சனி, 3 மே, 2014

செல்போன் கிடைக்கும்



இந்தியாவில உங்க செல்போன் 


தொலைஞ்சுதுன்னா இனிமே கவலைப்பட 

வேண்டாம். எப்படியும் அது உங்களுக்குத் 

திரும்பக் கிடைக்கும். அதுக்கு நீங்க செய்ய 

வேண்டியவை :



1. உங்கள் செல்போனிலிருந்துக்கு*#06# டயல் 

செய்யுங்க


2. உங்க மொபைல்ல ஒரு 15 டிஜிட் நம்பர் வரும்


3, இதுதான் உங்க போனின் IMEI No 

(அப்படின்னா?) அதனை உடனே பத்திரமா நோட் 

பண்ணி வைச்சுக்குங்க..


4. செல்போன் தொலைஞ்சு போச்சுன்னா உடனே 

இந்த நம்பரை cop@vsnl.netக்குமெயில் 

பண்னுங்க!

5. போலீஸூக்கெல்லாம் போக வேண்டாம்.

6. உங்க மொபைல் போனை 24 மணி நேரத்தில் 

GPRS மற்றும் internet மூலம் 

கண்டுபிடிச்சுடுவாங்க.

7. உங்க மொபைல் போன் நம்பரை மாத்தினால் 

கூட போன் எங்கிருந்து ஒர்க் ஆகுதுன்னு 

ஈஸியா தெரிஞ்சுக்கலாம்.

சமையலறை சமாளிப்பு


சமையலறை சமாளிப்புகள்
இட்லி மாவில் உளுந்து போதாமல், மாவு கெட்டியாயிருந்தால் பச்சை அப்பளங்களைத் தண்ணீரில் நனைத்து மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் ஓடவிட்டு மாவில் கலந்து விடுங்கள். இட்லி மிருதுவாகவும் மென்மையாகவும் இருக்கும்.
சமைக்கும்போது உருளைக்கிழங்குகளை மிக அதிகமாக வேகவிட்டு விடுவது உண்டு. இம்மாதிரி சமயங்களில் உருளைக்கிழங்குகள் மாவுபோல ஆகிவிடாமல் தடுக்க, பால் பவுடர் தூளைக் கொஞ்சம் கிழங்குகள்மேல் தூவி விடுங்கள் - சிறிது நேரத்தில் கிழங்குகள் கெட்டிப்பட்டுவிடும்.
"சொத சொத'வென்று சப்பாத்தி மாவு ஆகிவிட்டதா? கவலையே வேண்டாம். ஃப்ரீசரில் ஓர் அரைமணி நேரம் வைத்த பின் எடுத்து உருட்டி சப்பாத்திகளாக இடுங்கள். மாவு இறுகி விடுவதால் சுலபமாக இட வரும்.
கோதுமை, மைதா போன்ற மாவுகளைப் பயன்படுத்திப் பூரி, சப்பாத்தி செய்யும்போது, மாவு தேவையான அளவு இல்லை என்று தெரிந்தால், உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் அகற்றிப் பிசைந்து அதை கோதுமை அல்லது மைதாவுடன் சேர்த்துப் பிசைந்து பூரி, சப்பாத்தி செய்யலாம்.
சாம்பாரில் உப்பு கூடினால் ஒரு முள்ளங்கியை தோல் சீவி நறுக்கி சாம்பாரில் போட்டு 5 நிமிடம் கொதிக்க விடுங்கள். அதிகமாக உள்ள உப்பின் சுவை குறைந்துவிடும்.
வத்தக் குழம்பு மற்றும் காரக் குழம்பில் காரம் அதிகமாகிவிட்டால் கவலை வேண்டாம். சிறிது தேங்காய்ப்பால் விட்டு இறக்குங்கள். காரம் குறைவதுடன் சுவையும், மணமும் பிரமாதமாக இருக்கும்.
தக்காளி சூப் நீர்த்து இருந்தால், மாவு கரைத்துவிடுவதற்குப் பதில் அதில் ஒரு வெந்த உருளைக்கிழங்கை மசித்து சேர்க்கவும். சத்தும், ருசியும் அதிகரிக்கும்.
தோசை வார்க்கும்போது தோசை ரொட்டி போல் வந்தால், சாதம் வடித்த கஞ்சியைச் சிறிதளவு தோசை மாவில் கலந்து தோசை வார்த்துப் பாருங்கள். தோசை பூப்போல் மிருதுவாய் இருக்கும்

வெள்ளி, 2 மே, 2014

ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு

தலைப்பைச் சேருங்கள்
அன்பையும், பாச உணர்வையும், உதவும் மனத்தையும் – எல்லாவற்றிற்கும் மேலாக மனித நேயத்தையும் அடிப்படையாக கொண்டு தூய தமிழ் இனத்தவராம், மன்னர் பின்னோராம், மூவேந்தருக்குப்பின் சைவத்தையும், தமிழையும் காத்தும் வளர்த்தும் வரும் இனத்தவராம் நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் சமூக இன முன்னேற்றதிற்காக, அவர்களில் நலிந்த பிரிவினர்களுக்கு உதவி கை தூக்கிவிட்டு, நகரத்தார்களின் உயர்ந்த பண்பாட்டையும், பழக்க வழக்கங்களை நிலை நிறுத்துவதற்காக, அரேபிய பாலைவனங்களுக்கிடையே சோலைவனமாய் விளங்கும் ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் நகரத்தார்களால் நகரத்தார்களுக்காக நகரத்தார்களினால் இயங்கி வரும் உன்னத அமைப்பே "ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு" ஆகும்.

















வியாழன், 1 மே, 2014

ஒவ்வொரு குழந்தையும் வரம்





ஒவ்வொரு குழந்தையும் வரம்


ஒவ்வொரு பெற்றோரும் கண்டிப்பா படிக்க வேண்டிய

பயனுள்ள தகவல்! ! ! !

1. பசி என்று குழந்தை சொன்னால்,

உடனே உணவு கொடுங்கள்,

அரட்டையிலோ, சோம்பலிலோ,

வேறு வேலையிலோ குழந்தையின்

குரலை அலட்சியப்படுத்தாதீர்கள்!



2. மேலாடையின்றியோ,

ஆடையே இன்றியோ குழந்தைகள்

உங்களுக்கு குழந்தையாய்

தெரியலாம், எல்லோருக்கும்

அப்படியே தெரியும்

என்று எண்ணிவிடாதீர்கள்.


3. ஒருபோதும் "ச்சீ வாயை மூடு"

"தொணதொண

என்று கேள்வி கேட்காதே"

என்று அவர்களிடம் எரிச்சல் காட்டி,

அவர்களின்

ஆர்வத்தை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்!

4. பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில்

தனியாகவோ, பிற

குழந்தைகளுடனோ அனுப்பினால்,

அந்த வாகன ஓட்டுனரின்

முழு விவரமும்

தெரிந்து கொள்ளுங்கள், அவர்

வீட்டு முகவரி உட்பட.

5. வாகன ஓட்டுனரின் நடத்தையிலும்,

பழக்க வழக்கத்திலும்

ஐயமின்றி தெளிவுறுங்கள்!

6. பெரும்பாலான வாகன ஓட்டுனர்கள்,

மூட்டைகளை போல்

குழந்தைகளை அடைத்து,

மரியாதையின்றி பேசுவதும், தொடக்

கூடாத இடங்களை தொடுவதும், சில

இடங்களில் நடக்கிறது.

7. யார் அழைத்தால் போக வேண்டும்,

யார் கொடுத்தால் வாங்க வேண்டும்

என்று குழந்தைகளுக்கு தெளிவுப்படுத்துங்கள்

8. குழந்தைகள், வீட்டின் முகவரி,

பெற்றோரின் தொலைப்பேசி எண்கள்

அறிந்திருத்தல் நலம்.

9. வீட்டில் ஒன்றுக்கு மேற்பட்ட

குழந்தைகள் இருந்தால், ஒருபோதும்

ஒருவருடன்

மற்றவரை ஒப்பிட்டு பேசாதீர்கள்,

வயது வித்தியாசம்

எப்படி இருந்தாலும்!

10. ஒரு கட்டத்திற்கு மேல், உங்கள்

விருப்பங்களை குழந்தையின் மேல்

திணிக்காதீர்கள்.

11. வீட்டில் குழந்தைகள் இருக்கும்

போது, வன்முறை, காதல், கொலை,

களவுப் போன்றவை நிறைந்த

திரைக்காட்சிக்களையோ,

நிகழ்ச்சிகளையோ பார்க்காதீர்கள்!

12. பெரியவர்கள், பெண்கள்

எப்போதும் சீரியல்களில்

மூழ்கி இருக்காமல்,

குழந்தைகளுக்கு பிடித்தாற்போலோ,

அல்லது அவர்களுக்கு பொதுஅறிவு பெருகும்

வகையிலான

நிகழ்ச்சிகளை பார்ப்பது நலம்.

13. குழந்தைகளிடம் தினம் நேரம்

செலவிடுங்கள், ஒரு தோழமையுடன்

அவர்கள்

சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.

14. தவறுகளை தன்மையுடன்

திருத்துங்கள், தண்டிக்க

நினைக்காதீர்கள்!

15. ஒருமுறை நீர் ஊற்றியவுடன்,

விதை மரமாகிவிடாது, நீங்கள்

ஒருமுறை சொன்னவுடன் குழந்தைகள்

உங்கள் விருப்பபடி மாறிவிட

மாட்டார்கள்.

உங்களுக்கு பொறுமை அவசியம்.

16. பள்ளி விட்டு வரும்

குழந்தைகளை அன்புடன்

அரவணைத்து, வேண்டியது செய்ய

அம்மாவோ, பெரியவர்களோ வீட்டில்

இருத்தல் வேண்டும்!

17. குழந்தைகளின் எதிரில் புறம்

பேசாதீர்கள். பின்னாளில் அவர்கள்

உங்களை பற்றி பேசலாம்.

18. உங்கள் பெற்றோரை நடத்தும்

விதம், உங்கள் பிள்ளைகளால்

கவனிக்க படுகிறது.

நாளை உங்களுக்கு அதுவே நடக்கலாம்!

19. படிப்பு என்பது அடிப்படை,

அதையும்

தாண்டி குழந்தைகளுக்கு உள்ள மற்ற

ஆர்வத்தையும் ஊக்குவியுங்கள்.

20.ஓடி ஆடி விளையாடுவது குழந்தைகளின்

ஆரோக்யத்திற்கு அவசியம்.

விளையாட்டிற்கு தடை போடாதீர்கள்.

"All work and no play makes Jack a

dull boy"

21. குழந்தைகள் கேள்வி கேட்கட்டும்,

அவர்களின் வயதுக்கேற்ப

புரியும்படி பதில் சொல்லுங்கள்!

பொது அறிவு கேள்விகள்

கேட்கப்படும் போது தெரிந்தால்

சொல்லுங்கள், தெரியாவிட்டால்

பிறகு சொல்லுகிறேன்

என்று சொல்லுங்கள்.

சொன்னபடி கேள்விக்கான

பதிலை அறிந்து கொண்டு,

மறக்காமல் அவர்களிடம்

சொல்வது அவசியம்.

22.குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும்

போது கவனம் தேவை, நெடு நேரம்

குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ,

பொருட்கள் மிகுதியாகவோ,

இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனம்

தேவை.

23. ஆணோ, பெண்ணோ, எந்த

குழந்தையாய் இருந்தாலும், "Good

touch", "bad touch"

எது என்பதை பெற்றோர்கள் சொல்லிக்

கொடுங்கள்.

24. ஒரு போதும், உங்கள்

குழந்தைகளின்

எதிரே சண்டை இடாதீர்கள்!

25. ஒவ்வொரு குழந்தையும்

ஒரு வரம், அவர்கள், ஒருபோதும்

உங்கள் கோபதாபங்களின் வடிகால்கள்

அல்ல!


ஆண்களை சமாளிப்பது எப்படி?


பெண்கள் கவனத்திற்கு . . .! –
சபல புத்தி உடைய ஆண்களை சமாளிப்பது எப்படி?
பணி இடத்தில் அனைவரும் பெண்களிடம்

 கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று 

எதிர்பார்க்க முடியாது.


சில சபலபுத்தி கொண்டவர்களும் இருக்கத்தான் 

செய்வார்கள்.

அவர்களிடம் இருந்து தப்பிக்கும் கலையை 

பெண்கள் தெரிந்து

கொள்ள வேண்டும்.

அவர் மேலதிகாரியாக இருந்து தொலைத்தால் 

அதிக சங்கடம்.

என்றாலும்கூட சில உத்திகளைக் 

கடைப்பிடித்தால், இதுபோன்ற 

தொல்லைகளைத் தவிர்த்து விடலாம்.

சக ஆண் ஊழியர்கள் தொடக்கத்தில் நல்ல 

மாதிரி பட்டால் கூட அளவுக்கு அதிகமாக 

அவர்களிடம் பேச வேண்டாம்.

யாரைப் பற்றியுமே சரியான முடிவுக்கு வர சிறிது 
காலம் தேவை.
அது வரை பொறுத்திருந்து, பிறகு நட்பு 

பாராட்டுவது நல்லது.
உங்களுக்கு உங்கள் வேலை மிகவும் 

தேவையானதாக இருக்க லாம்.
அந்த வருமானத்தை நம்பித்தான் உங்கள் 

குடும்பமும்,

வருங்காலமும் இருக்கிறது என்கிற நிலைகூட 

இருக்கலாம்.

ஆனால் இதையெல்லாம் உங்கள் 

மேலதிகாரியிடம் சொல்லாதீர்கள்.

‘நாம் கொஞ்சம் அத்துமீறினாலும் இந்த வேலை 

இவளுக்கு மிக முக்கியம் என்பதால் 

ஒத்துப்போகக் கூடும் (அல்லது குறைந்தது 

தன்னைக் காட்டிக் கொடுக்கமாட்டாள் )’ என்கிற 

எண்ணத்தை அவர் மனதில் பதிய 

வைப்பானேன்?

சொந்த சோகங்களை அதிகமாக 

வெளிப்படுத்தினால் ‘நான் இருக்கிறேன் 

உனக்கு. 
கவலைப்படாதே’ என்கிற போர்வையில்

மேலதிகாரி எல்லை மீறப்பார்க்கலாம்.
உடைவிஷயத்தில் சுயசிந்தனை இருப்பதில் 

தவறில்லை.

என்றாலும் பொதுவாக ஆடை குறித்த 

ஆண்களின் எண்ணம் கொஞ்சம் 

பிற்போக்குத்தனமானதுதான்.

அதனால் ஆ டை விஷயத் தில் கவனம் தேவை.

அதே சமயம் உடையைவிட முக்கியம் பாடி 

லாங்குவேஜ் எனப்படும் உடல்மொழி.

துணிச்சலா ன பெண்களிடம் 

வாலாட்டுவதைவிட பயந்து நடுங்கும் 

பெண்களிடம் எல்லைமீறப் பார்ப்பது 

சபலக்காரர்களுக்கு எளிது.

பலரும் காரில் செல்லும்போது ஒன்றை மறந்து 

விடுவார்கள்.

ஓட்டுநர் ஒருவர் இருக்கிறார் என்பதை மறந்து 

விட்டு வீட்டின் அந்தரங்கங்களை எல்லாம் 

பேசிக் கொள்வார்கள்.

இதேபோல பணி இடத்திலும் ஒரு தவறு 

நடக்கலாம்.

தொலைபேசியில் அந்தரங்க விஷயங்களைப் 

பேசும்போது பிறர் கேட்க வாய்ப்பு உண்டு 

என்பதை மறக்க வேண்டாம்.

எந்த நியாயமான காரணமும் இல்லாமல் 

மேலதிகாரி உங்களுக்குத் தனி சலுகை 

எதையாவது அளித்தால், அதை உ றுதியுடன் 

மறுத்துவிடுங்கள்.

“எனக்குப் பிறந்த நாள்” என்று ஸ்வீ ட் பாக்ஸை 

நீட்டினால், மறுப்பது நாகரிகமாக இருக்காது 

என்கிறீர்களா? வாங்கிக் கொள்ளுங்கள்.

உடனடியாக உங்கள் துறையிலிருக்கும் 

பிறரையும் கூப்பிட்டு, அந்த மேலதிகாரி 

முன்பாகவே, பகிர்ந்து கொள்ளுங்கள்.

சக ஆண் ஊழியர்கள் ‘அடல்ட்ஸ் ஒன்லி’ 

ஜோக்குகள் அடித்தால், உடனே உங்கள் 

எதிர்ப்பை பதிவு செய்துவிடுங்கள்.

அதைவிட முக்கியம் நீங்களும் அதுபோன்ற 

ஜோக்குகளைப் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது.

‘இவ்வளவு தாராளமாக இருப்பவள், 

பிறவற்றிலும் தாராளமாக இருப்பாள்’ என்ற 

எண்ணம் எழலாம்.

சக பெண் ஊழியர்களிடம் நட்பை வளர்த்துக் 

கொள்ளுங்கள்.

சபல ஆண் பணியாளர்களை எதிர்க்க இது 

உதவும்.

உங்கள் முழு நம்பிக்கையைப் பெற்ற சக 

ஊழியர்களும் உங்களுக்கு உதவ முன்வருவர்.

தனித்தீவாக இருக்காதீர்கள்.

உங்கள் வேலையில் நீங்கள் மிகச் 

சிறப்பானவராக இருந்து விட்டால், எந்த 

மேலதிகாரியும் உங்களை 

அலட்சியப்படுத்திவிடவோ , தவறான 

கண்ணோட்டத்தில் அணுகவோ முயற்சிக்க 

மாட்டார் கள்.

‘ஏடாகூடமாக நடந்து கொண்டால், ஒரு மிக 

நல்ல பெண் ஊழியரை இழந்து விடுவோம்’ 

என்ற எண்ணமேகூட சில தவறான 

நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக்கூடும்.



பெட்ரோலுக்கு விடையளிக்கும் நேரம் நெருங்கி விட்டது: 20 பைசாவில் ஒரு கிலோ மீட்டர் செல்லும் ‘கிவாமி பைக்’ அறிமுகம்:
பதிவு செய்த நாள்: வெள்ளிக்கிழமை, ஜனவரி 31, 12:44 PM IST. புதுடெல்லி, ஜன.31-

ஜப்பானின் பிரபல எலெக்ட்ரிக் (மின்சார சக்தி) பைக் தயாரிப்பு நிறுவனமான ‘டெர்ரா மோட்டார்ஸ்’ மின்சக்தியின் மூலம் இயங்கும் 1000 சி.சி. ஆற்றல் கொண்ட நவீனரக இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. ‘கிவாமி’ என பெயரிடப்பட்டுள்ள இந்த சூப்பர் பைக், ’லித்தியம் இயான்’ பேட்டரி மூலம் இயங்கக்கூடியது. 6 மணி நேரத்துக்கு இந்த பேட்டரியை ‘ரீ-சார்ஜ்’ செய்வதன் மூலம், மணிக்கு 140 கிலோ மீட்டர் வேகம் வரை, தொடர்ந்து 200 கிலோ மீட்டர் தூரத்துக்கு தங்குதடை இன்றி செல்ல முடியும்.
கடந்த ஆண்டில் மட்டும் ஜப்பானில் 20 ஆயிரம் ‘கிவாமி’ பைக்குகளை விற்று சாதனை படைத்துள்ள டெர்ரா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்திய சந்தையிலும் கால் பதித்துள்ளது. இந்தியாவில் 30 கோடி ரூபாயை முதலீடு செய்து விற்பனையை விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும்,
ஆண்டுக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் 'கிவாமி' பைக்குகளை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளதாகவும் இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டோரு டோகுஷிகே தெரிவித்தார்.
'இந்த வாகனத்தின் பேட்டரியை சராசரி மொபைல் சார்ஜர் பாயின்டிலும் ரீ-சார்ஜ் செய்து கொள்ளலாம். முழுமையாக (6 மணி நேரம்) ரீ-சார்ஜ் செய்வதற்கு வெறும் 6 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும். இந்த ஆற்றலை கொண்டு 3 ஆயிரம் முறை வரை ‘ஸ்ட்ராட்’ செய்து சுமார் 200 கிலோ மீட்டர் வரை 'நான் ஸ்டாப்' ஆக பயணிக்கலாம்’ என்றும் இந்த பைக்கின் அறிமுக விழாவில் அவர் நிருபர்களிடம் கூறினார். முதல் கட்டமாக நேரடியாக ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யவும், 2015-ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவிலேயே தயாரிப்பை தொடங்கவும் டெர்ரா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. நேரடியாக இறக்குமதி செய்யப்படும் ‘கிவாமி’ பைக்கின் அறிமுக விலை டெல்லி சந்தை நிலவரப்படி 18 லட்சம் ரூபாய் என்றும், இந்தியாவில் உற்பத்தி தொடங்கிய பிறகு இந்த விலை வெகுவாக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.
சென்னையில் வாடகை வீட்டில் குடியிருப்போர் ஒரு யூனிட்டிற்கு 6 ரூபாய் வரை செலுத்துகிறார்கள். இந்த வகையில் கணக்கிட்டாலும், 6 யூனிட் ரீ-சார்ஜுக்கு 36 ரூபாய் செலவாகும். இந்த குறைந்த செலவில் 200 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லலாம் என்ற அறிவிப்பை வைத்து பார்க்கப் போனால், ஒரு கிலோ மீட்டருக்கான எரிபொருள் செலவு வெறும் 18 பைசா தான் என்பது மகிழ்வூட்டும் செய்திதான் என்றாலும், 18 லட்சம் ரூபாய் விலை என்பது சாமானிய மக்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் தகவலாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது

Bottled water in your car is very dangerous!



DANGER!!!!

LET EVERYONE WHO HAS A WIFE/GIRLFRIEND/ DAUGHTER/ FRIENDS AND COLLEAGUES.
KNOW PLEASE!
Bottled water in your car is very dangerous!
On the Ellen show, Sheryl Crow said that this is what caused her
breast cancer. It has been identified as the most common cause
of the high levels of dioxin in breast cancer tissue..

Sheryl Crow’s oncologist told her: women should not drink bottled
water that has been left in a car. The heat reacts with the chemicals
in the plastic of the bottle which releases dioxin into the water.
Dioxin is a toxin increasingly found in breast cancer tissue. So please
be careful and do not drink bottled water that has been left in a car.

Pass this on to all the women in your life. This information is the kind
we need to know that just might save us! Use a stainless steel canteen
or a glass bottle instead of plastic!

This information is also being circulated at Walter Reed Army Medical
Center … No plastic containers in microwaves. No plastic water
bottles in freezers. No plastic wrap in microwaves.
GET: BPA FREE BOTTLES!!!