புதன், 14 மே, 2014

tamilnadu special foods தமிழ்நாட்டின் உணவு வகைகள்


தமிழ்நாட்டின் சிறப்பான உணவு வகைகள் :
1. மதுரை - சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டை
2. நடுக்கடை : இடியாப்பம் - ஆட்டுக்கால் பாயா
3. சிதம்பரம் கொத்சு
4. புத்தூர் அசைவச் சாப்பாடும் கெட்டித் தயிரும்
5. திருவானைக்கா ஒரு ஜோடி நெய் தோசை
6. கும்பகோணம் பூரி-பாஸந்தி
7. ஸ்ரீரங்கம் இட்லி பொட்டலம்
8. மன்னார்குடி அல்வா
9. கூத்தாநல்லூர் தம்ரூட்
10. நீடாமங்கலம் பால்திரட்டு
11. திருவையாறு அசோகா
12. கும்பகோணம் டிகிரி காபி
13. விருதுநகர் பொரிச்ச பரோட்டா
14. கோவில்பட்டி கடலை மிட்டாய்
15. ஆம்பூர் தம் பிரியாணி
16. நாகர்கோவில் அடை அவியல்
17. சாத்தூர் சீவல்
18. திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா
19. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா
20. செங்கோட்டை பார்டர் கடை பரோட்டா, நாட்டுக் கோழி வறுவ ல்
21. மணப்பாறை அரிசி முறுக்கு
22. கீழக்கரை ரொதல்அல்வா
23. திண்டுக்கல் தலப்பாக் கட்டி நாயுடு பிரியாணி
24. பண்ருட்டி முந்திரி சாம்பார்
25. மதுரை ஜிகர்தண்டா மற்றும் பருத்திப்பால்
26. சாயல்குடி கருப்பட்டி காபி
27. பரமக்குடி சிலோன் பரோட்டா, சிக்கன் சால்னா
28. பழனி சித்தநாதன் பஞ்சாமிர்தம்
29. கமுதி மாரியம்மன் பால் பண்ணை லஸ்ஸி
30. புதுக்கோட்டை முட்டை மாஸ்
31. தூத்துக்குடி மக்ரூன்
32. சௌக்கார் பேட்டை மன்சுக்லால் சேட் டோக்லா மற்றும் கச்சோடி
33. கன்னியாகுமரி தேங்காய் சாதம், மீன் குழம்பு
34. ராமநாதபுரம் கணவாய் கோலா உருண்டை, இறால் ஊறுகாய்
35. ஈழத் தமிழர்கள் சோதி மற்றும் தேங்காய்ப் பால்

செவ்வாய், 13 மே, 2014

ICE in case of emergency



தயவு செய்து படிக்கவும் மிகவும் முக்கியமான செய்தி
இந்த தகவல் உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என்று நம்புகிறேன்.
நம் அன்றாட வாழ்வில் கைபேசி மிகவும் முக்கியமானதாக உள்ளது.அதில் நாம் பதிவு செய்திருக்கும் எண்கள் யாருடையது என்று நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஆனால், எதிர்பாராத விதமாக நமக்கு விபத்து ஏற்பட்டால் அல்லது நாம் சுயநினைவை இழக்கும் நிலை ஏற்பட்டால் அருகில் இருக்கும்.
மக்கள் உங்களுக்கு உதவி செய்ய நேரிடும்போது அவர்கள் உங்கள் கைபேசியை எடுத்து உங்கள் வீட்டிற்கு தகவல் சொல்ல நேரிடும்போது அவர்களுக்கு நுற்றுக்கணக்கான எண்களில் எந்தஎண் உங்கள் வீட்டினுடையது என்று தெரியாது.ஆனால் “ICE” என்று பதிவுசெய்து இருந்தால் உங்கள் வீட்டிற்கு, உங்களை காப்பாற்றி உங்களைப்பற்றி தகவல் சொல்ல வசதியாக இருக்கும்.
ICE என்பது In Case of Emergency. இதன் முக்கிய நோக்கம் அவசர நேரங்களில் மக்களை காப்பாற்றுவதாகும்.இன்று ஏறத்தால அனைவரிடமும் கைபேசி உள்ளநிலையில் இதுசாத்தியமாகும்.இந்த முறையானது பாராமெடிக் (PARAMEDIC) ஆல் கொண்டுவரப்பட்டது இவர்கள் விபத்து ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது அனைவரிடமும் கைபேசி வைத்திருந்தை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இப்படி கைபேசி இருந்தும் ஏன் இவர்கள் குடும்பத்தினர்களுக்கு தகவல் போய் சேரவில்லை என ஆராய்ந்து இந்த முறையை
அமல்படுத்தினர்.
இது நாடுமுழுதும் அங்கீகரிக்கப்பட்டதாகும். ஒன்றுக்கு மேற்ப்பட்ட எண்களை ICE1 , ICE2 , ICE3………….etc
எனவும் பதிவு செய்துகொள்ள்ளாம். இன்றே, உங்கள் கைபேசியில் பதிவுசெய்யுங்கள் இந்த முறையை நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.உங்கள் மற்றும் நண்பர்களின் வாழ்வை காப்பாற்றுங்கள்.

வியாழன், 8 மே, 2014

அமரர் ஊர்தி எண் 155377



விலையில்லா சேவையிலும் நேர்மை உண்டு.

அரசாங்க அமைப்புகளில் அனைவருக்குமே பயன்படும் வகையில் சில நல்ல நிகழ்வுகள் அவ்வப்போது நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு இது போய் சேரவே இந்த பதிவு. முடிந்தவரை இதைப் பகிருங்கள். அனைவருக்கும் போய் சேரவேண்டும் என்பதே இதன் நோக்கம். 

சமிபத்தில் சென்னையில் நெருங்கிய நண்பர் ஒருவரது தந்தையார் புற்றுநோயால் காலமானார். உடலை சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டைக்கு எடுத்துக்கொண்டு போய் இருதிச் சடங்குகள் செய்ய திட்டமிட்டுருந்தனர்.

அவர் சென்னை அரசு பொதுமருத்துவமனையில் அதிகாலை சுமார் 2.30 அளவில் காலமானார். அவரது உடலை அன்றே சொந்த ஊரில் தகனம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.

3.00 மணிக்கு நண்பர் மருத்துவமனையை அடைகிறார். அங்குள்ள மருத்துவர்கள் அவரின் தகனம் செய்யும் திட்டத்தைப் பற்றி அறிந்து கொள்கின்றனர். நண்பருக்கு ஒன்றுமே புரியவில்லை. ஒரு புறம் தந்தை இறந்த துக்கம். மறுபுறம் எப்படி எடுத்து அன்றே தகனம் செய்வது என்ற நெருக்கடி.

மருத்துவர்கள் அவரை ஆசுவாசப் படுத்தி. உங்களுக்கு 2 வழிகள் உள்ளன. ஒன்று அரசாங்க வாகனம் மற்றொன்று தனியார் வாகனம் . நீங்கள் அரசாங்க வாகனத்தை உபயோகித்தால். உங்களுக்கு ஒரு ரூபாய் கூட செலவு இல்லை. நீங்கள் தனியார் வாகனம் உபயோகித்தால் சுமார் 8000 முதல் 15000 வரைக் கேட்பார்கள் என்று கூறினார்கள். நண்பரோ தனியார் தான் சிறந்தது என்றெண்ணி அவர்களை தொடர்புக்கொண்டார். அவர்கள் சுமார் 8000 ரூபாய் செலவு ஆகும் என்றனர். மீண்டும் மருத்துவர்களைப் பார்த்து பேசிய நண்பர் அவர்களின் அறிவுரைப்படி அரசாங்க ஊர்தியின் விலைல்லா கட்டண தொலைபேசியை 155377ஐ அழைத்து விசாரித்திருக்கிறார். அவர்கள், நீங்கள் எங்கே உடலை எடுத்துச் செல்லவேண்டும் என்று கேட்டுள்ளார்கள். நண்பர் விவரம் சொல்லவே, நிச்சயம் நாங்கள் சிறந்த முறையில் உங்களின் பயணத்தை அமைத்து தருகிறோம் நீங்கள் ஆக வேண்டியதை முடிக்க சுமார் 3 மணி நேரமாகும் முதலில் அதை கவனியுங்கள் மற்றவை என்ன என்பதை நாங்கள் கவனித்துக் கொள்கிறோம் என்றனர்.

அவர்கள் சொன்னபடி சுமார் 7.30 மணிக்கு மற்றவேலைகளை முடித்துக் கொண்டு நண்பர் அவர்களை மீண்டும் தொடர்பு கொண்டுள்ளார். அவர்கள் நண்பரிடம் சார் எங்களால் 100 கி.மீ வரைதான் இலவசமாக செல்ல இயலும். நாங்கள் உங்களுக்காக ஒரு மாற்று ஏற்பாடு செய்துள்ளோம். அதன்படி காலையில் குருவாயூர் விரைவு இரயிலில் உங்களுக்கு போதிய வசதிகள் செய்துள்ளோம். உடலோடு ஒருவர் இலவசமாக செல்லலாம் என்று கூறி ரயிலில் இஞ்சின் பெட்டிக்கு அடுத்த பெட்டியில் உடலை ஏற்றி விட்டார்கள். கவனிக்க இதுவரை அப்படி ஒரு வசதி ரயிலில் இருப்பது நம்மில் பல பேருக்கு தெரிய வாய்ப்பில்லை. அனைத்து ரயிலிலும் இந்த வசதி உள்ளது.

திருச்சியை நெருங்கும் வேளையில் நண்பருக்கு ஒரு அழைப்பு அலைபேசியில், அவர்கள் அரசாங்க ஊர்தியின் பணியாட்கள். நீங்கள் திருச்சி சந்திப்புக்கு வந்ததும் தொடர்புகொள்ளுங்கள் மற்றவற்றை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றனர். நண்பர் அவர்கள் சொன்னபடி தொடர்வண்டி திருச்சி வந்ததும் அந்த எண்ணை அழைத்துள்ளார். ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அவர்கள் நடைமேடையிலேயே அவர்களின்
வருகைக்காக காத்திருந்தனர். வந்தவர்கள் இரண்டே நிமிடங்களில் உடலைத் தூக்கிகொண்டு ஊர்தியில் வைத்து சொன்ன நேரத்திற்க்கெல்லாம் அங்கிருந்து கிளம்பி ஊருக்கு உரிய நேரத்தில் எடுத்துச் சேர்த்துள்ளனர். நண்பரும் அவர் குடும்பத்தாரும் திட்டமிட்டபடி இருதிச் சடுங்குகளை குறித்த நேரத்திற்க்கெல்லாம் முடித்துள்ளார்கள்.

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர் பயன்தெரி வார்.

உதவி என்பது, செய்யப்படும் அளவைப் பொருத்துச் சிறப்படைவதில்லை; அந்த உதவியைப் பெறுபவரின் பண்பைப் பொருத்தே அதன் அளவு மதிப்பிடப்படும்.

பொது மருத்துவமனையிலிருந்து இறுதி வரை அவர்கள் ஒரு ரூபாய் கூட வாங்காதது மட்டுமல்லாமல்.அவர்கள் எழும்பூரில் நண்பர் எடுத்த பயணச்சீட்டின் 100 ரூபாய் காசையும் திரும்ப கொடுத்துவிட்டார்கள்.

எனவே இந்த சேவையைப் பற்றி நண்பர் சொன்னபடி இங்கு பதிந்துள்ளேன். அனைவரும் பகிரவும். இந்த செய்தி யாருக்காவது நன்மை அளிக்கட்டும்.

விலைல்லா அமரர் ஊர்தி எண்ணிற்கு 155377

நன்றி- Muralidharan Pb

ஈமெயிலை திரும்ப பெற





நீங்கள் அனுப்பிய ஈமெயில்லை திரும்ப 

பெறுவது எப்படி?
நீங்கள் தவறாக sent பண்ணிய ஈமெயில்யை 

unsent பண்ண முடியும், நீங்கள் தவறாகவோ 

அல்லது மாற்றியோ ஒரு மெயில்யை அனுப்பி 

விட்டால் அந்த மெயிலை திரும்ப பெற முடியும்.

முதலில் உங்கள் மின்னஞ்சல் கணக்கிற்குள் 

நுழைந்து கொள்ளுங்கள். இப்போது Settings 

என்பதன் மீது கிளிக் செய்யுங்கள். இப்போது Laps 

– இல் click செய்யுங்கள் இப்போது “Undo Send” 

என்ற பகுதிக்கு வரவும். அதில் Undo வசதியை 

Enable செய்யவும் பின்னர் Save Changes என்ற 

பட்டனை அழுத்துங்கள்.

இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் 

அனுப்பிய பிறகு பின்வரும் image தோன்றும் 

அதில் நீங்கள் Undo என்ற optionயை தேர்வு 

செய்யவும்.

இந்த image சில நொடிகள் மட்டும் display ஆகும். 

இந்த image தோன்றும் நேரத்தை 30 வினாடிகள் 

வரை அதிகப்படுத்த Settings என்பதன் மீது கிளிக் 

செய்து General என்ற option யை தேர்வு செய்து 

அதில் Enable Undo Sentல் 30 வினாடிகள் வரை set 

செய்து Save Changesயை click செய்யவும்.


இப்போது நீங்கள் ஒருவருக்கு ஈமெயில் 

அனுப்பிய பிறகு Your message has been sent. Undo 

View Message என்ற image தோன்றும் அதில் 

நீங்கள் Undo என்ற optionயை தேர்வு செய்வதன் 

மூலம் அந்த mail-யை திரும்ப பெறலாம்..!!

புதன், 7 மே, 2014

ஆஹா என்ன ருசி from சமையலறை


சமையலறை குறிப்புகள்

● முட்டைக்கோஸ், காலிபிளவர் 

போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு 

சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக 

வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.

● தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் 

சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் 

உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை 

மட்டும் பயன்படுத்தவும்.

● மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது 

உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று 

தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.

● வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் 

எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து 

மொறு, மொறுப்பாக இருக்கும்.

● வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு 

சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் 

ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே 

போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் 

கிடைக்கிறது.

● அருகம்புல் சாறு எடுத்து சப்பாத்தி மாவில் 

கலந்து ரொட்டி செய்து சாப்பிடுவது நல்லது. 

தாது உப்புக்களும், வைட்டமீன்களும் 

அருகம்புல்லில் அதிகம்.

● ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, 

மூன்று பங்கு, அரிசி மாவு ஒரு பங்கு சிறிது 

மைதா கலந்து செய்தால் எண்ணெய் 

குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக 

எடுக்க வரும். கறிவேப்பிலைச் செடி நன்கு வளர 

புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம்.

● மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை 

டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் 

கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக 

வரும்.

● ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் 

கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட 

துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் 

ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் 

பிடிக்காமல் இருக்கும்..

● பாயாசத்திற்கு திராட்சைக்கு பதிலாக 

பேரிச்சம் 

பழத்தை பொடியாக நறுக்கி வைத்து நெய்யில் 

பொரித்து போட்டால் சுவையாக இருக்கும்.

● வெங்காய பக்கோடா செய்ய மாவு பிசையும் 

போது வறுத்த நிலக்கடலையை பொடி செய்து 

மாவுடன் சேர்த்து பிசையவும். இதனால் 

பக்கோடா மொறு மொறுவென்று ருசியாக 

இருக்கும்.

● சப்பாத்தி செய்து எண்ணெய் வடிகட்டியில் 

போட்டு மூடி வைத்தால் அடியில் உள்ள 

சப்பாத்தி வேர்த்து ஈரமாகாமல் இருக்கும்.

● சக்கரைப் பொங்கல் செய்யும்போது அரை கப் 

தேங்காய் பால் ஊற்றிக் கிளறி இறக்கினால், 

பொங்கல் மிகவும் சுவையாக இருக்கும்.

● தேங்காய்த் துருவல் மீதியானால், அதை 

லேசாக வதக்கி சிறிது உப்பு சேர்த்து வைத்தால் 

மறுநாள் சமையலுக்குப் பயன் படுத்திக் 

கொள்ளலாம்.

● உளுந்துவடை செய்யும் போது மாவுடன் 

வேகவைத்த உருளைக்கிழங்கை மசித்து 

கலந்து 

வடை செய்தால், வடை எண்ணெய் குடிக்காமல் 

மொறு மொறுவென்று ருசியாக இருக்கும்.

● கேசரி, பால்கோவா, தேங்காய் பர்பி போன்ற 

இனிப்புகள் நான்ஸ்டிக் பாத்திரத்தில் செய்தால் 

அடி பிடிக்காமல், எளிதாக கிளறலாம்.

● ரவா தோசை செய்யும் போது இரண்டு ஸ்பூன் 

கடலை மாவு சேர்த்து செய்தால் தோசை நன்கு 

சிவந்து மொறு மொறுவென்றிருக்கும்.

● தோசை மாவு, பொங்கல், போன்றவற்றில் 

சீரகத்தை கைகளால் சிறிது தேய்த்துப் 

போட்டால், சுவையுடன் மணமாக இருக்கும்.

● பாகற்காயுடன் உப்பு, மஞ்சள்தூள், வெல்லம், 

எலுமிச்சை சாறு ஆகியவை சேர்த்து, கலந்து 

அரை மணி நேரம் வைத்திருந்தால், கசப்பு 

காணாமல் போய்விடும்.

● இட்லி பொடி தயாரிக்கும் போது ஒரு ஸ்பூன் 

மல்லியை வறுத்து மற்ற சாமான்களுடன் பொடி 

செய்தால் இட்லி பொடி வாசனையாக இருக்கும்.

● தேங்காய் பர்பி செய்யும் போது சிறிது முந்திரி 

பருப்பு, பாதாம் பருப்பு இரண்டையும் ஊற 

வைத்து தேங்காயுடன் அரைத்து பின்னர் பர்பி 

செய்தால் பர்பி நன்றாக இருப்பதோடு, வில்லை 

போடும்போது தேங்காயும் உதிராமல் இருக்கும்.


● மிளகாய் வறுக்கும் போது ஏற்படும் நெடியைத் 

தவிர்க்க சிறிது உப்பை சேர்த்து வறுக்கவும்.


● பூரிக்கு மாவு பிசையும் போது தண்ணீருக்கு 

பதிலாக ஒரு கப் பாலைச் சேர்த்து பிசைந்தால் 

பூரி ருசியாக இருப்பதோடு மிருதுவாகவும் 

இருக்கும்.

● வாழைக்காய் மற்றும் வாழைப்பூவை 

நறுக்கும் 

போது கைகளில் பிசுபிசுவென ஒட்டாமலிருக்க 

கைகளில் உப்பை தடவிக்கொண்டு 

நறுக்கவேண்டும்.

● தோசைக்கு மாவு ஊறவைக்கும் போது சிறிது 

ஜவ்வரிசியையும் சேர்த்து ஊற வைத்தால் 

தோசை நன்றாக வருவதோடு மொரு 

மொருவென இருக்கும்.

● எலுமிச்சை, தேங்காய், புளி, தக்காளி சாத 

வகைகள் செய்யும் முன் சாதத்தை ஒரு பெரிய 

தாம்பாலத்தில் போட்டு நல்லெண்ணெய் 

விட்டுக் கிளறி ஆற வைத்து பின்னர் செய்தால் 

உதிரி உதிரியாக சுவையாக இருக்கும்.

● உருளைக்கிழங்கு வேகவைக்கும் போது 

அவை 

வெந்ததும் வெடிக்காமல் இருக்க சிறிது 

உப்பையும் சேர்த்து வேக வைக்கவேண்டும். 

இதனால் உருளைக்கிழங்கு வெடிக்காமல் நல்ல 

பதத்துடன் இருக்கும்.

● தக்காளி குருமா செய்யும் போது சிறிது 

வெங்காயத்தை பச்சையாக அறைத்து 

ஊற்றவும், குருமா வாசனையுடன் 

சுவையாகவும் இருக்கும்.

● துவரம் பருப்புக்கு பதிலாக 

பொட்டுக்கடலையுடன், வரமிளகாய், பூண்டு 

கொப்பரை தேங்காய் சேர்த்து பருப்புப் பொடி 

செய்தால், பொடி மிகவும் ருசியாகவும் 

வாசனையாகவும் இருக்கும்.


டெக்னாலஜி--கிணறு வெட்ட



நமது முன்னோர்களின் விஞ்ஞான அறிவு.

அந்த காலத்தில் எப்படி எந்த
டெக்னாலஜியும் இல்லாம
கிணறு வெட்டுனாங்க??? . . .

கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான
காரியமில்லை . பலர்
சேர்ந்து உழைத்து உருவாக்கிட
வேண்டிய ஒன்று.

ஒரு வேளை தோண்டிய கிணற்றில்
தண்ணீர் வராமல் போய்விட்டால்
அத்தனை உழைப்பும் வீணாகி விடும் . அதே போல்
கோடையில் கிணற்றில் நீர்
வறண்டு போகும் வாய்ப்பும்
உள்ளது . ஆனால் இவற்றிற்கெல்லாம்
எளிய இலகுவான தீர்வுகள் இதோ.

மனையின் குறிப்பிட்ட
ஏதாவது ஒரு பகுதியில்
அதிகளவு பச்சை பசேலென புற்கள்
வளர்ந்திருந்தால், அந்த இடத்தில்
கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில்
நீரூற்று தோன்றும் என்கின்றனர் .

சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல
நீரூற்று என அறிவது எப்படி ?

நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட
வேண்டிய நிலத்தில் முதல் நாள்
இரவு தூவி விடவேண்டும். அடுத்த
நாள் கவனித்தால் எறும்புகள்
இவற்றை சேகரித்து ஒரே இடத்தில்
கொண்டுசென்று சேர்த்த
அடையாளங்கள் , அதாவது தடயங்கள்
இருக்குமாம் அந்த இடத்தில்
கிணறு வெட்டினால் தூய
சிறப்பான நன்னீர் கிடைக்கும்
என்கிறார்கள் .

சரி தூய நீரும்
கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும்
வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில்
இருக்கிறது என்று அறிவது எப்படி ?

கிணறு வெட்ட இருக்கும் நிலப்
பகுதியை நான்கு பக்கமும்
அடைத்து விட்டு பால் சுரக்கும்
பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய
விட வேண்டும். பின்னர் அந்த
பசுக்களை கவனித்தால் மேய்ந்த
பின் குளிர்ச்சியான இடத்தில்
படுத்து அசை போடுகின்றனவாம் .

அப்படி அவை படுக்கும்
இடங்களை நான்கு , ஐந்து நாட்கள்
கவனித்தால் அவை ஒரே இடத்தில்
தொடர்ந்து படுக்குமாம் . அந்த
இடத்தில் தோண்டினால் வற்றாத
நீரூற்றுக் கிடைக்குமாம்.

உண்மையை உணருங்கள், மற்றவருக்கும்... பகிருங்கள்....

***********************************************
எங்களின் பக்கம் பிடித்திருந்தால், LIKE செய்யTamil-Oodagam கிளிக் அழுத்தவும்......

ஞாயிறு, 4 மே, 2014

online உயில் எழுதுவது எப்படி?


உயில் எழுதுவது எப்படி?
ஒருவர், தான் சம்பாதித்த சொத்துகளை, தன் இறப்புக்குப் பிறகு, தான் விரும்பும் நபர் அல்லது நபர்களுக்கு, எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல் போய்ச் சேர்வதற்கு, சுய நினைவுடன் எழுதி வைக்கும் முக்கிய ஆவணம்தான் உயில் (விருப்ப ஆவணம்).
உயில் என்பதே உறவுகளைச்சிதற விடாமல் பார்த்துக் கொள்ளும் கவசம்தான்.அதைச் சரியாகப் பயன் படுத்தியிருக்கும் குடும்பங்களில் எந்தச் சிக்கலும் வருவதில்லை.
உயில் என்பது சொத்தைப் பிரிப்பதற்கும், பிரச்னைகளைத் தீர்ப்பதற்கும் மட்டும் எழுதப்படும் ஆவணம் அல்ல. உயில் எழுதுபவரின் மனநிலை, ஆசை, விருப்பம், பிறரின் மேல் உள்ள அன்பு போன்ற உள்ளுணர்வுகளையும் விளக்கும் உணர்வுப்பூர்வமான சாதனம் அது!
இருப்பது கையளவு சொத்துதான் என்றாலும் எதிர்காலத்தில் யாரும் அதற்காகச் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது. எனவே, முறையாக உயில் எழுதி வையுங்கள்!
உயில் — கட்டாயம் என்ன ?
உயில் எழுதியே ஆகவேண்டும் என்பது கட்டாயமில்லை. ஆனால், எழுதாவிட்டால் சிக்கல் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்ப-தால் எழுதிவிடுவது நல்லது.
‘‘தன்னுடைய மரணத்துக்குப் பிறகு சொத்தின் உரிமை குறித்து பிரச்னை ஏற்படலாம் என்று குடும்பத்தின் சூழ்நிலையை நன்கு அறிந்த குடும்பத் தலைவர் கருதினால், சிறு சொத்துகளுக்குக் கூட உயில் எழுதலாம். ஆனால், பரம்பரையாக அவருக்குக் கிடைத்த சொத்துகள் குறித்து உயில் எழுத முடியாது. பாட்டன் சொத்து பேரனுக்கு என்ற அடிப்படையில் அது குடும்ப வாரிசுகளுக்குத்தான் போய்ச் சேரும்’’ என்றார் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரிஷிகேஷ் ராஜா.
உயில் – எப்படி எழுதுவது?
‘‘உயில் எழுதுவது மிகவும் எளிமையான நடைமுறைதான். முத்திரைத்தாளில்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. சாதாரண வெள்ளை பேப்பரில்கூட எழுதலாம். எந்த மொழியில் வேண்டுமானாலும் எழுதலாம். கையால் எழுதுவது நல்லது. வழக்கறிஞர் முன்னிலையில்தான் எழுதவேண்டும் என்ற அவசியம் இல்லை.
உயில் எழுதும்போது அடிப்படையாக சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். அதன் நம்பகத்தன்மைக்காக குறைந்தபட்சம் இரண்டு சாட்சிகள் தேவை. உயிலில் ஒவ்வொரு பக்கத்திலும் அவர்களின் கையெழுத்து இருக்க வேண்டும். சாட்சிகள் வாரிசாக இருக்கக் கூடாது. அவர்களுடைய நிரந்தர முகவரியைக் குறிப்பிட வேண்டும்.
உயில் எழுதும்போது, சொத்துகள் பற்றிய விவரங்களை மிகத் தெளிவாக எழுத வேண்டும். அதில், முக்கியமாக சொத்தின் வாரிசுகள் யார் என்பதை விவரமாகவும், அவர்கள் ஏன் வாரிசுகளாக அறிவிக்கப்படுகிறார்கள் என்கிற காரணத்தையும் விரிவாக எழுத வேண்டும்’’
உதாரணமாக
எனது மகள் பத்மாவுக்குத் தேவையான அனைத்தையும், அவளது கல்யாணத்தின் போதே நகை, சீர்வரிசை, பணம் போன்றவற்றின் மூலம் கொடுத்து விட்டதால், அவளுக்கு நான் எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. என் மூத்த மகன் ரவியும் அவனது மனைவியும் பல ஆண்டுகளாக என்னைச் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை. அவனை விட்டுப் பிரிந்து எனது இளைய மகன் ரமேஷ் வீட்டுக்குச் சென்றேன்.
கடந்த 10 ஆண்டுகளாக ரமேஷ் என்னை நன்றாகக் கவனித்துக் கொண்டான். எனவே, ரமேஷை என் வாரிசாக அறிவிக்கிறேன். நான் இந்தியன் வங்கியில் வாங்கிய 2 லட்ச ரூபாய் கடன் இன்னமும் முழுவதும் திருப்பிக் கட்டவில்லை. நான் சொந்தமாகச் சம்பாதித்து அண்ணா நகரில் கட்டிய வீட்டை விற்று, வங்கிக் கடனை அடைத்துவிட்டு மீதம் இருப்பவற்றை ரமேஷிடம் கொடுக்க வேண்டும். மேற்கூறப்பட்ட விஷயங்கள் என் குடும்ப நண்பர் ராமமூர்த்தியின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும்’ என்கிற ரீதியில் தெளிவாக எழுதலாம்.
‘‘சொத்து பற்றிய விவரங்களைக் குறிப்பிடும்போது, அவை எங்கு உள்ளன, எவ்வளவு பரப்பு என்பதையும் விரிவாக எழுத வேண்டும். வீடு, மனை, தோட்டம், வங்கிச் சேமிப்பு, பங்கு பத்திரங்கள் போன்ற தகவல்-களைத் தெரிவிக்கும்போது, அவற்றின் சான்றிதழ்கள் மற்றும் பத்திரங்கள் பாதுகாப்பாக உள்ள இடத்தையும் குறிப்பிட வேண்டும்’’ என்றும் சொன்னார்.
உயிலில் தோன்றக் கூடிய சிக்கல்கள் பற்றிப் பேசிய சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் வெங்கடேஷ், ‘‘உயிலைப் பதிவு செய்வது கட்டாயமில்லை. இருந்தாலும், இரண்டு சாட்சிகளோடு, சார் பதிவாளர் முன்னிலையில் உயிலைப் பதிவு செய்வதால் அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் கிடைக்கும். பதிவுக்கான மொத்தச் செலவு 600 ரூபாய்தான்!’’ என்றார்.
உயில் அமல்படுத்து-நராக ஒருவரை நியமிப்-பது அவசி-யம். உயிலில் குறிப்பிடப்-பட்டுள்ள விஷயங்கள் சரியாக நடைபெறுகிறதா என்பதை மேற்பார்-வையிடும் பொறுப்பு அவருக்கு இருக்கிறது. குடும்ப நண்பர்கள், வக்கீல்கள் போன்றவர்-களை உயில் அமல்படுத்-துபவராக நியமிக்கலாம். அவரே சொத்தைப் பிரித்து கொடுப்பதற்கும், கடன்கள் இருந்தால் அதனை அடைப்பதற்கும் பொறுப்பு ஏற்கிறார்.
• நம் நாட்டில் உயிலில் இரு முக்கியப் பிரிவுகள் உண்டு. ஒன்று, இந்து சட்டத்துக்கு உட்பட்ட உயில். மற்றொன்று, முஸ்லிம் சட்டத்துக்கு உட்பட்ட உயில். முஸ்லிம் தனிநபர் சட்டப்படி, ஒரு முஸ்லிம், தன் உயிலில் தான் சுயமாகச் சம்பாதித்த சொத்தில் 2/3 பகுதியைக் கட்டாயமாக தனது வாரிசுகளுக்குக் கொடுக்க வேண்டும். மீதம் உள்ள 1/3 பகுதியை மட்டுமே தன் விருப்பப்படி பிறருக்கு உரிமை வழங்கி உயில் எழுத முடியும்.
• உயில் மூலம் கிடைக்கும் சொத்துக்கு மூலதன ஆதாய வரி கிடையாது.
உயில்கள் பலவிதம்!
குறிப்பிட்ட விஷயங்களை நிறைவேற்றினால் மட்டுமே செல்லுபடியாகும் என்ற நிபந்தனைக்கு உட்பட்ட உயில், கணவன், மனைவியோ அல்லது வேறு இருவரோ அதற்கு மேற்பட்டவர்களோ எழுதும் கூட்டு உயில், போர்க்களத்தில் உள்ள ராணுவ வீரர்களுக்கான சலுகைக்கு உட்பட்ட உயில் போன்ற பலவகையான உயில்கள் உள்ளன. இதில், சலுகை உயிலுக்கு, சாட்சியாக ஒருவர் கையெழுத்துப் போட்டால் போதும்.
உயில் எப்போது செல்லாமல் போகும்?
குடிபோதையில் அல்லது மனநிலை சரியில்லாத நிலையில் எழுதிய உயில் சட்டப்படி செல்லுபடி ஆகாது. மேலும் மைனர்கள் எழுதும் உயிலுக்கும் மதிப்பு இல்லை.
சில டெக்னிக்கலான வார்த்தைகள்!
Will உயில் (விருப்ப ஆவணம்)
Testator உயில் எழுதியவர்
Executor உயில் அமல்படுத்துநர்
Codicil இணைப்புத் தாள்கள்
Attested சரிபார்க்கப்பட்டது.
Probate
நீதிமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டப்படி, உயிலை செல்லுபடியாக்கல்.
Beneficiary, Legatee வாரிசு
Intestate உயில் எழுதாமல் இறந்து போனவர்
Succession Certificate வாரிசு சான்றிதழ்
Hindu Succession Act இந்து வாரிசு உரிமைச் சட்டம்
Muslim personal Act முஸ்லிம் தனிநபர் சட்டம்
Guardian பாதுகாவலர்
Witness சாட்சி
‘ஆன் லைன்’ உயில்
உயில் எழுதுவதன் முக்கியத்துவம் வெளிநாடுகளில் மிக அதிகமாகப் பரவியுள்ளது. தற்போது இன்டர்நெட்டின் மூலமாக உயில் எழுதும் முறைகூட வந்துவிட்டது. ஒரு வழக்கறிஞர், உயில் எழுத விரும்புவரிடம் இன்டர்நெட் மூலம் கலந்துரையாடல் நடத்துவார். அதன்பின்னர், உயிலை எழுதி விடலாம். 24 மணி நேரத்துக்குள் அந்த உயில் பதிவு செய்யப்பட்டுவிடும். இந்தியாவில் இந்த வசதி இன்னும் வரவில்லை.
ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.
உயில்களை வருமான வரியை மிச்சப் படுத்தும் ஒரு சாதனமாகவும் கையாளலாம்!
ஒருவர் பல உயில்கள் எழுதலாம். அப்படி ஒன்றுக்கும் மேற்பட்ட உயில்கள் ஒரே சொத்துக்கு இருக்குமாயின், எந்த உயில் கடைசியாக எழுதியதோ அதுவே செல்லும். தேதி, நேரம் படி பார்ப்பார்கள்.
ஓருவர் தான் எழுதிய உயிலை எப்போது வேண்டுமானாலும் மாற்றி எழுத முடியும்.
-நன்றி: ராஜேஷ் ரெட்டி

சனி, 3 மே, 2014

Nagarathar Marriage நகரத்தார் கல்யாண சடங்குகள்


Nagarathar  Marriage Process: நகரத்தார் கல்யாண சடங்குகள்
1)Pesi mudithal (engagement)- பேசி முடித்தல்
2)Chitai eludhudal (preparation of check list)- சிட்டை  எழுதுதல்
3)Mugurtham vaithal (fixing the date of marriage)-முகூர்த்தம் வைத்தல்
4) Nagara kovil ku pakku vaithal (Invitation to the corresponding temple) -நகர கோவிலுக்கு பாக்கு  வைத்தல் 
5)Samiku padaithal (offering to god) -சாமிக்கு படைத்தல்
6)arasanikaal naduthal -அரசாணிக்கால் நடுதல்
7)Kolam poduthal (rangoli) -கோலம் போடுதல்
8)Mapillai alaipu -மாப்பிள்ளை அழைப்பு
9) Pen edukki katuthal -பெண் இடுக்கி கட்டுதல்
10)Aalathi -ஆலத்தி
11)Thirupututhal (wedding)- திருப்பூட்டுதல்
12)Esai kudi manam (marriage registration) -இசை குடி மானம்
13) thiruputu sadangu (wedding Ceremonies) - திருப்பூட்டு சடங்கு
14) Mama vevu eduthal -மாமா வேவு எடுத்தல்
15) Manavarai eduthal - மணவறை எடுத்தல்
16) manavarai iduthal - 
மணவறை இடுதல்
17)Panam eluthuthal - பணம் எழுதுதல்
18)Kumbitu katti koluthal  -கும்பிட்டு கட்டி கொள்ளுதல்
19)Moolaipari iduthal - முளைப்பாரி இடுதல்
20) Manjal neer aduthal - மஞ்சள் நீர் ஆடுதல்
21) Kal mothiram anithal - கல் மோதிரம் அணிதல்
22) PIllai eduki koduthal - பிள்ளை எடுக்கி கொடுத்தல்
23)pen alaipu - பெண் அழைப்பு
24)kulam vala pillai eduthal - குலம் வாழ பிள்ளை எடுத்தல்
25) kayuchu ootruthal...! - காய்ச்சி ஊற்றுதல் 

Ivalo process iruku...suma va sonanga...veeta kati paru kalayantha pani paru...nu  இவ்வளவு தான் நகரத்தார் திருமணம் .

செல்போன் கிடைக்கும்



இந்தியாவில உங்க செல்போன் 


தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட 

வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் 

திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய 

வேண்டியவை :



1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் 

செய்யுங்க


2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்


3, இதுதான் உங்க போனின் IMEI No 

(அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் 

பண்ணி வைச்சுக்குங்க..


4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே 

இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் 

பண்னுங்க!

5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.

6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் 

GPRS மற்றும் internet மூலம் 

கண்டுபிடிச்சுடுவாங்க.

7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் 

கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு 

ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.