரு புகைப்படத்தை
எடுக்க வேண்டும்
• மேற்பார்வையாளர்/ஒன்றிய பொறியாளர் பணி
தளத்திலிருந்தே பணியின் நிலையினையும்,
புகைப்படத்துடன் கூடிய வீட்டின் நிலையினையும்
ஆன்லைன் திட்ட கண்காணித்தல் முறையில் பதிவு
செய்ய வேண்டும். புவியமைப்பு கூறுகள் மூலம்
எடுக்கப்பட்ட புகைப்படம், வீடு குறிப்பிட்ட எந்த
பயனாளியுடையது என்பதை சரிபார்க்க உதவுகிறது.

3.2.6. அலைபேசி அடிப்படையிலான மதிப்பீட்டுச் சான்றிதழ்
மற்றும் நிதி மேலாண்மை
• ஒப்புதல் அளிக்கப்பட்ட மதிப்பீட்டு சான்றிதழ் மற்றும்
தொகை விடுவித்தலுக்கான குறிப்பாணையுடன்
கூடிய பட்டியல் தொகுதி ஊரக வளர்ச்சி
வலைதளத்தில் உருவாக்கப்படும். இவற்றை
அலைபேசி பயன்பாடு மற்றும் ஏற்கனவே
உருவாக்கப்பட்டுள்ள ஆன்லைன் திட்ட
கண்காணித்தலுடன் இணைக்கப்படுவதின் மூலம், 119
எப்பொழுதெல்லாம் வீட்டின் பணி முன்னேற்றம்
அலைபேசியில் பதிவு செய்யப்பட்டு புவியியல்
கூறுகளுடன் கூடிய புகைப்படத்துடன்
சான்றுரைக்கப்படுகிறதோ, அப்பொழுதெல்லாம்
நிலைவாரியான மதிப்பீடு சான்றிதழ் மற்றும் தொகை
தானியங்கி முறையில் உருவாகும் பொருட்டு
அமைக்கப்பட்டுள்ளது.
• தற்போது உதவிப் பொறியாளர் குறிப்பிட்டுள்ள
பயனாளிக்கான குறிப்பிட்ட நிலைக்கான ஆன்லைன்
மதிப்பீட்டு சான்றிதழை, புகைப்படத்துடன் உருவாக்க
முடியும். இந்த மதிப்பீட்டு சான்றிதழ், ஆய்வு செய்யும்
அதிகாரியான உதவி செயற் பொறியாளரின்
ஒப்புதலைப் பெற்ற பிறகு ஆன்லைன் திட்ட
கண்காணித்தல் முறை மூலம் வட்டார வளர்ச்சி
அலுவலர் (வ.ஊ) க்கு அனுப்பப்படும்.
• இந்த மதிப்பீட்டு சான்றிதழின் ஒரு நகல்
உதவிப்பொறியாளரால் ஆன்லைன் கண்காணிப்பு
தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு,
உதவி செயற்பொறியாளரின் கையொப்பத்துடன்,
அலுவலகத்தில் ஆவணப்படுத்தலுக்கு
சமர்ப்பிக்கப்படும்.
• வீட்டின் அடித்தள நிலையில், தொகை விடுவிக்க
வேண்டுமெனில் அந்நிலையில் வீட்டின் புகைப்படம்
பதிவு செய்யப்பட வேண்டும். தொடர்புடைய
அலுவலர் ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தினுள்
120
சென்று, ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள
மதிப்பீட்டுச் சான்றிதழை நகல் எடுத்து,
கையொப்பமிட்டு மேல் நடவடிக்கை எடுக்கும்
பொருட்டு அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
• உதவிப் பொறியாளர் / உதவிச் செயற்
பொறியாளரிடமிருந்து மதிப்பீட்டுச் சான்றிதழை
பெற்ற பிறகு தொடர்புடைய உதவியாளர் /
கணக்காளர்/ துணை வட்டார வளர்ச்சி அலுவலர்
ஊரக வளர்ச்சித் துறை வலைதளத்தினுள் சென்று
குறிப்பிட்ட அந்த வீட்டிற்கான தொகை
விடுவித்தலுக்கான குறிப்பாணையை உருவாக்கி
கோப்பினை தயாரித்து, பட்டியலை வட்டார வளர்ச்சி
அலுவலர் (வ.ஊ) க்கு வைக்க வேண்டும்.
• வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ) சிமெண்ட், கம்பி
உள்ளிட்ட பயனாளிக்கு வழங்கப்பட்ட கட்டுமானப்
பொருட்களுக்கான தொகை ஏதேனும் இருப்பின்
அதனை கழித்த பிறகு பட்டியலை அனுமதிக்க
வேண்டும். தேவையான பதிவுகளை மதிப்பீட்டு
ஒதுக்கீடு புத்தகம் மற்றும் தொடர்புடைய திட்ட
ரொக்க புத்தகத்தில் பதிவு செய்தபிறகு, அந்த
பட்டியல் மற்றும் தொகை விடுவித்தலுக்கான
குறிப்பாணையை பயனாளிக்கு தொகை வழங்கும்
பொருட்டு தொடர்புடைய கிராம ஊராட்சியின்
தலைவருக்கு அனுப்ப வேண்டும். 121 பட்டியல் மற்றும் தொகை வழங்குதலுக்கான
குறிப்பாணையை பெற்ற பிறகு கிராம ஊராட்சியின்
தலைவர், நடைமுறையில் உள்ள வழிமுறைகளை
பின்பற்றி, தொடர்புடைய பயனாளிக்கு தொகையை
வழங்க வேண்டும்.
3.2.7.அலைபேசி அடிப்படையிலான ஆன்லைன்
கண்காணித்தல் முறையின் அனுகூலங்கள்
• அலைபேசி அடிப்படையிலான ஆன்லைன்
கண்காணித்தல் முறையின் மூலம், பணி ஆணை
வழங்குதல், மதிப்பீட்டு சான்றிதழ் தயாரித்தல் மற்றும்
பயனாளிகளுக்கு தொகை வழங்குதல்
ஆகியவற்றிற்கான கால அளவு குறைகிறது.
• மேலும், ஒவ்வொரு நிலையின் போதும்
புகைப்படங்கள் பதிவு செய்யப்படுவதால், ஒன்றிய,
மாவட்ட மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள்,
திட்டத்தை நுண்ணிய முறையில்
கண்காணித்தலுக்கு உதவுவதுடன் வீடுகளின் பணி
முன்னேற்றத்தை துரிதப்படுத்தவும் உதவுகிறது.

வெள்ளி, 19 டிசம்பர், 2014

MODI GOVT ONLINE SERVICES

மோடி அரசாங்கம் அறிமுகம் செய்திருக்கும் ஆன்லைன் சேவைகளும் அதன் ஆன்லைன் இணைப்புக்களும்
MODI GOVERNMENT INTRODUCED ONLINE SERVICES
5. Inclusion of name in the Electoral Rolls
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=10
3. With State Employment Exchange
http://www.india.gov.in/howdo/howdoi.php?service=12
Check/Track:
1. Waiting list status for Central Government Housing
http://www.india.gov.in/howdo/otherservice_details.php
6. Daily Court Orders/Case Status
http://www.india.gov.in/howdo/otherservice_details.php
10. Agricultural Market Prices Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php
Book/File/Lodge:
1. Train Tickets Online
http://www.india.gov.in/howdo/otherservice_details.php
4. Complaint with Central Vigilance Commission (CVC)
http://www.india.gov.in/howdo/otherservice_details.php
Contribute to:
1. Prime Minister's Relief Fund
http://www.india.gov.in/howdo/otherservice_details.php
Others:
1. Send Letters Electronically
http://www.india.gov.in/howdo/otherservice_details.php
Global Navigation
1. Citizens
http://www.india.gov.in/citizen.php
2. Business (External website that opens in a new window)
http://business.gov.in/

ஞாயிறு, 7 டிசம்பர், 2014

பயனுள்ள 33 குறிப்புகள்

பயனுள்ள 33 சிறப்பு குறிப்புகள்
1. பேசும்முன் கேளுங்கள், எழுதும் முன் யோசியுங்கள், செலவழிக்கும் முன் சம்பாதியுங்கள்.
2. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
3. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்.
கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
4. நான் மாறும்போது தானும் மாறியும், நான்
தலையசைக்கும் போது தானும் தலையசைக்கும்
நண்பன் எனக்குத் தேவையில்லை. அதற்கு என்
நிழலே போதும்
5. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
6. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக்
குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்
8. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்து கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம்
பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
11. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்.
12. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால்
பழகிக்கொள்ளுங்கள்.
13. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
14. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை.
ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
15. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள்
இப்படித்தான் என எண்ணிக்கொள்.
16. யார் சொல்வது சரி என்பதல்ல, எது சரி என்பதே முக்கியம்.
17. ஆயிரம் முறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒரு வருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான்
துணை வேண்டும்.
22. வாழ்வதும் வாழவிடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச்
செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
24. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம்
பங்கை நடிக்கிறார்கள்.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும். அப்போது தான் முன்னேற முடியும்.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
27. வெற்றி பெற்ற பின் தன்னை அடக்கி வைத்து கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
31. ஒன்றைப்பற்றி நிச்சயமாக நம்ப வேண்டுமென்றால் எதையும் சந்தேகத்துடனே துவக்க வேண்டும்.
32. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர் தான் கோழைத்தனம்.
33. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.