செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

வருமான வரி சோதனையை தவிர்க்க..!




வருமான வரி சோதனையை தவிர்க்க..!

* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து 

லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை 

இருந்தால் வங்கியானது வருமான 

வரித்துறைக்கு அந்த வாடிக்கையாளர் வரி கட்ட 

தகுதியுடையவர் என்பதை தெரிவித்து விடும்.

* கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் கவனிக்க 

வேண்டியது என்னவெனில், கிரெடிட் கார்டை 

பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் 

ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி 

செலுத்த தகுதியுடையவராவார்கள். அவர்களின் 

விவரமும் வங்கியின் மூலமாக வருமான வரித் 

துறையினருக்கு தெரிவிக்கப்படும்.

* ஒரு வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய்க்கு 

மேல் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் 

அந்த நபரின் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் 

நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு 

போய்ச் சேரும்.

* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் 

டெபாஸிட்களிலோ வருடத்திற்கு ஐந்து லட்சம் 

ரூபாய்க்கு மேல் முதலீடு செய்தால் அவர்களின் 

விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் 

ஒப்படைக்கப்படும்.

* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் 

பங்குகளில் அல்லது இ.டி.எஃப்.களில் முதலீடு 

செய்தால் அவர்களின் விவரம் வருமான 

வரித்துறைக்கு தெரிவிக்கப்படும்.

* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ 

வாங்கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு 

துறை 

மூலமாக வருமான வரித் துறைக்கு 

தெரிவிக்கப்படும்.

அந்த வகையில் மேலே கண்ட முறையில் 

ஏதாவது பரிவர்த்தனை செய்திருந்தால் அதை 

குறிப்பிட்டு வருமான வரி கணக்கை தாக்கல் 

செய்துவிடுங்கள். இல்லை என்றால் வருமான 

வரித் துறையின் அதிரடி ரெய்டை சந்திக்க 

வேண்டி வரும்.

புதன், 19 ஆகஸ்ட், 2015

பாய் - details & information's ,



பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும்!

‘பாய்’ என்ற இந்த வார்த்தைக்குப்பின்னால் 

எத்தனை விதமான தகவல்கள் இருக்கின்றன 

என்பதை மட்டும் இந்தக் கட்டுரையின் மூலம் 

பதிவு செய்கிறேன்.

வீட்டில் சாணம் மெழுகிய வெற்றுத் தரையில் 

படுத்து உறங்கிய ஆதிதமிழன், சற்று சுகமாகப் 

படுத்து உறங்க வேண்டி பாய்களைப் பின்ன 

ஆரம்பித்தான்

முதன்முதலில் தென்னை ஓலையில் 

இருந்துதான் பாய்களைத் தயாரித்தார்கள்.

முற்றாத இளம் தென்னை ஓலையை வெட்டி 

எடுத்து, நடுவில் உள்ள தண்டு போன்ற 

மட்டையை இரண்டாக 

வெட்டிப்பிளந்துவிட்டால் 

மட்டையுடன் கூடிய இரண்டு துண்டு ஓலைகள் 

கிடைக்கும்.

இரண்டு துண்டுகளில் மட்டைப்பகுதிகளும், 

வெளிப்புறமாக வரும்படி வைத்து ஓலைகளைப் 

பின்னினால் நமக்கு தென்னம் பாய் கிடைக்கும்.

இளம்பச்சை (தென்னை) ஓலைகளால் 

பின்னப்பட்ட இந்தத் தென்னம்பாய் படுப்பதற்கு 

சுகமாக இருக்கும். குளிர்ச்சியாகவும் இருக்கும்.

* கோரைப்பாய் – உடல் சூடு, மந்தம், சுரம் 

போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் 

ஏற்படும்.

*பிரம்பு பாய் – சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் 

நீங்கும்.

* ஈச்சம்பாய் – வாதநோய் குணமாகும். உடல் 

சூடு, 

கபம் இவை

அதிகரிக்கும்.

* மூங்கில் பாய் – உடல் சூடும், பித்தமும் 

அதிகரிக்கும்.

* தாழம்பாய் – வாந்தி, தலை சுற்றல், பித்தம் 

நீங்கும்.

* பேரீச்சம்பாய் – வாதகுன்மநோய், சோகை 

நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் 

தரும்.

தமிழ்க்கலாச்சாரத்தோடும், பண்பாட்டோடும், 

இயற்கையோடும் இயைந்த ‘பாய்’ என்ற 

பயன்பாட்டு அம்சம் நம்மை விட்டு 

விடைபெற்றுச் சென்றுகொண்டிருக்கிறது.

மெட்ராஸ் பாஷைக்கெல்லாம் அர்த்தம்




நம்ம மெட்ராஸ் பாஷை வார்த்தைக்கெல்லாம் அர்த்தம் கண்டு அத சுளுவா புரிஞ்சிக்க ல்லாரும் படிப்பிங்கன்னு நம்புறோம்....டேங்க்ஸ்பா 
தமிழ் டிஸ்கி-1:
சோமாரி - ஒழுக்கம் இல்லாதவன்
மெர்சல் - பயம்
வல்லிசா -சுலபமாக
குஜிலி - இளம் வயதுப்பெண்
குஜாலா -கொஞ்சல்
ஜல்சா - சரசம்
சல்லிசா - சுலபமாக
கில்பான்ஸ் - பளபளப்பான ஆள்
தபா - தடவை
அட்டு -சுமாரான
மஜா -கேளிக்கை
கலாய்- கலாட்டா
தில்லான -தைரியமான,ஆண்மை
கில்லியான - திறமையான
மாலு - மாமூல்
பீலா -பொய்
டபாய்க்கிறது -ஏமாற்றுவது
கப்ஸா - பொய்
டொச்சானா - அழகில்லாத
குஜிலி -இளம்பெண்
உதாரு -பொய்
போங்கு - கள்ளத்தனம்
கேப்மாரி - திட்டு வார்த்தை 
பேமானி - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
சோமாறி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கேப்மாரி-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கஸ்மாலம் - முட்டாள் 
டபாய்ச்சே - ஏமாற்றி
அக்காங் - ஆமாம்
பல்பு - சாவு
காண்டாய்டுவேன் - கோபமாகிவிடுவேன்
பகிலு -இடுப்புப்பகுதி
கபோதி - திட்ட உபயோகிக்கும் வார்த்தை
தமிழ் டிஸ்கி-2:
அப்பாலிக்கா - அப்புறமா
இஸ்துகினு - இழுத்துக்கொண்டு
கண்ணாலம் - கல்யாணம்
போங்குத்தனமா - கள்ளத்தனமாக
மெரிச்சு - மிதிச்சு
நைனா - தந்தை
அண்ணாத்தை - அண்ணன் 
கீச்சி - கிழித்து
சடுதி - சீக்கிரம்
சொம்மா - சும்மா 
கெயன் - கிழவன்
கெயவி - கிழவி
கபாலம் -மண்டை
நின்ன - நின்ற
இட்டாந்து - கொண்டுவந்து
சவரட்சனை - தேவை அறிந்து செய்தல்
கொயந்தே -குழந்தை
குந்திகினு - உட்கார்ந்து கொண்டு
இல்லாங்காட்டியும் - இல்லாவிட்டாலும்
யாபாரம்-வியாபாரம் 
பிச்சுகினு - பிய்த்துக்கொண்டு
காலம்பற - காலையில்
மிலிட்டரி ஓட்டலாண்டே - அசைவஹோட்டல் அருகே
நாஷ்டா - காலை டிபன்
பிகில் - விசில்
சொக்கா - சட்டை
கீய்ச்சுக்கணும் - கிழித்துக்கொள்ளவேண்டும்
கன்பீஸ் - குழப்பம்
போய்கினு - போய்க்கொண்டு
சல்பேட்டா -மலிவு விலை மது
கச்சேரி -குழுவுடன் மது குடித்தல்
மட்டை - அதீத போதை
டர்ராயிட்டேன். - கோபமாகிவிட்டேன்
அப்பாலே-அந்தப்பக்கம்
பயக்கமாயிடுச்சு. - பழக்கமாகிவிட்டது
தம்மாதூண்டு - சிறிய அளவில்
கயிதை - கழுதை
கணக்கா - அது மாதிரி
பிகரு மாரி - அழகு மாதிரி
ஷோக்கா - அழகா
டக்கரா கீறே - சூப்பரா இருக்கே
ஜல்பு -ஜலதோசம்
சொம்மா- சும்மா
பட்டையை - சாரயத்தை
பொட்டலம் - கஞ்சா
அல்லாத்தையும் - எல்லாவற்றையும் 
சல்லுன்னு - சட்டென்று
கடாசிட்டு - தூக்கி வீசிவிட்டு
கேணன் - திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
எச்சக்கல-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
காலிப்பய -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
பரதேசி-கொடியவன்
பன்னாடை-திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
கெரகம்- ஏழரை நாட்டு சனி
சாவுகிராக்கி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
தூத்தேரி -திட்ட உபயோகிக்கும் வார்த்தை 
புச்சி - பிடித்து
மெரிச்சி - மிதிச்சி
பீச்சாங்கையி - இடதுகை
பீச்சாங்காலு -இடதுகால்
கப்பு - துர்நாற்றம்
தபா - தடவை
கொல்டி காரங்க - தெலுங்கு பேசுபவர்கள்
ஜட்கா காரங்க - ஹிந்தி பேசுபவர்கள்
மாமிங்க - பிராமணர்கள்
டப்பு - பணம்
நிஜார் - கால்சட்டை
குந்திகினு - உட்கார்ந்து கொண்டு
டாங்சு - நன்றி
கட்டேலேபோறவன-திட்ட உபயோகிக்கும் வா

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2015

மோசடிகள் - Tamil Nadu Frauds



ஆன்லைன் மோசடிகள்
********************************
யாருமே கண்டுகொள்ளாத மண்ணுளி பாம்பில் துவங்கி, நாக மாணிக்க கல், ரைஸ் புல்லிங் போன்ற மோசடிகளில் மட்டுமல்ல. ஆன்லைன் மோசடிகளின் துவக்கமும் கொங்கு மண்டலம்தான். 

"இந்த வாரம்... மோசடி வாரம்" எனச்சொல்லி விளம்பரம் செய்யும் அளவுக்கு மோசடிகள் அடுத்தடுத்து அரங்கேறி வந்தது கொங்கு மண்டலத்தில்தான். இதில் குறிப்பிட்டு சொல்லவேண்டியது 

ஆன் லைன் மோசடி.

வேறு எந்த மோசடிகளும் சாதிக்காததை ஆன்லைன் மோசடி சாதித்தன. பல ஆயிரம் கோடி ரூபாயை ஆன்லைன் நிறுவனங்கள் மோசடி செய்திருப்பதாக காவல்துறை பகிரங்கமாகவே அறிவித்துவிட்டது. எப்படி பல ஆயிரம் கோடியை ஏமாற்ற முடியும் என்கிறீர்களா? சில ஆயிரங்களில் துவங்கி, பல ஆயிரம் கோடி வரை மக்களின் பணத்தை ஏப்பம் விட்ட ஆன்லைன் மோசடியைப் பற்றிதான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.

5 கேள்வி... 2 ஆயிரம்.... ஆன் லைன் மோசடியின் துவக்கம்

*******************************************************************************

மிகப்பெரிய விருட்சம் சிறிய விதையில் இருந்து துவங்கி, மெல்ல மெல்ல செடியாக, மரமாக வளர்வதை போலத்தான் ஆன் லைன் மோசடியும். இமெயில் என்பது அனைவரிடமும் அறிமுகமாயிராத காலகட்டம் அது. 10 ல் ஒருவரிடம் இமெயில் கணக்கு இருக்கலாம். அப்போது அந்த இமெயில்களுக்கு 'கேள்விக்கு பதில் சொன்னால் பரிசு' என்ற அறிவிப்போடு ஒரு மெயில் வரும்.

உங்களுக்கு 5 கேள்வி கேட்கப்படும். அதற்கு நீங்கள் சரியான பதில் சொன்னீர்கள் என்றால் உங்களுக்கு 2 ஆயிரம் பரிசு. ஆனால் அதற்கு முன்னர் 10 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்ட வேண்டும்' என அழைத்தது அந்த இமெயில். டெல்லியில் தலைமை அலுவலகம் இருப்பதாக சொல்லி, கோவையில் அலுவலகத்தை துவக்கியது அந்த ஆன்லைன் நிறுவனம்.
மெயிலை பார்த்து ஏமாந்த சிலர் மட்டும், அங்கு சென்று டெபாசிட் கட்டினர். அவர்களுக்கு கேள்விகள் அனுப்பப்பட்டன. அந்த கேள்விகளுக்கு குழந்தைகள் கூட எளிதில் பதில் சொல்லிவிடலாம்; அவ்வளவு எளிதானவை. பதில் அனுப்பிய உடன், அவர்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்பட்டது. இது போதாதா... டெபாசிட் பணம் குவிந்தது. பலர் பல முறை வெவ்வேறு பெயர்களில் 10 ஆயிரம் கட்டி கேள்விகளை வரவழைத்துக்கொண்டனர். ஓரிரு வாரங்களில் பணம் வருவது முற்றிலுமாய் நின்று போய் விட்டது.

கோவையில் இருந்த அலுவலகம் மூடப்பட்டது. அப்புறம் என்ன 'பணம் ஸ்வாகா' தான். இந்த மோசடியில் மட்டும் 4 ஆயிரம் பேர் 4 கோடியை ஏமாந்ததாக சொல்கிறது போலீஸ் புள்ளிவிவரம். வழக்கில் சிக்கியதென்னமோ ஏஜென்டுகள்தான். 'பாஸ் எங்கே...?' என போலீஸ் அவர்களிடம் விசாரித்தால், டெல்லியிலோ, கொல்கத்தாவிலோ இருப்பதாக சொன்னார்கள். அந்த 'பாஸ்' களை இன்றுவரை தேடிக்கொண்டிருக்கிறது காவல்துறை.
வீட்டில் இருந்தபடி சம்பாதிக்கலாம் - இது அடுத்த மோசடி...!
********************************************************************************

'உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் இருக்கா? அப்போ நீங்க வீட்டில இருந்தே மாசம் 30 ஆயிரம் சம்பாதிக்கலாம்' என வீட்டு வாசலை தட்டிய டேட்டா என்ட்ரி விளம்பரம்தான் அடுத்த ஆன்லைன் மோசடி. நாங்க கொடுக்குற டேட்டாவை டைப் பண்ணி தரணும். ஒரு வரிக்கு இத்தனை ரூபாய். மாசம் இவ்வளவு சம்பாதிக்கலாம்'னு சொல்ல ஏகப்பட்டவங்க விண்ணப்பிச்சாங்க. இதுக்காக கடனை வாங்கி கம்யூட்டர் வாங்கினவங்க எல்லாம் உண்டு. 'முதல்ல ரெண்டு மாசம் டிரெய்னிங், அதுக்கு அப்புறம் உங்களுக்கு வேலை' எனச்சொல்லி சில ஆயிரங்களை வாங்கி பயிற்சி கொடுப்பாங்க. டெபாசிட்டா சில ஆயிரங்களை வாங்கிக்குவாங்க.

அதுக்கு அப்புறம் உங்களுக்கு சில காகிதங்கள்ல இருக்குறதை டைப் பண்ணி ப்ளாப்பியில் போட்டு கொடுக்கச்சொல்வாங்க. முதல்ல பணம் கட்டுனவங்களுக்கு சில வாரங்கள், சில ஆயிரங்கள் பணம் வர ஆரம்பிக்கும். அதுதான் அவங்க முதலீடு. அதுக்கு அப்புறம் நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு டெபாசிட் தொகை அவங்களுக்கு குவிஞ்சது. பலர் கடனில் கம்ப்யூட்டர் வாங்கி, டெபாசிட் கட்டி வேலை பார்க்க ஆரம்பிச்சாங்க.

ஆனா கொஞ்ச நாள்ல அவங்க கொடுத்த வேலைகளுக்கு பணம் ஏதும் வரலை. ஆனாலும் வேலை மட்டும் வந்துட்டே இருந்துச்சு. 'நம்ம பணம் எங்கேயும் போகாது.. அதுதான் வேலை வருதே.. மொத்தமா வாங்கிக்கலாம்!' என தொடர்ச்சியாக வேலை செய்தார்கள். ஆனால் பணம் வராமல் போகவே... சிலர் கேள்வி கேட்க ஆரம்பிச்சாங்க.

கேள்வி கேட்டவங்களுக்கு 'உங்கள் வேலை சரியில்லை. நீங்க சென்னை ஆபீஸ் வந்து பாருங்க' என்று மட்டும் பதில் வரும். படிப்படியாக எல்லோருக்கும் வேலை நிறுத்தப்படும்போதுதான் எல்லோரும் ஏமாற்றப்பட்டதே தெரியவந்தது. அப்புறம் என்ன பலகோடி ரூபாய் அம்போதான்.

இதில் வேலை தேடியவர்கள் மட்டுமல்ல. நல்ல வேலையில் இருந்தவர்கள் கூட, 'வீட்டில் இருந்தே பணம் சம்பாதிக்கலாங்கறப்ப எதுக்கு ஆபீஸ் போயிட்டு..?' என வேலையை விட்டு ஏமாந்தவர்கள் எல்லாம் உண்டு. இதில் டெபாசிட் தொகையாக ஒரு லட்சம் வரை கட்டியவர்களும் இருக்கிறார்கள்.

விளம்பரத்தை க்ளிக் செய்தால் பணம்?
*******************************************************
ஆன்லைன் மோசடியின் அடுத்த கட்டம்தான் இது. குறிப்பிட்ட இணைய தளத்தில் உள்ள விளம்பரங்களை க்ளிக் செய்து பார்த்தால் உங்களுக்கு ஒவ்வொரு முறையும் பணம் வரும் என சொல்லப்பட்டது. 'இன்டர்நெட்ல ஒரு மணி நேரம் வேலை செஞ்சா போதும்.. மாசம் 6,000 ரூபாய் சம்பாதிக்கலாம்'னு கவர்ச்சிகரமான விளம்பரம் மூலம் இது அறிமுகமாச்சு.

இதை நம்பி அந்த வெப் சைட்டுக்கு போனா, இவ்ளோ பணம் கட்டுங்கனு சொல்லி சிரிக்கும் அந்த சைட். அதுக்கு அப்புறம் அது வேற வெப்சைட் லிங்குக்கு போகும். அங்கேயும் கொஞ்சம் பணம் கட்டணும். 20 ஆயிரம் வரைக்கு நீங்க கட்டுனா, உங்களுக்கு தனி பேஜ் கிரியேட் பண்ணிக்கொடுப்பாங்க. அதுல வர்ற விளம்பரங்களை க்ளிக் பண்ணா. பணம் தருவோம்னு சொன்னாங்க.

முதலில் மாசம் சில ஆயிரங்கள் வந்துச்சு. இதை நம்பி நிறைய பேர் டெபாசிட் பண்ண, அவ்வளவுதான் அந்த வெப்சைட் நிரந்தரமாக மூடப்பட்டது.

'டெபாசிட் கட்டு... கடனை வாங்கு!'
***********************************************

தொழில் அபிவிருத்திக்கு கடன் வேண்டுமா? குறைந்த வட்டியில் கடன் தருகிறோம் எனச்சொல்லி மோசடி செய்வது அடுத்த ஆன்லைன் மோசடி. உங்களுக்கு கடன் தேவை என்பதை அறிந்தால் யாராவது மூலம் ஒருவர் உங்களிடம் அறிமுகமாவார். உங்களுக்கு என்ன தேவை? அதன் விவரம் உள்ளிட்டவற்றை எல்லாம் தெரிந்து கொள்வார்கள். தொழில் சார்ந்த ஆவணங்களையும் அந்த நபர் சரிபார்ப்பார். வங்கி கணக்கு விவரங்களையும் கேட்டு பெற்றுக்கொள்வார்.

ஓரிரு வாரங்களுக்கு பின்னர் தொடர்பு கொள்வார். உங்களுக்கு 50 லட்ச ரூபாய் கடன் தொகை ஓகே ஆகியுள்ளது. 10 சதவீதம் அதாவது ரூ. 5 லட்சத்தை செலுத்தி கடன் தொகைக்கான செக்கை பெற்றுச்செல்லலாம் என்பார்கள். 5 லட்சம் டெபாசிட் செலுத்தினால், உங்களுக்கு செக் கிடைக்கும். ஆனால் அந்த செக் போலியானதாக இருக்கும். இப்படி பலரிடம் மோசடி நடக்க, மக்கள் உஷாராகி விட்டனர். இதையடுத்து இதில் ப்ளான் பி'யை செயல்படுத்தியது மோசடி கும்பல்.

அதாவது, முன்னரைப்போலவே உங்களுக்கு 50 லட்சம் கடன் ஓகே ஆகியுள்ளது என்பார்கள். அப்போது உங்கள் கணக்கில் சில லட்சங்கள் வந்து விழும். 'உங்கள் கணக்கில் ரூ.4.40 லட்சம் அனுப்பியிருக்கிறேன். அதை எடுத்து வையுங்கள். நான் வந்து உங்கள் கடன் பணம் தருகிறேன்' என்பார்கள். அந்த பணத்தை நீங்கள் எடுத்து வைத்திருந்தால் அதை வாங்கிக்கொண்டு, 1.50 கோடிக்கான செக்கை கொடுப்பார்கள். 'நான் 50 லட்சம் தானே கேட்டேன். 1.50 கோடிக்கு கொடுத்திருக்கிறீர்களே...?' என கேட்டால், 'உங்கள் தொகையை எடுத்துக்கொண்டு மீத தொகையை என்னிடம் கொடுத்து விடுங்கள். இப்போதைக்கு எனக்கு சில லட்சம் தேவை' எனச்சொல்லி' அதை வாங்கி சென்று விடுவார்கள்.

அந்த செக்கை வங்கியில் செலுத்தினால்தான் அது போலி என்பதே தெரியவரும். முதலில் கணக்கில் செலுத்தப்பட்ட 4.40 லட்சமும் வேறு யார் கணக்கில் இருந்தோ உங்கள் கணக்குக்கு மோசடியாய் மாற்றப்பட்டிருக்கும். இப்போது பல லட்சங்களை இழந்து, மோசடி வழக்கில் நீங்கள் குற்றவாளியாகியிருப்பீர்கள். இது தான் அந்த மோசடி.

அரிசி, புளியும் ஆன்லைன்ல மோசடி செய்யலாம்
********************************************************************

ஆன் லைன் மூலம் அரிசி, புளி, வேர்கடலை வாங்கி ஏமாற்றிய கதைதான் இது. பொள்ளாச்சியில் ஒரு மிகப்பெரிய குடோன் ஒன்று, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்திடம், உங்களின் புளி, வேர்கடலை எங்களுக்கு தேவை. நாங்கள் கோவை அருகே உள்ள பொள்ளாச்சியில் மிகப்பெரிய விற்பனையாளர் எனச்சொல்லி, நிறுவனம், குடோன்களின் விவரம், படத்தை அனுப்பி வைத்தார்கள். முதலில் சிறிய ஆர்டர்களுக்கு பணம் சரியான நேரத்தில் சென்று விடும்.
நல்ல வாடிக்கையாளர் என்ற பெயரை எடுத்த பின்னர், பெரிய ஆர்டர் ஒன்றை கொடுத்தார்கள். நீங்கள் எங்கள் நிறுவனத்தை பார்த்து விட்டு, நம்பிக்கை இருந்தால் பொருட்களை அனுப்புங்கள் என வலை விரிப்பார்கள். அடுத்த ஓரிரு தினங்களில் பெங்களூரு நிறுவனத்தினர் இங்கு வந்து, நிறுவனத்தை நேரில் வந்து பார்த்து, அதன் உரிமையாளரிடம் பேசி விட்டு செல்வார்.
நிறுவனத்தை பார்த்து விட்டு நம்பி, பெரிய அளவில் லோடு வந்து இறங்கும். ஆனால் அந்த நிறுவனத்துக்கு பணம் மட்டும் வந்து சேராது. அதுவரை தொடர்பு கொண்ட தொலைபேசி எண்கள் செயலிழந்திருக்கும். அந்த இடத்துக்கு போனால் அங்கு வேறு நபர் வேறு டீலிங் பேசிக்கொண்டிருப்பார். அவரிடம் விசாரித்தால் இந்த கம்பெனிக்கு நான்தான் ஓனர். உங்களை யாரோ ஏமாத்திட்டாங்க போல என்பார்கள்.
அடுத்த ஓரிருவாரங்களில் இன்னொரு நிறுவனம் வரும். பொருட்களை தரும். பின்னர் வேறு ஓனர் மாறி இருப்பார். இப்படி அரிசியையும், புளியையும் வாங்கி பல கோடி மோசடி செய்த வரலாறும் கொங்கு மண்டலத்துக்கு உண்டு.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பதுதான் இந்த மோசடி கும்பலின் கேப்டன் பாணி. பினாமி பெயரில் கம்பெனியை பதிவு செய்வர். ஆபீஸ் பிடித்து, போலி வங்கிக் கணக்குகளை துவங்கி, கம்ப்யூட்டர் தெரிந்த ஆளை பணிக்கு அமர்த்தி, கம்பெனியின் எம்.டி. என்கிற அந்தஸ்தில் பணக்கார நபரை நியமித்து, 'நீங்கள் ஆபீஸை பார்த்துகோங்க. மத்த வேலைகளை எல்லாம் (?) நான் பாத்துக்கிறேன்' என்பார். எந்த ஆவணங்களிலும் மோசடி செய்பவரின் பெயர் இருக்காது.

மகாநதி படத்தின் கமல் கேரக்டர் மாதிரி ஒன்றுமே செய்யாமல் எம்.டி.யாக நியமிக்கப்பட்டவர் சிக்குவார். அல்லது தலைமறைவாகி வாழ வேண்டி வரும்.
பல ஆயிரம் கோடியை எட்டிய ஆன் லைன் மோசடி
************************************************************************

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஃபைனான்ஸ் கம்பெனியில் பணத்தை போட்டு ஏமாந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது புதிது புதிதாக முதலீடுகளைப் பெற்று ஏமாற்றுகின்றனர். கோவை, திருப்பூர், கரூர், நாமக்கல், சேலம் உள்ளிட்ட மாவட்ட மக்களை குறிவைத்து நடைபெறும் இந்த மோசடியில் சுருட்டப்படுவது பல ஆயிரம் கோடி ரூபாய்கள்.

அதில் சமீபத்தில் மிகப்பெரிய அளவில் ஏமாற்றப்பட்டது பாசி போரெக்ஸ் மற்றும் பைன் பியூச்சர் மோசடிகள்தான். உங்கள் முதலீடு வெளிநாட்டில் முதலீடு செய்யப்பட்டு, அதில் கிடைக்கும் லாபத்தில் ஒரு பங்கு உங்களுக்கு தரப்படுகிறது என்ற கணக்கில், நீங்கள் ஒரு லட்சம் கட்டினால், மாதம் 8,500 வீடு தேடி வரும். உங்களின் ஒரு லட்சம் பணம் அப்படியே இருக்கும். எப்போது வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம் எனச்சொல்லி, பல ஆயிரம் கோடி முதலீடாக பெறப்பட்டது.
முதலில் மாதா மாதம் கிடைக்கும் தொகை சரியாக வழங்கப்பட்டு வந்தது. முதலீடு பெருமளவில் சேர்ந்த பின்னர், அந்த தொகை நிறுத்தப்பட்டது. சில மாதங்களுக்கு பின்னர்தான், நம் பணம் அம்போ என்பது மக்களுக்கு தெரிந்தது. இன்றும் அந்த மோசடியில் ஏமாந்தவர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கும் நீதிமன்றத்துக்கு நடந்து கொண்டிருக்கிறார்கள். முதலீட்டாளர்களும் கைதாகியிருக்கிறார்கள். ஆனால் மோசடி பணம்தான் என்ன ஆனது என்பதே தெரியவில்லை.

எந்த ஆவணத்திலும் உரிமையாளர்கள் விவரம் இல்லை. நாங்க பணம் வாங்கினோம்னு ஆதாரம் இருக்கா? என தில்லாக கேட்கிறார்கள் இவர்கள். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பாவமாய் முடங்கி கிடக்கிறார்கள். என்னமோ போங்க பாஸ்.

பாசி, பைன் பியூச்சர் மோசடி நடந்த பின்னராவது மக்கள் விழித்திருக்கலாம். ஆனா எங்கே விடுறாங்க. புதுசு புதுசா 
அறிமுகப்படுத்திடுறாங்களே... அடுத்தது விவசாயிகளுக்காக போடப்பட்ட பிரத்யேக ப்ளான். பருவமழை பொய்த்துப்போய் காடு கழனிகளை விற்றுவிடலாமா என்று விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்பொழுது அதிரடியாக கவர்ச்சிகரமாய் அறிமுகப்படுத்தப்பட்டது அந்த மோசடி. என்னானு கேட்கறீங்களா? அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

- ச.ஜெ.ரவி (விகடன் செய்திகள் - 14.08.2015

செல்போன் - நோமோஃபோபியா




தற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம். இத்தகைய செல்போன் ஆரம்பத்தில் வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் பயன்பட்டுவந்தது. ஆனால் தற்போது செல்போன் வழியாகவே நேரத்தைக் கடத்தும் பல பொழுதுபோக்குகள் வந்துள்ளன. இத்தகைய பொழுது போக்குகளால், எங்கு சென்றாலும், குழந்தைகளை அழைத்துச் செல்கின்றோமோ இல்லையோ, செல்போனை உடன் கொண்டு செல்கின்றனர்.

இத்தகைய செல்போன் உயிரை வாங்கும் ஒரு எமன் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த செல்போனால், உடலுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன. ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. உடலுக்கு கொடிய தீங்கை விளைவிக்கக்கூடியவை. அவற்றில் ஒன்று தான் புற்றுநோய். அதுமட்டுமல்லாமல், சிலரால் செல்போனின்றி வேலை செய்யவே முடியாது. இதனால் இது அடிமைத்தனத்தையும் உண்டாக்கும் சக்தியுடையது.

சரி, இப்போது இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னவென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போமா!

தலைவலி செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.

சோர்வு மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளையில் உள்ள செல்களை பாதித்து, விரைவிலேயே சோர்வை உண்டாக்கிவிடும். இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.

தூக்கமின்மை அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தினால், மனதில் கவலை மற்றும் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடும். மேலும் சில நேரங்களில் உளவியல் ரீதியான பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.

ஞாபக மறதி செல்போன்களில் அதிர்வுகள் மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்தினால், ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.

மலட்டுத்தன்மை நிறைய ஆண்கள் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதால், செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மற்றும் வெப்பம், விந்துக்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றை அழித்துவிடும்.

நச்சு எதிர்வினை செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்தணுக்களை உடைத்து, மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும்.

காது கோளாறு மொபைல் போனில் அளவுக்கு அதிகமான சப்தத்தில் வைத்து, நீண்ட நேரம் பாட்டு கேட்டாலோ அல்லது பேசினாலோ, அது செவிப்பறையில் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து, காது வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.

புற்றுநோய் செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள், உடலில் கட்டிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், அது பற்றிய ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. எனவே “வருமுன் காப்பதே நல்லது” என்பதற்கேற்ப, அதனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

அடிமையாக்கும் நோமோஃபோபியா என்னும் ஒருவிதமான நோயை இது உண்டாக்கிவிடும். அதுவும் இது ஒருவித நிலையற்ற மனநிலையை உண்டாக்கி, வித்தியாசமான உலகில் இருப்பது போல் மனநிலையை மாற்றிவிடும். மேலும் சில நேரங்களில் அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்பது போல் செய்துவிடும்.

சனி, 15 ஆகஸ்ட், 2015

SPEED BLINDNESS



நீங்கள் அடிக்கடி தேசிய நெடுஞ்சாலைகளில் 

அதிவேகமாக கார் ஓட்டுபவராக இருந்தால் ஒரு 

விசயத்தை நீங்கள் கவனமாக கருத்தில் 

கொள்ள 

வேண்டும். ஆங்கிலத்தில் அதை SPEED 

BLINDNESS என்று கூறுவார்கள். நீங்க உங்கள் 

வாகனத்தில் சாளரங்கள் அடைக்கப்பட்டு AC 

போடப்பட்டு 100 அல்லது 120 KM வேகத்தில் 

பயணம் செய்து கொண்டிருக்கின்றீர்கள் என்று 

வைத்து கொள்ளுங்கள், சில நேரத்திலேயே 

உங்கள் மூளை அந்த வேகத்திற்கு 

பழகிவிடும்.மேலும் உங்களுக்கு பின்னால் 

மற்றும் முன்னாள் அதே வேகத்தில் 

நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லும் 

பட்சத்தில் அந்த வாகனங்களின் வேகமும் 

உங்களுடையதை ஒற்று இருப்பதால் உங்கள் 

அனைவரின் வேகமும் அளவில் அதிகமாக 

இருந்தாலும் குறைவானதாகவே உங்கள் 

மூளைக்கு புலப்படும்.நீங்கள் மெதுவாக 

செல்வாதாகவே உங்களுக்கு ஒரு தோற்றத்தை 

உங்கள் மூளை ஏற்படுத்தி விடும்.


திடீரென்று உங்கள் முன் செல்லும் வாகனம் 

பிரேக் அடிக்கும் போது கண்ணிமைக்கும் 

நேரத்தில் அந்த வாகனத்தை நீங்கள் எட்டி 

விடலாம் அல்லது நீங்கள் திடீரென்று பிரேக் 

அடிக்கும் பொழுது உங்கள் பின்னால் வரும் 

வாகனம் அதே கண்ணிமைக்கும் நேரத்தில் 

உங்கள் மீதுமோதிவிடலாம்.அப்படியான ஒரு 

இக்கட்டான சமயத்தில் மட்டும் தான் நீங்கள் 

செல்லும் வேகத்தை மூளை ஓர் அதிர்ச்சியுடன் 

கூடிய சூழலில் புரிந்துகொள்ளும் ஆனால் அது 

ஒரு காலம்கடந்த ஞானம் ஆகி நீங்கள் 

சுதாரிப்பதற்குள் விபத்தில் சிக்கிகொள்வீர்கள்.


மூளையின் இந்த குறைபாட்டை தான் 

ஆங்கிலத்தில் SPEED BLINDNESS or MOTION 

INDUCED BLINDNESS என்று 

சொல்வார்கள்.ஆகவே 

நீங்கள் வேகமாக செல்லும் போது அடிக்கடி 

SPEEDOMETERஐ கவனிக்க பழகி கொள்ளுங்கள். 

மேலும் நம் நாட்டில் 90 KMக்கு மேலும் 

வெளிநாடுகளில் 120 KMக்கு மேலும் வேகமாக 

செல்வது ஆபத்து தான். நாம் வாகனம் ஓட்டும் 

போது நம் வரவை எண்ணி நம் வீட்டில் நமக்கு 

பிரியமானவர்கள் வழி மீது விழி வைத்து 

காத்திருப்பார்கள் என்பதை என்றும் மறந்து 

விடாதீர்கள்…!

வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015

சுங்க வரி அதிர்ச்சியளிக்கும் உண்மை.!!




சுங்க வரி அதிர்ச்சியளிக்கும் உண்மை.!! ஒரு சிறப்பு பார்வை..
ஒரு நாட்டின் வளர்ச்சிக்குச் சாலைகள் மிகமிக அவசியம். அனைத்துப் பொருள்களும் உள்நாட்டின் பல பகுதிகளுக்குப் போய்ச் சேரவும், ஏற்றுமதி செய்வதற்காக விமான நிலையம் அல்லது துறைமுகங்களுக்குச் செல்லவும் அகலமான சாலைகள் அவசியம். அகலமான சாலைகள் அமையும்போதுதான், கனரக வாகனங்கள் மற்ற வாகனங்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருக்காது என்பதால்தான் தங்க நாற்கரச் சாலைத் திட்டம் கொண்டுவரப்பட்டது.ஒவ்வொரு முறையும் நெடுஞ்சாலையில் பயணிக்கும்போது, சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்தி இருப்போம் அல்லது பார்த்திருப்போம்.

இந்தியா போன்ற நாடுகளில் பல்லாயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்குச் சாலைகளை அகலப்படுத்தும் பணியை அரசே ஏற்றுச் செய்வது, பொருளாதார ரீதியில் சாத்தியமில்லை என்பதால்தான் இதில் தனியாரை ஈடுபடுத்தும் கருத்து உருவானது. அதாவது, இந்தச் சாலைகளை அமைத்து, பராமரித்து, செலவிட்ட தொகையைக் கட்டணங்கள் மூலம் லாபத்துடன் சம்பாதித்து முடித்த பின்னர், அதை நாட்டுக்கே அர்ப்பணித்துவிட வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். "உருவாக்கு, பயன்படுத்து, ஒப்படை' என்பதுதான் இந்த தனியார்மயத்தின் தாரக மந்திரம்.

அதகளமாய் நிலங்களைக் கையகப்படுத்தி, எல்லாவற்றையும் இடித்துச் சிதைத்து, எல்லாவற்றிலும் மண் நிரப்பி, எந்திரங்களால் அமைக்கப்பட்ட தேசிய நெடுஞ்சாலை இரண்டு பெரிய, இரண்டு சிறிய பட்டைக் கோடுகளாக நீண்டு விரிந்து கிடக்கிறது ஒரு பசியெடுத்த பாம்பு போல. காலம்காலமாய் புழங்கியவனைக்கூட அந்நியப்படுத்திவிட்டு, அவன் புழங்கவும் காசு கேட்க நவீனத் தடுப்பு, கணினி துப்பும் துண்டுச் சீட்டு என சுங்கம் வைத்து சுகமாய் வசூலித்துக்கொண்டு சுறுசுறுப்பாய் ஓட்டச் சொல்லி அடிமைப் படுத்துகிறது மிகப் பெரிய நிறுவன முதலைகள்.

ஆனால் தனியார் நிறுவனங்கள் சாலைகள் உருவாக்கத்தில் பங்குகொண்டு, தற்போது சுங்கக் கட்டணம் என்கிற பெயரில் சுங்க வரி வசூலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் செலவழித்த தொகை எவ்வளவு? ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலாகிறது.? இவர்கள் முதலீட்டை லாபத்துடன் பெறுவது எப்போது? எந்த நாளில் இந்தச் சாலை சுங்கக் கட்டணம் இல்லாதபடி மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் வாகன உரிமையாளர்கள் தண்டம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

அரசால் சுங்கமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம்தான் தனியார் நிர்வகிக்கும் சுங்கங்களிலும் வசூலிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமானது. இப்போது அரசு சுங்கங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.40-ம், தனியார் சுங்கங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 3-ம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பாகுபாடு நியாயமற்றது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மேலும், மேலைநாடுகளிலும் இத்தகைய திட்டத்தில் (உருவாக்கு, பயன்படுத்து, ஒப்படை) சாலைகள் அமைக்கப்படுகின்றன என்பது உண்மையே. ஆனால் அங்கெல்லாம் நடைமுறை என்னவென்றால், அத்திட்டத்துக்காகச் செலவிடப்பட்ட தொகை வட்டியுடன் எவ்வளவு, தற்போதைய தேதி வரை எந்த அளவுக்கு வசூலாகியுள்ளது, தற்போது அந்தச் சாலையில் ஒருவர் செலுத்திய தொகைக்குப் பின் எவ்வளவு குறைகிறது என்பதை டிஜிட்டல் கருவியில் பொத்தானை அழுத்தினாலே போதும், படிக்க முடியும். ஆனால் இந்தியாவில் அத்தகைய வெளிப்படைத்தன்மை இல்லை.

கிருஷ்ணகிரி-தொப்பூர் நாற்கரச் சாலைக்கு ரூ. 160 கோடி செலவானதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தச் சாலையில் மாதம் ரூ. 3 கோடி வசூலாகிறது. அப்படியானால் இந்தத் தனியார் சுங்கத்துக்கு எதற்காக 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்க வேண்டும்??? இதேபோன்று எல்லா சுங்க மையங்களிலும் வசூலாகும் தொகை, இதனால் தனியார் அடையும் லாபம் ஆண்டுக்கு சில நூறு கோடிகளாக இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, அரசு சுங்க மையங்களில் கட்டண வசூலைத் தனியாரிடம் குத்தகைக்கு விட்டுள்ளது இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையம். இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் பினாமிகளால் நடத்தப்படுகின்றன. இதில் வசூல்வேட்டை கோடிகோடியாய் நடந்துகொண்டிருக்கிறது. அரசுக்குப் பெரும் இழப்பு. இதுதவிர, இந்தக் கட்டண மையத்துக்கு உள்பட்ட சாலைகளில் விபத்துகள் நடந்து, குறுக்குத் தட்டிகள் உடைந்துபோனால், தடுப்புகள் சிதைந்தால் அதைச் சரிசெய்தல், நடுத்திட்டில் உள்ள செடிகளைப் பராமரித்தல் இதற்காகத் தனியாக ஒரு பில் கொடுத்து, பணத்தைப் பெறுவதிலும் ஊழல் நடந்துகொண்டிருக்கிறது. இவர்களும் பொய்யான கணக்குகளுக்குப் பணம் கேட்க, அதிகாரிகளும் அதற்கு ஒப்புதல் அளிக்க லஞ்சம் கேட்கிறார்கள்.

இத்தகைய நாற்கரச் சாலைகள் முக்கிய நகரங்களை இணைப்பதாக, தடையற்ற தனிவழியில் அமைய வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் இவை அனைத்தையும் எல்லா ஊர்களையும் தொட்டுச் செல்லும்படியாக அமைத்து, எல்லா வாகனங்களும் கட்டாயமாக இந்தச் சாலைகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் 7,600 கி.மீ. தொலைவுக்கு நாற்கரச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் முக்கியமான சாலைகள் மட்டுமே நாற்கரச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களில் ஏறக்குறைய 1,000 கி.மீ. தொலைவுக்கு மேல் நாற்கரச் சாலைகள் இல்லை.

தமிழ்நாட்டுச் சாலைகளை அகலப்படுத்தியதைப் பாராட்டுவோம். ஆனால்
1. சுங்க வரி என்ற பெயரில் இன்னும் எத்தனை நாளைக்கு மக்களை அநியாயமாகச் சுரண்டப் போகிறார்கள்?
2. செலவிட்ட தொகை, வசூலாகியுள்ள தொகையை மக்கள் காணும் வகையில் டிஜிட்டல் பலகையில் ஒளிரச் செய்தால் என்ன?
3.எல்லா இடங்களிலும் ஒரேமாதிரியான சுங்க வரி நிர்ணயித்தால் என்ன?
4. ஒரு சாலையில் போய்த் திரும்புவதற்கு அதேநாளில் முன்கட்டணம் செலுத்தியவர், 5 நிமிடம் தாமதமாக வந்தாலும் ஏற்க மறுத்து வசூலிப்பது என்ன நியாயம்?
5. ரயிலைத் தவறவிட்டவர்கூட, தனது கட்டணத்தில் ஓரளவு திரும்பப்பெறும் உரிமை இருக்கும்போது, 24 மணி நேரத்துக்குப் பிறகும் சில மணிநேரம் கருணைக்காலமாக அனுமதித்து, கட்டணத்தைக் குறைத்தால்தான் என்ன?

நுழைவு வரி என்பது வரியல்ல. அது ஒரு சேவைக் கட்டணம் என்ற அடிப்படையில் கடுமையான நிபந்தனைகளுக்கு உட்படுத்தி அந்தச் சட்டங்கள் செல்லத் தக்கன என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்தன. வரி விதிப்பதற்கும், சேவைக் கட்டணம் வசூல்செய்வதற்கும் உள்ள வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றங் கள், மாநில அரசு வசூலிக்கும் சேவைக் கட்டணம் உண்மையிலேயே அதற்காகக் கூறப்பட்ட காரணத் துக்காகவே செலவழிக்கப்படுகிறதா அல்லது அவை மறைமுக வரிகளா என்பதைக் கண்காணிக்கும் அதிகாரமும் நீதிமன்றங்களுக்கு உண்டென்று அறிவித்தன. மாநிலங்கள் இயற்றிய சட்டங்களைத் தவிர, மத்திய அரசும் தேசிய நெடுஞ்சாலை சட்டத்தை நாடாளுமன்றத்தில் இயற்றியது. தேசிய நெடுஞ்சாலைகள் மாநில எல்லைகளையும் தாண்டிச்செல்வதால் அவற்றை அமைத்துப் பராமரிக்கும் பொறுப்பு மத்திய அரசுக்குத்தான் உண்டென்று வலியுறுத்தியது. தனியார் சாவடிகள் அமைத்து வாகன ஓட்டுநர்களிடமிருந்து சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கும் நடைமுறை, கடந்த நூற்றாண்டு முடியும்வரை கொண்டுவரப்படவில்லை.

மத்தியில் வாஜ்பாய் தலைமை அமைச்சராக இருந்த நேரம், நாடு முழுவதும் சாலைக் கட்டமைப்பை மேம்படுத்த (கிழக்கு-மேற்கு, வடக்கு-தெற்கு) தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டம் (National Highways Development Programme) மற்றும் சென்னை, மும்பை, கல்கத்தா, டெல்லி ஆகிய நகரங்களை இணைக்கும் தங்க நாற்கர சாலைகள் திட்டம் (golden Quatralierl Plan) ஆகிய மிகப்பெரிய திட்டங்கள் உலக வங்கி (World Bank) மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) ஆகியவற்றின் துணையோடு நடைமுறைபடுத்தப்பட்டன. இத்திட்டங்களை நடைமுறைப்படுத்தவே “தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம்”(National Highways Authority of India-NHAI) என்ற தனி நிறுவனம் அமைக்கப்பட்டது. 2003ம் ஆண்டிற்குப் பிறகு பிற நாட்டு வங்கிகளிடம் கடன் வாங்குவது நிறுத்தப்பட்டு விட்டது.

இத்தகைய நாற்கரச் சாலைகள் முக்கிய நகரங்களை இணைப்பதாக, தடையற்ற தனிவழியில் அமைய வேண்டும் என்பதுதான் நோக்கம். ஆனால் இவை அனைத்தையும் எல்லா ஊர்களையும் தொட்டுச் செல்லும்படியாக அமைத்து, எல்லா வாகனங்களும் கட்டாயமாக இந்தச் சாலைகளைப் பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற நிலைமை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அவல நிலை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மட்டுமே அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும்தான் 7,600 கி.மீ. தொலைவுக்கு நாற்கரச் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற மாநிலங்களில் முக்கியமான சாலைகள் மட்டுமே நாற்கரச் சாலைகளாக மாற்றப்பட்டுள்ளதால், அந்த மாநிலங்களில் ஏறக்குறைய 1,000 கி.மீ. தொலைவுக்கு மேல் நாற்கரச் சாலைகள் இல்லை.

துண்டாடப்பட்ட கிராமங்கள்..

தேசிய நெடுஞ்சாலைகள் இந்தியாவைப் பிணைத் துள்ளதாகக் கூறப்பட்டாலும் அச்சாலைகள் கடந்து செல்லும் கிராமங்கள் அனைத்தும் துண்டாடப் பட்டுள்ளன. நெடுஞ்சாலை செல்லும் பாதையிலுள்ள கிராமங்களைத் துண்டாடாமல் அவற்றை இணைக்கும் வகையில் மேம்பாலங்கள் ஓரிடத்திலும் அமைக்கப் படவில்லை. இங்கிலாந்தில், துண்டாடப்பட்ட ஒவ்வொரு கிராமத்தையும் இணைக்கும் வகையில் நெடுஞ்சாலை களுக்கு மேல் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டிருப் பதைக் காணலாம். 
சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருக் கும் இடங்களில் பயணிகளுக்கான ஓய்வெடுக்கும் அறைகளும் கழிப்பறைகளும், சிற்றுண்டிக் கடைகளும் அமைக்கப்பட்டிருப்பதையும் பார்க்கலாம். ஆனால், இந்தியாவிலுள்ள நிலைமையோ தலைகீழ். துண்டு படுத்தப்பட்ட கிராம மக்கள் நெடுஞ்சாலையைக் கடக்க முற்படும்போது வாகனங்களால் மோதப்பட்டு உயிர்துறப் பதும், ஊனமடைவதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன.

நாம் ஏன் செலுத்த வேண்டும்?

தேவையான நிதியில்லாமை என்று அரசு சொல்கிறது. 2 வழியில் இருந்து 4 வழிச் சாலையாக மாற்ற ஒரு கி.மீக்கு 5-6 கோடி ரூபாய் தேவைப்படும், இதுவே பறக்கும் சாலை எனில் 50-60 கோடி/கி.மீ செலவாகும். 50000 கி.மீ. சாலைகளை மேம்படுத்த அரசிடம் அத்துணை நிதியில்லையாம். அதனால், ஒன்று உலக வங்கியிடம் கடன் வாங்கி திருப்பச் செலுத்துகிறது அல்லது தனியாரிடம் சாலைகளைக் கொடுத்து மேம்படுத்தச் சொல்லிவிட்டு, நம்மிடம் பணம் வசூலிக்கிறது. சாலைகள் என்று மட்டுமல்ல, மின்சாரம், விமானதளம், குடிநீர், துறைமுகம் என அனைத்துத் துறைகளிலும் இந்த முறையை இந்திய‌ அரசு நடைமுறையில் கொண்டு வ‌ந்துள்ளது.

எத்தனை வருடம் செலுத்த வேண்டும்?

ஆண்டுக்கு 1 லட்சம் வாகனங்களுக்கு குறைவாக இருப்பின் கட்டணங்களை மீண்டும் ஒருமுறை உயர்த்திக் கொள்ளலாம் என்பது விதி. ஆனால், நடைமுறையில் ஒவ்வொரு வருடமும் கட்டணம் (6-7.5%) உயர்த்தப்படுகிறது. 27 வருட‌ங்களுக்குப் பிறகு நாம் கட்டணம் செலுத்தத் தேவை இருக்காது என்று சொல்லப்படுகிறது. ஆனால் அந்தக் காலம் முடிந்தபின்பும் பராமரிப்புக்கென்று பல நாடுகளில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மதுரையில் திருமங்கலத்தையும், மாட்டுத் தாவணியையும் இணைக்கும் சாலைக்கான கட்டணக் காலம் முடிவடைந்த பின்பும், சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள் என்று விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். மாநகராட்சிக்கு நிதி சேர்கிறது என்று ஒரு காரணம் சொல்கிறார்களாம். ஆனால் மக்களின் பணம் தனியார் நிறுவனத்திற்கும் போய்ச் சேருகிறது என்பதை கணக்கில் எடுக்க வேண்டும். இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் விசாரிக்க வேண்டும்.

யாருக்கு செலுத்த வேண்டும்?

இந்திய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட நிறுவனம் சுங்சச் சாவடிகள் மூலம் வசூலிக்கும். அவ்வாறு வசூலித்த பணத்தின் ஒரு பகுதியை ஒப்பந்த நிறுவனமும், மற்றொரு பகுதியை அரசும் பங்கு போட்டுக் கொள்ளும். எந்த நிறுவனம் குறைந்த பங்குபோட்டுக் கொள்ளும் விகிதத்தை (viability gap fund) ஒப்பத்தப்புள்ளியில் கோருகிறதோ, அந்நிறுவனத்திற்கே ஒப்பந்தம் கொடுக்கப்படும்.

வாகனங்கள் வாங்கும்போது, நாம் செலுத்தும் சாலை வரி எங்கு செல்கிறது? சாலை போடுவதற்குக் கூட தனியாரிடம் கையேந்தும் நிலையில்தான், செவ்வாய்க்கு இராக்கெட் அனுப்ப கோடி, கோடியாக பணத்தை செலவழிப்பதேன்? இவையெல்லாம் தனியார்மயத்தின், உலகமயத்தின் விளைவுகள். அனைத்தையும் தனியாரிடம் ஒப்படையுங்கள் என்பதுதான் உலகமயத்தின் மூலக் கொள்கை. அதைத்தான் இந்திய அரசு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.

அரசால் சுங்கமாக எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும்?

தனியார் நிறுவனங்கள் சாலைகள் உருவாக்கத்தில் பங்குகொண்டு, தற்போது சுங்கக் கட்டணம் என்கிற பெயரில் சுங்க வரி வசூலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் இவர்கள் செலவழித்த தொகை எவ்வளவு? ஒரு நாளைக்கு எவ்வளவு வசூலாகிறது.? இவர்கள் முதலீட்டை லாபத்துடன் பெறுவது எப்போது? எந்த நாளில் இந்தச் சாலை சுங்கக் கட்டணம் இல்லாதபடி மக்களுக்கு அர்ப்பணிக்கப்படும் போன்ற எந்தத் தகவலும் இல்லாமல் வாகன உரிமையாளர்கள் தண்டம் கட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

அரசால் சுங்கமாக எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறதோ அதே கட்டணம்தான் தனியார் நிர்வகிக்கும் சுங்கங்களிலும் வசூலிக்கப்பட வேண்டும் என்று சொல்லும் லாரி உரிமையாளர்களின் கோரிக்கை நியாயமானது. இப்போது அரசு சுங்கங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 1.40-ம், தனியார் சுங்கங்களில் ஒரு கி.மீ. தொலைவுக்கு ரூ. 3-ம் வசூலிக்கப்படுகிறது. இந்தப் பாகுபாடு நியாயமற்றது என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

உரிமம் காலம் ஏன் நீடிப்பு..

15 வருடம் சுங்கம் வசூலிக்கும் உரிமம் பெற்றவருக்கு மத்திய அரசு உரிமக் காலத்தை 30 ஆண்டுகள் நீட்டித்து வழங்கியது. அதன் பின்னணி ரகசியமாகவே வைக்கப்பட்டுள்ளது. சாலை அமைப்பதற்கும் அதைப் பராமரிப்பதற்கும் உண்டான செலவினங்களைவிடப் பன்மடங்கு ஆதாயம் பார்த்துவிட்டன இந்த ஏற்பாடுகள். தனியார் நிறுவனங்கள் அரசு ஆதரவுடன் கோடிக் கணக்கில் சுங்கம் வசூலித்துக் கொள்ளையடித்துவருவது தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்களுடைய பொறுமைக்கும் எல்லை உண்டு. நாசிக்கும் பள்ளிகொண்டாவும் எதிர் காலப் பாடத்தை நமக்குக் கற்பிக்கின்றன.

அரசின் உதவியோடு, சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு உங்கள் பணத்தை கொள்ளையடிக்க முடியுமா..? முடியும்..!!
20 ஆண்டுகளுக்கு முன் சுமார் 80 கோடி செலவில் அமைக்க பட்ட 90கிமீ சாலைக்கு சுங்கவரியாக கடந்த10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 2,268 கோடிகள் தனியாரால் வசூலிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தோராய கணக்கு மட்டுமே, உண்மையில் இதைவிட மூன்று மடங்கு வசூல் நடந்திருக்க வாய்ப்புண்டு..
சென்னை - திருச்சி, சாலையில் செங்கல்பட்டு அருகே பரனுரில் உள்ள தனியாருக்கு சொந்தமான சாலை சுங்கவரி சாவடியை கடந்து செல்லாதவர்களே தமிழகத்தில் இருக்க முடியாது. அப்படி கடந்து சென்றவர்கள் சொந்த வாகனம் அல்லது பேருந்தில் என எப்படி சென்றிருந்தாலும் வரி செலுத்தியுள்ளோம். காரணம் பேருந்து கட்டணம் சாலைவரி சேர்த்தே கணக்கிட படுகிறது. ஒருஅரசு பேருந்து சென்னையில் இருந்து திருச்சி சென்று திரும்பி வர, சுமார் 3000 ரூபாய் தனியாருக்கு சுங்கவரி செலுத்த வேண்டும். ஆக அந்த பணமும் பயண கட்டணத்தோடு சேர்க்கப்படுகிறது.
ஒரு நாளைக்கு சுமார் 90 ஆயிரம் வாகனங்கள் இந்த சாவடியை கடக்கிறது, சிறிய வாகனத்திற்கு ரூ.35ம், நடுத்தர சரக்கு வாகனத்திற்க்கு ரூ.70ம், பேருந்து, லாரி போன்றவற்றிர்கு ரூ110ம், கண்டெய்னர் போன்ற பெரிய சரக்கு வாகனத்திற்க்கு ரூ.210ம் வசூலிக்க படுகிறது. நாம் தோராமாக ஒரு வாகனத்திற்கு ரூ70 என கணக்கிட்டால்.
90,000×70= 63,00,000 ஒரு நாள் வசூல்.
63,00,000×30= 18,90,00,000 ஒரு மாத வசூல்.
18,90,00,000×12= 226, 80,00,000 ஒரு வருட வசூல் 226 கோடி 80லட்சம்.
226,80,00,000×10 = 2,268,00,00,000.
வெறும் 80 கோடியை முதலீடு செய்து விட்டு தனியார் நிறுவனம் கடந்த 10 வருடத்தில் வசூல் செய்த பணத்தை கணக்கிட்டாலே 2,268 கோடிகள்.
ஒரு சாலையில் இவ்வளவு என்றால் இந்தியா முழுவதும் எத்தனை லட்சம் கோடிகள் கொள்ளை நடக்கிறது..?
இப்போது சொல்லுங்கள் இது சுங்க வரியா..? பகல் கொள்ளையா..?

முடிவு : இந்தியா நெடுகிலும் வழவழப்பான சாலைகள் அமைத்தும் போக்குவரத்துச் சிக்கல்கள் தீராதது மட்டுமின்றிப் பல இடங்களில் சுமுகமான போக்குவரத் துக்கான தடைகள் நீடிக்கின்றன. சுங்கச்சாவடிகளில் நடக்கும் வசூல் கொள்ளைகளை எதிர்த்து வரும் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்துவருகின்றன.

கத்தியைக் காட்டினால் மட்டும்தான் வழிப்பறி என்றில்லை. இந்தச் சாலைகளில் முறையற்ற, வெளிப்படை கணக்குகள் இல்லாத சுங்க வசூலும் வழிப்பறிதான்.

இந்த வழிப்பறியில் இருந்து மக்களைக் காப்பாற்றும் கடமை உடைய அரசு, சுங்க வழிப்பறிக்குத் துணை நிற்கும் இந்த அவலத்தை எதிர்த்துக் குரல் கொடுக்க மக்கள் முன்வர வேண்டும். இந்த அக்கிரமத்தைத் தட்டிக் கேட்க எந்த அரசியல் கட்சியும் முன்வராத நிலையில் மக்களும் மௌனம் காத்தால், வழிப்பறி நியாயப்படுத்தப்பட்டுவிடும்!

இதை நாம் எதிர்க முடியாது காரணம் தனியார் முதலீட்டை வரவேற்க்கும் அரசு செய்துள்ள ஒப்பந்தம் அப்படி, இந்தியாவில் தனியார் மற்றும், வெளிநாட்டு நிறுவனங்களை அரசு வரவேற்க்க காரணம் புரிகிறதா..? அணைத்திலும் பங்கு, இதில் மன்மோகனுக்கும், மோடிக்கும் எந்த வேறுபாடும் இல்லை..!!

இந்தியா மிளிர உருவாக்கப்பட்ட நாற்கரச் சாலைகள், மக்களின் செல்வத்தைப் பெருமளவில் கொள்ளை யடித்துக்கொண்டிருக்கும் இரும்பு முதலைகளாக மாறிவிட்டன. புதிதாகப் பதவியேற்றுள்ள அரசு, இந்தப் பிரச்சினையில் தனது கவனத்தைச் செலுத்துமா? அரசமைப்புச் சட்டப்படி, வாகனங்களின் தங்குதடையற்ற போக்குவரத்துக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பராமறிப்பிற்கு ஆகும் தொகையை மட்டும் சுங்கம் பெற அரசு ஏற்று இந்த தனியார் முதலைகள் அகற்றப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது!!

புதன், 12 ஆகஸ்ட், 2015

பல்லி , எறும்பு ,எலி தொல்லையில் இருந்து விடுபட



பல்லிகளை விரட்டுவதற்கான சில எளிய 
வீட்டுக் குறிப்புகள்!!!

வீட்டில் காணப்படும் பல்லிகள் நமக்கு பெரும் 

தொல்லையாக அமைகின்றன. நமக்கு 

தொல்லை தரும் பெரும்பாலான பூச்சிகளை 

அழித்து அவற்றின் எண்ணிக்கையைக் 

குறைப்பதில் இவை உதவினாலும், நமது 

வீடுகளுக்குள் பல்லிகளைக் காண்பதை நாம் 

விரும்புவதில்லை.

நமக்கு இவை வேண்டாத விருந்தாளிகளே. 

கடைகளில் காணப்படும் பல்லி விரட்டி 

மருந்துகள் நச்சுத்தன்மை கொண்டவை. 

குழந்தைகளுக்கு வீட்டில் வளர்க்கும் செல்லப் 

பிராணிகளுக்கும் மிகவும் ஆபத்தானவை. 

எனவே யாருக்கும் ஆபத்தை உண்டாக்காத, 

சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் பல்லிகளை 

விரட்டுவதற்கான எளிய வழிமுறைகளைப் 

பின்வருமாறு காணலாம்.

காபித்தூள்

சிறிது காபித்தூளை மூக்குப்பொடியுடன் கலந்து 

சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும். 

பல்குத்தும் குச்சிகளின் முனையில் 

இவ்வுருண்டைகளைக் குத்தி, பல்லிகள் 

நடமாடும் இடங்களில் அவற்றை வைக்கவும். 

இவற்றை உண்ணும் பல்லிகள் மடிந்துவிடும்.


நாப்தலின் உருண்டைகள்

நாப்தலின் உருண்டைகள் சிறந்த 

பூச்சிக்கொல்லிகள். உங்கள் வீட்டு 

அலமாரிகளிலும், சிங்க்குகளிலும், கேஸ் 

அடுப்புக்கு அடியிலும் போட்டு வையுங்கள். 

பல்லிகளை விரட்டும் சிறந்த முறை இது.

மயில் இறகுகள்

மயில் இறகுகளைப் பார்த்து பல்லிகள் 

பயப்படும். 

பல்லிகள் வசிக்கும் இடங்கள், நடமாடும் 

இடங்களுக்கு அருகிலுள்ள சுவர்களில் மயில் 

இறகை ஒட்டி வையுங்கள். பூச்சாடிகளில் 

மயிலிறகைப் போட்டு வையுங்கள். இதனால் 

உங்கள் வீட்டிலிருந்து பல்லிகள் ஓடிவிடும்.

மிளகுத் தூள்,

பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே மிளகுத் தூளை 

தண்ணீருடன் கலந்து கொண்டு ஒரு 

பூச்சிக்கொல்லி ஸ்ப்ரே தயாரியுங்கள். 

சமையலறையில் உள்ள அலமாரிகள், 

டியூப்லைட் இடுக்குகள், அடுப்புகளுக்கு 

அடிப்புறம் மற்றும் ஃப்ரிட்ஜ் அடிப்புறம் 

ஆகியவற்றில் இக்கலவையைத் தெளியுங்கள். 

இந்த வாசனையினால், எரிச்சலடைந்து 

பல்லிகள் ஓடிவிடும்.

குளிர்ந்த நீர்

ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சி செய்யப்பட்ட 

தண்ணீரை பல்லிகள் மீது தெளியுங்கள். இதன் 

மூலம் பல்லியின் உடல் வெப்பநிலை குறைந்து 

அவற்றால் அசைய முடியாத நிலை உண்டாகும். 

அப்போது ஒரு அட்டைப் பெட்டிக்குள் பிடித்து 

அடைத்து, வீட்டிற்கு வெளியே வீசி விடுங்கள்.


வெங்காயம்

வெங்காயத்தை மெல்லிய துண்டுகளாக வெட்டி 

சுவர்களில் தொங்கவிடுங்கள். பல்லிகளின் 

மறைவிடங்களில் போட்டு வையுங்கள். 

வெங்காயத்திலுள்ள கந்தக ஆவியானது 

பல்லிகளால் சகிக்கமுடியாத மணத்தை 

உண்டாக்கும். இதனால் பல்லிகள் அவ்விடத்தை 

விட்டு ஓடிவிடும்.

முட்டை ஓடுகள்

முடிந்த அளவுக்கு முழுதாகக் காட்சியளிக்கும் 

கோழி முட்டை ஓடுகளை பல்லிகள் நடமாடும் 

பகுதிகளில் போட்டு வையுங்கள். வீட்டுக்குள் 

வேறு ஒரு பெரிய உயிரினம் இருப்பதாகக் கருதி 

பல்லிகள் ஓடிவிடும். முட்டை ஓடுகளை 3-4 

வாரங்களுக்கு ஒருமுறை மாற்றவேண்டும்.


பூண்டு

ஸ்ப்ரே பாட்டில் ஒன்றை எடுத்துக் 

கொள்ளுங்கள். அதில் வெங்காயச் சாறு மற்றும் 

தண்ணீரைக் கலந்து எடுத்துக் கொள்ளுங்கள். 

அதில் சிறிதளவு பூண்டுச் சாற்றினைக் 

கலக்கவும். நன்றாகக் குலுக்கி, இதனை வீட்டு 

மூலைகளிலும், விரும்பும் வேறு இடங்களிலும், 

தெளியுங்கள் அல்லது பூண்டுப் பற்களைக் கூட 

வீட்டு மூலைகளில் வைத்து பல்லிகளை 

விரட்டலாம்.
-------------------------------------------------------------------------------------------------
வீட்டில் எறும்பு தொல்லை போக்க 10 

பொருட்களைக் கொண்டே போக்கலாம்.

வீட்டில் சமையலறைக்கு சென்று சர்க்கரை 

டப்பாவை திறந்தால் எறும்புகளாக உள்ளதா? 

மேலும் வீட்டின் மூலைகளில் எறும்புகள் 

ஓட்டை போட்டு தங்கியுள்ளதா? இவற்ற 

அழிப்பதற்காக கடைகளில் சென்று மருந்துகள் 

கலந்த சாக்பீஸ் பயன்படுத்தியிருப்பீர்கள். 

ஆனால் வீட்டில் சிறு குழந்தைகள் இருந்தால், 

இந்த சாக்பீஸ்களைப் பயன்படுத்த முடியாது.

ஆனால் இந்த எறும்புகளை வீட்டில் இருக்கும் 

சில பொருட்களைக் கொண்டே போக்கலாம். 

மேலும் இந்த இயற்கைப் பொருட்கள் 

அனைத்தும் எந்த ஒரு தீங்கையும் 

ஏற்படுத்தாதவை. அது என்ன பொருட்கள் என்று 

தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா? 

அப்படியெனில் இப்போது எறும்புகளின் 

தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 

இயற்கை பொருட்கள் என்னவென்று 

பார்ப்போமா!!!

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசமமாக 

கலந்து, அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, 

எறும்புகள் மொய்க்கும் இடத்தில் தெளித்தால், 

எறும்புகள் அழிந்துவிடும்.

மசாலாப் பொருட்கள்

மசாலாப் பொருட்களான மிளகு தூள், மஞ்சள் 

தூள், பட்டைத் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை 

எறும்புகள் வரும் இடத்தில் தெளித்தால், 

எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

வெள்ளரிக்காய்

எறும்புகளை கொல்வதற்கு உதவும் 

பொருட்களில் ஒன்று தான் வெள்ளரிக்காய். 

அதற்கு வெள்ளரிக்காயை எறும்புகள் வரும் 

இடத்தில் வைத்தால், எறும்புகள் வராமல் 

தடுக்கலாம்.

புதினா

புதினாவை உலர்த்தி, அதனை பொடி செய்து, 

அவற்றை எறும்புகள் வரும் இடங்களான 

ஜன்னல் கதவுகள் மற்றும் வீட்டின் மூலைகளில் 

உள்ள ஓட்டைகளில் தெளித்தால், எறும்புகள் 

வராமல் இருக்கும்.


பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை


பேக்கிங் சோடாவுடன் சரிசமமான அளவில் 

சர்க்கரை சேர்த்து கலந்து, அதனை எறும்புகள் 

வரும் இடத்தில் தூவினால், எறும்புகள் 

அவற்றை சாப்பிட்டு, இறந்துவிடும்.


டால்கம் பவுடர்

இது மிகவும் சிறப்பான ஒரு எறும்புக் கொல்லிப் 

பொருள். அதற்கு எறும்புகள் உள்ள இடத்தில் 

டால்கம் பவுடரை தூவி விட வேண்டும்.

கிராம்பு

கிராம்பு சர்க்கரை டப்பாவில் 1-2 கிராம்புகளை 

போட்டு வைத்தால், எறும்புகள் சர்க்கரை 

டப்பாவில் வராமல் இருக்கும்.

பூண்டு

பூண்டுகளை தட்டி, அதனை எறும்புகள் உள்ள 

இடத்தில் வைத்தால், நொடியில் எறும்புகள் 

அனைத்தும் மாயமாய் மறைந்துவிடும்.

எலுமிச்சை சாறு

எறும்புகள் மொய்க்கும் இடத்தில் சிறிது 

எலுமிச்சை சாற்றினை ஊற்றினால், இனிமேல் 

எறும்புகள் வராமல் இருக்கும். அதிலும் வீட்டை 

மாப் கொண்டு துடைக்கும் போது, எலுமிச்சை 

சாறு கலந்த நீரில் நனைத்து துடைத்தால், 

எறும்புகள் வருவதைத் தடுக்கலாம்.

போராக்ஸ்

போராக்ஸ் பவுடரை எறும்புகள் உள்ள இடத்தில் 

தூவியோ அல்லது சர்க்கரை நீரில் கலந்தோ 

தெளித்தால், எறும்புகளின் தொல்லையில் 

இருந்து விடுதலைக் கிடைக்கும்.

---------------------------------------------------------------------------------
----------------
எலி தொல்லையில் இருந்து விடுபட சில எளிய இயற்கை வழிகள்!!!

வீட்டில் அங்கும் இங்கும் ஒடி பயமுறுத்தும் 

எலிகளைப் பிடிப்பதற்கு முன்பெல்லாம் எலிப் 

பெட்டியைப் பயன்படுத்துவோம். ஆனால் 

தற்போதுள்ள எலிகளோ சாமர்த்தியமாக 

இருக்கிறது. எலிப் பெட்டியைக் கண்டாலே 

பயந்து ஓடும் எலிகள், தற்போது அதன் மேல் ஏறி 

இறங்கி விளையாடிக் கொண்டிருக்கிறது. 

அதனால் கடைகளில் விற்கப்படும் எலி 

பிஸ்கட்டுகளை வாங்கி வைக்கலாம் என்றால், 

வீட்டில் குழந்தைகள் இருப்பதால் பயமாக 

உள்ளது. எனவே அந்த எலிகளை இயற்கை 

முறையில் அழிப்பதற்கும், அதனை வராமல் 

செய்வதற்கும் ஒருசில வழிகள் உள்ளன. அந்த 

இயற்கை வழிகளைப் பின்பற்றினால், நிச்சயம் 

எலிகள் வருவதைத் தடுக்கலாம்.

பூனை

பூனைகளை வளர்த்து வாருங்கள் உங்களுக்கு 

செல்லப் பிராணிகள் பிடிக்கும் என்றால், வீட்டில் 

பூனைகளை வளர்த்து வாருங்கள். வீட்டில் 

பூனை 

இருந்தால், எலி வீட்டிற்குள் வரவே வராது.

புதினா

எலிகளுக்கு புதினாவின் வாசனையே 

பிடிக்காது. 

மேலும் அந்த வாசனை இருந்தாலே அவை 

போய்விடும். எனவே எலி பொந்து உள்ள 

இடத்தில் ஒரு காட்டனில் புதினா எண்ணெயை 

நனைத்து பொந்தினுள் வைத்தால், அதன் 

வாசனையை நுகரும் எலியின் நுரையீரல் 

சுருங்கி இறந்துவிடும்.

மனிதனின் முடி

மனிதனின் முடி உள்ள இடத்திலேயே எலிகள் 

நிற்காது. இதற்கு முக்கிய காரணம், எலிகள் 

முடியை விழுங்கிவிடும். இப்படி அவை முடியை 

விழுங்கினால், அவை இறந்துவிடும்.

நாப்தலின் உருண்டை

நாப்தலின் உருண்டை மனிதர்களுக்கு மிகவும் 

ஆபத்தானது. எனவே நிச்சயம் இது 

எலிகளுக்கும் ஆபத்தானது தான். எனவே 

இதனைப் பயன்படுத்தியும் எலிகளை 

அழிக்கலாம்.

அம்மோனியா

எலி பொந்துகளில் சிறிது அம்மோனியாவை 

தெளித்தால், அதன் நாற்றத்திலேயே எலிகள் 

இறந்துவிடும்.

மாட்டு சாணம்

எலிகளை இயற்கையாக அழிக்க 

வேண்டுமானால் மாட்டுச் சாணம் 

பயன்படுத்தலாம். அதற்கு மாட்டுச்சாணத்தினை 

சிறு உருண்டைகளாக பிடித்து, அதன் மேல் சீஸ் 

தடவி வைத்தால், அதனை எலிகள் சாப்பிட்டு, 

அதன் வயிற்றில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு, 

வாந்தி எடுத்து, இறந்துவிடும்.

ஆந்தை

கடைகளில் பிளாஸ்டிக்கில் விற்கப்படும் 

ஆந்தை பொம்மையை எலி வரும் இடத்தில் 

வைத்தால், எலிகள் பயந்து வராமல் இருக்கும்.

மிளகு

எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி 

விட்டால், அதனை நுகரும் போது, அதன் 

நுரையீரலில் எரிச்சல் ஏற்பட்டு, மூச்சு விட 

முடியாமல் இறந்துவிடும்.

பிரியாணி இலை

பிரியாணி இலையின் நாற்றம் எலிகளுக்கு 

பிடிக்காது. எனவே அந்த இலையை பொடி 

செய்து எலி வரும் இடத்தில் தூவி விட்டால், 

அதன் நாற்றத்திலேயே இறந்துவிடும்.

வெங்காயம்

எலிகளை அழிப்பதற்கு பயன்படும் இயற்கை 

பொருட்களில் ஒன்று தான் வெங்காயம். அதற்கு 

வெங்காயத்தை நறுக்கி, எலி தங்கும் பொந்தில் 

வைத்தால், அதனை உட்கொண்டு எலிகள் 

அழியும்.

பேபி பவுடர்

பேபி பவுடரை எலி தங்கும் மற்றும் வரும் 

இடத்தில் தூவினால், எலிகள் அந்த 

வாசனையால் இறக்கக்கூடும்.