வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் , தன்னம்பிக்கையுடன் வாழவும் , படிக்காவிட்டாலும் பொருளாதரத்தில் முன்னேறவும் , மேலும் கந்து வட்டி வாங்கி குடும்பம் நடத்த சிரமப்படும் பெண்களுக்காக எவ்வித தகுதியும் கேட்காமல் , கியாரண்டி இல்லாமல் , தொழில் பயிற்சியும் அளித்து தொழில் துவங்கி தொழிலதிபர்களாக்கி அவர்களை கோடீஸ்வரர்களாக ஆக்குவதற்காக தமிழக அரசால் தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் துவக்கப்பட்டது தான் மகளிர் சுய உதவிக் குழுக்கள் .
முதன் முதலாக இக்குழுக்கள் 1989 ஆம் ஆண்டு ,10 முதல் 200 பெண்கள் வரை ஒரு குழுவாக இணைந்து சட்டப்படி பதிவு செய்யாமல் , அனைத்து தேசியமயமாக்கப் பட்ட வங்கிகளும் எவ்வித கியாரண்டியும் கேட்காமல் அவர்களுக்கு கடன் அளிக்க வேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப்பட்டது .
இவர்களுக்கான தகுதிகள் ஒரே பகுதியை , கிராமத்தை சேர்ந்த 18 வயதிற்கு மேல் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும் . இதில் விவசாயிகளாக இருந்தால அவர்கள் குழுக்களுக்கு இஞ்சி , மஞ்சள் குழு என்று பெயர் .
இவர்களின் குறிக்கோள்
பெண்களின் சமூக பொருளாதார அந்தஸ்தை உயர்த்தவும் , சிறு சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் , வங்கி மற்றும் நிதி நிறுவனங்களோடு இணைந்து கடன்களைப் பெற்றுத் தரவும் , பெண்களுக்கு கல்வி அறிவு , புதிய தொழில் நுட்பம் ,விழிப்புணர்வு ,புதிய தொழிலை தொடங்கவும் தருவதே இக்குழுக்களின் குறிக்கோளாகும் .
சுய உதவிக் குழுக்கள் ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது . ஆனால் பெண்களுக்கு மட்டுமே சலுகைகள் கிடைக்கும் . இவர்கள் இவர்களுக்குள் தலைவர் , பொருளாளர் , செயலாளர் எனத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் .இவர்கள் பராமரிக்க வேண்டிய பதிவேடுகள் 1.வருகைப் பதிவேடு , 2. பதிவு பதிவேடுகள் ( தீர்மானங்கள் ) , 3. சேமிப்பு பதிவேடுகள் , 4. வரவு கணக்கு பதிவேடு , 5. தனி நபர்களின் வங்கி புத்தகங்கள் . இவைகளை நடைமுறைப் படுத்திய பின் இரண்டு மாதங்களுக்குள் வங்கியில் கடன் பெறலாம் . வங்கிக் கணக்கில் குழுக்களின் வலிமையை அதிக முதலீடு அவர்களிடம் இருந்து எதிர்பார்க்காமல் அவர்களின் தினசரி சேமிப்புகளை வைத்து வங்கிகள் முடிவு செய்கின்றது . மேலும் 6 மாதங்களில் மதிப்பீடு செய்யப்பட்டு சுழல் நிதியும் , ஒரு வருடத்திற்கு பின் தொழில் கடனும் வழங்கப் படும் ..அரசு சாரா நிறுவனங்களும் இதற்கு உதவிகளும் செய்கின்றன . மகளிர் திட்டங்களுக்கு அம் மாவட்ட ஊரக மேம்பாட்டு துறை இலவசமாக சேவைகளையும் செய்கிறது .
இவர்கள் செய்யும் பொருட்களுக்கு விற்பனை செய்ய அரசு விற்பனை வளாகங்களையும் அமைத்துள்ளது ( பூமாலை வணிக வளாகம் )
வங்கியில் கடன் வாங்க குழுவின் விதிமுறை பதிவேடுகள் , நிர்வாகிகள் மூவரின் போட்டோ , ரப்பர் ஸ்டாம்ப் இவைகளைக் கொடுத்து கணக்கு ஆரம்பிக்க வேண்டும் .
இவர்களுக்கு மத்திய அரசு 1986 ஆம் ஆண்டு முதல் மானியங்களையும் வழங்கி வருகிறது .தமிழக அரசு மானியங்களைப் பெற சில பயிற்சிகளையும் செய்து முடிக்க வேண்டும் .அப்போது தான் கிடைக்கும் அவைகள் மகளிர் முன்னேற்றக் குழுவும் தன்னார்வ தொண்டு மையத்தால் ஒவ்வொன்றிர்கும் 6 நாட்கள் எனக் கணக்கு வைத்து ஊக்குனர்கள் , பிரதிநிதிகள் , உறுப்பினர்கள் , கூட்டமைப்பு , தொழில் முனைவோர் , நிலைத்த தன்மை எனப் பயிற்சி கள் அளிக்கின்றன .அவைகளை தேர்ந்து இருந்தால் அரசு அதற்கு ஊக்கத் தொகையாக லட்சத்திற்கு மேலாகவும் , வட்டி மான்யங்களும் அளித்து வருகின்றன . அதற்கு மட்டும் அரசின் சங்க சட்டத்தின் கீழ் உங்களது குழு பதிவு செய்யப் பட்டிருக்க வேண்டும் . தர மதிப்பீட்டில் தேர்ச்சி பெற்றிருந்தால் ஊக்கத்தொகை ஒரு லட்சம் கிடைக்கும் .
இதுவல்லாமல் இவர்களுக்கு 1999 முதல் பொன்விழா கிராம சுய வேலை வாய்ப்பு திட்டம் கீழ் சுழல் நிதி 15,000 மும் ,மான்யம் 10,000 முதல் 1 லட்சத்தி இருபத்தி ஐயாயிரம் வரை வழங்கப் படுகிறது .
இவர்களுக்கு கொடுக்கப்படும் கடன்கள்
1. நேரடி வங்கிக் கடன் - இதற்கு மானியம் கிடையாது .
2.சுழல் நிதி - முதல் கட்டத் தேர்வில் தகுயடைந்த பின் ரூபாய் 60 ஆயிரமும் மானியம் 15 ஆயிரமும் வழங்கப் படுகிறது .
3. பொருளாதாரக் கடன் - இரண்டாம் கட்டத் தேர்வில் தேர்வடைந்த பின் S.G.S.Y திட்டத்தின் கீழ் 5 லட்சம் தொழில் கடனாகவும் , மானியம் 1.25 லட்சமும் வழங்கப் படுகிறது .
இவர்களுக்காக கணினி , கட்டுமான பணிகள் , உணவு தயாரிப்பு , செவிலியர் , இலகு மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுனர் ,தீ பாதுகாப்பு மேலாண்மை , தொழில் பிரிவு , மற்றும் அலுவலக மேலாண்மை பயிற்சிகள் அரசால் இலவசமாக வழங்கப் படுகிறது .
மேலும் நிர்வாகிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியும் , மூன்று முறைக்கு குறையாமல் வங்கிக் கடனை வாங்கி திருப்பிக் கட்டி இருந்தால் அவைகள் சிறந்தது என்று மாவட்ட ஆட்சியரால் விருதுகள் வழங்கப் படுகின்றது .
வங்கிகளுக்கு இவர்களின் கடன் தொகைக்கு கியரண்டியாகவும் , மேலும் அது வசூல் ஆகாவிட்டால் அதற்கு காப்பிடாகவும் பல ஆயிரம் கொடிகளை அரசு இதெற்கென ஒதுக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது .
இவ்வளவு வசதிகள் அளித்தும் இத்திட்டங்களைப் பற்றி சரியான படி மக்களுக்கு போய் சேராமையாலும் , படித்தவர்கள் இதில் ஈடுபடாததாலும் பல குழுக்களுக்கு சரியான மானியம் கிடைக்க வில்லை என்றும் பலர் வாங்கிய கடனைக் கட்டாத தாலும் இவர்களை பலர் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்ற கூக்குரலும் கேட்டுக் கொண்டிருக்கின்றன .
இதனை சரியான முறையில் உபயோகித்தால் கொடீஸ்வரீயாகி விடலாம் என்பது சாதித்தவர்களின் கருத்து .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக