புதன், 24 செப்டம்பர், 2014

RTI-இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்

Want to learn about RTI?
***The earlier shares shows only the Link, hence share this updated post guys.
தகவல் அறியும் உரிமை சட்டத்தை அனைவரும் அறிய அரசின் இலவச ஆன்லைன் சான்றிதழ் பயிற்சிகள்
கொஞ்சம் சிரமம் பாக்காம ஷேர் செய்யுங்கய்யா, ஆர்வம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனளிக்கும் விஷயம் இது. RTI மட்டுமே சமூகத்தை மாற்ற நினைப்பவர்களுக்கு இருக்கும் பெரிய ஆயுதம், நினைவில் கொள்ளுங்கள்.
===============================================================
தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) என்பதை பல பேர் கேள்வி பட்டிருப்பீர்கள். RTI என்பது 2005 ல் இந்திய அரசால் கொண்டு வரப்பட்ட சட்டம். இந்த சட்டத்தினால் அரசாங்கத்தை பற்றியோ, அரசாங்க அதிகாரிகளை பற்றியோ ஏதேனும் தகவல் தெரிய வேண்டுமெனில் நீதிமன்றத்தை அணுகி பெற்று கொள்ளலாம். இதில் சில விதி விலக்குகளும், வரம்புகள் உள்ளன.
இந்த சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவரையும் சென்றடையும் நோக்கில் இந்திய அரசு ஆன்லைன் பயிற்சிகள் கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்குகிறார்கள். 7 நாள் மற்றும் 15 நாள் இரு வகை பயிற்சிகள் உள்ளன. இருந்தாலும் 7 நாள் பயிற்சியை முடித்த பின்னரே 15 நாள் பயிற்சியில் சேர முடியும்.
7 நாள் கோர்சில் மொத்தம் 7 பிரிவுகள் இருக்கும் ஒவ்வொரு பிரிவிலும் நான்கு கேள்விகள் கேட்கப்படும் அந்த கேள்விகளில் 3 கேள்விகளுக்கு சரியான விடையை கொடுத்தால் தான் அடுத்த பிரிவிற்கு செல்ல முடியும்.
கோர்சில் சேருவதற்கான தகுதிகள்:
=====================================
இந்திய குடிமகனாக இருத்தல் அவசியம்.
கணினியில் இணைய இணைப்பு இருக்க வேண்டும்.
கணினியில் பயர்பாக்ஸ், IE மற்றும் குரோம் உலாவிகளின் லேட்டஸ்ட் வெர்சன் வைத்திருக்க வேண்டும்.
கணினியில் PDF Reader மென்பொருள் இருத்தல் அவசியம்.
தேர்வுகள் ஆங்கிலத்தில் இருக்கும் என்பதால் படித்து புரிந்து கொள்ளும் அளவு ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டியது அவசியம்.
கோர்சில் சேர்வது எப்படி :
==============================
இந்த ஆன்லைன் கோர்ஸ்களில் சேர விரும்புபவர்கள் இந்த தளத்திற்கு சென்று Registration செய்ய வேண்டும்.
வெற்றிகரமாக பதிவு செய்த பின்னர் உங்களுக்கென ஒரு User Id மற்றும் Password உங்கள் மெயிலுக்கு அனுப்புவார்கள்.
அந்த விவரங்களை கொண்டு ஆன்லைன் கோர்ஸ் தளத்தில் நுழைந்து நீங்கள் கோர்ஸ் ஆரம்பித்து விடலாம்.
இதனை பற்றிய மேலும் தகவலுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
RTI இணைய தளம் :http://rtiocc.cgg.gov.in/home.do;jsessionid=1E06B4D430E2B783589FAA9BA1721DB5 நன்றி - Rti போத்தி
RTIOCC.CGG.GOV.IN

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக